என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

புதன், டிசம்பர் 26, 2012

13 நீங்கள் கார், பைக் வைத்திருந்தால் அவசியம் இதை படிங்க...




டிஸ்கி : கீழே குறிப்பிட்டுள்ள விஷயங்கள் நான் கண்ணார கண்டு அனுபவப்பட்டு எனது நண்பர்களிடம் பகிர்ந்த போது, அவர்களும் SAME BLOOD..! என்று கூறி என்னுடன் பகிர்ந்து கொண்ட  விஷயங்களின் தொகுப்பு... இதை பகிர்ந்து கொள்வதால் மற்றவர்களையும் உஷார் படுத்தலாமே என்று எழுதியது...

  • இது பெட்ரோல் விலையேற்றத்தை பற்றி குறிப்பிடும் பதிவல்ல...
  • உலக சந்தையில் பெட்ரோலை வைத்து நடத்தப்படும் உலக அரசியல் பற்றி குறிப்பிடும் பதிவும் அல்ல...
  • நமக்கு மிக அருகில் இருக்கும் பல பெட்ரோல் வங்கிகளில், வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படுவதைப் பற்றி குறிப்பிடும் பதிவு...

'100 ரூபாக்கு போடுப்பா..' என்று 100 ரூபாய் தாளோடு வெயிலிலும், புழுதியிலும் வாடி வதங்கி வரிசையில் காத்திருக்கும் வாடிக்கையாளர்களை குறிவைத்து லாவகமாக ஏமாற்றும் PETROL GUN ஊழியர்ள் சிலரைத்தான் (அனைவரும் அல்ல..) இதில் PIRATES என்று குறிப்பிட்டிருக்கிறேன்...

பெட்ரோல் வங்கிகளில் வழக்கமாய் மீட்டரை வைத்து 10, 20 என்று திருடுவார்கள்... இது அனைவரும் அறிந்ததே... ஆனால் தற்போது நடைபெறும் நூதன திருட்டுகளின் மூலம், 10, 20 ரூபாய்க்குத்தான் பெட்ரோலே போடுகிறார்கள் மீதி பணம் முழுவதையும் ஏமாற்றுகிறார்கள். நான் 2006ஆம் ஆண்டு வங்கியில் லோன் போட்டு புது பைக் வாங்கிய சமயம் மேத்தா நகரில் SKYWALKக்கு அடுத்துள்ள இடதுபுற பெட்ரோல் பங்க்கில் 100 ரூபாய் ஏமாற்றப்பட்டேன். அந்த சம்பவத்தை என் நண்பர்களுடன் பகிர, பலரும் இதே போல பல பங்க்குகளில் ஏமாற்றப்பட்டிருப்பதாக கூறி 'ரெட் அலர்ட் மார்க்' செய்த பங்க்குகளை தெரிவித்தார்கள்... கிட்டத்தட்ட பல பங்க்குகள் அந்த லிஸ்ட்டில் உள்ளது தெரியவந்தது... அன்றிலிருந்து இன்றுவரை காராக இருந்தாலும், டூ வீலராக இருந்தாலும், மீட்டரில் ZERO காட்டாமல் பெட்ரோல் போட்டுக்கொள்வதே இல்லை...

இது எப்படி நடக்கிறது..? ஒரு உதாரணம், நீங்கள் 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட வந்தால், ஏற்கனவே உங்களுக்கு முன்னாலிருப்பவருக்கு 50 ரூபாய் போட்டிருந்தால், மீட்டரை RESET செய்யாமல் உங்களிடம் பேச்சு கொடுத்தபடியே 51ல் ஆரம்பித்து 100 ரூபாய்க்கு போடுவார்கள். இதன்மூலம், பாதிக்கு பாதி அவர்களுக்கு லாபம்... இது அந்த பெட்ரோல் வங்கி முதலாளிக்கும் போய் சேருவதில்லை... அவர்களே பங்கு போட்டுக் கொள்கிறார்கள்.

மோசடி ஊழியர்கள், வாடிக்கையாளரை ஏமாற்றும் வழிமுறைகள்

பொதுவாய் சில பெட்ரோல் வங்கியில் ஊழியர்கள் கேப் அணிந்திருப்பார்கள்.... அந்த கேப்-ஐ வைத்து உங்களுக்கு முன்னால், சரியாக மீட்டரை மறைத்தபடி நின்று கொள்வார்கள். நீங்கள் அப்படி இப்படி அசைந்து கொடுத்து மீட்டரை பார்ப்பதற்குள் பெட்ரோல் போட ஆரம்பித்து விடுவார்கள்.

சில இடத்தில் PETROL GUN-ன் கருப்பு கேபிள் அந்த மீட்டரின் குறுக்கே ஓடி, மீட்டரை பார்க்க முடியாதபடி மறைத்திருக்கும்... இதனால், தோராயமாகத்தான் உங்களால் மீட்டரை கணிக்க முடியும்.

இன்னும் சில இடத்தில் மீட்டர் RESET ஆவது போல் பீப் சவுண்ட் கொடுக்கும் ஆனால் மீட்டர் RESET  ஆகாது... 'என்ன ZERO வரலை..?' என்று கேள்வி கேட்டால், மீண்டும் சரியாக RESET  செய்துவிட்டு, 'மீட்டர் பிரச்சினை சார்' என்று கூலாக பதில் கொடுப்பார்கள்...

இரண்டு அல்லது மூன்று ஊழியர்கள் ஒன்றாக ஒரே இடத்தில் நின்றிருந்தால்... உஷார்....நிச்சயம் ஏதோ தப்பு நடக்கவிருக்கிறது என்பதை கவனித்து கொண்டு எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.

ஒருவர் PETROL GUNஐ டேங்க்கிற்குள் செலுத்தியதும் RESET செய்வது போல் பாவ்லா காட்டுவார்... அப்போது இன்னொருவர் வந்து உங்களிடம் காசு கேட்பார்.. நீங்கள் உடனே காசு கொடுத்துவிட்டால் சில்லறை கொடுங்கள்... ரவுண்டாக போட்டுக் கொள்ளுங்கள் என்று பேச்சை மாற்றுவார்... அல்லது உங்கள் வண்டியை புகழ்ந்து பேசியபடி நலம் விசாரிப்பார்.. இல்லையெனில், உங்கள் பைக்கில் பெட்ரோல் KNOBஐ சுட்டிக்காட்டி, 'PETROL KNOB திறந்தேயிருக்கு பாருங்க சார்.. அதை மூடிடுங்க..' என்று கூறுவார்.. வாடிக்கையாளரும் ஓரிரு செகண்ட் அப்படி இப்படி என்று கவனம் சிதறும் அந்த நொடிப்பொழுதில் கவனம் கலையும். இப்படியாக விதவிதமாய் பேசி உங்கள் கவனத்தை திசை மாற்றி... நீங்கள் சுதாரிப்பதற்குள் மீட்டர் ZERO வராமலே ஓட ஆரம்பித்துவிடும்...

ஒரு சில இடங்களில் ZERO பார்த்துவிட்டு பெட்ரோல் போட ஆரம்பித்தாலும் உஷாராக இருக்க வேண்டும்... 200 ரூபாய்க்கு நீங்கள் பெட்ரோல் போட்டுக் கொண்டிருக்கிறீர்களென்றால்... 40 ரூபாய்க்கு மீட்டர் ஓடிக்கொண்டிருக்கும்போது, அருகிலிருப்பவர் உங்கள் கவனம் கலைப்பார்... பெட்ரோல் போடுபவர் உடனே மீட்டரை மீண்டும் ZEROஆக்கிவிட்டு உங்கள் வரிசையில் நின்றிருக்கும் அடுத்தவரை அழைத்துவிடுவார்... நீங்களும் 200 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டாகிவிட்டது என்று நினைத்து நகர்ந்து விடுவீர்கள்... ஆனால், 40 ரூபாய்க்கான பெட்ரோல்தான் உங்கள் வண்டியில் இருக்கும்...

பைக்கில் அடிக்கும் கொள்ளைகள் இப்படியென்றால் இதில் அடுத்த கட்டம், காரில் பெட்ரோல் போட வருபவர்களிடம் கொள்ளை அடிப்பது... காரணம், இதில் தொகை பெரியது... அதுவும் காரில் வருபவர்கள் காரிலிருந்து இறங்காமல் பெரும்பாலும் மீட்டரிலிருந்து சற்று தொலைவிலிருந்தபடி பெட்ரோல் போடுவதால் ஏமாற்றுவதற்கான வாய்ப்பு இன்னும் அதிகமாகிறது.
காரில் பெட்ரோல் போட வருபவர்களிடம் 'மெம்பர்ஷிப் ப்ளான், ஆயில் சேன்ஞ் பற்றி பேசி கவனத்தை கலைக்க முயல்வார்கள்.

காரிலிருந்து பெட்ரோல் போடும்போது, பெரும்பாலும் இறங்கி அருகில் சென்று மீட்டரை கண்காணித்தபடி போடுவது மிக நல்லது...

உங்கள் வண்டியில் யாரிருந்தாலும், பெட்ரோல் போட்டுவிட்டு வரும்வரை பேசாமல் இருக்கும்படி கூறிவிடுவது நல்லது... பேசினால் கவனம் கலையலாம்..

இப்படி இவர்கள் கொள்ளையடித்து சம்பாதிக்கும் பணம் அந்தந்த பெட்ரோல் வங்கியின் முதலாளிக்கும் போய் சேர்வதில்லை.. இதை இந்த மோசடி ஊழியர்கள் தங்களுக்குள் ரகசிய கூட்டணி வைத்து நடத்துவதால், எவ்வளவு ரூபாய் ஏமாற்றியிருக்கிறோம் என்ற கணக்கை அவரவருக்கு தெரிந்த சங்கேத பாஷையில் குறித்துக் கொள்கிறார்கள். அன்றைய நாள் இறுதியில் கலெக்ஷன் கணக்கெடுக்கும்போது, கொள்ளையடித்த பணத்தை தனியாய் எடுத்து பிரித்துக் கொள்கிறார்கள்.
பெட்ரோல் விலை அதிகம் என்று தெரிந்து வருத்தபடும் நாம், இவ்வளவு அதிக விலைக்கு நாம் போட்டுக் கொள்ளும் பெட்ரோல் முழுவதுமாய் நமக்கு வந்து சேருவதில்லும் நிச்சயம் கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வளவு கரெப்ஷன் இருந்தும். இன்றும் சில பெட்ரோல் வங்கிகளில் நாம் கவனக்குறைவாக இருந்தாலும் "சார் ZERO பாத்துக்கோங்க சார்.." என்று நம்மை அழைத்து மீட்டரை காண்பிக்கும் அந்த நல்ல நபர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்...

பின்குறிப்பு: இந்தப்பதிவு என் பதிவல்ல....... அம்புலி திரைப்பட இயக்குனர் நண்பர் ஹரீஷ் அவர்களால் அவரது தளத்தில் எழுதப்பட்ட பதிவு. நல்லதொரு விழிப்புணர்வு பதிவான இது எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்று நான் விரும்பியதால் அவரிடம் தொலைபேசி மூலம் அனுமதி கேட்டு விட்டே இங்கே பகிர்கிறேன். 
நன்றி: ஹரீஷ்



Post Comment

இதையும் படிக்கலாமே:


13 கருத்துகள்:

  1. அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விழிப்புணர்வு பகிர்வு...

    பதிலளிநீக்கு
  2. உண்மை உண்மை உண்மை...இதை அனைத்தும் அனுபவித்து எழுத நினைத்த விஷயம்.....கட்டாயம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்.

    ஒரு சிறிய சந்தேகம்..இப்போதுள்ள புதிய மெசின்களில் முன்னாடி நிற்பவர் ஐம்பது ரூபாய்க்கு போட்டுள்ளார்.அதை சீரோ ஆக்காமலேயே அடுத்த நபருக்கு ஏதோ ஒரு பட்டனை அழுத்தி விட்டு அப்புறமா அடுத்த ஆளுக்கு அவர் கேட்ட நூறு ரூபாய்க்கு பெட்ரோல் போடுகிறார்கள்.அவர்கள் பட்டனை அழுத்தியதும் சீரோ காண்பிக்காமல் பெட்ரோல் பைப்பை எடுத்த பின்தான் சீரோ காண்பிக்கிறது....இதில் எதுவும் உள்குத்து உண்டா?முழுவதுமாக அடுத்த ஆளுக்கு நூறு ரூபாய்க்கான பெட்ரோல் சேர்கிறதா? இல்லை முன்னால ஐம்பதுக்கு போட்டவரின் மீதியான தொடர்ச்சியாக நிரப்பபடுகிறதா?

    நீங்க மேல் சொன்ன அனைத்து முறைகளிலும் அனுபவித்து சண்டையிட்டு படு உசாராக பெட்ரோல் நிரப்பினாலும்..இந்த ஒரே ஒரு முறை பட்டன அமுக்கும் விஷயம் புரியவில்லை....தெரிந்தவர்கள் விபரம் தரவும்.....சதீஷ் அடுத்த சண்டைக்கு ரெடியாகிறேன்..பயனுள்ள பதிவு.

    பதிலளிநீக்கு
  3. thirutu pasanga, maduravoyal to koyambedu naduvil oru mattamana petrol bunk ulladu, angu therindhey kollai adikurargal edey pol, jakkiradai

    பதிலளிநீக்கு
  4. நல்லதொரு விழிப்புணர்வு பதிவு! என் கிட்டே கூட பொன்னேரி கிருஷ்ணா ஏஜென்சிகாரங்க 50 ரூபா அடிச்சிட்டாங்க! இப்ப அங்க போடுவதில்லை! நாம் தான் உசாராக இருக்க வேண்டும்!

    பதிலளிநீக்கு
  5. என்னதான் விழிப்போட இருந்தாலும் அவங்களை திருத்தவே முடியாது ,ஆனால் எல்லா இடத்திலும் இப்படி நடப்பதில்லை

    பதிலளிநீக்கு
  6. அனுபவம் ஏற்பட்டிருக்கிறது..

    பதிலளிநீக்கு
  7. பயனுள்ள விழிப்புணர்வு !

    அனைவரும் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்

    பதிலளிநீக்கு
  8. அன்புள்ள அரசியல் சானக்கியர் ரகீம்கஸாலி அவர்களுக்கு உங்களின் பதிவுகளை விருப்பத்துடன் படிக்கும் வாசகன் நான் . நீங்கள் BSNL மூலம் வாங்கிய டேபிளட் சரியாக இயங்கவில்லை என ஒரு முறை பதிவிட்டு இருந்தீர்கள் அதை போலவே எனது டேபிளட்டும் மக்கர் செய்தது அதற்கான தீர்வை இனையம் மூலம் கண்டு எனது டேபிளட்டை சரி செய்து கொண்டேன் . உங்களது டேபிளட் இன்னும் சரி செய்யப்படவில்லைஎனில் எனது வலைப்பூவிற்கு வருகை செய்து ஆன்டிராய்ட் OS பதிவிறக்கம் செய்து பயன்பெறுங்கள் நன்றியுடன் www.nilanilal.bolgspot.com
    அ.குரு

    பதிலளிநீக்கு
  9. ஆமா பாய் நான் இப்பலாம் கேன் ல வாங்கி தான் ஊதுரத்து திருட்டு பசங்க அப்ப கூட கம்மியா தான் இருக்கு என்ன பன்றது நம்ம நாட்டு நிலைமை அப்படி

    பதிலளிநீக்கு
  10. அடடே.... ரெகுலரா போடுகிற அந்த பெட்ரோல் பங்க் நண்பர்களுக்கு நானும் ஒரு சல்யூட் போட்டுக்கிறேன்...!

    பதிலளிநீக்கு
  11. இரண்டு மூன்று முறை ஏமாந்திருப்பேன். ஒருமுறை மட்டும்தான் வெற்றி கிட்டியது. 51 லிருந்து கதை...........

    அப்புறம் ரூ.67 அப்புறம் ரூ.77 குதித்த கதை தனி. கண்கட்டு வித்தை. கண் திறந்திருக்கும்போதே.

    பதிலளிநீக்கு
  12. கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது அனைத்தும் உண்மை

    பதிலளிநீக்கு
  13. payanulla nalla thagaval naan yenathu nabargalukkum solluven

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.