என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வியாழன், டிசம்பர் 12, 2013

5 சூப்பர் ஸ்டார் நடிப்பில் எனக்கு பிடித்த சில படங்கள்.......



இன்று ரஜினிகாந்தின் பிறந்தநாள். எனவே, இந்த ஸ்பெஷல் பதிவு
ரஜினிகாந்த் நடித்த படங்களில் எனக்கு பிடித்த படங்களிலிருந்து காட்சிகளை வரிசை படுத்தியுள்ளேன்.

அவர்கள்  
கே.பாலச்சந்தர் அவர்கள் இயக்கி எம்.எஸ்.விஸ்வநாதன் இசையத்த இந்தப்படம் வெளியான ஆண்டு   1977.

இந்த  படத்தின்  படப்பிடிப்பின்  போது நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம்: “உனக்கு நடிப்பு வராது, உன்னால் நான் தலையைப் பிச்சுக்கணும். இன்ஸ்டிட்யூட்ல நீ என்ன படிச்சி கிழிச்சியோ! ‘மூன்று முடிச்சு’படத்துல வசனம் கம்மி. சிகரெட்டை தூக்கிப் போடறது, அதைப் போடறதுன்னு ஸ்டைலா போயிருச்சு. ஆனா இது வசனம் நிறைய இருக்கிற கேரக்டர். ‘இவனுக்காக நான் கேரக்டரை மாத்த முடியாது. இவனை மாத்திட்டு ஜெய்கணேசை கொண்டு வாங்க’ன்னு ரஜினியை திட்டிவிட்டு கோபத்துடன்  சூட்டிங்கை கேன்சல் செய்து விட்டு கிளம்பிட்டாராம் இயக்குனர் பாலச்சந்தர். பின்னர் ரஜினி அவரை சமாதானப்படுத்திதொடர்ந்து  நடித்தாராம்.  




இளமை ஊஞ்சலாடுகிறது  
ஸ்ரீதர் இயக்கிய இந்தப்படத்திற்கு இசை இளையராஜா வெளியான ஆண்டு 1978





16 - வயதினிலே
பாரதிராஜாஜா இயக்கிய முதல் படம். இசை: இளையராஜா வெளியான ஆண்டு  1977





மூன்றுமுகம்
ஜகன்னாதன் இயக்கிய இந்த படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தார்கள். வெளியான ஆண்டு 1982





மன்னன்
பி.வாசு இயக்கிய இந்த படத்திற்கு இசை இளையராஜா, ரஜினிகாந்த் சொந்தக்குரலில் பாடி மன்னிக்கவும் பேசியிருப்பார். படம் வெளியான ஆண்டு 1992





தளபதி
மணிரத்னம் இயக்கத்தில் மம்மூட்டியுடன் சேர்ந்து நடித்த படம். இளையராஜாவின் இசையால் இந்தப்படம் வெற்றி பெற்றதாக சொல்பவர்களும் உண்டு. படம் வெளியான ஆண்டு 1991





சந்தரமுகி
பி.வாசுவின் இயக்கத்தில் வித்யாசாகரின் இசையில் வெளிவந்து ஒருவருடத்தை கடந்து ஓடிய படம் -வெளிவந்த ஆண்டு 2005





முரட்டுக்காளை -
எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வந்த படம். ரஜினியின் முதல் மசாலா படமென்று கூட சொல்லலாம் இசை இளையராஜா.வெளிவந்த ஆண்டு :1980




பாட்சா 
சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய ரஜினியின் மாஸ்டர் பீஸ் படம். இசை: தேவா வெளியான ஆண்டு :1995




முள்ளும் மலரும் -
தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் பாலச்சந்தரை விட ரஜினிக்கு பிடித்த இயக்குனரான  மகேந்த்ரன் இயக்கிய படம். ரஜினிகாந்த் நடிப்பு திறமைக்கு  தீனி போட்ட படம்.  -இளையராஜா இசையமைத்திருந்தார். வெளிவந்த ஆண்டு -1978



எனக்கு பிடித்த பாடல்கள்

சந்தனக்காற்றே- தனிக்காட்டு ராஜா
அதோ வாராண்டி- பொல்லாதவன்
பேசக்கூடாது- அடுத்த வாரிசு
மாலை சூடும்- நான் மகான் அல்ல
ராத்திரியில்- தங்கமகன்
என்னைத்தானே- நல்லவனுக்கு நல்லவன்
பெண்மானே சங்கீதம்- நான் சிகப்பு மனிதன்
நதியோரம் -அன்னை ஒரு ஆலயம் 
கண்மணியே- ஆறிலிருந்து அறுபது வரை
ஒரு ஜீவன்தான்- நான் அடிமை இல்லை.


கொசுறு: ரஜினிகாந்த் அவர்களுக்கு சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை முதன் முதலில் பேனரில் போட்டு விளம்பரப்படுத்தியவர் அப்போதைய விநியோகஸ்தரும் இப்போதைய தயாரிப்பாளருமான கலைப்புலி தாணு அவர்கள். விளம்பரப்படுத்தப்பட்ட படம் பாஸ்கர் அவர்கள் இயக்கிய
பைரவி.



Post Comment

இதையும் படிக்கலாமே:


5 கருத்துகள்:

  1. சிறப்பான பாடல்களையே குறிப்பிட்டுள்ளீர்கள். அதில் நானே என்றும் ராஜா (பொல்லாதவன் ) கண்ணில் என்ன கார்காலம் (உன் கண்ணில் நீர் வழிந்தால் ) பாடல்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
  2. \\தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் பாலச்சந்தரை விட ரஜினிக்கு பிடித்த இயக்குனரான மகேந்த்ரன் இயக்கிய படம். \\

    எதுக்கு இந்த சிண்டு முடியும் வேலை? ரஜினியே இதை ஒப்புக் கொள்ள மாட்டார்.................

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிண்டெல்லாம் முடியவில்லை.......கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு சினிமா விழாவில், பாலசந்தர் அவர்கள் ரஜினியை பேட்டி எடுத்தபோது ரஜினியே சொன்னதுதான்.

      நீக்கு
  3. மன்னன் எனக்கு பிடித்த படம்

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.