என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வெள்ளி, பிப்ரவரி 04, 2011

28 வானவில் பக்கங்கள்


ஒரு கவிதை  

ஆலயங்களில் வர்க்க பேதம்
டீக்கடைகளில் இரட்டை டம்ளர்
பள்ளிகளிலும் சாதி
சுடுகாடும் இடுகாடும் கூட வேறு வேறு
ஆனால் எந்த பேதமுமின்றி
எல்லோரும் ஒன்றாக
சினிமா தியேட்டரில்.........

-----------------------------
ஒரு விளக்கம் 

இப்போதெல்லாம் ஒருவனை திட்ட சாதரணமாகஉபயோகப்படுத்தும்
வார்த்தை கம்னாட்டி பயலே .
கம்னாட்டின்னா என்னன்னு பார்ப்போம்.
தமிழில் கைம்பெண் என்றால் விதவை அதாவது கணவனை இழந்தவள் என்று அர்த்தம்.
கைம் பொண்டாட்டி என்ற வார்த்தையும் விதவை என்ற அர்த்தத்தில் சொல்லப்பட்ட வார்த்தைதான்.
கைம் பொண்டாட்டி என்ற வார்த்தைதான் ப்போது மருவி கம்மனாட்டி ஆகிவிட்டது. கம்னாட்டி பயலேன்னா விதவையின் மகனே என்று அர்த்தம். தயவு செய்து இனி யாரையும் அப்படி திட்டாதீர்கள்.

-------------------------------------


ஒரு டவுட்டு 
ஒருவர் கைது செய்யப்பட்டதாலேயே குற்றவாளி ஆகமாட்டார். என்று தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்களே....இத்தனைக்கு பிறகும் ஒத்துக்கொள்ளவில்லைஎன்றால்.....பிறகு எப்போது ஒத்துக்கொள்வார்களாம்?

------------------------------------------------------------------


ஒரு ட்வீட்டு

 500 மீனவர்களுக்காக ஒன்றுமே செய்யாத கலைஞர் ஒரு ராசாவுக்காக என்னவெல்லாம் செய்வார் பாருங்கள்?



 


Post Comment

இதையும் படிக்கலாமே:


28 கருத்துகள்:

  1. நல்ல பதிவு ...சரியான கேள்விகளும் , சரியான பதில்களும்

    பதிலளிநீக்கு
  2. நிச்சயம் ராசாவுக்காக இன்னும் நிறைய செய்வார்

    பதிலளிநீக்கு
  3. >>>ஆனால் எந்த பேதமுமின்றி
    எல்லோரும் ஒன்றாக
    சினிமா தியேட்டரில்


    என்னையா நக்கல் அடிச்சீங்க. ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
  4. >>>கம்னாட்டி பயலேன்னா விதவையின் மகனே என்று அர்த்தம். தயவு செய்து இனி யாரையும் அப்படி திட்டாதீர்கள்.

    இது புதுசா இருக்கு.. ஆனா நான் யாரையும் திட்டற பழக்கம் இல்லை.. ( நமக்கு திட்டு வாங்கித்தான் பழக்கம்)

    பதிலளிநீக்கு
  5. சுப்பர் தல. கைது செய்ததாலே எத்துனை சாமானியர்களை குற்றம் இழைத்தவர் என்று மிக சாதரணமாக எழுதும் உடகத்துரையை எதிர்க்காத இவர் இவருடைய கட்சியை சேர்ந்தவர் என்பதால் இப்படி செய்கிறார்.

    பதிலளிநீக்கு
  6. தூக்கில் போட்டால் தான் குற்றவாளி என்று ஒத்துக் கொள்வார் போல. சவூதி மாதிரி மாத்திட வேண்டியது தான்.தண்டனைகள் அதிகமானால் தான் தவறுகள் குறையும்

    பதிலளிநீக்கு
  7. தூக்கில் போட்டால் தான் குற்றவாளி என்று ஒத்துக் கொள்வார் போல. சவூதி மாதிரி மாத்திட வேண்டியது தான்.தண்டனைகள் அதிகமானால் தான் தவறுகள் குறையும்

    பதிலளிநீக்கு
  8. கம்னாட்டி என்ற வார்த்தைக்கு அர்த்தம் முன்பே ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறேன்.

    டூவிட்டு இல்லை அது ரிவிட்டு.

    பதிலளிநீக்கு
  9. அருமை அருமை..

    ஃஃஃஃகம்னாட்டின்னா என்னன்னு பார்ப்போம்.ஃஃஃஃ

    இது நீங்கள் முன்னரே எழுதிய பதிவு என நினைக்கிறேன்...
    நன்றிகள்..

    http://ragariz.blogspot.com/2010/09/blog-post_20.html

    பதிலளிநீக்கு
  10. வானவில் நல்லா பளிச்சுன்னு இருக்கு!

    பதிலளிநீக்கு
  11. ஆனால் எந்த பேதமுமின்றிஎல்லோரும் ஒன்றாகசினிமா தியேட்டரில்.........////////////ரசிகர் மன்றத்திலும்...........

    பதிலளிநீக்கு
  12. ஸலாம் உண்டாவதாக சகோ.கஸாலி.

    'சாதியை ஒழிக்க என்ன வழி' என்றுதான் இன்று ஒரு பதிவு போட்டேன்.

    சாதி பற்றிய உங்கள் கவிதை "நச்" ரகம். சூப்பர்ப்.

    பதிலளிநீக்கு
  13. கைம்பெண் புதுசு...அருமை..ஏன் சின்னதா போட்டுட்டீங்க..

    பதிலளிநீக்கு
  14. உங்க டவுட்டுதானுங்க எனக்கும்...
    இன்னும் டவுட்டு இருந்தா சொல்லுங்க...

    பதிலளிநீக்கு
  15. பெயரில்லா4 பிப்., 2011, 5:18:00 PM

    பிறகு எப்போது ஒத்துக்கொள்வார்களாம்? //
    ஒருவரை தூக்கில் போட சொல்லிவிட்டதாலாயே அவர் குற்றவாளி ஆகிவிட மாட்டார் என்றும் கூட சொல்வார் தாத்தா

    பதிலளிநீக்கு
  16. பெயரில்லா4 பிப்., 2011, 5:19:00 PM

    பிறகு எப்போது ஒத்துக்கொள்வார்களாம்? //
    ஒருவரை தூக்கில் போட சொல்லிவிட்டதாலாயே அவர் குற்றவாளி ஆகிவிட மாட்டார் என்றும் கூட சொல்வார் தாத்தா

    பதிலளிநீக்கு
  17. கவிதை நல்லாருக்கு.பாருங்கள் சினிமா எல்லா பேதத்தையும் போக்கிவிடுகிறது.

    பதிலளிநீக்கு
  18. வணக்கங்களும், வாழ்த்துக்களும் பின்னே வாக்குகளும்.

    பதிலளிநீக்கு
  19. நல்ல பதிவு.. ட்வீட் சூப்பர்

    பதிலளிநீக்கு
  20. வர்ணஜாலமாய் ஜொலிக்கும் வானவில்!
    ஆனால், இன்னும் மூன்று குறிப்புக்கள் குறையுதே!
    [வானவில்லின் நிறங்கள் ஏழு; ஆகவே ஏழு குறிப்புக்கள்
    போடவும்.]

    -கலையன்பன்.

    (இது பாடல் பற்றிய தேடல்!)
    ஒரு ஊரில் ஊமை ராஜா!

    பதிலளிநீக்கு
  21. வானவில்லின் ஏழு வர்ணங்களில் நான்கு தானே இங்குள்ளது. மற்ற மூன்று எங்கே ?

    பதிலளிநீக்கு
  22. அடடா....இது ஏற்கனவே வந்துவிட்டதா?......இது கமெண்ட் இல்ல. இதுவும் ரிவீட்டு...!

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.