என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

திங்கள், பிப்ரவரி 25, 2013

22 என் சைக்கிளில் பீடியா?- என் சொந்தக்கதை



அப்ப எங்களுக்கு பதினஞ்சு வயசு இருக்கும். எங்களுக்கு என்றால் நான் பேனா உடைத்த காதல் கட்டுரையின் கதாநாயகன், இன்னும் பத்து பேர் இருப்போம். எங்க போனாலும் குரூப்பாத்தான் போவோம், குருப்பாத்தான் வருவோம்.


ஸ்கூல் லீவு விட்டா போதும்.குளத்துக்கரையில் உட்கார்ந்து பனம்பழம் சுட்டு சாப்பிடுவது, நவ்வாப்பழம், விளாம்பழம், கொடுக்காப்புளினு ஏதாவது சாப்பிட்டுக்கே இருப்போம். இந்த மரங்கள் எல்லாம் எங்க ஊர் குளக்கரையிலேயே இருக்கும். எங்களுக்கும் பிரச்சினை இல்லை. அதைப்போல் பக்கத்தில் யார் வீட்டு வயலிலாவது கரும்பு, சோளம், வெள்ளரி போட்டிருப்பார்கள். அங்கெல்லாம் போய் யாருக்கும் தெரியாமல் எதையாவது லவட்டிக்கு வந்து சாப்பிடுவோம்.


இப்படித்தான் ஒரு தடவை எங்க எல்லோருக்கும் பீடி குடிக்க ஆசை. எல்லோர் மனதிலும் இந்த ஆசை இருந்தாலும் எப்படி வாங்குவது, யாராவது பார்த்து வீட்டில் சொல்லிட்டா முதுகுல டின் கட்டிருவாங்களேனு பயம். அப்ப ஒரு மளிகை கடையில் எங்களுக்கு தெரிஞ்ச பையன் வேலை பார்த்தான். அவனை காலைல குளிக்க வரும்போது பிடிச்சு எங்க ஆசையை சொன்னோம். உடனே அவனும் அதுக்கென்ன யாராவது ஒரு ஆள் வந்து வாங்கிக்கங்க என்றான். ஆனால் அப்படி வாங்குவதை யாராவது பார்த்திட்டா பிரச்சினையாகிடுமே என்று எங்க பயத்தை சொன்னோம். அவன் அதுக்கு கூலாக, அட நான் இருக்கும் போது நீங்க பயப்படதீங்க. நேரா கடைக்கு வாங்க ஒரு ரூபாய்க்கு கல்கண்டு கொடுன்னு கேளுங்க. நானும் ஒரு கட்டு சையது பீடி, ஒரு தீப்பெட்டி, ஒரு நிஜாம் பாக்கு, ஒரு சூட மிட்டாய் வச்சு மடிச்சு தந்திடுறேன். வாங்கிட்டு கிளம்பிடுங்க என்றான். அவன் ஐடியா நல்லாருந்துச்சு. அப்ப ஒரு கட்டு சையது பீடி விலையே 70 காசுதான். ஒரு நிஜாம் பாக்கு பத்து காசு சூட மிட்டாய் அஞ்சு காசு. ரெட்டைக்கிளி தீப்பெட்டி 20 காசு. எல்லாம் சேர்த்து ஒரு ரூபாய்தான் வரும்.


ஒரு பீடிக்கட்டும், தீப்பெட்டியும் பொதுவா எல்லோரும் காசு போட்டு வாங்கிடுவோம். அப்புறம் பாக்கு, சூட மிட்டாய்லாம் அவங்க அவங்களுக்கு எவ்வளவு தேவையோ அத்தனையும் தனித்தனியா வாங்கிடுவோம். நான் மட்டும் பீடி வாடையை மாற்ற ஒண்ணு ரெண்டு ஏலக்கா வாங்கிக்குவேன் இலவசமா. சரி பீடி குடிக்கறதுக்கு ப்ளான்லாம் போட்டாச்சு. எப்ப இதி செயல்படுத்துவது?


ஆளாளுக்கு ஒண்ணு சொன்னாங்க. இன்னைக்கு மத்தியானம் சாப்பாட்டுக்கு பின்னாடின்னு முடிவு செஞ்சோம்.  சரி யாரு போய் கல்கண்டு அதாங்க பீடி கட்டு வாங்குவதுனு பேசினப்ப என்னை வாங்க சொன்னாங்க. எனக்கு கை காலெல்லாம் உதற ஆரம்பிச்சிடுச்சு. நான் முடியாது வேற ஆள் வாங்கட்டும் என்றேன்.
இல்லை இல்லை நீயே வாங்கிடு. உன் சைக்கிள்தான் டைனமோ இருக்கு. அதனால நீதான் லாயக்கு என்றார்கள். 


சரி டைனமோவிற்கும் பீடி வாங்குவதுக்கும் என்ன சம்பந்தம்....
சொல்றேன்
. காத்திருங்க..


Post Comment

இதையும் படிக்கலாமே:


22 கருத்துகள்:

  1. உன்னைப் போன்ற பெருந்தலைவர்கள் இது போன்று பீடி குடிக்கும் பதிவுகள் போட்டு உன்னை பின்பற்றும் தொண்டர்களை கெடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்...

    அவ்வ்வ்வ்வ்வ்வ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம்னு சொல்ல வாரேன் சிராஜ். நீ ஏன் தப்பா புரிஞ்சிக்கறே. நீயும் எழுதேன் உன் அனுபவக்கட்டுரையை ஹிஹி.

      நீக்கு
  2. அந்த டென்த் 'B' கிளாஸ்ரூம்,மணி ஆடியோஸ் அரட்டை,அறந்தாங்கி எம்.எல்.ஏ வுக்கு டெய்லி பஸ்ல சீட் போட்டு குடுகிறது,இதுலாம் இந்தக் கட்டுரைல இடம்பெறுமா.....?

    பதிலளிநீக்கு
  3. அய்,கஸாலி பீடி குடிக்க/புடிக்கப் போறாரு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதெல்லாம் எப்பவோ குடிச்சாச்சு. கதை மட்டும் தான் இப்ப வருது

      நீக்கு
  4. "பீடி பிடித்(த)(தா)ல் உடல் நலக் கேடு" என்று ஓர் எச்சரிக்கை போர்ட் வையுங்கள் கஸாலி.

    பதிலளிநீக்கு
  5. "பீடி பிடித்(த)(தா)ல் உடல் நலக் கேடு" என்று ஓர் எச்சரிக்கை போர்ட் வையுங்கள் கஸாலி.

    பதிலளிநீக்கு
  6. "பீடி பிடித்(த)(தா)ல் உடல் நலக் கேடு" என்று ஓர் எச்சரிக்கை போர்ட் வையுங்கள் கஸாலி.

    பதிலளிநீக்கு
  7. என்னாங்க சார்! நீங்களும் தொடரும்னு போட ஆரம்பித்து விட்டீர்களா? தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரிய கட்டுரையா இருந்துச்சு. அதான் ரெண்டு பாகமா பிரிச்சாச்சு.

      நீக்கு
  8. சஸ்பென்ஸ் கிளப்பி விட்டுட்டீங்களே! தொடருங்கள்! நன்றி!

    பதிலளிநீக்கு
  9. கஸாலி பீடி விஷயத்தில் ரொம்ப பின் தங்கியிருந்திருந்தாப்போலே.

    காலைக்கடன், மாலைக்கடன் கழிக்க செல்பவர்கள் பெரும்பாலும் பீடி, சுருட்டு, சிகரட் புகைத்து கொண்டே வயல் வரப்பு ஒதுங்குமிடங்களுக்கு செல்வதை பார்த்து 9 வயதிலேயே (1948 ல்) நானும் எனது பட்டாளமும் காய்ந்த சுரைக்கொடி, பீர்க்கை கொடிகளை பீடி சைஸுக்கு வெட்டி வைத்துக்கொண்டு கண்களில் நீர் வடியும் வரை இருமி இருமி தட்டு தடுமாறி ட்ரெய்னிங் எடுத்து புகை இழுத்து விட பழகினோம்.

    பின்னால் அக்காலத்தில் எங்கள் ஊரில் சொக்கலால் ராம் சேட் பீடி கம்பெனிக்காரர்கள் எங்கள் மாதிரி பொடிசுகளை சேர்த்து கொண்டு "கோபாலா" "ஏன் சார்? "எங்கே போறே?" "கடைக்கு போறேன்." "என்ன வாங்க?" "பீடி வாங்க." "என்ன பீடி?" "சொக்கலால் ராம் சேட் பீடி." என்று கோரஸாக கடை வீதி, சந்தையில் கத்திக்கொண்டு வரச்செய்வார்கள்.

    ஓசியில் பீடிகளை டபாய்த்து கொள்ளலாம் என்ற தீவிரவாதத்துடன் நானும் எனது பட்டாளமும் FITNESS டெஸ்ட் இல்லாமல் பீடி விளம்பர கோரஸ் ஆர்க்க்கெஸ்ட்ராவில் உயிரை கையில் பிடித்துக் கொண்டு தஞ்சமடைந்தோம்.

    பலன் எனக்கும் எனது பட்டாளத்துக்கும் கிடைத்தது 2 கட்டு பீடி.

    யார் வீட்டுக்கும் எடுத்து செல்ல முடியாது

    ஐட்டம் சிக்கி விட்டது. எங்கே ஒளிப்பது.

    இருக்கவே இருக்கு வரப்பு ஓரம்.

    2 கட்டு பீடிகளையும் வரப்பு ஓரத்தில் குழி பறித்து ஒளித்து வைத்தாய் விட்டது ..

    தொடரும் ........

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது இன்னும் சுவாரஷ்யமா இருக்கே. நானும் தொடருறேன். நீங்களும் தொடருங்க.

      நீக்கு
  10. வச்சிடலாம். சரி இதை சொல்ல ஏண்ணே இத்தனை கமென்ட்.

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.