என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

புதன், செப்டம்பர் 01, 2010

9 கொஞ்சம் யோசிங்க ப்ளீஸ்..........

ஒரு நாட்டுல ஒரு ராஜா . அந்த ராஜாவுக்கு அடிக்கடி ஏதாவது முட்டாள்தனமா போட்டி வைக்கிறதுல அலாதி விருப்பம் . இப்படித்தான் ஒருநாளு, ஒரு போட்டி வச்சாரு . போட்டி தலைப்பு என்னன்னா, சிறந்த பொய் சொல்லணும்,(அதாங்க தலைப்பே..) அப்படிசிறந்த பொய் சொல்லும் ஒருவனுக்கு ஆயிரம் பொற்காசுகள் வெகுமதின்னு தம்பட்டம் அடிக்க சொன்னாரு. அந்த ராஜா நம்பறமாதிரி ஒருத்தன் சொல்ற பொய் இருக்கணும். இல்லாட்டி ஒரு வருஷம் ஜெயில்ன்னும் அறிவிக்க சொன்னாரு. அந்த நாட்டு குடிமக்கள் ரொம்பபேரு இந்த ராஜாவுக்கு இதே வேலையா போச்சு நாம எந்த பொய்ய சொன்னாலும் ஒத்துக்க மாட்டாரு, நம்ம தேவையில்லாம தண்டனைய அனுபவிக்கனும், நமக்கு எதுக்கு வீண் வேலைன்னு அவங்கவுங்க வேலைய பாக்க ஆரம்பிச்சுட்டாங்க...ஒரு சில பேரு தைரியமா ராஜா முன்னால போயி அவங்களுக்கு தெரிஞ்ச பொய்ய சொன்னாங்க.. ஆனா ராஜா எதையுமே நம்பல. போன அவ்வளவு பேருக்கும் ஜெயில்தண்டனை கொடுத்துட்டாரு. பக்கத்து ஊருல ஒரு அறிவாளி இருந்தான்.அவனுக்கு ராஜாட்ட போயி பொய் சொல்லனும்ன்னு ஆசை. அவன் ராசாவ பாக்க கிளம்புனான். அவன் ஊர்ல இருக்கவங்க எல்லாரும் போக வேணாம்ன்னு தடுத்தாங்க. ராஜாவோட முட்டாள்தனத்துக்கு முடிவு கட்டாம வரமாட்டேன்னு சபதம் போட்டு கிளம்பினான். சொன்னது போல ராஜாவ பாத்து பொய்ய சொன்னான். முதல்ல ராஜா ஒத்துக்கல. அப்பறம் வேற வழிஇல்லாம ஒத்துக்கிட்டு, அறிவிச்ச மாதிரி ஆயிரம் பொற்காச கொடுத்து, அவனோட புத்திசாலித்தனத்த பாராட்டி அவன தன்னோட மந்திரியா நியமிச்சாரு. அப்படி அவன் என்ன பொய் சொன்னான்னு எனக்கு பின்னூட்டத்துல தெரிவியுங்களேன். உங்களையும் புத்திசாலின்னு ஒத்துக்கிட்டு மன்னாரன் கம்பெனிக்கு மேனேஜரா நியமிக்கிறேன்.


Post Comment

இதையும் படிக்கலாமே:


9 கருத்துகள்:

  1. நான் தான் உனக்கு அப்பான்னு இல்லினா நான் தான் இந்த நாட்டு மன்னர்ன்னு

    பதிலளிநீக்கு
  2. தமிழ் பிரியன் சொன்னது... நான் தான் உனக்கு அப்பான்னு இல்லினா நான் தான் இந்த நாட்டு மன்னர்ன்னு///
    இல்லை. காத்திருக்கவும் தமிழ்பிரியன் அவர்களே...

    பதிலளிநீக்கு
  3. " மன்னா, உன்னை போல் ஒரு முட்டாள் இந்த உலகத்துலே இல்லை "

    பதிலளிநீக்கு
  4. அரசே தங்களை நான் நிர்வாணமாகப் பார்த்தேன் என்றிருப்பான்....

    பதிலளிநீக்கு
  5. "என்னிடம் கடனாக வாங்கிய ஆயிரம் பொற்காசுகளை, எனக்கு இப்பொழுது திருப்பி தருகிறீர்களா?"

    பதிலளிநீக்கு
  6. திரு ம.தி.சுதா, உண்மை ஆகிய இருவரின் பதிலும் தவறு. சித்ரா அவர்கள் சரியான பதிலை கூறியுள்ளதால் ,அவரின் பதில் இன்று மாலை வெளியிடப்படும். அதுவரை பதில் தெரிந்தவர்கள் கூறலாம். சரியான பதிலை கூறிய சித்ரா அவர்களுக்கு வாழ்த்துக்களும், நன்றியும், பாராட்டுக்களும்.

    பதிலளிநீக்கு
  7. மன்னா!! உலகத்துலயே நீங்கதான் அறிவாளி மன்னன்னு சொல்லியிருப்பான்..

    பதிலளிநீக்கு
  8. அவன் சொன்ன பொய்:
    "நான் சிறையில் அடைக்கப் படமாட்டேன்"

    பதிலளிநீக்கு
  9. சித்ரா அவர்கள் எழுதிய விடை வெளியிடப்பட்டுவிட்டது. அதன் விளக்கம்.
    அவன் ராஜாவிடம் போய்" என்னிடம் கடனாக வாங்கிய ஆயிரம் பொற்காசுகளை இப்போது திருப்பித்தாருங்கள்" என்றான்.
    உடனே ராஜா கோபமாகி " நீ பொய் சொல்கிறாய். நான் எப்ப உன்னிடம் கடன் வாங்கினேன்?" என்று கேட்டான்.
    "நான் சொல்வது பொய் என்று நீங்கள் ஒத்துக்கொண்டீர்கள். நீங்கள் அறிவித்தபடி ஆயிரம் பொற்காசுகளை எனக்கு தாருங்கள்" என்று இவன் கூறினான்.
    மாட்டிக்கொண்டோம் என்று உணர்ந்த ராஜா
    "இல்லை இல்லை நீ சொல்வது பொய்யில்லை, நான் உனக்கு ஆயிரம் பொற்காசுகள் தரமுடியாது" என்றான்.
    "நான் சொல்வது பொய்யில்லை என்றால் உண்மை என்று தானே அர்த்தம். அப்படியானால் என்னிடம் கடனாக வாங்கிய ஆயிரம் பொற்காசுகளை திருப்பித்தாருங்கள்" என்று இவன் மடக்கினான்.
    உண்மை என்றாலும் ஆயிரம் பொற்காசுகளை ராஜா தரவேண்டியிருக்கும். பொய் என்றாலும் ஆயிரம் பொற்காசுகளை திருப்பி தரவேண்டியிருக்கும். எப்படி அவனின் புத்திசாலித்தனம்.
    இந்த போட்டியில் கலந்துகொண்ட தமிழ்பிரியன், ம.தி.சுதா, உண்மை, பதிவுலகில் பாபு, விஷ்ணு அவர்களுக்கு நன்றி. சரியான பதிலை கூறிய சித்ரா அவர்களை மன்னாரன் கம்பெனி மேனஜாரக நியமிக்கிறேன். நன்றி...

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.