என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வியாழன், பிப்ரவரி 28, 2013

15 அமைச்சரவையும் மியூசிக்கல் சேரும்.....




அமைச்சரவையில் மீண்டும் ஒரு உள்ளே வெளியே ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா......

ஆட்சிக்கு வந்த இந்த 20 மாதங்களில் இதுவரை 8 முறை அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டு   15 பேர் மாஜி ஆகியிருக்கிறார்கள்.
அந்த வரிசையில் சிவபதி, விஜய், கோகுல இந்திரா போன்றவர்கள் நேற்று மாலையோடு முன்னாள் ஆகி, வைகை செல்வன், பூனாட்சி, வீரமணி ஆகியோர் மாண்புமிகு ஆகியிருக்கிறார்கள்.

இதில் சிவபதி முதலில் அமைச்சராகி, பின் பதவிழந்து மீண்டும் அமைச்சராகி இப்போது பதவியிழந்திருக்கிறார்.

 வடிவேலுவை பார்த்து சிங்கமுத்து ஒரு படத்தில் சொல்லுவார் இவர் இதுக்கு சரிப்பட்டு வரமாட்டான் என்று......கடைசி வரை எதுக்கு என்று சொல்லாமலே வடிவேலுவை அலைக்கலிப்பார் சிங்கமுத்து. அப்படித்தான் தமிழக அமைச்சர்களின் நிலையும் ஆகிவிட்டது. எதுக்கு உள்ளே வருகிறோம், எதுக்கு வெளியே போகிறோம் என்று ஏதுமே தெரிவதில்லை அமைச்சர்களுக்கு.....சரி விடுங்க இதுக்கு மேல் எழுதினால் ராஜதுரோகம் ஆகி 66 A- பாய்ந்தாலும் பாய்ந்துவிடும். இது பற்றி நேற்று என் ஃபேஸ்புக்கில் நான் போட்ட ஸ்டேட்டஸ்கள் சில உங்கள் பார்வைக்கு.......



அமைச்சர் பதவியேற்பில் என்ன குழப்பம்?

கன்ஃப்யூஸ்ல எதிர்கட்சி எம்.எல்.ஏ.வையும் மந்திரி ஆக்கிட்டாங்களாம்.

-------------------------

போற போக்கை பார்த்தால் அமைச்சர்கள் எண்ணிக்கையை விட, முன்னாள் அமைச்சர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கும் போல.

-----------------------

ஆசைக்கும் பேராசைக்கும் என்ன வித்தியாசம்?

ஐந்து வருடத்திற்குள் நாங்க எல்லோரும் மந்திரி ஆகிடுவோம்னு அண்ணா.தி.மு.க.வில் இருக்கும் எம்.எல்.ஏ.,க்கள் நினைப்பது ஆசை.

நம்மளும் மந்திரியாகிடலாம்னு தேமுதிக.விலிருந்து தாவிய அந்த 4 எம் எல்.ஏ.க்களும் நினைப்பது பேராசை.

----------------------

மந்திரிகளை நினைத்த நேரத்தில் ரீகால் செய்ய முதல்வர்களுக்கு வசதி இருப்பது போல், முதல்வர்களையும் நினைத்த நேரத்தில் ரீகால் செய்ய மக்களுக்கும் வசதி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

------------------------

முதலில் இவர் அமைச்சராக இருந்தார். இன்னொருவர் இறந்தவுடன் நடந்த இடைத்தேர்தலில் இன்னொருவர் ஜெயிச்சதும் இவரின் பதவியை பறித்து அந்த இன்னொருவருக்கு கொடுத்தார்கள். அந்த இன்னொருவரும் பெண் பிரச்சினையில் மாட்டியதும் அவரிடமிருந்து பறிக்கப்பட்ட பதவி மீண்டும் இவருக்கே வந்தது. இப்போது மறுபடியும் இவரிடமிருந்து பறிக்கப்பட்டு அந்த பதவி இவரின் பக்கத்து தொகுதிக்கு போயிருச்சு. என்ன தலை சுத்துதா? சுத்துறது நின்னதும் யோசிச்சு சொல்லுங்க. யார் அவரு?

----------------------------

தமிழக அமைச்சரவையின் தற்போதைய பட்டியல்......



1. ஜெயலலிதா  
     முதல்வர்


2. பன்னீர்செல்வம்- 
நிதி

3. வெங்கடாசலம் -
 வருவாய்

4. நத்தம் விஸ்வநாதன் 
மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வை

5. கே.பி.முனுசாமி 
நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றம், சிறை

6. வைத்தியலிங்கம் 
வீட்டு வசதி, ஊரக வீட்டு வசதி

7. வைகைசெல்வன் 
பள்ளிக்கல்வி, விளையாட்டு, இளைஞர் நலன்,

8. பி.பழனியப்பன் 
உயர்கல்வி

9. மோகன் 
ஊரக தொழில் 

10. செல்லூர் ராஜு
 கூட்டுறவு

11. கே.டி.பச்சமால் 
வனம்

12. எடப்பாடி கே.பழனிச்சாமி 
நெடுஞ்சாலை

13. கே.வி.ராமலிங்கம் 
பொதுப்பணி

14. முக்கூர் சுப்ரமணியன்
 தகவல் தொழில்நுட்பம்

15. டி.கே.எம்.சின்னையா 
கால்நடை

16. எம்.சி.சம்பத் 
சுற்றுச்சூழல்

17. பி.தங்கமணி 
சுரங்கம், கனிமம், தொழில்

18. செந்தூர்பாண்டியன் 
சுற்றுலா 

19. டி.பி.பூனாட்சி 
காதி மற்றும் கிராம தொழில்

20. டாக்டர் எஸ்.சுந்தரராஜ் 
கைத்தறி மற்றும் ஜவுளி

21. எஸ்.தாமோதரன் 
வேளாண்மை

22. என்.சுப்ரமணியன் 
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம்

23. வி.செந்தில் பாலாஜி 
போக்குவரத்து

24. ஜெயபால் 
மீன் வளம்

25. ஆர்.காமராஜ் 
உணவு

26. எஸ்.டி.செல்லபாண்டியன் 
தொழிலாளர் நலம்

27. கே.சி.வீரமணி 
சுகாதாரம்

28. பி.வி.ரமணா 
வணிக வரி, பத்திர பதிவு

29. முகமது ஜான் 
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம்

30. மூர்த்தி
 பால் வளம்

31. ராஜேந்திர பாலாஜி
 செய்தி, சிறப்பு பணிகள் செயலாக்கம்

32. பா.வளர்மதி 
சமூக நலத்துறை, மதிய உணவு திட்டம்

33. எம்.எஸ்.எம்.ஆனந்தன் 
இந்து அறநிலையத் துறை

இதுவே இறுதிப்பட்டியல் என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் இன்னும் வளரனும்.  சில நாட்களுக்கு பின் மாறுதலுக்கு உட்பட்டது. 


Post Comment

இதையும் படிக்கலாமே:


15 கருத்துகள்:

  1. வாழ்க்கை ஒரு வட்டம்னு நமக்கெல்லாம் உணர்த்தவே இந்த திருவிளையாடல்

    பதிலளிநீக்கு
  2. குட்,வெரி குட்!!!எல்லாருக்கும் ட்ரெயினிங்க் குடுக்குறது தப்பேயில்ல!////இம்மாம் பெரிய தமிழ் நாட்டுக்கு வெறும் முப்பத்து மூணு அமைச்சருங்க!இத்தனூண்டு சிறீலங்காவுல தொண்ணூத்தொம்பது அமைச்சருங்க,தெரியுமா கஸாலி சார்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படின்னா இங்கேருக்குற எல்லா எம்.எல்.ஏ.,வையும் அமைச்சராக்கிடலாம்னு சொல்லுங்க....

      நீக்கு
  3. எஞ்சியிருக்கும் காலத்திற்குள் இன்னும் எத்தனை அமைச்சரவை மாற்றம் வரப்போகுதோ..
    இதுவும் நூறாண்டு பேசும் சாதனைகளுள் வருமோ?....

    பதிலளிநீக்கு
  4. சிலநாட்களுக்கு பின் மாறுதலுக்கு உட்பட்டது! மிகவும் ரசித்தேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
  5. // சில நாட்களுக்கு பின் மாறுதலுக்கு உட்பட்டது. //

    இது தவறான வார்த்தைப் பிரயோகம்.. எனது வன்மையான கண்டனங்கள்...

    சில மணி நேரத்திற்கு பின் மாறுதலுக்கு உட்பட்டது என்பதே சரியானது...
    செய்வன திருந்தச் செய் கஸாலி..

    பதிலளிநீக்கு
  6. எப்படியோ மாறுதலுக்கு உட்பட்டதுதானே?

    பதிலளிநீக்கு
  7. பட்டியல் தகவலுக்கு நன்றிங்க் :-)

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.