காலை ஆறு மணி. அலாரம் அடித்தது. அதன் தலையில் நச்சென்று ஓர் அடிவைத்து அதன் சப்தத்தை நிறுத்தினேன். தூக்கம் கலையட்டுமென்று நினைத்து ஐந்து நிமிடம் கண்ணை மூடியவாறு படுத்திருந்தேன்.
"ஏங்க, அலாரம் அடிச்சு எவ்வளவு நேரமாச்சு? இன்னும் என்ன தூக்கம்?. சீக்கிரம் எந்திரிச்சு போயி குளிங்க. காபி கலந்து வைக்கிறேன்.""இருடீ, இன்னும் கொஞ்ச நேரம் படுத்துக்கிறேன்."
"சரியாப்போச்சு போங்க. இப்படி தூங்கினா காரியம் நடந்த மாதிரிதான்."
"காலையிலே, ஏண்டி இப்படி அபசகுனமா பேசுறே? நான் என்ன போக மாட்டேன்னா சொல்றே. கொஞ்சம் லேட்டா போறேன்னுதானே சொல்றேன்."
"சரிதான், நீங்க லேட்டா போவீங்க. ஆனா அந்த ஆளு சீக்கிரம் கெளம்பி போய்ட்டார்னா, அப்புறம் போற காரியம் நடக்காது."
"சரிசரி கிளம்பறேன். காலைல சுப்ர பாதத்தை ஆரம்பிக்காதே."
"ஐயோ கடவுளே தெரியாம சொல்லிட்டேன்மா. இப்ப என்ன? நான் குளிக்கணும் அவ்வளவுதானே. இந்தாப் போறேன்'
"நீங்க இந்தாப் போவீங்களோ, முஸ்லீமாப் போவீங்களோ எனக்கென்ன ஆச்சு?. இந்நேரம் தேவையில்லாம பேசிட்டு இருந்ததுக்கு குளிச்சிருக்கலாம். என்ன செய்றது எல்லாம் என் தலையெழுத்து இந்த புறாக்கூண்டு மாதிரி இடத்துல குடும்பம் நடத்தனும்னு."
"சரி விடேன். ஏன் புலம்பறே?"
"நான் எங்கே புலம்பறேன். என் தலை விதியை நொந்துக்கிட்டேன். இன்னைக்கு டவுன்ல குறைஞ்ச வாடகைக்கு எங்கே வீடு கிடைக்குது? வாடகையே யானை விலை, குதிரை விலை சொல்றாங்க. நம்ம மாதிரி மிடில் கிளாசுக்கு சொந்த வீடுங்கறது கனவுதான் போல."
"ஏண்டி உனக்கு மறை கிறை கழண்டு போச்சா?. காலங்காத்தால சம்பந்தமில்லாம பேசுறியே?'
"எல்லாம் சம்பந்தத்தோடதான் பேசுறேன். நமக்கு சொந்தமா வீடு வாங்கத்தான் வக்கில்லை. வாடகை வீட்லயாவது இருப்போம் ஒரு நல்ல வீடாப்பாருங்கன்னு நம்ம புரோக்கர்ட்ட சொன்னதுக்கு அப்புறம், கொறஞ்ச வாடகைல ஒரு வீடு இருக்குன்னு அவரும் சொல்லி ரெண்டு நாளாச்சு. அதைப்போயி பார்ப்போம்னு நினைச்சீங்களா?. அவனவன் வீடு கிடைக்காம அலையுறான். வீடு இருக்கிற விஷயம் யாருக்காவது தெரிஞ்சா, அவ்வளவுதான். புரோக்கருக்கு அதிகமா கமிசன் கொடுத்து அதை கொத்திக்குப்போக ரெடியா இருப்பாங்க. இப்பப்போறேன் அப்பப்போறேன்னு நீங்களும் இழுக்குறீங்க. இன்னைக்காவது போவீங்கன்னு பார்த்தா படுத்து தூங்கறீங்க."
"நானா போக மாட்டேன்னு சொல்றேன். அந்த புரோக்கர்தான் இன்னைக்கு காலைலே வரச் சொன்னார்."
"காலைலே வரச் சொன்னார்ன்னு தெரியுதுல்ல கிளம்புங்க."
"அதான் எந்திருச்சு குளிப்போம்ன்னு நினைச்சா, நீதான் ஓலைப் பயில ஏதோ உச்சா போன மாதிரி லொட லொடன்னு பேசிட்டு இருக்கியே..."
"ஏன் எதோன்னு சுத்தி வளச்சு சொல்றீங்க. நாயின்னு நேரடியா சொல்ல வேண்டியது தானே?"
"அம்மாடி காலைல இந்த ஆட்டத்துக்கு நான் வரலே. நான் போயி குளிக்கிறேன்".
குளிக்க பின்னால் இருக்கும் பாத்ரூமுக்கு போனேன். என் காலடி சத்தம்கேட்டு அங்கு படுத்துக்கிடந்த பூனை என் குறுக்கே ஓடியது.
'போச்சுடா. ஏற்கனவே அவ வேற கத்திக்கு இருக்கா. இப்ப இந்த சனியன் புடிச்ச பூனை வேற குறுக்கே போயிடுச்சா? காலைல இது முகத்துலையா விழிக்கனும்?. இன்னைக்கு போற காரியம் விளங்குன மாதிரிதான். கடவுளே போற காரியம் நல்ல படியா நடக்கணும். நடக்காட்டி என் பொண்டாட்டி பிலுபிலுன்னு பிடிச்சுக்குவா ராச்சசி . போயிட்டு வந்து முதல் வேலையா இந்த சனியன் புடிச்ச பூனைய அடிச்சு துரத்தற வழிய பார்க்கணும்' என்று நினைத்தவாறு குளிச்சு முடித்தேன்.
ஒரு வழியாக புரோக்கரை சந்தித்து அவருடன் போய் வீட்டை பார்த்தேன். நன்றாகத்தான் இருந்தது. என் மனைவியிடம் கேட்டுவிட்டு அட்வான்ஸ் கொடுத்துவிடலாம் என்று அவரிடம் சொல்லிவிட்டு வீடு திரும்பினேன்.
"ஏங்க போன காரியம் என்னாச்சு?"
"நல்லபடியா முடிஞ்சுச்சு. வீடு ஓகே. நாலு மாச அட்வான்ஸ் கேக்கறான். எதுக்கும் உன்கிட்ட ஒருவார்த்தை கேட்டுட்டு..."
"இதுல என்கிட்டே கேக்கறதுக்கு என்ன இருக்கு? உங்களுக்கு பிடிச்சுருந்தா முடிச்சுட வேண்டியதுதானே?"
"இப்ப என்ன கேட்டு போச்சு? நாளைக்கு அட்வான்ஸ் கொடுக்கலாம். ஒண்ணும் அவசரமில்லை"
"வெயில்ல களைப்பா வந்துருக்கீங்க. கொஞ்சம் மோர் சாப்பிடுங்க. ஆங்... சொல்ல மறந்துட்டேங்க. நம்ம வீட்டையே சுத்திசுத்தி ஒரு பூனை வரும்ல..."
"ஆமா, அதுக்கென்ன இப்ப?"
"யார் முகத்துல விழிச்சுச்சோ பாவம்.. ரோட்ல போன கார்ல அடிபட்டு செத்துப் போச்சுங்க."
எனக்கு சுரீரென்று இருந்தது.
Tweet |
:-)
பதிலளிநீக்குஜீ...நீங்க போட்ட பின்னூட்டம் புரியவே இல்லைங்க....ஒன்னு...நல்லாருக்குன்னு சொல்லுங்க...இல்லேன்னா...நல்லா இல்லேன்னு சொல்லுங்க அதை விட்டுட்டு இப்படி போட்டு என் மண்டைய பிச்சுக்க வைக்காதீங்க....அப்புறம் நான் அழுதுருவேன்.
பதிலளிநீக்கு[ma][im]http://cdn3.tamilnanbargal.com/sites/all/modules/smileys/packs/GigaSmiley/sad1.gif[/im][/ma]
நல்ல கதை...
பதிலளிநீக்குரஹீம் கதை நல்லா இருக்கு. நம்மைப்போல பூனைகளும் சகுனம் பாக்க ஆரம்பிச்சா எப்படி இருக்கும்?
பதிலளிநீக்குநல்லாருக்குங்க ரஹீம்
பதிலளிநீக்குரஹீம் பாய்....
பதிலளிநீக்குலஷ்மி மேடம் சொன்ன மாதிரி எல்லா பூனைகளும் நம்மை போலவே சகுனம் பார்த்தால், எப்படி நம்மை திட்டும் என்று நினைத்து பாருங்கள்....
கதை நல்லா இருக்கு....
பூனை பாவம் :(
பதிலளிநீக்குமூட நம்பிக்கையை சவுக்கால் அடித்து இருக்கறீர்கள் ஒரு சிறுகதையின் மூலம்.....சூப்பர்..
பதிலளிநீக்குஅருமை...
பதிலளிநீக்குஅன்புச் சகோதரன்...
மதி.சுதா.
யாழ்ப்பாணத்தில் உருவாகும் திரைப்படமும் அதன் பின்னணியும்.
ஐயோ ! பூனை போச்சே.
பதிலளிநீக்குஐயோ ! பூனை போச்சே.
பதிலளிநீக்குசூப்பருங்க நண்பா
பதிலளிநீக்குநல்லாயிருக்கு,சில படைப்புகளின் பாதிப்பும் தெரியுது.
பதிலளிநீக்கு-அருண்-
ஒரு சிறுகதையில் மூடநம்பிக்கையை பற்றி சுருக்கென்று சொன்னீர்கள்... அப்புறம் :) இந்த மாதிரி ஸ்மைலி போட்டால் பதிவு பிடித்திருக்கிறது என்று அர்த்தம்... உங்களுக்கு தெரியாததா என்ன...?
பதிலளிநீக்குபூனையை வைத்து நல்ல கருத்துடன் ஒரு கதை கொடுத்தீர்கள். அடுத்து,
பதிலளிநீக்கு[ma]புலி, யானை[/ma]
இவற்றை வைத்து நீங்கள் எழுதும் கதையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
(ச்சும்மாதான்... தமாசுக்கு...!)
அன்புள்ள அண்ணன் ரஹீம் அவர்களுக்கு நான் மாலிக் டுபைளுருந்து நா நல்ல இருக்கேன் நீங்களும் நல்ல இருபிங்கன்னு நம்புறேன் இந்த கதை சூப்பர் அன்ன!!!!!!!!!!!!!!!!!!
பதிலளிநீக்கு