என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வியாழன், பிப்ரவரி 24, 2011

41 புலன் விசாரணை (பாகம்-1)



போலீஸ் ஜீப்  அந்த வீட்டின் வாசலில் நிற்கும் போது கணிசமான கூட்டம் கூடியிருந்தது. பத்திரிகை நிருபர்கள் குவிந்திருந்தனர்.

போலீசார் வீட்டினுள் நுழைந்தார்கள். அங்கே.....நடுஹாலில் நாக்கு வெளியே துருத்தியபடி பரிதாபமாக உயிரை விட்டிருந்தாள் தென்னிந்தியாவின் கவர்ச்சிக்கன்னி நடிகை  ஸ்ரீமதி.

கிளிக் கிளிக் என்று பிளாஷ் வெளிச்சத்தில் மின்னிக்கொண்டிருந்தாள்....மன்னிக்கவும் மின்னிக்கொண்டிருந்தது நேற்றுவரை கனவுக்கன்னியாக உலாவந்து தற்போது உயிரை விட்டிருக்கும் நடிகை ஸ்ரீமதியின் உடல்.


"யாரு முதல்ல பார்த்தது?" என்று கேட்டார் இன்ஸ்பெக்டர் தில்லையம்பலம்.
"நான்தான் சார்"
"நீங்க"
"நான் டைரக்டர் மாணிக்கராஜாட்ட அசிஸ்டென்ட் டைரக்டரா இருக்கேன் சார்"
"காலையில உங்களுக்கு இங்கே என்ன வேலை"
"இன்னைக்கு காலையில் ஏழுமணிக்கு சூட்டிங் இருந்துச்சு சார். எப்போதும் ஸ்ரீமதி மேடம் சூட்டிங்க்ன்னா ஒரு மணிநேரம் அட்வான்சாவே ஸ்பாட்டுக்கு வந்துடுவாங்க. இன்னைக்கு ஏழுமணிக்கு மேல ஆகியும் வரல.செல்லுல கூப்பிட்டாரு எங்க டைரக்டர். ரிங்காகுது பதிலில்லை. சரி வீட்டு போனுக்காவது கூப்பிடலாம்ன்னு கூப்பிட்டா....அதுக்கும் பதிலில்லை. டைரக்டரு டென்சனாகி என்னை பார்த்துட்டு வரச்சொன்னாரு..."
"ம்...மேலே சொல்லுங்க....."
"நான் வந்தேன் சார். கதவு திறந்து கிடந்துச்சு"
"வாட்ச்மேன் இல்லியா?"
"அவரு பேத்தி கல்யாணம் கிராமத்துல நடக்குதுன்னு ஒரு வாரம் லீவு கொடுத்து அனுப்பிட்டாங்களாம்"
"உங்களுக்கு எப்படி இந்த விஷயம் தெரியும்"
"மூணு நாளைக்கு முன்னாடி, என்னோட கார் ரிப்பேரு....கம்பெனி வண்டிய அனுப்புங்க சார்ன்னு ஸ்ரீமதி போன் போட்டாங்க...அன்னிக்கு  நான்தான் சார் அவங்கள பிக்கப் பண்ணிட்டு வந்தேன். அப்ப வரும்போது வீட்டு வாசல்ல வாட்ச்மேன் இல்லை. எங்கே மேடம்ன்னு கேட்டதுக்கு அவங்க இப்படி சொன்னாங்க.....
"ஓகே...ஓகே....மேலே சொல்லுங்க"
"கதவு திறந்து கிடந்துச்சா?, சரி யாரோ வேண்டப்பட்டவங்களோட பேசிட்டு இருக்காங்கன்னு நினைச்சுக்கு மேடம் மேடம்ன்னு கூப்பிட்டேன். பதிலில்லை. கதவை திறந்துக்கு உள்ளே போனேன். போயி பார்த்தா நடு ஹால்ல கழுத்துல துப்பட்டா போட்டு நெருக்கி இறந்து கிடந்தாங்க....உடனே பயத்துல வெளில வந்து சத்தம் போட்டேன்.எங்க டைரக்டருக்கு இன்பார்ம் பண்ணினேன். அவருதான் உங்களுக்கு போன் பண்ணி சொல்ல சொன்னாரு...."
"உங்க டைரக்டரு எங்க?"
"வந்துக்கு இருக்காருசார்."
"ரைட்...நீங்க பாடிய டச் பண்ணிடலியே...எதுக்கு கேக்கறேன்னா....கொலைகாரன் ஏதாவது  தடயம் விட்டுட்டு போயிருந்தா  அழிஞ்சு போயிடும்.அதுக்குத்தான் கேக்கறேன்.பாரன்சிக் ஆட்கள் வரும்வரை பாடியை டச் பண்ணிடக்கூடாது."
"இல்லேசார்.யாரும் தொடல..."
"குட்...."

அப்போது டைரக்டர் மாணிக்கராஜா நுழைந்தார்.
"வணக்கம் சார்....நான் மாணிக்கராஜா"
"என்ன சார் உங்கள தெரியாதா?"
"எப்படி சார்?"
"இப்பத்தானே வந்திருக்கோம். இனிமேல்தான் விசாரனைய ஆரம்பிக்கனும். அவங்க கிடக்கற நிலமைய பார்த்தா....கடுமையா போராடியிருக்க சான்சே இல்லைன்னு தோணுது."
"சோ..."
"சோ, கொலைகாரன் அல்லது கொலைகாரி அவங்களுக்கு தெரிஞ்சவங்களாத்தான் இருக்கணும்."
"எப்படி சொல்றீங்க...இன்ஸ்பெக்டர்?"
"நல்லா கவனிச்சு பாருங்க....பூட்டு ஓடைக்கப்படல .....எல்லாம் வச்சது வச்சபடி இருக்கு....சோ, நல்லா பேசிக்கு இருந்தபோதே...திடீர்ன்னு எந்திருச்சு துப்பட்டாவ கழுத்துல போட்டு இறுக்கி இருக்கனும்ன்னு என்னோட கெஸ்...மத்தபடி பாடியோட பி.எம். ஐ மீன் போஸ்ட் மார்டம் ரிப்போர்ட் வந்ததுக்கு பின்னாடித்தான் எதுவும் சொல்லமுடியும்."
"தேங்க்ஸ் இன்ஸ்பெக்டர்....கொல்லபபட்டிருக்கிறது சாதாரண ஆளில்லை. தமிழ்நாடே கொண்டாடுற ஒரு பெரிய நடிகை. கொஞ்சம் சீக்கிரம் கண்டு பிடிச்சீங்கன்னா....."
"ஷ்யூரா...அதுக்கு எல்லோருடைய ஒத்துழைப்பும் தேவை" இன்ஸ்பெக்டர் சொல்லிக்கு இருக்கும்போதே கான்ஸ்டபிள் வந்து
"சார் இந்த லட்டர் பாடிக்கு பக்கத்துல கிடந்துச்சு...."
வாங்கி பார்த்த இன்ஸ்பெக்டர் அதிர்ந்தார்....

அதில் 'கலாச்சார சீரழிவிற்கு  கொண்டு சொல்லும் இப்படிப்பட்ட நடிகைகளை களையெடுக்கும் பணி தொடரும்'
என்று எழுதியிருந்தது.

                                                                                                                                                        (விசாரணை தொடரும்)
 





Post Comment

இதையும் படிக்கலாமே:


41 கருத்துகள்:

  1. யப்பா பயந்துட்டேன் ஹி ஹி!

    பதிலளிநீக்கு
  2. லேபிள்ல நகைச்சுவை? க்ரைம் போதும்

    பதிலளிநீக்கு
  3. ராஜேஷ் குமாரின் கொலை உதிர்க்காலங்கள் போல ஓப்பனிங்க். எழுத்து நடை புஷ்பா தங்க துரையின் டிடெக்டிவ் ஸ்டோரி போல....

    பதிலளிநீக்கு
  4. ஆனா பதிவுலகில் தொடர்கள் சரிப்பட்டு வருமா?ன்னு எனக்கு கெஸ் பண்ண முடியல.. உங்க கதையின் வரவேற்பை பார்த்து தெரிஞ்சுக்கறேன்

    பதிலளிநீக்கு
  5. >>>>பூட்டு ஒடக்கப்படல...

    உடைக்கப்படலை


    அங்கங்கே ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் இருக்கு ( 5) பாருங்க

    பதிலளிநீக்கு
  6. விறுவிறுப்பான ஆரம்பம்.

    பதிலளிநீக்கு
  7. அதான் டெரர் தனமா பதிவு போடுறதால சி பியும் டெரர் ஆகிடுறார் பாருங்க

    பதிலளிநீக்கு
  8. ஆரம்பமே கலக்கலா இருக்கே!

    பதிலளிநீக்கு
  9. புதுமையான முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள் .........

    பதிலளிநீக்கு
  10. ஆரம்பமே நல்லாயிருக்கு கலக்குங்க

    பதிலளிநீக்கு
  11. ஆஹா இந்த தலைப்புல வந்த படம் பார்த்துட்டு ஒரு வாரம் காய்க்கள்ள கிடந்த ந்ஜாபகம் வருது, ஹாய் ஹாய்,, பாக்கலாம், செகண்டு இன்னின்க்ஸ்லயாவது தேறுவேநான்னு .. :)அருமையா தொடங்கியிருக்கீங்க பாய்.:)

    பதிலளிநீக்கு
  12. ராஜேஷ் குமாரின் கதை போல இருக்கு

    பதிலளிநீக்கு
  13. அதெப்படிங்க எல்லா பால்லையும் சிக்சர் அடிக்கிறிங்க...

    க்ரைம் தொடரட்டும் வாழ்த்துக்களும் மற்றும் வாக்குகளும்..

    பதிலளிநீக்கு
  14. தங்கள் பதிவிற்கு தொடர்பில்லாத மறுமொழி என்று தயவு செய்து இதை நீக்கிவிடாதீர்கள்.

    சுட்டியை சொடுக்கி படிக்கவும்.

    ===>இந்துக்களே! விழிமின்! எழுமின்! 7. காம சூத்திரம். நிர்வாண சாமியார்கள். பிணந்திண்ணி சாமியார்கள். புனித கங்கையில் காலைக்கூட நனைக்க மனம் வரவில்லை. <====

    .

    பதிலளிநீக்கு
  15. பதிவுகின் அடுத்த ராஜேஷ் குமாரை வருக.. வருக.. என வரவேற்கிறோம்..

    பதிலளிநீக்கு
  16. ராஜேஸ் கதையை விரும்பிப் படிக்கும் எனக்கு ஒரு வித்தியாச அனுபவம் தரும் போல இருக்கிறது... கட்டாயம் காத்திருக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  17. அன்பர்க்கு ஒரு வேண்டுகோள்..
    தங்களுடைய முகவரி மற்றும்ிதங்களுக்கு பிடித்த இரண்டு தமிழ் திரைஇசைப்பாடலை எனது முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு வேண்டுகிறேன்..
    soundar76rasi@gmail.com

    பதிலளிநீக்கு
  18. ஆனா உங்களுக்கு தீவிரமான கிரைம் மனசு சார் .முக்கியமான செய்திக்கு முன்னே தொடரும் போடுறீங்க .

    பதிலளிநீக்கு
  19. தொடக்கம் அருமை ...
    தொடர்கதைகளில்,வழக்கம்போல, முடிக்கும் முன் ஒரு எதிபார்ப்பு/திருப்பம் ...

    பதிலளிநீக்கு
  20. தொடக்க்மே அருமை, keep-it-up,
    தொடர்களின் முடிவில் ஒரு திருப்பம்/எதிபார்ப்பு வழக்கம்போல் ... சபாஷ்./ms

    பதிலளிநீக்கு
  21. 'கலாச்சார சீரழிவிற்கு கொண்டு சொல்லும் இப்படிப்பட்ட நடிகைகளை களையெடுக்கும் பணி தொடரும்' அருமையா தொடங்கியிருக்கீங்க

    பதிலளிநீக்கு
  22. புலன்விசாரணை நல்லாவே இருக்கு......! நல்ல எழுத்துநடை....!

    பதிலளிநீக்கு
  23. நல்லாவே எழுதுறீங்க.. தொடர் தொடரட்டும்..

    பதிலளிநீக்கு
  24. //பதிவுலகில் தொடர்கள் சரிப்பட்டு வருமா?//

    பதிலளிநீக்கு
  25. ராஜேஷ் குமாரின் கொலை உதிர்க்காலங்கள் போல ஓப்பனிங்/////////////// super

    பதிலளிநீக்கு
  26. மெட்ராஸ் பாஷையில் சொன்னால் நாசம்.

    எங்க ஊர் பாஷையில் சொன்னால்

    வகையா இருக்கு.

    பதிலளிநீக்கு
  27. உங்களுடைய அடுத்த புலன் விசாரணை எதிர்பார்கிறேன் .

    பதிலளிநீக்கு
  28. ரொம்ப நாளாச்சி இந்த மாதிரி படிச்சு ! தொடருங்கள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  29. இப்ப இது வேறயா?! கலங்குங்க சித்தப்பு

    பதிலளிநீக்கு
  30. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  31. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  32. என் முதல் முயற்சிக்கு பின்னூட்டமிட்டு வாக்களித்து ஆதரவளித்த உங்கள் அனைவருக்கும் நன்றி.....இனி புலன் விசாரணை தொடர் வரும் வாரந்தோறும் வியாழனன்று வெளிவரும்.

    பதிலளிநீக்கு
  33. கதை டாப் கியரில் கெளம்பியாச்சு....

    பதிலளிநீக்கு
  34. முயற்சிக்கு வாழ்த்துக்கள்! நல்லாயிருக்கு...

    பதிலளிநீக்கு
  35. நம்ம கிரைம் கதைகள் மன்னர் ராஜேஷ் குமார் மாதிரி ஒபெனிங் நல்லா தான் இருக்கு.

    பதிலளிநீக்கு
  36. ஆரம்பமே கலக்கல். அடுத்து எப்போனு எதிர்பார்ப்பு.

    பதிலளிநீக்கு
  37. பெயரில்லா28 பிப்., 2011, 5:17:00 PM

    முயற்சிக்கு வாழ்த்துக்கள்! நல்லாயிருக்கு.

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.