கூட்டணி விஷயத்தில் கொஞ்சம் பொறுமையாக இருந்திருந்தால் தமிழகத்தின் கெஜ்ரிவாலாக கூட மாறியிருப்பார் விஜயகாந்த். ஆனால், அவரின் அவசரமும் முன்கோபமும் அவரை காமெடியன் ரேஞ்சிற்கு மாற்றிவிட்டது. அதைப்போல் டெல்லியில் முக்கிய எதிர்கட்சியாகியிருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியின் விஜயகாந்தாக மாறாமல் இருக்கனும். அப்பத்தான் டெல்லி மக்களுக்கு ஆம் ஆத்மி மீது இன்னும் நம்பிக்கை வரும்.மூன்று முறை மாநில முதல்வராக இருந்த ஷீலா தீட்சித்தையே வெற்றிகண்டு, தன் கட்சியையும் முக்கிய இடத்திற்கு நகர்த்திய கெஜ்ரிவால் இன்றைய வெற்றியை தலைக்கு ஏற்றிக்கொள்ளாமல், மிகவும் நிதானமாக காய் நகர்த்தினால் எதிர்காலத்தில் முதல்வர் நாற்காலிகூட சாத்தியமாகும். குறிப்பாக, மெஜாரிட்டி கிடைக்காத பட்சத்தில் பா.ஜ.க.,பேரம்கூட பேசலாம். அப்போது தானும், தன் எம்.எல்.ஏ.,க்களும் விலை போகாமல் இருப்பது மிக முக்கியம்.
அதேபோல நாங்கள் வெளியிலிருந்து ஆதரவு தருகிறோம் நீங்கள் முதல்வராக இருங்கள் என்று பசப்பு வார்த்தைகளை ஒருவேளை காங்கிரஸ் கூறினாலும் அதை புறந்தள்ளி இதே உறுதிப்பாட்டுடன் இருந்தால் எதிர்காலத்தில் டெல்லி அரசியலில் அசைக்க முடியாத சக்தி ஆம் ஆத்மிதான். இல்லாவிட்டால், தமிழகத்தில் தேமுதிக.,நிலைதான் டெல்லியில் ஆம் ஆத்மிக்கும்.
அரவிந்த் கெஜ்ரிவால் சாப் இது உங்களுக்கு முக்கியமான காலக்கட்டம்..... ஓட்டரசியலில் ஒரு கட்சி நுழையாதவரை எந்த பிரச்சினையும் இல்லை. நுழைந்துவிட்டால், சில விலைகளை கொடுக்க வேண்டியிருக்கும். சில இழப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும். கொள்கைகளில் சமரசம் செய்துகொள்ள வேண்டியிருக்கும். இப்போது நீங்கள் இதில் நுழைந்து சில தொகுதிகளை கைப்பற்றி இருக்கிறீர்கள். இனிமேல்தான் நீங்க எச்சரிக்கையா இருக்கனும். மெஜாரிட்டி கிடைக்காத பா.ஜ.க., குதிரை பேரத்தில் ஈடுபடும். உங்க தொகுதி எம்.எல்.ஏ.க்களை பத்திரமாக பார்த்துக்கங்க....
Tweet |
மிக சரியாக சொல்லி இருக்கிறீர்கள் tha.ma 2
பதிலளிநீக்குமிகச் சரி...!
பதிலளிநீக்குசொன்னது, அனைத்தும் உண்மைதான் !
பதிலளிநீக்குஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் யாருக்கு தெரியும் விலை போனா போனது தான்
பதிலளிநீக்குஅரசியலில் அர்விந்த் கெஜ்ரிவால் அவர்களின் எதிர்கால நிலை என்ன? இனி போகப் போகத்தான் தெரியும்...
பதிலளிநீக்குபார்க்கலாம்.... படிகிறதா என்று...
பதிலளிநீக்குI'd say he should get congress support and become chief minister. As time goes people will forget him if not in power,thats what happened to vaiko and captain. once he is in power he can implement his policies and consolidate his gains.
பதிலளிநீக்கு