என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

செவ்வாய், டிசம்பர் 10, 2013

7 அரவிந்த் கெஜ்ரிவால்- விஜயகாந்த் சந்திப்பு........



அரவிந்த் கெஜ்ரிவால்-விஜயகாந்த் ஒரு கற்பனை உரையாடல்...

ஹலோ கெஜ்ரிவால் சாப் நான்தான் கேப்டன் பேசறேன். 

கெஜ்ரிவால்: கேப்டனா சொல்லுங்க சொல்லுங்க கிரிக்கெட்லாம் எப்படி போகுது?

விஜயகாந்த்: நாசமா போச்சு. நான் கேப்டன் விஜயகாந்த் தமிழ்நாட்டிலிருந்து பேசறேன். 

கெஜ்ரிவால்: ஓ கேப்டனா. இந்த டெல்லில போட்டி போட்டு கடுமையா ட்ரஃப் கொடுத்தீங்களே அந்த கேப்டனா?

விஜயகாந்த்: ஆமா சாப். வெளக்குமாத்தை வச்சு டெல்லியை சுத்தம் செஞ்சிட்டீங்க. வாழ்த்துக்கள். எப்படி இருக்கீங்க?

கெஜ்ரிவால்: ரொம்ப நன்றி. நல்லாருக்கேன். என்ன திடீர்னு போன் எல்லாம் போட்டுருக்கீங்க?

விஜயகாந்த்: இல்லே. நீங்களும் முதல்வராக மாட்டேன்னு சொல்லிட்டீங்க. பாஜக.வும் அப்படித்தான் சொல்லிருக்காங்க.

கெஜ்ரிவால்: அதனால?

விஜயகாந்த்: அதனால் பேசாம நான் முதல்வர் ஆகிடறேனே. நீங்க என்னை ஆதரிக்கலமே?

கெஜ்ரிவால்: அதெப்படிங்க முடியும்.உங்களுக்குத்தான் எம்.எல்.ஏ.வே இல்லையே?

விஜயகாந்த்: என்ன சாப் இப்படி சொல்லிட்டீங்க. நானும் எங்க ஊர்ல உங்க அளவுக்கு எம்.எல்.ஏ.க்கள் வச்சிருந்தவன்தான். அதுல கொஞ்ச பேரு எனக்கு துரோகம் பண்ணிட்டு ஓடிட்டாங்க. மீதி ஒரு இருபத்தி ரெண்டு பேரு இருக்காங்க இப்ப வரைக்கும். உங்கட்ட இருக்க எம்.எல்.ஏ.க்களும் என்னை ஆதரிச்சா நான் முதல்வராகிடுவேன்ல.

கெஜ்ரிவால்: அது முடியாதுங்க. டெல்லில எம்.எல்.ஏ.வா ஜெயிச்சிருக்கனும். அப்பத்தான் முதலமைச்சர் ஆக முடியும். உங்க தமிழ்நாட்டு எம்.எல்.ஏ.வை வச்சு இங்கே ஆட்சியமைக்க முடியாது கேப்டன் சார்.

விஜயகாந்த்: யாரை ஏமாத்த பாக்கறீங்க?, எங்க ஊர்ல எம்.பி.யா ஜெயிச்சவங்களை.வச்சு டெல்லில பிரதமர் மட்டும் ஆட்சி அமைக்கிறாரு. எம்.எல்.ஏ.வா ஜெயிச்ச என்னால முடியாதா?

கெஜ்ரிவால்: சார் சொன்னா புரிஞ்சுக்கங்க. அது வேற, இது வேற.

விஜயகாந்த்: இல்லே கெஜ்ரிவால் சாப்.....உங்களுக்கு ஒண்ணுமே புரியல.......போன வாரம்கூட, நான் டெல்லில வாங்குன பணத்தை தமிழ்நாட்டில் கொடுத்து மாத்துனேன்....செல்லுச்சு....அதேமாதிரி இங்கேருந்து கொண்டுபோன காசைத்தான் டெல்லில சிலவு செஞ்சேன்...அதுவும் செல்லுச்சு. அப்படின்னா எம்.எல்.ஏ.,க்கள் மட்டும் செல்ல மாட்டாங்களா என்ன? சரி விடுங்க...நான் கவர்னரை பார்த்துக்கறேன்.

(கெஜ்ரிவால் மயங்கி விழுகிறார்)


Post Comment

இதையும் படிக்கலாமே:


7 கருத்துகள்:

  1. கேப்டன கே.பு (கேன புண்ணாக்கு) ஆக்கிட்டிங்க.

    பதிலளிநீக்கு
  2. கஸாலி சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாகி விட்டது போங்க ...

    மஹாராஜா

    பதிலளிநீக்கு
  3. எதிர்கட்சி தலைவருக்கே ஆப்பா ?
    கீழே உள்ள குறள் இதுக்கும் பொருந்துமே !
    த.ம +1

    பதிலளிநீக்கு
  4. இதுவரை கேப்டனுக்கு அரசியலையும் உலக நடப்புகளையும் உணர்த்தி கொண்டிருந்த ஆசான் பண்ருட்டியார் விலகி விட்டார்.இனி கேப்டன் நிலை இப்படித்தான் இருக்கும் என்பதை சொல்லாமல் சொல்லி விட்டீர்கள் சகோ.

    பதிலளிநீக்கு
  5. உங்களுக்கு மட்டும் எப்படித்தான் இந்தமாதிரி கற்பனை வருதோ.......ஆனாலும் கற்பனை என்ற பெயரில் கேப்டனின் அரசியல் அறிவை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டிவிட்டிர்கள்.....

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.