என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வியாழன், பிப்ரவரி 17, 2011

27 இப்படித்தாங்க ஒருநாளு ராத்திரி......

இப்படித்தாங்க ஒருநாளு ராத்திரி ,  மழைன்னா மழை அப்படியொரு மழை. காத்து மின்னல், இடின்னு ஊரே கலகலத்து போறமாதிரி மழை. அந்த வீட்டுல புருசன் பொண்டாட்டி புள்ள மூணுபேரும் இருந்தாங்க....பொண்டாட்டிகாரி  வெளியே எட்டிப்பாத்து மழைய ரசிச்சுக்கு இருந்தா...புருசன்காரன் சத்தம் போட்டு கூப்பிட்டான்...
"வீட்டுக்குள்ள வாடி....மழையே பாக்காதவ மாதிரி இப்படி வேடிக்க பாக்குறே?"
"இல்லேங்க....மின்னல பாருங்க அழகா கொடி கொடியா போகுது"
"போகுது...போகுது...ஏன் போகாது.....ரொம்ப நேரம் பாத்துக்கு இருந்தேன்னா கண்ணும் சேர்ந்து போயிரும்..உள்ளே வாடி"
"சும்மா போங்க...உங்களுக்குத்தான் ரசனையே இல்லே....இருங்க இன்னும் கொஞ்ச நேரம் வேடிக்க பார்த்துட்டு வந்துர்றேன்."
"நான் சொல்றத சொல்லிட்டேன்...அதுக்கப்புறம் உன் இஷ்டம்.அப்புறமா கண்ணு போச்சு...மூக்குபோச்சுன்னு சொல்லக்கூடாது ஆமா?"
அவன் சொல்லிட்டு இருக்கும்போதே ஒரு மின்னல்தாங்க மின்னுச்சு....அப்படியொரு வெளிச்சம். அத அப்படியே புடிச்சு சேமிச்சா இன்னும் ஒருவருஷம் ஆற்காடு வீராசாமி கவலையில்லாம இருப்பாரு....அவன் பொண்டாட்டி பட்டுன்னு கண்ணமூடி திறந்தா பாருங்க....ஒண்ணுமே தெரியல...எல்லாப்பக்கமும் இருட்டு .....அய்யய்யோ...புருஷன் சொன்னது உண்மையா போச்சே...எனக்கு கண்ணு குருடா போச்சேன்னு நெனச்சுக்கு ஒப்பாரி வச்சு கதறுனா.....
"நீங்க சொல்லசொல்ல கேக்காம மின்னல பாத்தது தப்புதான்.இப்ப எனக்கு கண்ணு போச்சே...ஒண்ணுமே தெரியலியே...நான் எப்படி இனி குருடியாவே காலந்தள்ளுவேன். ஐயோ...என்ன எப்படியாவது காப்பாத்துங்க..."
"இப்ப என்னாச்சுன்னு இப்படி அழுது ஊரக்கூட்டுறே......கண்ணும் போகல...ஒரு மண்ணும் போகல.....நல்லா பாரு கரண்டு போச்சு.....இப்படி மின்னல் மின்னினா...கரண்டு போகாம என்ன செய்யும்? அதான் உனக்கு ஒன்னும் தெரியல... இப்ப பாரு எல்லாம் தெரியும்" என்றவாறு ஒரு மெழுகுவர்த்தியை கொளுத்தினான்.

:

வலைச்சரத்தில் என் இன்றைய அறிமுகங்கள்......

அப்படியே அங்கேயும் போயி பார்த்துட்டு வாங்க பாஸ்....



Post Comment

இதையும் படிக்கலாமே:


27 கருத்துகள்:

  1. மின்னல் நல்லா மின்னுதுங்க!!
    //வலைச்சரத்தில் என் இன்றைய அறிமுகங்கள்......
    பதிவுகளும் அறிமுகமும்-3 (வலைச்சரத்தில் வியாழன் )அப்படியே அங்கேயும் போயி பார்த்துட்டு வாங்க பாஸ்....
    //
    நாம அங்க போய் பாத்திட்டு தான் வாறம்!!

    பதிலளிநீக்கு
  2. நல்லா இருக்கு நண்பரே அறிமுகப்படுத்தியதுக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  3. மின்னலைப்பார்க்கும்போதே கரண்டும் கட்டானால் கண்ணுதெரியாமப்போச்சோனுதான் தோனும்.

    பதிலளிநீக்கு
  4. //...அப்படியொரு வெளிச்சம். அத அப்படியே புடிச்சு சேமிச்சா இன்னும் ஒருவருஷம் ஆற்காடு வீராசாமி கவலையில்லாம இருப்பாரு....// சூப்பர் ஐடியா!அவருக்கு அனுப்புங்க! இப்படித்தான் முடிப்பீங்கன்னு நினைத்தேன்! வலைச்சர அறிமுகத்துக்கு மீண்டும் நன்றி !

    பதிலளிநீக்கு
  5. நறுக்குனு நாலு ஓட்டு போட்டு கிளம்பியாச்சு..

    பதிலளிநீக்கு
  6. இது என்ன நண்பா இப்படி கலக்குறீங்க ஒரு வேளை உண்மை சம்பவமோ

    பதிலளிநீக்கு
  7. காலையில் முதல் பதிவே இப்படியா?

    பதிலளிநீக்கு
  8. ஐயையோ நா கூட உண்மைலே கண்ணு போய்டுச்சோ நெனச்சேன் ,எல்லாம் ஆற்காட்டார் கைங்கரியமா

    பதிலளிநீக்கு
  9. அஸ்ஸலாமு அழைக்கும்

    நல்லா இருக்கு

    பதிலளிநீக்கு
  10. //மண்ணும் போகல.....நல்லா பாரு கரண்டு போச்சு.....இப்படி மின்னல் மின்னினா..//

    ஹா ஹா ... நல்லா ஏமாந்திட்டாங்க ..

    பதிலளிநீக்கு
  11. சீரியசான கதைக்குள்ள அரசியல் அதனுள் ஒரு ஜோக் சூப்பர் தல

    பதிலளிநீக்கு
  12. சொன்ன நம்ப மாட்டீங்க. அப்போது ஒரு பத்து வயது இருக்கும்.எனக்கும் இது நடந்திருக்கு. ஒரு நாள் நடு இரவில் திடீரென கண்விழித்த போது எதுவுமே தெரியவில்லை. எனக்கு அழுகையாக வந்தது.பிறகுதான் தெரிந்து கரண்ட் கட் என்று..

    :)

    பதிலளிநீக்கு
  13. ம்ம்...நடத்துங்க......மின்னல் வந்தா மட்டுமா உங்க ஊர்ல கரண்டு போகுது???

    பதிலளிநீக்கு
  14. நல்லாத்தான் இருக்கு, அதுக்காக ஆற்காட்டாரை இழுக்காமல் இருந்திருக்கலாம். பாவம் மின்னல் மின்னுவதற்கெல்லாம் அவர் என்ன பண்ணுவார், அவரால் பண்ணக்கூடியதையே முடியாமல் இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  15. சிறுகதையின்னு நினைச்சி படிச்சா கடைசியில் நகைச்சுவை.. கூடவே.. அறிவுரை..
    அருமை..
    தொடரட்டும் உங்க பணி..

    பதிலளிநீக்கு
  16. நல்ல நகைச்சுவையான சிறுகதை.

    பதிலளிநீக்கு
  17. //அத அப்படியே புடிச்சு சேமிச்சா இன்னும் ஒருவருஷம் ஆற்காடு வீராசாமி கவலையில்லாம இருப்பாரு....//

    பதிலளிநீக்கு
  18. எப்படிங்க இப்படி 3லயும் எழுதித் தள்றீங்க..ஒண்ணைச் சமாளிக்கவே இங்க நாக்குத் தள்ளுது..

    பதிலளிநீக்கு
  19. ஆரம்பமே அசத்தல் படமொன்றுடன் அசத்தீட்டிங்களே... அருமை.. அப்படியே வலைச்சரமும் போட்டு வாறன்..

    பதிலளிநீக்கு
  20. .மெழுகுவர்த்தி இருக்க பயமேன்?விறுவிறுப்பா இருந்திச்சி. அருமை!.

    பதிலளிநீக்கு
  21. ஹா... ஹா... ஹா... இதுவும் மீள் பதிவு போல தெரிகிறதே...

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.