என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

புதன், டிசம்பர் 11, 2013

4 விஜயகாந்துக்கு நிம்மதி கொடுத்த பண்ரூட்டி ராமச்சந்திரன்




பண்ரூட்டி ராமச்சந்திரன் தேமுதிக.,வில் தான் வகித்து வந்த பதவிகளை (எம்.எல்.ஏ., பதவி உட்பட)ராஜினாமா செய்ததோடு மட்டுமல்லாமல், தீவிர அரசியலிலிருந்தும் விலகியுள்ளார்.

ஒரு காலத்தில் அண்னா.தி.மு.க.,வில் அசைக்கமுடியாத சக்தியாக விளங்கியவர் பண்ரூட்டியார். 1971-1976-ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சிக்காலத்தில் முதன்முறையாக மந்திரியாக நியமிக்கப்பட்டு தொடங்கிய அவரது அரசியல் வாழ்க்கையை விஜயகாந்தோடு முடிவுக்கு வந்துள்ளது. 

எம்.ஜி.ஆரிடம் தொடர்ந்து மந்திரியாக இருந்தவர். எம்ஜிஆர் மறைவிற்கு பின் ஜெயலலிதாவை பொதுச்செயலாளராக்கியதில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. அதன் பின் அந்தக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டு நால்வர் அணியை நடத்தினார். அதன்பின் பா.ம.க.,வில் இணைந்து அந்தக்கட்சியின் முதல் எம்.எல்.ஏ.,என்று பேரெடுத்தவர். பின்னர் அங்கிருந்தும் விலகி மக்கள் நல உரிமைக்கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து தி.மு.க.,வோடு கூட்டணி வைத்து போட்டியிட்டு தோல்வியை தழுவி சில காலம் அரசியலில் இருந்து ஒதுங்கினார்.

பின்னர் விஜயகாந்த் தேமுதிக.,வை ஆரம்பித்தபோது அவருக்கு சில ஆலோசனைகள் வழங்கியதன் மூலம் அந்தக்கட்சியின் ராஜகுரு ஆகி, தற்போது ஆலந்தூர் தொகுதி எம்.எல்.ஏ., ஆனார். விஜயகாந்துடனும் கட்சியினரிடையும் நல்ல உறவில் இல்லை. பெரும்பாலும் அவர் மனைவி, மச்சான் தலையீடுகளால் அவமானப்படுத்தப்பட்டு கொஞ்சம் ஒதுங்கியே இருந்தார். எல்லோரும் இவர் விரைவில் ஆளுங்கட்சியில் இணைவார் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில் இவர் அரசியலில் இருந்தே ஓய்வு பெற்றிருக்கிறார். 

நல்லவேளையாக தொகுதி வளர்ச்சிக்காக ஜெயலலிதாவை சந்தித்த மற்ற தேமுதிக., எம்.எல்.ஏ.,க்களைப்போல் பண்ரூட்டியாரும் ஜெயலலிதாவை சந்தித்திருந்தால் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கையில் ஒன்று கூடி  7+1+8 ஆகியிருக்கும். இன்னும் ஒருவர் சேர்ந்தால் விஜயகாந்தின் எதிர்கட்சி தலைவர் அந்தஸ்து போய்,சட்டசபையில்  போட்டி  தே.மு.தி.க.,உருவாகியிருக்கும். ஆனால், பண்ரூட்டியாரோ விஜயகாந்திற்கு தலைவலி கொடுக்காமல் அரசியலை விட்டு ஒதுங்கியுள்ளார். அந்த வகையில் விஜயகாந்துக்கு நிம்மதிதான். 



தொகுதி வளர்ச்சிக்காக ஜெயலலிதாவை சந்தித்த மற்ற தேமுதிக., எம்.எல்.ஏ.,க்களைப்போல் பண்ரூட்டியாரும் ஜெயலலிதாவை சந்தித்திருந்தால்,அண்ணா. தி.மு.க.விற்கு மறைமுகமாக ஒரு எம்.எல்.ஏ., கிடைத்திருப்பார். இப்ப அவர் ராஜினாமா செய்திருப்பதன் மூலம் ஆலந்தூரிலிருந்து அண்ணா.தி.மு.க.,விற்கு நேரடியாக ஒரு எம்.எல்.ஏ., கிடைக்கப்போகிறார் . இவ்வளவுதான் வித்தியாசம்.

-------

ஆலந்தூர் என்பது முந்தைய பரங்கிமலை தொகுதி. பரங்கிமலை என்பது தி.மு.க.,வில் எம்.ஜி.ஆர்.இருந்தபோது இரண்டு முறை போட்டியிட்டு வென்ற தொகுதி. 
அந்த தொகுதி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த போதுதான் அந்த ராமச்சந்திரன் தி.மு.க.,விலிருந்து விலகினார். இப்போதும் அதே தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் போதுதான் இந்த ராமச்சந்திரன் தே.மு.தி.க.,விலிருந்து விலகியிருக்கிறார். 

--------

ஆலந்தூர் எம்.எல்.ஏ. பதவியிலிருந்து பண்ரூட்டியார் ராஜினாமா செய்துள்ளார். தன் தொகுதி மக்களுக்கு இதைவிட நல்லதை யார் செய்துவிட முடியும்?. எப்படியும் ஆலந்தூருக்கு இடைத்தேர்தல் வரும். தொகுதியில் பாலாறும், தேனாறும் பண ஆறும் ஓடும். ஒரு தொகுதி மக்களை இதைவிட எப்படி சந்தோஷமாக வைத்திருக்க முடியும்?. மக்களை சந்தோஷமாக வைத்துக்கொள்வதுதானே ஒரு எம்.எல்.ஏ.,வின் கடமை. அதைத்தான் ஒரு எம்.எல்.ஏ.,வாக இருந்து செய்ய முடியாததை ராஜினாமா செய்வதன் மூலம் செய்திருக்கிறார் பண்ரூட்டியார். 

-------------------------


Post Comment

இதையும் படிக்கலாமே:


4 கருத்துகள்:

  1. நல்லது...

    மடியில் கனம் இருந்தால் வழியில் பயம் இருக்கும் என்று சொல்கிறார்களே... இது காசு, பணம், நகைகள் வைத்து வந்த பழமொழியா...? இல்லை ஆசை, சூது, வஞ்சகம் போன்ற மனித குணங்களை வைத்து வந்த பழமொழியா...?

    http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Stress-Fear.html

    பதிலளிநீக்கு
  2. எப்படியோ ஒரு இடைத்தேர்தலுக்கு வழிவகுத்து விட்டார்! ஆலந்தூர்காரர்களுக்கு யோகம் அடிக்க போகிறது! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.