என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வியாழன், செப்டம்பர் 09, 2010

2 புது சட்டை(ரம்ஜான் சிறப்பு சிறுகதை)

ன்வர் பாய் நோன்பு வைத்துவிட்டு களைப்புடன் படுத்திருந்தார். அப்போது அவர் பையன் ஹபீஸ் வந்து அவரிடம்,
"வாப்பா, நோன்பு பெருநாள் நெருங்குது. என் பிரண்ட்ஸ் எல்லாம் புது ட்ரெஸ் எடுத்துட்டாங்க...எனக்கு இன்னும் எடுக்கலையா?"
"இருப்பா, இன்னும் பதினஞ்சு நாள் இருக்கு. பார்க்கலாம்"
"இல்லை வாப்பா நீங்க ஒரு இருநூறு ரூபா கொடுத்தீங்கன்னா ரெடிமேட்ல ஏதாவது ஒரு சட்டை எடுத்துக்குவேன். லுங்கி கூட வேணாம். அன்னைக்கு ஜலீல் அண்ணன் வீட்ல கொடுத்தது இருக்கு. அத கட்டிக்கிறேன்."
"அதான் சொல்லிட்டேன்ல, போ பாக்கலாம். சும்மா தொந்தரவு பண்ணாதே..."
ஹபீஸ் வெளியேறினான். அதை கவனித்துக்கொண்டிருந்த அன்வர் பாயின் மனைவி ஆமினம்மாள்,
"என்னங்க,பயதான் கேக்கறான்ல அதுகூட ரொம்ப கேக்கல. ஒரு எரநூறு ரூவா, குடுத்துத்தான் விடுங்களே"
"நீ புருஞ்சுதான் பேசறியா? நான் என்ன வச்சுக்கா இல்லைங்குறேன். என்கிட்டே சுத்தமா காசு இல்லை. நான் ஒரு சாதாரண டைலர். என்கிட்டே யாரு தைக்க வாராங்க. இப்ப எல்லாமே ரெடிமேடா போச்சு. அப்படியே தைக்க வந்தாலும் கிழிஞ்ச துணிகளை எடுத்ததுக்கு வாராங்க. அதுல என்ன பெருசா வருமானம் வந்துடப்போகுது?. இப்ப உன் மகனைக்கூட பாரு.ரெடிமேட் சட்டைதான் வேனுங்குறான்."
"பாவம் அவன். சின்னபசங்க சொல்லிருப்பாங்க. அதான் அவனும் கேக்குறான்"
"அவன் ஆசைய நான் தப்புன்னு சொல்லல. நமக்கு கையில காசு வேணாமா? பாக்கலாம்"-என்றவாறு கண்ணை மூடி
இறைவனிடம் பிரார்த்தித்தார்.
'யா அல்லாஹ்...நீதான் எனக்கு உதவனும். உன்னைவிட்டால் எனக்கு உதவிபுரிய யாருமில்லை' பிரார்த்தித்தவாறு
தூங்கிப்போனார்.

"அன்வர்பாய்.... அன்வர்பாய்"
வாசலில் குரல்கேட்டு அவர் மனைவி ஆமினம்மாள் எட்டிப்பார்த்தாள்.
"யாரு"
"அன்வர்பாய் இல்லையா"
"இருக்காரு நீங்க யாரு"
"நான் அப்துல்லா, எங்கே அன்வர்பாய்?"
"இருங்கண்ணே வரச்சொல்றேன்"
அன்வர் பாய் வந்தார்.
"அடடே அப்துலா அண்ணனா,வாங்கன்னே எங்கே இவ்வளவு தூரம்?"
"என் மகளுக்கு பெருநாள் கழிச்சு நிக்காஹ் வச்சுருக்கேன்."
"அப்படியா ரொம்ப சந்தோசம். மாப்பிள்ளை யாரு?"
"வேற யாரு என் அக்கா மகன்தான்"
கையிலிருக்கும் பையை நீட்டினார்.
"இந்தாங்க . இதுலஎன் மகளோட ஒரு அளவு ஜாக்கெட்டும், இருபது ஜாக்கெட் துணியும் இருக்கு. அதை வச்சுக்கு ஜாக்கெட் தச்சு கொடுத்துருங்க. நிக்காஹ்க்கு தேவைபடுது. இந்தாங்க அட்வான்ஸ் பணம் ஐநூறு ரூபா. மீதிய ஜாக்கெட்ட வாங்கிட்டு தாரேன்"
கிளம்பினார் அப்துல்லா.
'யா அல்லாஹ். உன் கருணையோ கருணை. என் மகனுக்கு சட்டை எடுக்க காசில்லாமல் தவிச்சுக்கு இருந்த எனக்கு அப்துல்லா மூலம் நீ உதவிட்டியே'-என்று மனதுக்குள் நன்றி சொன்னார் அன்வர்பாய். அப்போது பள்ளிவாசலில் அசர் தொழுகைக்காக பாங்கு ஒலித்தது.
'அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்' .


Post Comment

இதையும் படிக்கலாமே:


2 கருத்துகள்:

  1. கதை அருமையாக இருக்கிறது... எல்லாம் அவன் செயல்..

    பதிலளிநீக்கு
  2. ரொம்ப தாமதா படிச்சேன். ப்ண்ணிட்டீங்க.

    அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.