என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

புதன், ஏப்ரல் 04, 2012

11 அண்ணா.தி.மு.க.,வினரின் தீர்க்கதரிசனம் (பொடிமாஸ் 04-04-2010)






ஜெயலலிதாவோடு சசிகலா மீண்டும் இணைந்து விடுவார் என்று அண்ணா.தி.மு.க.,வினர் உணர்ந்தே இருந்திருப்பார்கள் போல....
சசிகலாவை கட்சியை விட்டு வெளியேற்றிபோதும், மீண்டும் இணைத்தபோதும் யாரும் பெரிதாய் ரியாக்ஷன் காட்டவில்லை, சில தொண்டர்கள்ளை தவிர....
ஜெயலலிதா-சசிகலா நட்பு பற்றி எல்லோருக்கும் தெரிந்திருந்ததால் படு எச்சரிக்கையாக இருந்துவிட்டார்கள் போல அந்த கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள்(?)
என்ன ஒரு தீர்க்கதரிசனம்?!!

============================


விளையாட்டுக்காகவும் பொழுதுபோக்கிற்காகவும் பட்டம் விட்டவர்கள் இப்போது போட்டிக்காகவும் கவுரவத்திற்காகவும் விட்டு தாலியறுக்க ஆரம்பித்துவிட்டார்கள். சில நாட்களுக்கு முன்புதான் சென்னையில் மாஞ்சா போடப்பட்ட பட்டத்தின் கயிறு ஒரு வட நாட்டு இளைஞரின் கழுத்தில் மாட்டி உயிரை பறித்தது.  மீண்டும் நேற்று  ஒருவரின் கழுத்தில் கயிறு சிக்கி உயிருக்கு போராடி வருகிறார். பட்டத்திற்கு தடை மட்டும் போட்டால் போதாது. மீறி பட்டம் விடுபவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கவேண்டும். அல்லது மாஞ்சா இல்லாமல் பறக்கவிட சிறுவர்களுக்கு மட்டும் அனுமதி தந்தால் தேவலை.

============================


 ஏப்ரல் ஒன்றாம் தேதியன்று மதியம் புதுக்கோட்டை இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ., முத்துக்குமரன் விபத்தில் இறந்துவிட்டதாக செய்தி வந்தது. மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. ஏப்ரல் முதல்தேதியன்று வழக்கமாக சொல்லப்படும் பொய் செய்தியைப்போல இதுவும் இருக்கக்கூடாதா என்று ஏங்கினேன்.
எம்.எல்.ஏ., என்றாலே பகட்டும் ஆடம்பரமும் சேர்ந்துகொள்ளும் காலத்தில் மிக எளிமையாக விளங்கியவர் முத்துக்குமரன். பெரும்பாலும் பேருந்தில்தான் பயணம் செய்வார். எம்.எல்.ஏ.,வாகிய சில நாட்களிலேயே அவரின் மரணம் பெரும் அதிர்ச்சியை அளித்தது.
அவரின் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

=============================

எதிர்கட்சிகளின் போராட்டத்தை தொடர்ந்து உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை சிறிது குறைத்து கண் துடைப்பு செய்திருக்கிறது தமிழக அரசு. விலை ஏற்றுபோது யானை சைசில் ஏற்றுகிறார்கள். குறைக்கும்போது மட்டும் எறும்பு சைசில் குறைக்கிறார்கள். அதுசரி.... நமக்குத்தான் ஒரு நாளில் 12 மணி நேரம் மின்சாரமே வருவதில்லையே?
அப்புறம் ஏற்றினால் நமக்கென்ன?...இறக்கினால் நமக்கென்ன? எப்படியும் முன்பு கட்டிய கட்டணத்தை விட விலையேற்றத்திற்கு பின்னாலும் கம்மியாகத்தானே கட்டப்போகிறோம்.

========================

விகடன் வலையோசை பகுதியில் என் தளமும் இடம்பெற்றதற்காக வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் நெகிழ்ச்சியான நன்றி 



Post Comment

இதையும் படிக்கலாமே:


11 கருத்துகள்:

  1. பொடிமாஸ் சூப்பர் .. தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  2. இன்னும் என்ன என்ன விலையை அதிகரிக்க போறாங்களோ ?

    பதிலளிநீக்கு
  3. அதிமுக-வில் தலைமையை; "தி-ராணியை" எதிர்த்து பேசும் அளவிற்கு யார்க்கு "திராணி" இருக்கிறது?
    இதில் இரண்டாம் கட்டம், என்ன மூன்றாம் கட்டம் என்ன? மீறினால் "கட்டம்" கட்டி விடுவார்களே?

    பதிலளிநீக்கு
  4. முத்துக்குமரன் அவர்களுக்கு எமது அஞ்சலிகளும்..

    பதிலளிநீக்கு
  5. எவ்வளவோ அநியாயம் செய்யும் MLA க்கள் இருக்கிறார்கள். ஹும்.. என்ன சொல்ல? விதி.
    அவர் குடும்பத்தார்களுக்கு இந்த இழப்பை தாங்கிக்கொள்ளும் சக்தியை இறைவன் கொடுப்பானாக... ஆமீன்.

    பதிலளிநீக்கு
  6. அது என்னமோ தெரியல கஜாலி.... கம்யுனிஸ்ட் MLA க்கள் அனைவரையும் எனக்கு பிடிக்கும்.
    பேசாம அவங்களையே ஆட்சி பண்ண சொல்லிடலாம். ஊழல்லாம் இந்த அளவு இருக்காது.

    பதிலளிநீக்கு
  7. பல துறைகளிலும் தங்கள் கோணத்தை காட்டியது இன்றைய பொடிமாஸ்.

    பதிலளிநீக்கு
  8. அரசியல் பொடிமாஸ் அருமை. மாஞ்சா.... என்னத்த சொல்ல சென்னையில் அதை ஒரு கவுரவ பிரச்சனை மாதிரி ஆக்கி வைத்திருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.