என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

ஞாயிறு, ஏப்ரல் 01, 2012

10 நான் ஏன் சசிகலாவோடு இணைந்தேன் - ஜெயலலிதா பரபரப்பு அறிக்கை.....



புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களுக்கு.....
நான் மீண்டும் சசிகலாவோடு இணைந்தது உங்களுக்கு ஆச்சர்யமாகவும் ,அதிர்ச்சியாகவும் இருந்திருக்கும். என்னால் எத்தனையோ பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள். அப்படி நீக்கப்பட்டவர்கள் எல்லோரும் நீக்கப்பட்டதும் என்னைப்பற்றி கடுமையான விமர்சனத்தை முன்வைப்பார்கள் அல்லது துரோகிகளின் கட்சியில் சேர்ந்துகொண்டு என்னை திட்டுவார்கள். சிலகாலம் கழித்து, மீண்டும் என்னிடமே வருவார்கள். நானும் அவர்களை தாயுள்ளத்தோடு அரவணைத்துக்கொள்வேன்.

ஆனால், சசிகலா கதையோ வேறு.....கடந்த சில மாதங்களுக்கு முன் நான் சசிகலாவையும் அவரது குடும்பத்தினரையும் கட்சியிலிருந்து வெளியேற்றியதோடு மட்டுமல்லாமல் அவர் கணவர் நடராஜன் உள்ளிட்ட சிலரையும் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டேன். இந்த நடவடிக்கையை நான் யார் மீது எடுத்திருந்தாலும் என்னை அம்மா என்று அழைத்த வாயில் என்னை திட்டி தீர்த்திருப்பார்கள். ஆனால், சசிகலாவோ மீச்சுக்கூட விடவில்லை. அந்த நேரத்தில் சசிகலா காட்டிய அசாத்திய பொறுமை என்னை மனம் நெகிழச்செய்து விட்டது. நட்பு என்றால் இதுதான் என்று எனக்கு உணர்த்திய தருணம் அது.

அதன்பின் சசிகலா விட்ட அறிக்கையை படித்ததும் எனக்கு தூக்கம் வரவில்லை. அந்த அறிக்கை என்னை அசைத்து பார்த்துவிட்டது. அந்த அறிக்கையில் கூறியிருப்பது அத்தனையும் நிஜம் என்று அறிந்துகொண்டேன். என்னையே சுற்றிவந்து என் நலனையே தன் நலனாக குறிக்கோளாக வைத்திருந்ததால் அவரின் உறவினர்களால் எனக்கு எதிராக பின்னப்பட்ட சதிவலையை அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்றே நம்புகிறேன்.
தன் கணவர் நலனை விட என் நலன் மீது அக்க்றை கொண்டவர் சசி என்று ஒவ்வொரு முறையும் நிருபித்து வந்துள்ளார். அதை எல்லோரும் அறிவீர்கள். அப்படிப்பட்டவர் கட்சிக்கு வெளியில் இருப்பதில் அர்த்தமில்லை என்று முடிவு செய்து மீண்டும் கட்சியில் இணைத்துக்கொண்டுள்ளேன்.

நான் எந்த முடிவு எடுத்தாலும் அதை எந்தக்கேள்வியும் கேட்காமல் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறென். அப்படி என் முடிவை ஏற்றுக்கொள்ளாதவர்கள் கதியையும் நீங்கள் அறிந்தே இருப்பீர்கள் என்றும் நினைக்கிறேன். ஒரு மிகப்பெரிய பேரியக்கத்தின் தலைவி என்ற அடிப்படையில் நான் எடுக்கும் அனைத்து முடிவுகளையும் விருப்பு வெருப்பின்றி  அப்படியே கண் மூடித்தனமாக ஆதரிக்கும் உங்களைப்போல அடிமைகள் தொண்டர்கள் இருக்கும்போது எனக்கு எந்தக்கவலையுமில்லை. இன்னும் எத்தனையோ முடிவுகள் என்னால் எடுக்கப்பட்டாலும் அவை அத்தனைக்கும் இதேப்போல ஒத்துழைப்பு தருவீர்கள் என்ற நம்பிக்கையில் விடைபெறுகிறேன்.

அனைவருக்கும் என் இனிய ஏப்ரல் ஒன்று முட்டாள்கள் தின நல் வாழ்த்துக்கள்.

அண்ணா(வுக்கு) நாமம் (போட்டு) வாழ்க.....
புரட்சித்தலைவர்(எம்.ஜி.ஆருக்கு) நாமம் (போட்டு) வாழ்க....




டிஸ்கி: இன்னைக்கு ஏப்ரல் ஒன்னாமே...அதான் இப்படி...ஹி...ஹி...ஆனால், இது நடக்காமல் இருக்காதென்று யார் சொல்ல முடியும்?.


Post Comment

இதையும் படிக்கலாமே:


10 கருத்துகள்:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்,

    //நான் எந்த முடிவு எடுத்தாலும் அதை எந்தக்கேள்வியும் கேட்காமல் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறென். அப்படி என் முடிவை ஏற்றுக்கொள்ளாதவர்கள் கதியையும் நீங்கள் அறிந்தே இருப்பீர்கள் என்றும் நினைக்கிறேன்//

    செம செம. :) :)

    பதிலளிநீக்கு
  2. சீரியஸ்ஸான கடிதம் என நினைத்து சீரியஸ்ஸாகவே படிச்சுட்டிருக்கும் போது
    //நான் எந்த முடிவு எடுத்தாலும் அதை எந்தக்கேள்வியும் கேட்காமல் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறென். அப்படி என் முடிவை ஏற்றுக்கொள்ளாதவர்கள் கதியையும் நீங்கள் அறிந்தே இருப்பீர்கள் என்றும் நினைக்கிறேன்.//

    இந்த வரி வந்ததும் தான் தெரிஞ்சது ஹி..ஹி..ஹி...

    கலக்கல்!

    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  3. பயணிக்கும் பாதை வலை தளத்தை பார்வையிட நண்பர் கஸ்ஸாலி அவர்களை வேண்டுகிறேன்

    பதிலளிநீக்கு
  4. ////நான் எந்த முடிவு எடுத்தாலும் அதை எந்தக்கேள்வியும் கேட்காமல் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறென். அப்படி என் முடிவை ஏற்றுக்கொள்ளாதவர்கள் கதியையும் நீங்கள் அறிந்தே இருப்பீர்கள் என்றும் நினைக்கிறேன்.////

    என்னவொரு அகங்காரம்? என்று நினைத்தேன். கடைசியில் புரிந்தது.

    பதிலளிநீக்கு
  5. /////அனைவருக்கும் என் இனிய ஏப்ரல் ஒன்று முட்டாள்கள் தின நல்வாழ்த்துக்கள்////

    பைனல் டச் டாப்பு (final touch top) ..!

    பதிலளிநீக்கு
  6. தொடர்ந்து சசிகலா- ஜெயலலிதா செய்திகளை தருவதில் ஜூனியர் விகடனை முந்திவிட்டீர்கள். எப்ப இந்த திருவிழா முடியும்?

    பதிலளிநீக்கு
  7. அனைவருக்கும் இனிய ஏப்ரல் 1 நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  8. தமிழ் 10 இல் வாக்களிக்க இயலவில்லை.

    பதிலளிநீக்கு
  9. இதுப்போன்ற ஓர் அறிக்கை வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.