என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

திங்கள், ஏப்ரல் 30, 2012

4 இடைத்தேர்தல்


குண்டும் குழியுமாய் சாலைகள்

அதில் நாளுக்கு மூன்று தடவை வரும்

ஒரேயொரு லொட லொடா பேருந்து

அங்கொன்றும் இங்கொன்றுமாய்
கண்சிமிட்டும் தெருவிளக்குகள்
ஒரு நாளுக்கு பத்து மணிநேரம் விடுமுறை
எடுத்துக்கொள்ளும் மின்சாரம்

வாரத்திற்கு இருதடவை முறைவைத்து வரும்
அழுக்கு தண்ணீர்
மழை பெய்தால் தற்காலிக குளமாகிவிடும்
பள்ளி மைதானம்

இந்த குறைகளையெல்லாம் தீர்க்கக்கோரி
எங்க தொகுதி எம்.எல்.ஏ.,எம்.பி.-யிடம்
கால்கடுக்க செருப்புதேய நடையாய்
நடந்ததுதான் மிச்சம்
ஒன்றுமே நடக்கவில்லை.

என்ன ஆச்சர்யம்?
திடீரென ஒருநாள் நாங்கள்
கேட்டதெல்லாம் நடந்தது
அட... இப்போதாவது
இந்த அரசியல்வாதிகளுக்கு
புத்திவந்ததே என நினைத்து
திரும்பிப்பார்த்தால்...
ஆம்... கூப்பிடும் தூரத்தில் இடைத்தேர்தல்.


Post Comment

இதையும் படிக்கலாமே:


4 கருத்துகள்:

  1. ஹா ஹா ஹைய்யோ ஹைய்யோ இது தானே இன்றைய நம் நாட்டின் நிலை - சரியாக சொன்னீர்கள் சாட்டையடி வரிகளில்

    பதிலளிநீக்கு
  2. அன்பின் கஸாலி - நாம் அவர்களிடம் அடிக்கடி சென்றாலும் - அவர்கள் நம்மைத் தேடி வருவது ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறைதான் - இடை இடையே இது மாதிரியும். .......

    பதிலளிநீக்கு
  3. ஆசியான சமயத்துல இந்த கவிதையை எழுதி இருகிங்க தல

    பதிலளிநீக்கு
  4. எங்க ஊரை நினைத்து எழுதுனியா .அப்படியே அசலாக எங்க ஊருக்கு போய்வந்த உணர்வை கொடுக்குது .எங்க ஊருக்கு நாங்க நினைத்தது எல்லாம் நடக்குமா இந்த இடைதேர்தலில்

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.