என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

திங்கள், ஆகஸ்ட் 30, 2010

6 உங்களுக்கு ஒரு போட்டி

இதன் அர்த்தம் தெரிந்தால் சொல்லுங்களேன்.

1) பத்தாயம்
2) பரண்
3) பஞ்சாரம்
4) உலகாரம்
5) குப்பாயம்
6) கடையாணி
7) நுகத்தடி

விடைகள் விரைவில்

Post Comment

இதையும் படிக்கலாமே:


6 கருத்துகள்:

  1. பத்தாயம் நெல் கொட்டி வைக்கும் குதிர்/ ஓலை கொள் கலன்
    பரண்: சாமான்கள் வைக்க. பயன்படும் மேற்கூரைக்கும், அறையின் கூரைக்கும் இடைப்பட்ட பகுதி,

    கடையாணி: வண்டியில், சக்கரம் கழன்று விடாமல் வைக்கும் அச்சு = அச்சாணி

    நுகத்தடி : காளைகள் கழுத்தில் சுமந்து வரும் வண்டி அல்லது ஏரின் முன்பகுதி

    பதிலளிநீக்கு
  2. 1) பத்தாயம்=குதிர்
    2) பரண்=அட்டாலி. வேண்டாத சாமான்களைப்போடிம் இடம்.
    3) பஞ்சாரம்=சர்க்கரை
    4) உலகாரம்=உப்பு
    5) குப்பாயம்=வள்ளம், அளக்கும் படி
    6) கடையாணி=வண்டிச்சக்கரத்தில் போடப்படும் ஆணி
    7) நுகத்தடி= வண்டிகளில் மாடுகளைப்பூட்டும் இடம்

    பதிலளிநீக்கு
  3. நெற்குப்பை தும்பி அவர்கள் சொன்ன பதில்கள் நான்கும் சரி.
    அய்யா கந்தசுவாமி அவர்களின் பதிலில் 1,2,6,7 சரி
    3,4,5 தவறு. சரியான பதில்கள் நாளை.
    இவ்வளவு சிரத்தை எடுத்து பதில் சொன்ன இருவருக்கும் நன்றியும், வாழ்த்துக்களும்.

    பதிலளிநீக்கு
  4. விடைகள்

    1) பத்தாயம்- நெல் கொட்டிவைக்கும் பலகையிலான பெட்டி
    2) பரண்- வேண்டாத பொருள்கள் போடப்படும் இடம் (வீட்டின் மேல்பகுதியில் இருக்கும்)
    3) பஞ்சாரம்- கோழிகளை அடைக்க உதவும் கூடை
    4) உலகாரம்- புல் செதுக்க பயன்படும் கருவி
    5) குப்பாயம்- வயதான பெண்கள் பயன்படுத்தும் ரவிக்கை
    6) கடையாணி- மாட்டுவண்டியின் சக்கரம் கழன்று விடாமல் வைக்கும் அச்சு
    7) நுகத்தடி - வண்டிகளில் மாடுகளைப்பூட்டும் இடம்

    அய்யா கந்தசுவாமி அவர்களுக்கு,
    உலகாரம் என்பதின் பொருள் மேல் இருக்கிறது. படிகாரம் என்பதுதான் ஒருவகை உப்பு.

    பதிலளிநீக்கு
  5. குப்பாயம் என்பது ஆடை.
    பஞ்சாரம் என்பது கோழிகளை வைத்து மூடும் கூடை?
    மற்ற தெரிந்த பதில்களை மற்றவர்கள் சொல்லிவிட்டனர்.

    பதிலளிநீக்கு
  6. அக்கா ஹூசைனம்மா, லேட்டா சொன்னாலும் லேட்டஸ்ட்டா சொல்லிட்டீங்க.
    நானே விடைகளை வெளியிட்டுவிட்டேன். பார்க்கவில்லையா? இருந்தாலும் கலந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.