என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

செவ்வாய், ஆகஸ்ட் 31, 2010

4 என்னை தப்பா நினைக்க மாட்டியே?

"டே சிவா நீயும் ரெண்டு வருஷமா மனசிலே போட்டு வெம்பிக்கு இருக்கே... இன்னைக்காவது ஐஸ்ட்ட கேட்டுருடா?"
"இல்லடா கண்ணா எனக்கு சங்கடமா இருக்கு. இத எப்படி ஐஸ்ட்ட ஓபன் பண்ணுறதுன்னு..?"
"சிவா நீ தெரிஞ்சுதான் பேசறியா? இன்னும் ஒரு வாரத்துல நம்ம காலேஜ் லைப் முடிஞ்சுரும். அப்புறம் நீ ஒரு பக்கம் ஐஸ் ஒரு பக்கம்ன்னு பிரிஞ்சு போய்டுவீங்க. அப்புறம் எப்ப கேட்பே?"
"இல்லடா இவ்வளவு நாளா நல்லா பழகிட்டு இப்பப்போயி நான் இப்படி கேட்டா... சீ, இவ்வளவு தானா நீன்னு ஐஸ் என்னை பார்த்து சொன்னா எனக்கு மனசு கஷ்டம் ஆகிடும்டா. பழகுன பழக்கத்துக்கே அர்த்தம் இல்லாமல் போய்டும்டா..."
"அப்ப, நீ ரெண்டு வருஷமா மனசுல போட்டு பூட்டி வச்சதுக்கு அர்த்தம்? என்னவோ நான் சொல்றத சொல்லிட்டேன். அதுக்கு மேல உன் இஷ்டம்."
"இங்கே பாரு கண்ணா, நானும் இந்த ரெண்டு வருஷத்துல எத்தனையோ தடவை ஜாடை மாடையா சொல்லிப்பாத்துட்டேன். அதெல்லாம் ஐஸுக்கு புரியாமலா இருக்கும்?"
"ஒரு வேளை புரியாமலே இருந்துச்சுன்னா? அதுக்குதான் சொல்றேன் கடைசியா ஒரு தடவை கேளுன்னு"
அப்போது தூரத்தில் ஐஸ் விவேக்குடன் வருவது தெரிந்தது. கண்ணன் தொடர்ந்து பேசினான்.

"டே சிவா அங்கே பாரேன் ஐஸை, இது உனக்கு நல்ல சான்ஸ், இதை விட்ட வேற சான்ஸ் கிடைக்குமான்னு சந்தேகம்தான். இப்ப ஒன்னும் கேட்டு போயிடல, போ... போயி படக்குன்னு கேட்டிடு. ஐஸ் மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுடும்"
"கூட விவேக்கும் வரானே?"
"அவனை நான் பார்த்துக்கறேன். நீ தைரியமா போ"
தன் பக்கம் நெருங்கி வந்த ஐசிடம் சிவா, "ஐஸ் ஒரு நிமிஷம்?"
"என்ன சிவா?"
"அது வந்து... வந்து..."
"அதான் வந்துட்டியே. கேளு"
"நான் உன்னிடம் கொஞ்சம் தனியா பேசணும் ஐஸ்."
"பேசிட்டா போச்சு. விவேக் ஒரு நிமிஷம்... ம்... சொல்லு சிவா"
"ஐஸ் என்னை தப்பா நினைக்க மாட்டியே?"
"சே... சே... உன்னைப் போயி தப்பா நினைப்பேனா? அன்னைக்கு நான் என் காதல்ல ஜெயிக்கறதுக்கு காரணமே நீ கொடுத்த உன்னோட கவிதை நோட்டுதான்.அந்த கவிதைகளை சொல்லித்தானே நான் அவளை மடக்கினேன், அன்னிக்கு மட்டும் நீ எனக்கு உதவலேன்னா ரொம்ப சிரமமா போயிருக்கும். ஆமா.. நீ எதோ கேக்க வந்தியே..?"
"அன்னிக்கு நான் கொடுத்த என் கவிதை நோட்ட கொடுத்தீன்னா..."
"பூ... இவ்வளவுதானா மேட்டரு. நாளைக்கே வாங்கிக்க சிவா. இதுக்கு போயி நான் ஏன் உன்ன தப்பா நினைக்க போறேன்?" என்றான் அவர்கள் செல்லமாக ஐஸ் என்று அழைக்கும் ஐஸ்வர்யன்.

Post Comment

இதையும் படிக்கலாமே:


4 கருத்துகள்:

  1. கதை அருமையாக இருக்கிறது..... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. @ம.தி.சுதாஎன் அனைத்து பதிவுகளையும் படித்துவிட்டு மறக்காமல் பின்னூட்டமிடும் சகோதரர் ம.தி.சுதா அவர்களுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  3. கதை ரொம்ப நல்லாருக்கு கஸாலி. நீங்க கருத்துக் கேட்டிருக்கிறவிதம் அதைவிட நல்லாருக்கு :)

    பதிலளிநீக்கு
  4. கதை ரொம்ப நல்லாருக்கு கஸாலி. நீங்க கருத்துக் கேட்டிருக்கிறவிதம் அதைவிட நல்லாருக்கு///

    என்னங்க பண்ணுறது சுந்தரா?
    அப்படி எழுதியும் பின்னூட்டமிடுபவர்கள் ரொம்ப கம்மி

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.