என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

செவ்வாய், அக்டோபர் 16, 2012

34 மின்வெட்டும்,டெங்கும்,மாயன் காலண்டரும்.....




தமிழகம் இதுவரை கண்டிராத நெருக்கடியில் தவித்துக்கொண்டிருக்கிறது. சென்னை தவிர்த்து தமிழகமெங்கும் ஏறக்குறைய 18 மணி நேரம் மின்வெட்டு ஒரு புறம் என்றால், மறுபக்கம் டெங்கு பொன்ற மர்மக்காய்ச்சல் பாடாய்படுத்துகிறது. இது தவிர காவிரி டெல்டா பகுதிகளில் விவசாயத்திற்கு நீரின்றி வயல்வெளிகள் தரிசாகவே கிடக்கிறது. மின்சாரம் இருந்தாலாவது போர்வெல் மூலம் நீரிறைத்து விவசாயம் செய்யலாம் என்றால் அதற்கும் வழியில்லை இங்கு.

இந்த நிலை தி.மு.க.,ஆட்சிக்காலத்தில் மட்டும் நடந்திருந்தால் மின்சாரம் கொடுக்க வக்கில்லாத கருணாநிதி பதவி விலகவேண்டும், கொசுவை கட்டுப்படுத்த முடியாத மைனாரிட்டி தி.மு.க.,அரசை நீக்கவேண்டும் என்று பக்கம் பக்கமாக ஜெயா டி.வி.,யில் அறிக்கை விட்டே நம்மை கொன்றிருப்பார் ஜெயலலிதா.

கடந்த தி.மு.க.,ஆட்சியில் மூன்று மணி நேர மின்வெட்டிற்கே முப்பது பக்க அறிக்கை விட்ட ஜெ., இன்று தனது ஆட்சியில் 18 மணி நேரம் மின்வெட்டு இருந்தாலும், அதைப்பற்றி எந்தவித கவலையும் இல்லாமல் மந்திரிகளையும் மாவட்ட செயலாளர்களையும் நீக்கி சேர்த்து நல்லாட்சி புரிந்து வருகிறார்.




இதுவரை மின்சாரத்தைபோலவே காணாமல் போயிருந்த மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்(இந்த நிமிடம்வரை அவர்தான் தமிழக மின் துறை அமைச்சர்) அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்கு பிறகு மின்வெட்டே இருக்காது என்று தன் திருவாய் மலர்ந்திருக்கிறார்.
அடுத்தாண்டு ஜூன் மாதத்திற்குள் கரண்டுன்னு ஒன்று இருந்தால்தானே மின்வெட்டு இருக்கும்.பார்க்கலாம் மின்வெட்டை ஒழிக்கிறார்களா அல்லது மின்சாரத்தையே ஒழிக்கிறார்களா என்று.



சரி இவராவது பரவாயில்லை. இன்னொரு அமைச்சர் இருக்கிறார். சத்தியமா அவரு என்ன துறைக்கு அமைச்சருன்னு எனக்கு தெரியாது. ஆனால், அவர் பேர் மட்டும் தெரியும் ராஜேந்திரபாலாஜி. அவர் என்ன சொல்லிருக்கார் தெரியுமா?.....
கலைஞர்தான் கரண்டை பற்றி கவலைப்படறார். வேற யாரும் கவலைப்படறமாதிரி தெரியல...கரண்ட் இல்லேன்னாலும் அவனவன் அவனவன் பொழைப்பை பார்த்துக்கு இருக்கான். இப்படியே இருந்து பழகிட்டா கரண்டும் மிச்சமாகும். ஒரு ட்ரையல் மாதிரி இருக்கும் என்று அருமையான யோசனையை சொல்லிருக்கார்.

நிஜம்தான். ஆனால் ஆற்காடு வீராச்சாமி இருக்கும் போது எங்களை விட நீங்கதாண்ணே ரொம்ப கவலைப்பட்டீங்க...இல்லை இல்லை கவலை படறமாதிரி நடித்தீங்க.இப்ப நீங்க சொல்லிருக்க இந்த பொன்னெழுத்து வார்த்தைகளை  அப்படியே உங்க தலைவி இருக்கற போயஸ் கார்டன், கொடநாடு, சிறுதாவூருக்கும் செயல்படுத்திட்டா அருமையா இருக்கும். அங்கேயும் போயி ஒரு வார்த்தை சொல்லிடுங்க அமைச்சரண்ணே...

எது எப்படியோ  மாயன் காலண்டர் படி 2012- இல் உலகம் அழியுதோ இல்லையோ, 2012- ஜெயலலிதா காலண்டர் படி மின் வெட்டு, தண்ணீர் பற்றாக்குறை, டெங்கு என்று தமிழ்நாடு அழிந்துவிடும் போல. தமிழ்நாட்டை மனதில் வைத்துத்தான் அந்த காலண்டரே தயாரித்திருப்பார்கள் போல.



Post Comment

இதையும் படிக்கலாமே:


34 கருத்துகள்:

  1. எல்லாருக்கும் இருக்கற எரிச்சலை. மன உளைச்சலை அருமையா வார்த்தைப்படுத்தியிருக்கீங்க தம்பி.

    பதிலளிநீக்கு
  2. குறிஞ்சி - மலையும் மலை சார்ந்த இடமும்
    முல்லை - காடு காடு சார்ந்த இடமும்
    மருதம் - வயலும் வயல் சார்ந்த இடமும்
    நெய்தல் - மணலும் மணல் சார்ந்த இடமும்

    " தமிழகம் - இருளும் இருள் சார்ந்த இடமும் "

    முகநூளில் யாரோ சொன்னாங்க ,....

    பதிலளிநீக்கு
  3. கண்டிப்பாக தமிழ்நாடு அழிந்துவிடும்.! பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. அந்த மேப் குபீர் சிரிப்பை வரவழைத்தது...உண்மையில் இதுபோன்ற ஒரு சூழ்நிலை இதுவரை தமிழகத்தில் இருந்து இருக்காது...இதையும் அம்மையாரின் சாதனைகளில் தாராளமாக சேர்க்கலாம்...

    பதிலளிநீக்கு
  5. உண்மைதான் மாயன் நாட்காட்டிக்கும் தமிழகத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதுபோலதான் தெரிகிறது!

    பதிலளிநீக்கு
  6. // அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்கு பிறகு மின்வெட்டே இருக்காது என்று தன் திருவாய் மலர்ந்திருக்கிறார். //

    எங்க...ஆகாயத்தில் இருந்து மின்னல பிடிச்சிட்டு வருவாராமா??? ஒழுங்கா கரண்டு வர வைக்க திட்டம் போடுங்கப்பா..அப்புறம் பேட்டி கொடுக்கலாம்..

    பதிலளிநீக்கு
  7. இதெல்லாம் தமிழகத்தில் சகஜமாயிட்டிச்சி தலைவரே...


    இன்னும் எதிர்காலம் என்னவாகுமோ

    பதிலளிநீக்கு
  8. துன்பங்கள் தான் கூடிக்கொண்டே வருகின்றன.

    பதிலளிநீக்கு
  9. பத்தாததுக்கு கூடங்குளம் அணுமின் நிலையம் வேற.

    பதிலளிநீக்கு
  10. //எது எப்படியோ மாயன் காலண்டர் படி 2012- இல் உலகம் அழியுதோ இல்லையோ, 2012- ஜெயலலிதா காலண்டர் படி மின் வெட்டு, தண்ணீர் பற்றாக்குறை, டெங்கு என்று தமிழ்நாடு அழிந்துவிடும் போல//

    தேச இறையாண்மைக்கு எதிராக குரல் கொடுப்பதால் உங்களுக்கு ஆப்பு வைக்கப்படலாம்!! :)

    பதிலளிநீக்கு
  11. ஜெயா அமைச்சரவையில் அனைவரும் வெறும் தலையாட்டி பொம்மைகள் மட்டுமே.எல்லா துறையின் அறிவிப்புகளையும் முதல்வரே அறிவிக்கின்றார்.அதிலும் நான் 'என் என்ற அகந்தையான வார்த்தைகள் வருமே தவிர நாங்கள் 'எங்கள் என்ற வார்த்தைகளே இருக்காது.வெறும் தலையாட்டிகளை குறை சொல்லி என்ன பயன்.?

    பதிலளிநீக்கு
  12. தமிழ்நாடு அழியும் முன்னால் நாம் எல்லாம் ஒன்று சேர்ந்து இப்படி பட்ட துரோகிகளை உலகத்த விட்டே துரத்த வேண்டும்....

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    பதிலளிநீக்கு
  13. அனைவருடைய வயிற்றெரிச்சலையும்
    அருமையாக பதிவு செய்தமைக்கு
    மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
  14. இல்லாத மின்சாரத்துக்கு எதுக்கு ஒரு அமைச்சர் போஸ்ட் :-)

    பதிலளிநீக்கு
  15. பிளாக திறந்ததும் கண்ணம்மா பேட்டை சவுண்டை வச்சிருக்கீங்களே ஏதாவது ஸ்பெஷலா..??? :-)

    பதிலளிநீக்கு
  16. தமிழ் மக்களின் வயிறெரிச்சல், மன உளைச்சல்.
    விரைவில் ஜெ. அறுவடை செய்வார்; இது உறுதி!

    பதிலளிநீக்கு
  17. Hi,

    Your criticism should be a slap on jaya's face.

    Be bold with your articles.

    Thanks

    பதிலளிநீக்கு
  18. செந்தில் பாலாஜி போன்ற ஒரு அமைச்சர் பெற இத்தமிழகம் எத்தனை புண்ணியம் பண்ணியதோ ?

    பதிலளிநீக்கு
  19. சாரி செந்தில் பாலாஜி ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டாம் முறையும் தப்பாத்தான் சொல்லிருக்கீங்க அரசன்.... அது செந்தில் பாலாஜி இல்லை. ராஜேந்திர பாலாஜி

      நீக்கு
  20. உங்க ஊருக்கு ரோடு இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரோடு மாதிரி ஒண்ணு இருக்கு. எதற்கு கேட்கறீங்க.

      நீக்கு
  21. பதில்கள்
    1. ஆட்டோ வருவதெல்லாம் ஓல்ட் ஃபேஷன். இப்பவெல்லாம் நில அபகரிப்பு வழக்குதான்.

      நீக்கு
    2. ஆட்டோ வருவதெல்லாம் ஓல்ட் ஃபேஷன். இப்பவெல்லாம் நில அபகரிப்பு வழக்குதான்.

      நீக்கு
  22. இன்னும் நிறைய பேர் கருணாநிதி கஜானாவையும் மின்சாரத்தையும் காலி பண்ணிட்டு போயிட்டா அம்மாவால என்ன செய்யமுடியும்ன்னு தான் கேட்கிறாங்க!

    பதிலளிநீக்கு
  23. சகோ.ரஹீம் கசாலி

    மேப்புல தமிழ் நாடு இல்லாததுக்கு காரணம் பவர் கட் இல்ல...அதுக்கு முன்பே ,தி.மு.க.வின் நில அபகரிப்பே காரணம்...

    ஹ..ஹா...ஹி..ஹீ...ஹூ..ஹே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோ. அவங்க நிலத்தை அபகரித்திருந்தாலும் நிலம் தமிழ்நாட்டில்தானே இருக்கும். அலேக்கா பெயர்த்தா எடுத்துக்கு போயிட்டாங்க.

      நீக்கு
  24. மந்திரிகள் பேசுவதில் தப்பில்லை, அவர்களே எதிர்பாக்காத மிருக மெஜாரிட்டி கொடுத்த தமிழக மக்களுக்கு இதுவும் வேணும் இதுக்கும மேலேயும் வேணும்.

    பதிலளிநீக்கு
  25. நன்மை நடக்கும் என்றே இப்படி ஒரு தரமும் அப்படி ஒரு தரமும் வாக்களித்து ஏமாறும் மக்களின் நிலைமை ?

    பதிலளிநீக்கு
  26. இனி அரசாங்கத்தை நம்பி பயனில்லை.

    பதிலளிநீக்கு
  27. எது எப்படியோ மாயன் காலண்டர் படி 2012- இல் உலகம் அழியுதோ இல்லையோ, 2012- ஜெயலலிதா காலண்டர் படி மின் வெட்டு, தண்ணீர் பற்றாக்குறை, டெங்கு என்று தமிழ்நாடு அழிந்துவிடும் போல அது எப்படி மாமா இப்படி இருக்கிற வேலையில் எப்படி எதார்த்தமாக சிந்திக்க முடிகிறது எனக்கு வியப்பாக இருக்கிறது மாமா உங்கள் அறிவு கூர்மையை நினைத்து

    சரி மாப்பிள்ளை சொன்ன இந்த செய்திகளை பார்ப்பதற்காவது மின்சாரம் இருக்கானு பார்ப்போம்

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.