நான் கடலுக்கு போறேன். இப்படித்தான் ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருந்தேன் பேஸ்புக்கில்.அய்யய்யோ அந்த பக்கம் போகாதீங்க என்று அமானுஷ்ய படங்களில் சொல்வார்களே...அப்படித்தான் சொன்னார்கள் அந்த ஸ்டேட்டஸ்க்கு பின்னூட்டம் போட்டவர்கள் அல்லது கடல் படம் பார்த்தவர்கள். அப்பவே நான் சுதாரிச்சிருந்தா சேதத்தை தவிர்த்திருக்கலாம். ஆனால், விதி வலியது. என்னதான் நடக்குதுன்னு பார்ப்போம் என்று மனதில் துணிச்சலை வரவழைத்துக்கொண்டு சத்யம் தியேட்டரில் உட்கார்ந்ததற்கு காரணம் மணியின் மேக்கிங் ஸ்டைல் + ஏற்கனவே ஹிட்டாகியிருந்த ரஹ்மானின் இசையமைப்பில் வந்த பாடல்கள் + ராஜீவ்மேனனின் ஒளிப்பதிவு போன்றவைகள் தான். படம் பார்க்கும் போதுதான் தெரிந்தது நமக்குத்தான் எத்தனை நலம் விரும்பிகள் இருக்கிறார்கள் இந்த பேஸ்புக்கில் என்று. அவர்கள் பேச்சை புறக்கனித்த என்னை அவர்கள் மன்னிக்கட்டும்.
ஆனால் மணிரத்னத்திற்கு (நிஜக்)கடல் மேல் அப்படி என்னதான் கோபமோ என்னவோ தெரியவில்லை. அந்த வார்த்தையை கேட்டால் இனி வெறுப்புதான் வரும்போல. யாராவது மெரினாவிற்கு கூப்பிட்டாலே அவர்களை கடுப்பில் திட்ட வைத்துவிட்டார்.
கதை...அரவிந்த்சாமிக்கும் அர்ஜூனுக்கும் அதாவது கடவுளுக்கும் சாத்தானுக்கும் நடக்கும் போராட்டமே கதை.அரவிந்தசாமியான கடவுளின் சுவீகர புத்திரனை அர்ஜுன் என்ற சாத்தான் தன்னைப்போல் மாற்ற நினைக்கிறார். அதில், ஓரளவு வெற்றியும் அடைகிறார். இதற்கிடையில் அந்த சுவீகர புத்திரனுக்கு தேவதையின் ஆசி கிடைக்கிறது. அதன்பின் புத்திரனும், கடவுளும் சேர்ந்து சாத்தானை பழி வாங்குவதுதான் கதை. கேட்க நல்லாத்தான் இருக்கு.ஆனால், படமா பாருங்க குழப்பி அடித்திருக்கிறார்கள் மணிரத்னமும், ஜெயமோகனும்.
தன் முந்தைய படமான ராவணன் படத்தை மொக்கை என்று சொல்லிவிட்டார்களே அவர்களை பழிவாங்கி அப்படி சொன்னவர்கள் வாயாலேயே ராவணன் பரவாயில்லை என்று சொல்ல வைப்பேன் என்று சத்தியம் செய்துவிட்டு ஜெயமோகனிடம் கதை கேட்டிருப்பார் போல. அவர் சத்தியம் நிறைவேறி விட்டது.
நடிப்பு, இசை, ஒளிப்பதிவு என்று எல்லாம் இருந்தும் அத்தனையும் வீண். என்னதான் பட்டுக்குஞ்சம் போட்டாலும் விளக்குமாரு விளக்குமாருதானே
எனக்கு இப்ப இருக்கும் பயமெல்லாம்...இந்தக் கடலை நல்லபடம்னு சொல்லவைக்க இதைவிட மோசமான படம் எடுக்காமல் இருக்கனும் மணிரத்னம்.
பாவம், ஜாம்பவான் சுஜாதா மறைவிற்கு பிறகு மணி தடுமாறுவது நன்றாக வெளிப்படுகிறது, இல்லையென்றால் இந்தக்கதையையெல்லாம் படமாக்க முன்வருவாரா?
ஆக மொத்தத்தில் இந்த கடல் ஆழமும் அலையும் இல்லாத ஊமைக்கடல்.
நேற்று நான் போட்ட ஃபேஸ்புக் ஸ்டேட்டசும் அதற்கான பின்னூட்டங்களும்.....
Tweet |
ha..ha..ha..ha..
பதிலளிநீக்குஎன்ன சிரிப்பு பலமா இருக்கு? .மாட்டிவிட்ட சந்தோஷமா?
நீக்குU need international cinema knowledge to understand the film!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!1
பதிலளிநீக்கு- mani rathnam
நமக்கு அந்த அள்வுக்கெல்லாம் அறிவு இல்லே. லோக்கல் அறிவுதான்.
நீக்குகடல் பற்றிய .காமடி பாருங்கோ
பதிலளிநீக்குhttp://www.youtube.com/watch?v=KWyjsmikpEU
பார்த்திட்டேன். செம காமெடி.
நீக்குவருகைக்கு நன்றி அய்யா
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குபெரியவங்க சொன்னா கேட்டுக்கணும்,நாளைக்கு நாக்கு மேல பல்லையோ,பல்லு மேல நாக்கையோ போட்டு,கசாலி 'அந்தப்' படம் பாக்கப் போனாராம்னு பேசிடக் கூடாது பாருங்க!(இதுல வீராப்பா பதிவு வேற!)
பதிலளிநீக்குமன்னிச்சுக்கங்க. இனிமே கேட்டுக்கறேன்.
நீக்குஅரசியல் பதிவர் சினிமா பதிவர் ஆகி விடுவார் போல.
பதிலளிநீக்குஆகியாச்சு.ஆகியாச்சு
நீக்குபாத்துடீங்களா.....வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு