என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வியாழன், பிப்ரவரி 14, 2013

23 பேனா உடைத்த காதல்



அது 1990-ஆவது வருஷம். அப்ப நாங்க 9-ஆவது படிச்சிக்கு இருந்தோம். அப்ப நடந்த ஒரு காதல் கதையை சொல்றேன் கேளுங்க.....

அந்த வயசுல எந்த பொண்ணுங்க நம்மை பார்த்து சிரித்தாலும், பேசினாலும் காதல்னு நினைக்கிற ரெண்டும் கெட்டானா திரிஞ்சோம். காதலை தவிர இணக்கவர்ச்சி என்ற வார்த்தையே எங்களுக்கு தெரியாது. அப்ப எல்லாமே காதல்தான்.
என் நண்பன் ஒருவன் 6-ஆவது படிக்கிற பொண்ண லவ்(?) பண்ணான். அந்த வயசிலா விளங்கிடும் என்று முணுமுணுக்காம படிங்க.

நான், அவன், அந்தப்பொண்ணு எல்லோரும் ஒண்ணாத்தான் ஸ்கூலுக்கு போவோம். வருவோம். நாங்க க்ளாஸ் ரூம் போனதும் முதல் பீரியட் ஆரம்பிக்கும். அப்ப ஏதாவது எழுத பேனாவை எடுக்கும் நண்பன் பட்டென்று டெஸ்கில் குத்தி பேனா நிப்பை உடைத்து விடுவான். உடனே வகுப்பாசிரியரிடம்
சார்......பேனா ஒடைஞ்சிடுச்சு. ஆறாவதுல போயி பேனா வாங்கிட்டு வர்றேன் என்பான். உடனே ஆசிரியரும் சரி போய் வாங்கிட்டு வாங்க என்பார் ஒன்றும் புரியாமல்....
இதில் ஒன்றும் புரியாமல் என்ற வரியை எழுத காரணம்.........இவன் எப்பவெல்லாம் அந்த பொண்ணை பார்க்க நினைக்கிறானோ அப்பவெல்லாம் பேனாவை உடைத்து விடுவான். புதுசா பேனா வாங்குறேன்னு அந்த போண்ணு இருக்கும் க்ளாஸ் ரூமுக்கு போய் அந்த பெண்ணிடம் வாங்கிட்டு வருவான். அவன் மட்டும் போனால் பரவாயில்லை. என்னையும் அழைத்துக்கொண்டு போவான். ஆசிரியரிடமும் பர்மிசன் கேட்பான்.   சார்.....கஸாலியையும் கூட்டிக்கு போறேன் என்பான். உடனே ஆசிரியர்....ஏண்டா அந்த பேனா நூறு கிலோ எடை இருக்குமா.... இதை ஒரு ஆள் வாங்கிட்டு வரமுடியாதோ? இதை தூக்க ரெண்டு பேருன்னு திட்டிக்கே என்னையும் போக சொல்வார்.

இது வாரத்துக்கு இரண்டு தடவை நடந்திடும் கூத்து. இப்படியே ரொம்ப மாசம் ஓடிச்சு. இவன் ஒடைச்ச பேனாவையும் அந்த பொண்ணு கொடுத்த பேனாவையும் வாங்கிய காசுக்கு தங்கத்திலேயே பேனா செஞ்சிடலாம். அவ்வளவு பேனா ஒடைச்சிருக்கான். இப்படித்தான் ஒரு நாளு வழக்கம் போல பேனாவை ஒடச்சிட்டு ஆசிரியரிடம் பர்மிசன் கேட்க......அவருக்கு கோபம் வந்துடுச்சு.
டே....வாரத்துக்கு எத்தனை பேனாடா உடைப்பே ராஸ்கல்.....இனிமே பேனா வாங்க எங்கேயும் போகக்கூடாது. நானே தர்றேன் என்று அவர் பேனாவை கொடுத்தார். இவன் முகத்தில் ஈயாட உட்கார்ந்திருந்தான். அதன் பின் இவன் பேனாவே உடைப்பதில்லை..... அவர் பீரியடில் மட்டும். அடுத்த பீரியட் வந்ததும் மீண்டும் உடைக்க ஆரம்பித்து விடுவான்.

இப்படியே இவர்கள் காதல் நாளொரு பேனாவும், பொழுதொரு நிப்புமாய் உடைய வளர ஆரம்பித்தது. இப்போது அந்த பெண்ணையே திருமணம் செய்துகொண்டு மூன்று குழந்தைகளுடன் மலேசியாவில் வசிக்கிறான். நான் அவனிடம் அடிக்கடி சொல்வதுண்டு.....
”ஒரு கைதிக்கு தூக்குத்தண்டனை கொடுத்த பிறகு தீர்ப்பெழுதிய பேனாவை உடைத்து விடுவார் நீதிபதி. அதாவது ஒரு தூக்குத்தண்டனைக்கு ஒரு பேனாவைத்தான் உடைப்பார்கள். நீயோ ஒரு ஆயுள் தண்டனை வாங்க எத்தனை பேனாவை உடைச்சிருக்கே”
என்பேன்.
என்ன நான் சொன்னது சரிதானே?......

பின்குறிப்பு: அந்த நண்பன்......சென்னையில் இருக்கும் பிரபலமான ஹோட்டலின் பெயரை கொண்டவன். 
பெண்.....ஒரு மலரின் பெயரை கொண்டவர்....
(நாங்களும் பேரை மாற்றுவோம்ல)......


Post Comment

இதையும் படிக்கலாமே:


23 கருத்துகள்:

  1. ஹா...ஹா... இனிமையான ஆயுள் தண்டனை தானே...?

    பதிலளிநீக்கு
  2. நீ சொல்றது அவனைத்தானே??

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்....அவனேதான். நீ ஒரு தண்ணி மலையான்டா.... கரெக்டா கண்டுபிடிச்சிட்டியே

      நீக்கு
  3. ஹா...ஹா..ஹா...

    பரவாயில்லையே.... 8வதுல காதலிச்ச பெண்ணையே கல்யாணம் பண்ணிக்கிட்டாரா... சூப்பர்! வாழ்த்துக்கள் சொன்னேன்னு சொலிடுங்க...

    சரிசரி... உங்க லவ் ஸ்டோரி எப்ப பதிவா வரும்???!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காதல் கதையெல்லாம் நமக்கு கிடையாது. ஸ்ட்ரைட்டா கல்யாணம் தான்.

      நீக்கு
  4. யாருப்பா அது.எனக்கு தெரியுமா அந்த கதாநாயகனை

    பதிலளிநீக்கு
  5. சுவையான காதல் கதை! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  6. //நீயோ ஒரு ஆயுள் தண்டனை வாங்க எத்தனை பேனாவை உடைச்சிருக்கே”//
    நூத்தில ஒரு வார்த்தை!

    பதிலளிநீக்கு
  7. கருத்துச் செறிவுள்ள சிறப்பான பதிவு. :-)))

    //அந்த நண்பன்......சென்னையில் இருக்கும் பிரபலமான ஹோட்டலின் பெயரை கொண்டவன். //

    அந்த ஹோட்டல் முனியாண்டி விலாசா அல்லது முருகன் இட்லி கடையா? :-))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன இந்த ஏரியா பக்கம் காத்தடிக்குது???? வலுக்கட்டாயமாக இழுத்து வரப் பட்டீர்களோ?? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

      நீக்கு
  8. இப்படி எல்லாம் கூட நடந்துச்சா...!ரெண்டு பேர்கிட்டயும் உடனே கேட்கிறேன்....

    பதிலளிநீக்கு
  9. சம்பந்தபட்ட பார்ட்டி படித்துவிட்டு சிரிக்கிறார் அண்ணே....

    பதிலளிநீக்கு
  10. ஒரு கைதிக்கு தூக்குத்தண்டனை கொடுத்த பிறகு தீர்ப்பெழுதிய பேனாவை உடைத்து விடுவார் நீதிபதி. அதாவது ஒரு தூக்குத்தண்டனைக்கு ஒரு பேனாவைத்தான் உடைப்பார்கள். நீயோ ஒரு ஆயுள் தண்டனை வாங்க எத்தனை பேனாவை உடைச்சிருக்கே” பஞ்சு ....சூப்பரு...முதலாவது காதலி மனைவியாகக்கிடைப்பதும் வரம்தான்

    பதிலளிநீக்கு
  11. அட.... அதுக்குத்தான் எங்க கிளாசு ரூமுக்கு அடிக்கடி வந்தீங்களா...?

    இந்த மர மண்டைக்கு இப்போத்தான் புரியுது...

    பதிலளிநீக்கு
  12. சுவாரசியமான காதல் கதை.முடிவுதான் சோகமா இருக்கு. அட!கல்யாணத்தைதான் சொல்றேன்.

    பதிலளிநீக்கு


  13. உடைத்த காதல் ! அருமை!

    பதிலளிநீக்கு


  14. உடைத்த காதல் ! அருமை!

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.