தி.மு.க.தலைவர் பதவிக்கு நானே ஸ்டாலினை முன்மொழிவேன் என்று நேற்று நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கலைஞர் பேசியதும் பற்றிக்கொண்டது பரபரப்பு....இதற்கென காத்திருந்தவர்கள் போல் சிலர், கலைஞர் சங்கர மடமாக்கிவிட்டார் தி.மு.க.,வை என்றும், இது ஒரு வாரிசு அரசியல் என்றும் குற்றம் சாட்டியுள்ளனர் சிலர்
வாரிசு அரசியல் என்ற குற்றச்சாட்டை கேட்டதும் எனக்கு சிரிப்புதான் வருகிறது. வாரிசு அரசியல் என்பது உலகம் தழுவிய அளவில் உள்ளது. உலக அரசியல் வரலாற்றில் கலைஞர் மட்டும் தான் முதன்முதலில் இந்த வாரிசு அரசியலை ஆரம்பித்து வைத்துள்ளதுபோல் பேசுகிறார்கள். வாரிசு அரசியல் என்பது நம் அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் என்று துவங்கி மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா வரை உண்டு. இந்தியாவில் நேரு குடும்பம் துவங்கி உ.பி., கர்நாடகா, ஒரிசா, பீகார், காஷ்மீர் என்று நீக்கமற நிறைந்திருக்கிறது. இங்கு தமிழ்நாட்டில் கூட ஜெயலலிதா நேரடியாக வாரிசு அரசியலில் ஈடுபடாவிட்டாலும் தன் தோழி சசிகலாவின் குடும்ப வாரிசுகளை கட்சியிலும் ஆட்சியிலும் அதிகாரம் செலுத்த வைத்தார்.
சரி விஷயத்திற்கு வருகிறேன்.
கலைஞர் அறிவித்ததை போல், ஸ்டாலின் தலைமை பதவிக்கு பொருத்தமானவர்தான். அழகிரியை விட சீனியர் அவர். ஏன் ஜெயலலிதாவை விட பல வருடங்கள் சீனியர் ஸ்டாலின். நேற்று பெய்த மழையுல் இன்று முளைத்த தலைவரில்லை அவர். அறிஞர் அண்னா முதல்வராக இருந்த காலத்தில் தன் பள்ளி பருவத்தில் கோபாலபுரம் இளைஞர் திமுக என்ற அமைப்பினை ஆரம்பித்ததில் துவங்குகிறது அவரது அரசியல் அத்தியாயம். கோபாலபுரம் இளைஞர் தி.மு.க.,வே பிந்நாளில் இளைஞரணியாக வளர்ச்சி பெற்று, 1980-ஆம் ஆண்டில் மதுரையில் துவங்கப்பட்டது. இதற்கிடையில் இந்திராகாந்தி அறிவித்த எமெர்ஜென்சியில் இவரளவிற்கு பாதிக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சி தலைவரின் மகன் வேறு யாரும் இருக்க முடியாது.
அடுத்த தலைவருக்கு திமுகவில் இவரை விட தொண்டர்கள் செல்வாக்கு உள்ளவர்கள் வேறு யாரும் இருப்பதாக தெரியவில்லை. 1984-ஆம் ஆண்டிலிருந்து தேர்தல் அரசியலில் ஸ்டாலின் இருந்தாலும் அவர் மந்திரியானது என்னவோ 2006-ஆம் ஆண்டுதான். இதற்கிடையில் 1989, 1996 என்று இரண்டு முறை திமுக பதவியில் இருந்திருக்கிறது. அப்போதெல்லாம் ஸ்டாலின் வெறும் எம்.எல்.ஏ. மட்டுமே.
1996, 2001-ஆம் ஆண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயராக சென்னை மாநகராட்சியில் பணியாற்றியிருக்கிறார்.அப்போது அவர் சாதனைக்கு சான்று பாலங்கள்.
2004-ஆம் ஆண்டு சுனாமி பாதிக்கப்பட்டிருந்தபோது தி.மு.க.,சார்பில் வசூலிக்கப்பட்ட 21 லட்சம் ரூபாய் நிதியை அப்போதைய முதல்வரான ஜெயலலிதாவை சந்தித்து அளித்தது அவரது அரசியல் நாகரீகத்திற்கு சன்று.
திட்டமிட்டு கலைஞர் ஸ்டாலினை வளர்த்தார் என்பதும் ஏற்புடையதல்ல. மக்கள் செல்வாக்கு ஸ்டாலினுக்கே இருந்ததால் அவர் இப்போது தலைமை பொறுப்பிற்கு உயர்ந்திருக்கிறார் என்பதுதான் நிஜம். கலைஞர், தன் மகன் என்று மு.க.முத்துவைத்தான் தன் வாரிசாக வளர்த்தார். அப்போது கலைஞர் பவர்ஃபுல்லான முதல்வரும் கூட. ஆனாலும் முத்துவால் வளரவே முடியவில்லை.
மக்கள் செல்வாக்கு என்பது திணிக்கப்பட்டு வரும் விஷயமல்ல, தகுதியும் திறமையும் இருந்தால்தான் வளர முடியும் என்பதற்கு மு.க.முத்துவே உதாரணம். கலைஞரின் மகன் என்ற தகுதிக்காக யாரும் முத்து பின்னால் அணி வகுக்க வில்லை.கொடிபிடிக்கவில்லை. ஆனால், ஸ்டாலினோ அப்படியில்லை. மக்களோடு பழகியவர்.
கலைஞர் தன் வாரிசு என்பதற்காக ஸ்டாலினை தலைவருக்கு முன்மொழியவில்லை. அப்படி முன்மொழிவதாக இருந்தால் ஸ்டாலினுக்கு மூத்தவரான அழகிரியையே முன் மொழிந்திருப்பார். ஆனால், மதுரை மட்டும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் உரைகல் அல்லவே? தகுதியும் திறமையும் இருக்கும் ஒருவரையே கலைஞர் தேர்வு செய்திருக்கிறார். இந்த விஷயத்தில் அவர் தேர்வு சரிதான். தி.மு.க.தலைவரின் மகன் என்ற ஒரே காரணத்திற்காக தகுதியும் திறமையும், மக்கள் செல்வாக்கும் வாய்ந்த ஒருவரை எப்படி நிராகரிக்க முடியும்?
Tweet |
நிச்சயம் இது ஒரு நல்ல முடிவு..நல்ல அலசல் கஸாலி.
பதிலளிநீக்குஇப்போதெல்லாம் ஸ்டாலின் ஏதாவது குழந்தையுன் இருப்பதுபோல் பேனர் தென்படுகிறதே அது அவர் பேரனா? கிண்டலில்லை நிஜமான சந்தேகம். அரசியல் பற்றியும் அரசியல்வாதிகள் பற்றியும் அதிகம் தெரிந்துவைத்திருப்பதால் உங்களிடம் கேட்கிறேன். மற்ற்படி ஸ்டாலின் சரியான தேர்வுதான்.
பதிலளிநீக்குநல்ல அலசல் கசாலி!என்னவோ,தி.மு.க வின் எதிர் கால வாரிசு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்!மதுரை மட்டும் தமிழ் நாடு அல்லவே?மேலும் ஒரு 'தாதா' ரேஞ்சில் இருக்கும் ஒருவரை வாரிசாக்கியிருந்தால்.............................!
பதிலளிநீக்குநீங்கள் சொல்வதெல்லாம் மிக சரி ...
பதிலளிநீக்குஆனால் தி . மு .க சங்கரமடம் அல்ல வரிசை நியமிக்க என சொல்லிவிட்டு இப்படி சொல்லலாமா ?
ஸ்டாலின் தவிர வேறு யாரும் பொருத்தமானவர் இல்லையா ?
தி.மு.க.,ஒன்றும் சங்கரமடமில்லை என்று கலைஞர் சரியாகத்தான் சொல்லிருக்கார். காரணம், சங்கர மடத்தில் வாரிசை நியமிப்பதில்லை. அதில் மடாதிபதிகள் வெளியிலிருந்து வருவார்கள்.
நீக்குஇன்று
பதிலளிநீக்கு"பாதுகாக்க வேண்டிய பதிவு இது ( ஜோக் அல்ல )":
அப்ப சங்கரமடம் பரவாயில்லை....
பதிலளிநீக்குநாறிக்கிடப்பது கருணாநிதியின் திமுக என்பது சரிதான்.
mmmm....
பதிலளிநீக்குunmaithaan...
Ithu oru nadu nilaiyana alasal & karuthu.... Nandri.....
பதிலளிநீக்குஎது எப்படியோ அடுத்து நாலு அழகிரி சேனல் ஆரம்பிக்காம இருந்தால் சரிதான்.
பதிலளிநீக்குநல்ல பதுவு! சரியான முடிவு!
பதிலளிநீக்குபகிரங்கமான உண்மையை எதிர்த்து எழுத அசாத்திய திறமை வேண்டும், அந்தத் திறமை உங்களிடம் உள்ளது கஸாலி, பாராட்டுகள்.
பதிலளிநீக்குஇங்கு உலகில்/இந்தியாவில் முதன் முதல் வாரிசு அரசியலைப் புகுத்தியது யார் என்பதல்ல கேள்வி. தமிழகத்தில், மிகக் குறிப்பாக அறிஞர் அண்ணா வளர்த்த திமுக வில் வாரிசு/குடும்ப அரசியலைப் புகுத்தியது யார் என்பதே கேள்வி. அன்பழகனா அது யார்/ வைகோ புதுக்கட்சி ஆரம்பிக்கும் முன் எங்கிருந்தார் / தம்பி வா, தலைமை தாங்க வா என அழைத்தது யார், யாரை எப்போது என்பதைக் கூட அறியாத மக்கள் வாழும் காலமிது.
திமுக வாரிசு அரசியல் என்பதை விட குடும்ப அரசியல் என்பதே பொருத்தம் மற்றும் சரியான குற்றச்சாட்டு. முத்து, ஸ்டாலின், அழகிரி, கனிமொழி என விதைகளை விதைத்து அதற்கு நீரூற்றி வளர்த்து, வை.கோ போன்ற களைகளைக் களைந்து, அன்பழகனின் கிளைகளை வெட்டி, குடும்பம் எனும் தோட்டத்தை சரியாக பராமரித்தார் கருணாநிதி, சரியாக கனிதரும் மரமாக வளர்ந்திருப்பது ஸ்டாலின் என்பதாலும், ஸ்டாலின் மட்டுமே என்பதாலும், இன்று இது ஒன்றுதான் சரியான முடிவு என்பதாலும் இது சரி என்றோ குடும்ப அரசியல் என்றோ ஆகிவிடாது.
காங்கிரஸ் எழுதிக்கொடுத்த கடிதத்தை டி.வி.களில் காட்டி ஆதரவு வாபஸ் என்ற நாடகத்தை நடத்தி தனது குடும்பத்திற்கு (அட திமுகவைச் சொல்லலை பாஸ்..) ஆதாயம் தேடிக்கொண்டது போல் தமிழீழப் போருக்கோ, காவிரி நீரூக்கோ, அட சமையல் எரிவாயு விலையேற்றத்திற்கோ அவரது எதிர்ப்பை பதிவு செய்திருக்கலாம். ராஜாவையும் கனிமொழியையும் திமுக தலைவர் எப்படி நடத்தினார் என்பதை நாடறியும். எனவே ஸ்டாலினிற்கு மட்டும் அவர் ஆதரவு காட்டுகிறார் என்பதில் சற்றும் உண்மையில்லை. தனது வாய்ப்புகளைச் சரியாக பயன்படுத்திக்கொண்டவர் ஸ்டாலின் தான்,