என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வெள்ளி, டிசம்பர் 28, 2012

17 ஜெயலலிதாவும் தேசிய அவமானமும்.....



NATIONAL DEVELOPMENT COUNCIL எனப்படும் டெல்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிக் குழு கூட்டத்தில் ஜெயலலிதா அவமதிக்கப்பட்டதாக சொல்வதுதான் நேற்றைய ஹாட் டாபிக். நிஜமாகவெ ஜெயலலிதா அவமானப்பட்டிருந்தால், அது கண்டிக்கத்தக்கது, வருத்தத்துக்குரியது. ஆனால், அங்கு நடந்ததோ வேறு.....

ஜெயலலிதா பேசிக்கொண்டிருந்தபோது,அவர் பேச்சு அவருக்கு கொடுக்கப்பட்டிருந்த  பத்து நிமிடங்களை கடந்து சென்றதால், ஒரு அடையாள மணி அடித்திருக்கிறார்கள். நிறைய பேர் பேச வேண்டியிருந்ததால் அப்படி ஒரு ஏற்பாடு. ஆனால், ஜெயலலிதா தன் இயல்பான கோபத்தால்/குணத்தால் அதை அவமானம் என்று கருதி வெளிநடப்பு செய்துள்ளார்.  ஆனால், காங்கிரஸை சார்ந்த முதலமைச்சர்களுக்கும், காங்கிரஸை சாராத முதலமைச்சர்களுக்கும் பத்து நிமிடங்களே வழங்கியதாக மத்திய அரசு சொல்கிறது. அதேநேரம், இது தமக்கு இழைக்கப்பட்ட அவமானமாக ஜெ கருதுகிறார்.

10 நிமிடங்களில் மணியடித்ததையே தேசிய அவமானமாக கருதும் ஜெ, ஒரு முறை தமிழக சட்டசபை நிகழ்வுகளை திரும்பி பார்த்துக்கொள்ளட்டும்.
தமிழக சட்டசபையில் எத்தனை எதிர்கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு பேச வாய்ப்பளித்தார்? எத்தனை எதிர்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் தொகுதி பிரச்சினையை இடையூறு இல்லாமல் பேசி முடித்திருக்கிறார்கள்? ஜெயலலிதாவாவது வெளிநடப்புதான் செய்தார்.ஆனால், இங்கோ எதிர்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் எத்தனை முறை வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள் சபையை விட்டு?
மாமியார் உடைத்தால் மண் குடம். மருமகள் உடைத்தால் பொன்குடம் என்ற பழமொழி நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.

அதுசரி......தமிழ்நாட்டில் மின்வெட்டு, டெங்கு, மர்மக்காய்ச்சல், பாலியல் பலாத்காரங்கள், கொலை, கொள்ளை என்று எண்ணற்ர பிரச்சினைகள் இருக்கும் போது, எப்படித்தான் அதையெல்லாம் பத்து நிமிடங்களில் பேசுவதாம்?



Post Comment

இதையும் படிக்கலாமே:


17 கருத்துகள்:

  1. என்னத்த சொல்றது.. ஏதாவது கருத்து சொல்லலாமுன்னு பாத்தேன்.ம்ஹூம் ஒண்ணுமே தோணலை..

    பதிலளிநீக்கு
  2. இதை ஜெ . என்ற அரசியல்வாதியாக பார்க்காமல் , தமிழக முதல்வர் என்ற பார்வையில் பாருங்கள் ,பத்து நிமிடம் பேச எதுக்கு கூட்டம் ? அறிக்கையாக வாங்கி கொள்ளலாமே ? எல்லாருமே பத்து நிமிடத்தில் முடிக்கும் போது ஒருவர் அதிக நேரம் பேசுவதால் ஒன்றும் ஆகிவிட போவதில்லையே ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பத்து நிமிடம் போதாதுதான்.வேறு வழியில்லாமல் போயிருக்க கூடும். அல்லது தமிழகத்திற்கு நன்மை கிடைக்கும் என்றும் போயிருக்கலாம். சரி அந்த பத்து நிமிடத்தில் என்ன பேசினார் என்று தெரியவில்லையே....

      நீக்கு
  3. இவர்கள் கேட்டு மத்திய அரசு ஏதும் செய்ய போவதில்லை ..

    தி மு .க மக்களுக்காக எதுவும் மத்திய அரசிடம் கேட்க போவதும் இல்லை ..

    இந்த இரண்டையும் நம்பும் நமக்கு நாமம் தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா...ஹா...உண்மைதான். நமக்கும் வேறு சாய்ஸ் இல்லையே

      நீக்கு
  4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  5. ennaka soliruga poranga... intha minority d.m.k arasu adchi senchu naadula karandu illa . .

    makkalugu paathugappu illa . .

    sasikala paavam tringgggggggggggggggggg intha minority d.m.k
    tringggggggggggggg intha minority tringggggggggggggg .

    பதிலளிநீக்கு
  6. அர்த்தமுள்ள பதிவு
    உணர்வாரா ஜெ?

    Cinema News

    பதிலளிநீக்கு
  7. கோபப்படுவதில் நியாயம் இருக்க வேண்டும் !?

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா29 டிச., 2012, 5:52:00 AM

    32 மாநிலங்களை சார்ந்த முதல்வர்கள் தங்களது மாநிலங்களின் பிரச்சனைகளை ஒரு பத்து மணி நேரத்தில் எப்படி பேச முடியும். ஏன் இந்த வளர்ச்சி கூட்டம் ஒரு இரண்டு நாள் அல்லது மூன்று நாள் நடக்க கூடாது இதை விட வேற என்ன வேலை இருக்கிறது அரசாங்கத்திற்கு . பாராளுமன்றத்தில் தான் ஒண்ணுமே பேச மாட்டின்றார்கள்

    பதிலளிநீக்கு
  9. பத்து நிமிஷம்ன்றது ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப கம்மிதான்.. அதுக்கென்ன பண்றது?? அதுக்கேற்றாற்போல் பேச்சைத்தயார்படுத்தியிருக்கணும்... அதவிட்டுட்டு சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு ஜெ. சொல்றது??!

    பதிலளிநீக்கு
  10. ரஹீம் கஸாலி, http://viruvirupu.com/2012/12/27/42188/

    பாருங்கள் அவர் பேசின விபரங்கள் உள்ளன.

    கார்த்திகேயன் கேட்ட அதே சந்தேகம் எனக்கும் உள்ளது. இவ்வளவு பெரிய நாட்டில், பெரிய பெரிய பிரச்சனைகள் உள்ள நாட்டில், ஒரு முதல்வருக்கு 10 நிமிஷம் என்பது கண் துடைப்பு போல உள்ளது. ஒவ்வொருவருக்கும் அரை மணி நேரம் கொடுத்தால் எத்தனை நாள் பேசனும் என்று சில அதிகப் படிகள் சொல்வது நம்மை ஏமாற்றுவது. பிரச்சனைகளை நேர் பார்வை பார்க்க பயப்படும் அரசாங்கம்தான் இப்படி எல்லாம் பண்ணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பத்து நிமிடம் என்பது கொடுத்திருக்கும் நேரம். அதையும் தாண்டி பேசலாம் என்று சொல்கிறார்கள் மத்திய அரசு சார்பில். அதே போல், ஒவ்வொரு மாநில முதல்வரும் தங்கள் மாநில பிரச்சினைகளை எழுத்துப்பூர்வமாக பிரதமரிடம் முன்பே கொடுத்துவிட்டு, அதில் இருக்கும் சாரம்சத்தை மட்டும் பேச வேண்டும் என்பதுதான் விதி. இந்த தகவல்கள் எல்லாம் முதல்வர்களுக்கு முன்பே சொல்லப்பட்டு விடும். அதேநேரம், எப்படி கேட்டாலும் நம் மாநிலத்திற்கு ஏதும் கிடைக்காது எனவே, ஏதாவது செய்து மீடியாக்களின் கவனத்தை தன் பக்கம் திருப்புவோம் என்று நினைத்து கூட இப்படி செய்திருக்கலாம் நம் முதல்வர். எப்படியோ ஜெயலலிதாவின் ராஜதந்திர அரசியலாக இதை எடுத்துக்கொள்ளலாம்.

      நீக்கு
    2. ஆனால், இந்தப்பதிவின் நோக்கம் மத்திய அரசுடன் ஜெயலலிதாவின் மோதல் போக்கை வெளிக்கொணருவது அல்ல. மாறாக, அவமானப்படுத்தப்பட்டதாக சொல்லும் அவர் இங்கே சட்டசபையில் எதிர்கட்சிகளின் உரிமைகளுக்கு எவ்வளவு தூரம் செவி சாய்த்திருக்கிறார் என்பதை உணர்த்தத்தான்.

      நீக்கு
  11. அம்மாவும் பேசுறதுக்கு ஒன்னும் இல்லை. எதையாவது சொல்லி வெளியில் வரணும். சமயம் பார்த்து மணி வேற அடிச்சுட்டாங்க. பிறகு என்ன அம்மாவுக்கு காரணம் கிடைச்சிட்டுது. வெளியில் பறந்து வந்துட்டாங்க

    பதிலளிநீக்கு
  12. இனிய ஆங்கில புத்தாண்டு தின நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.