கண்ணா லட்டு தின்ன ஆசையா...நானும் அந்தக்காவியத்தை கண்டே விட்டேன். 1981-ஆம் ஆண்டு பாக்யராஜ், சுதாகர், ராதிகா கூட்டணியில் வெளியான இன்றுபோய் நாளை வா கதையை சுட்டு லட்டாக தந்திருக்கிறார்கள். ஆனால், பாக்யராஜின் டைமிங் காமெடி சென்ஸ் மிஸ்ஸாகி இருந்தாலும் இந்த லட்டு இனிக்கவே செய்கிறது. நான் ஆரம்பத்திலேயே சொல்லி விடுகிறேன் இந்தப்பதிவு அந்த படத்தின் விமர்சனம் அல்ல. அதேநேரம் பவர்ஸ்டார் புகழ் பாடும் பதிவும் அல்ல. பவரை பற்றி அலசும் பதிவு.
இன்று போய் நாளை வா படத்தில் இருந்த உயிர்ப்பு இந்த லட்டில் இல்லாவிட்டாலும், அந்தக்குறைகளை நீ(போ)க்கி ஒற்றை ஆளாய் படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறார் பவர்.
டைட்டிலில் பெயர் போட்ட போதும் சரி, அறிமுகத்தின் போதும் சரி சந்தானத்திற்கு கிடைத்த கைதட்டலை விட அதிகமாக பவருக்குத்தான் கிடைத்தது என்பது சத்தியமான உண்மை.உண்மை...உண்மை.,உண்மையத் தவிர வேறென்றுமில்லை. அது ஒன்றே போதும் பவரின் பவரை பறை சாற்ற...
அதுவும் சென்னை சத்தியம் போன்ற மேல்தட்டு ரசிகர்கள் கூடும் திரையரங்கிலேயே இத்தனை கைதட்டல் என்றால் அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் பவர் சென்றடைந்து விட்டார் என்றுதானே அர்த்தம்?.
லத்திகா என்ற உலக சினிமாவின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான பவர் அந்த படத்தை தொடர்ந்து 250 நாள் ஓட்டி புகழ் அடைந்திருந்தாலும், தனக்குத்தானே பவர் ஸ்டார் என்று பட்டம் கொடுத்து சில கோமாளித்தனங்கள் செய்திருந்தாலும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் அ(ப)வர் சென்றடைந்தது என்னவோ வலைத்தளங்கள், ஃபேஸ்புக் மூலமாகவும், பத்திரிகை போன்ற ஊடகங்கள் மூலமாகவும்தான். சில செய்கைகள் மூலமாக விளம்பர பிரியராக பார்க்கப்பட்ட பவர் நீயா நானா என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது கோட்டு கோபியாலும், இன்னொரு அறிவு ஜீவியாலும் அசிங்கப்படுத்த பட்ட போது அவர் காட்டிய அசாத்திய பொறுமை மூலம் தான் ஒரு ஹீரோவாக அந்நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் மனதில் சிம்மாசனமிட்டார்.அதேநேரம் அனுதாபத்துடனும் பார்க்கப்பட்டார். அந்த அனுதாபமே இப்போது லட்டிற்கு கூட்டம் சேர்த்து தந்திருக்கிறது.
இந்தப்படத்தில் பவர் செய்யும் அலப்பறைகளுக்காகவே கூட்டம் குவிகிறது என்பதற்கு சான்று படம் விட்டு வெளியே வரும் ரசிகர்கள் பவரின் பெயரையே உச்சரித்து வருவதுதான். இது பவருக்கான அங்கீகாரம்.
காசுகொடுத்து தனக்கென்று ஒரு கூட்டத்தை சேர்த்து வைத்துக்கொள்வது, தன் சொந்த சிலவில் பிறந்தநாள் கொண்டாடுவது என்று தன் நிஜ வாழ்வையே லட்டு படத்திலும் பவர் பிரதிபலித்திருக்கிறார். சந்தானம் பவரை கடுமையாக கலாய்த்தாலும், நீயா நானா கோபியை விடவா இவர் கலாய்த்து விட்டார் என்று அமைதியாகவே இருக்கிறார் பவர். படம் முழுக்க பவரின் கொடி பறந்தாலும் நடிப்பு மட்டும் வரவே மாட்டேங்கிறது அவருக்கு. சில இடங்களில் கவுண்டமணியின் சாயல் தெரிகிறது. ஆனால், பவரை பார்க்க தியேட்டருக்கு போனவர்களுக்கு அதெல்லாம் ஒரு குறையாகவே தெரியவில்லை என்பதே நிஜம்.
எங்கள் தலைவர் ஸ்க்ரீனில் வந்தாலே போதும் படம் 50 நாள், 100 நாள் ஓடும் என்பார்கள் பிரபல நடிகர்களின் ரசிக குஞ்சுகள். ஆனால் அது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ நிச்சயம் பவருக்கு பொருந்தும் போல.
பவருக்கு இப்போது கிடைத்திருக்கும் மாஸ் எந்த ஒரு காமெடி நடிகருக்கும் ஏன் ஹீரொவுக்குமே கிடைக்காத ஓபனிங்க். இனிதான் அ(ப)வர் சுதாரித்துக்கொள்ள வேண்டும். தனி நபர் துதி, பணம் கொடுத்து ஆட்களை வரவைத்து அலப்பறைகளை கொடுப்பது என்று தேவையில்லாமல் விளம்பரங்களை விட்டுவிட்டு இப்போது கிடைத்திருக்கும் ரூட்டிலேயே பயணித்தால் இன்னும் சில வருடங்களுக்கு கோடம்பாக்கத்தில் பவரின் கொடிதான் பறக்கும். இல்லாவிட்டால் தமிழ்நாட்டில் காணாமல் போயிருக்கும் 'பவரை' போலவே இந்த பவரும் காணாமல் போய்விடுவார்.
Tweet |
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குதிரை அரங்கிலும் கை தட்ட காசு குடுத்து ஆள் வைத்து இருந்ததாக கேள்விப்பட்டேனே உண்மையா ?
பதிலளிநீக்குபவர் ரொம்ப பவராத்தான் இருக்கு அடிபொடிகளால் பீஸ் போயிராம இருக்கணும்...
பதிலளிநீக்குஅருமையான அலசல்! நன்றி!
பதிலளிநீக்கு\\படம் முழுக்க பவரின் கொடி பறந்தாலும் நடிப்பு மட்டும் வரவே மாட்டேங்கிறது அவருக்கு. \\ Excellent point, many of our guys missed this!!
பதிலளிநீக்குஅவ்வளவு இனிப்பாவா இருந்திச்சு இந்த லட்டு?எனக்கென்னமோ.........சரி விடுங்க.அப்புறம் காமெடி பீசுங்க கிளம்பிடுவாங்க!
பதிலளிநீக்குபாக்யராஜ், சுதாகர், ராதிகா கூட்டணியில் வெளியான இன்றுபோய் நாளை வா
பதிலளிநீக்குசுதாகர் இன்றுபோய் நாளை வா படத்துல நடிக்கவே இல்ல சார்... பாக்யராஜ், சுதாகர் கூட்டணி அப்டினா சுவரில்லா சித்திரங்கள் படம் சார்...
:-)
பதிலளிநீக்கு