தமிழகத்தை பொறுத்தவரை திராவிட இயக்கம் என்பது நீண்ட நெடிய வரலாறை கொண்டது. எங்கும் பிராமணர் எதிலும் பிராமணர் என்றிருந்த தமிழகத்தில் பிராமணர் அல்லாதோருக்காக ஜான் ரத்தினம் என்பவரால் 1892-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட திராவிடர் கழகமே திராவிட இயக்கத்தின் முதல் விதை. அதன்பின் 1912-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட திராவிட சங்கமே இன்றைய திராவிட இயக்கங்களுக்கு முன்னோடி.
திராவிட இயக்கங்களின் தாக்கம் எத்தகையது என்றால், பெரியார் துவங்கிய திராவிடர் கழகம் துவங்கி விஜயகாந்த் துவங்கிய தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் வரை தமிழக அரசியலில் யாரும் திராவிடத்தை பயன்படுத்தாமல் அரசியலே செய்யமுடியாது. அனைத்துக்கட்சிகளின் பெயர்களிலுமே திராவிட(ர்) என்ற வார்த்தை இடம்பெற்றிருப்பதை வைத்தே இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து விடலாம். அப்படி நூற்றாண்டு கண்ட திராவிடர் இயக்கத்தின் வரலாற்றை சுவாரஸ்யமாகவும், சுவை படவும் சொல்லும் புத்தகமே திராவிடர் இயக்கம் நோக்கம், தாக்கம், தேக்கம்.
திராவிடர் இயக்கம் பற்றி எத்தனையோ புத்தகங்களை படித்திருக்கிறேன். ஒரு புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் தகவல் இன்னொரு புத்தகத்தில் இருக்காது. மற்றொரு புத்தகத்தில் இருக்கும் தகவல் வேறொரு புத்தகத்தில் இருக்காது. ஆனால், இந்த புத்தகத்திலோ ஒன்று விடாமல் அனைத்து தகவல்களையும் சுருக்கமாகவும், நேர்த்தியாகவும் தொகுத்து தருகிறது. அதாவது, பல பூக்களில் அமரும் தேனீயானது அதிலிருக்கும் தேனை எடுத்து ஓரிடத்தில் சேமித்து தேனாக தருவதுபோல், பல திராவிட இயக்க புத்தகங்களிலிருந்து நமக்கு தேவையான விஷயத்தை மட்டும் எடுத்து தொகுத்து பொக்கிஷமாக தந்திருக்கிறார் இதன் நக்கீரன் பத்திரிகையின் தலைமை துணை ஆசிரியரான கோவி.லெனின் அவர்கள். எந்த இடத்திலும் மிகையின்றி, விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு திராவிடர் இயக்க வரலாற்றை எழுதியிருக்கும் ஆசிரியர் கோவி.லெனின் அவர்களுக்கு ஒரு சபாஷ்......
தாத்தா பேரன் உரையாடல் வழியில் திராவிட இயக்கத்தில் அதிகம் வெளியே வராத அல்லது மறைக்கப்பட்ட கருப்பு பக்கத்தை அல்லது இந்த தலைமுறையினர் அறிந்திராத விஷயங்களை கூட மிகவும் துணிச்சலுடனும், அப்பட்டமாகவும் அதேநேரம் ஆதாரத்துடனும் எடுத்துவைக்கிறார் இதன் ஆசிரியர்.
ஒரு உதாரணத்திற்கு....... ஜெயலலிதா பற்றி எழுதுவதே பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் இன்றைய காலகட்டத்தில், முதல்வர் எம்.ஜி.ஆரால் செயல்பட முடியவில்லை. என்னை முதல்வராக்குங்கள் என்று அன்றைய பிரதமர் ராஜீவிற்கு ஜெயலலிதா எழுதிய கடிதத்தின்(?) நகலை எடுத்து அப்படியே போட்டிருக்கிறார்கள். இப்படி நிறைய இருக்கிறது இந்த புத்தகத்தில். திராவிடர் இயக்கங்களை பற்றி அறிந்துகொள்ள விரும்புகிறவர்களுக்கு இந்தப்புத்தகம் ஒரு புதையல் என்பதில் சந்தேகமேயில்லை. படிப்பவர்கள் மத்தியில் இந்த புத்தகம் தேக்கமில்லாத தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். அதுதான் இந்த புத்தகத்தின் நோக்கமும் கூட....
அட்டை தவிர்த்து 328 பக்கங்களை கொண்ட இப்புத்தகத்தை நக்கீரன் பப்ளிகேஷன் வெளியிட்டுள்ளது. இதன் விலை ரூபாய் 175.
Tweet |
நல்ல அறிமுகம்..இதே போன்று நீங்கள் எழுதிக்கொண்டிருக்கும் பதிவுகளின் தொகுப்பான 'திராவிட இயக்க வரலாறு - ரஹீம் கஸாலி' புத்தகத்தை எப்போது வெளிவிடப்போகிறீர்கள்?
பதிலளிநீக்குசூப்பராக எழுதுறீங்க, தொடர்ந்து எழுதுங்க, காமெடி பீசுகளை கண்டுக்காதீங்க
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குமொத்த திரையுலகமும் எங்களை இழிவுபடுத்தி விட்டனர் என்று பிரமாண்டமான போராட்டங்கள் நடத்தினர்.
பதிலளிநீக்கு>>>>>> Click to Read
விபச்சார வழக்கில் ஒரு கைதும்- ஊடகங்களின் கருத்து சுதந்திர விபசாரங்களும்.
.