என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வெள்ளி, பிப்ரவரி 25, 2011

37 தந்தியடிக்க இன்னொரு தலைவரும் ரெடியாயிட்டாருங்கண்ணா...

 லங்கை கடற்படையினரின் ரத்தவெறிக்கு இதுவரை   ஐநூறுக்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

கடந்த 2008-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 8 மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதாவது 2008-ஆம் ஆண்டு 5 மீனவர்களும்,
2010- ஆம் ஆண்டு ஒருவரும் 2011 ஆம் ஆண்டு இதுவரை விஜயகுமார் உள்ளிட்ட இருவர்  கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

எப்போதும் இல்லாத அளவிற்கு  மீனவர்  விஜயகுமாரின் மரணத்திற்கு பிறகு அரசியல்வாதிகளிடம் ஏற்பட்டிருக்கும் எழுச்சியை பார்த்தல் நமக்கு உடம்பெல்லாம் புல்லரிக்குதுங்க....மீனவர் மீது இதுவரை இல்லாத அக்கறை இப்போதுமட்டும் ஏன் இவர்களுக்கு வந்தது என்று பார்த்தோமேயானால் தேர்தல்....தேர்தல்...தேர்தலை தவிர வேறொன்றுமில்லை.

கொடநாட்டுக்கும் போயஸ்  கார்டனுக்கும்  யூ டர்ன் அடித்துக்கொண்டிருந்த  இருந்த ஜெயலலிதா வேதாரண்யம் வந்து உதவியதற்கும்,
பி.ஜே.பி-யின் வடநாட்டு தலைவி சுஷ்மா சுவராஜ் வந்து உதவியதற்கும் தேர்தலை தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும் நண்பர்களே?....மீனவர்கள் மீது இவர்களுக்கு அக்கறையும் இல்லை, அனுதாபமும் இல்லை. அரசியல் ஆதாயம் ஒன்றை தவிர....

இதோ...இவர்களின்  வரிசையில் இன்னொரு தலைவர்....அவர் வேறு யாருமில்லை நம் இளைய டாக்டரு விஜய்.அவரை பற்றி அதிகமதிகம் விமர்சனம் வலைப்பதிவுகளில் வந்துள்ளதால்.....நான் நேராக விஷயத்திற்கு போய் விடுகிறேன்.

சமீபத்தில் நாகையில் கூட்டம்போட்டு விஜய் பேசிய பேச்சின் ஒரு பகுதி....
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்தும், மீனவர்களின் நிலை குறித்தும் நீங்கள் பிரதமர் மற்றும் முதல் அமைச்சருக்கு தந்தி அனுப்ப வேண்டும். நாளை காலை நீங்கள் தந்தி அனுப்ப வேண்டும். -என்று தன திருவாய் மலர்ந்திருக்கிறார்.ஏனுங்கண்ணா....தந்தி அடிக்கவே இங்கு ஒரு தலைவர் தபால் துறையை குத்தகைக்கு எடுத்து வைத்திருக்கிறார். அவருக்கு போட்டியா நீங்க வேறா? வேறு ஏதாவது செய்ய சொல்லியிருக்கலாமே....என்னன்னா இப்படி பண்ணிட்டீங்க....நல்லவேளை ஓட்டுக்கேக்காம போனீங்களே?




Post Comment

இதையும் படிக்கலாமே:


37 கருத்துகள்:

  1. அடங்கொன்னியா இன்னொரு சுயநலப்பிசாசு!!

    பதிலளிநீக்கு
  2. விஜயின் நிலைமையை பார்க்க பரிதாபமாக உள்ளது பாஸ்..
    அவரின் ரசிகன் நான்..ஆனால்...
    ம்ம்

    நூறாவது பதிவு-மோசமான தலைநகரம் கொழும்பு!!
    http://kaviyulagam.blogspot.com/2011/02/blog-post_25.html

    பதிலளிநீக்கு
  3. உங்க புரொஃபைல்ல வலைஞன் முதல் இடத்துல இருக்கு . அதெப்பிடி? 2 வது இடத்துல தானே இருக்கொனும்?

    பதிலளிநீக்கு
  4. எல்லாரும் சுயநலவாதிகள் தான்...

    பதிலளிநீக்கு
  5. நான்தான் அப்பவே சொன்னேனே இவர் திரையில் வந்தாலும் காமெடி, வெளியில் பேசினாலும் காமெடி.

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா25 பிப்., 2011, 10:40:00 AM

    அரசியல் எவ்வளவு நாள் சீரியஸாப் போறது,. அப்போ அப்போ காமெடி பண்ற விஜயக் காந்துக்கு அவ்வளவு சிரிக்க வைக்கத் தெரியவில்லை...... அந்தக் குறையைத் தீர்க்க வந்துள்ளார் ஷில்பாக் குமார். அட்ச்சீ விஜய்.. தமிழ் சினிமாவுக்கு ஒரு சந்தானம்.தமிழ் அரசியலுக்கு ஒரு விஜய். சிரிங்க சிரிங்க சிரிச்சிட்டே இருங்க............... ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
  7. .ஏனுங்கண்ணா....தந்தி அடிக்கவே இங்கு ஒரு தலைவர் தபால் துறையை குத்தகைக்கு எடுத்து வைத்திருக்கிறார். அவருக்கு போட்டியா நீங்க வேறா? வேறு ஏதாவது செய்ய சொல்லியிருக்கலாமே....என்னன்னா இப்படி பண்ணிட்டீங்க....நல்லவேளை ஓட்டுக்கேக்காம போனீங்களே?


    ...well said!

    பதிலளிநீக்கு
  8. அடப்போங்கப்பா அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

    பதிலளிநீக்கு
  9. ஹெ ஹெ.. அந்த நாள் கலைஞர் எவ்வழி, இன்னாள் கலைஞன் அவ்வழி.. இதிலென்ன தப்பு??? ஹி ஹி ஹி

    பதிலளிநீக்கு
  10. ஃஃஃஃஇலங்கை கடற்படையினரின் ரத்தவெறிக்கு இதுவரை ஐநூறுக்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்ஃஃஃஃ

    இதை நாங்கள் தான் சொல்கிறோம் சகோதரா... அரசாங்கம் சொல்லுமா ?

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    பாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம் (கண்டுபிடிப்பு)

    பதிலளிநீக்கு
  11. உனக்கு பிடித்த பாடல் எனக்கும் பிடிக்குமே..

    தெரிந்து கொள்ள பாட்டு ரசிகன் அழைக்கிறேன்..

    http://tamilpaatu.blogspot.com/2011/02/blog-post_25.html

    பதிலளிநீக்கு
  12. ஹா..ஹா.. கலக்கல் பாஸ்...

    பதிலளிநீக்கு
  13. டாக்டர் நெலமைய பார்த்தா பாவமா தான் இருக்கு.

    பதிலளிநீக்கு
  14. ஹையோ ஹையோ அட போங்கப்பா நாடே நமச்சல் எடுத்து போச்சி .......

    பதிலளிநீக்கு
  15. என்னங்கடா நடக்குது நாட்ல, எல்லோரும் தந்தியடின்னா என்னாங்கட பண்றது, அட்லீஸ்ட் கொரியர் அனுப்புன்னாவது மாத்தி சொல்லுங்கடா??

    பதிலளிநீக்கு
  16. இன்னொரு ‘தமிழினத் தலவரா’ டாகுடரு வளர்றது பிடிக்காம பொறாமையில எழுதியிருக்கீங்க..உங்களுக்கு எதிரா ஒரு ல்ட்சம் தந்தியை ஒபாமா அட்ரஸ்க்கு அனுப்பப் போறோம்!

    பதிலளிநீக்கு
  17. //மீனவர் மீது இதுவரை இல்லாத அக்கறை இப்போதுமட்டும் ஏன் இவர்களுக்கு வந்தது என்று பார்த்தோமேயானால் தேர்தல்....தேர்தல்...தேர்தலை தவிர வேறொன்றுமில்லை.//

    உண்மை தான்..

    பதிலளிநீக்கு
  18. ஆனா இது கூட செய்யாதவங்கள என்ன சொல்லுறது?

    பதிலளிநீக்கு
  19. தந்தி அடிங்க அஞ்சல்துகக்கு பணத்தை செலவு செய்க இவங்களுக்கெல்லாம் யாருங்க அரசியல் கத்து கொடுக்கிறது இப்படி ஒன்னுந்தேரியம் போசி நாளைக்கு நார்க்கலி கனவில் மிதப்பணுக தமிழ் நாட்டு தலை எழுத்தே இப்படி தானோ ?

    பதிலளிநீக்கு
  20. அடிக்க வேண்டியது தந்திய இல்ல, அவரைத்தான்!

    பதிலளிநீக்கு
  21. என்னங்க நீங்க ஒருத்தர் நல்லது பண்ணினாலும் கிண்டல் பண்ணிக்கிட்டு .. பாவமாக்கும் அவரு ..

    பதிலளிநீக்கு
  22. அரசியல் காத்து வீசினாலே சுய நலமும்
    சேந்தே வந்திடும்போல.

    பதிலளிநீக்கு
  23. "கோமாளி செல்வா said... 23

    என்னங்க நீங்க ஒருத்தர் நல்லது பண்ணினாலும் கிண்டல் பண்ணிக்கிட்டு .. பாவமாக்கும் அவரு ..""

    உண்மைதானே நல்லதுக்கு காலமில்லை...:)

    பதிலளிநீக்கு
  24. விஜயை ஒரு முறை சென்னையில் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்ததால் அவரைப் பற்றிக் கருத்து சொல்ல விரும்ப வில்லை.

    காரணம் ரொம்ப சாதுவானப் பேச்சும் மரியாதை கலந்த பார்வையும் எனக்கு பிடித்திருந்தது.

    பதிலளிநீக்கு
  25. அந்த காணொளியில் அவர் பேசியதைத் தவிர எல்லாமே இருக்கிறது..

    பதிலளிநீக்கு
  26. @ சிபி
    ப்ரோபைல் அகர வரிசைப்படி வரும்...

    பதிலளிநீக்கு
  27. ஹா...ஹா...ஹா...

    இவன எல்லாம் இந்த உலகம் இன்னுமா நம்பிட்டு இருக்கு...

    அய்யோ...அய்யோ....

    இவ்வளவு நாள் மக்கள் மேல் இல்லாத பாசம் இப்போ இவரோட “காவலன்” பட ரிலீஸ் சிக்கல்னதும் பொங்கி வழிஞ்சதை பார்த்து யாரும் சீரியஸா எடுத்துக்கல..

    பதிலளிநீக்கு
  28. தலைவர் எங்க ரெடியாக பே பே ந்னாலும் மக்களா ரெடி பண்ணிடுவாங்க

    பதிலளிநீக்கு
  29. விஜய் அரசியல் பற்றி எல்லாம் பதிவு எழுதுவதை தவிருங்கள். எதிர்ப்பை கூட நாம் காட்ட தேவை இல்லை. இவர்களிஎல்லாம் கண்டுகொள்ளாமல் ஓரம் கட்டினாலே போதும் ரஹீம். காணாமல் போய்விடுவார்கள்.அந்த அம்மாவும் இதைத்தான் செய்யபோகிறது . பாருங்கள்!

    பதிலளிநீக்கு
  30. இவருக்கு நடிக்க தான் தெரியலை னா பேச கூட தெரியலை பாவம் இவர்

    பதிலளிநீக்கு
  31. அரசிலுக்கு வந்தாதான் நாட்ல என்ன நடக்குதுன்னு தெரியுமாக்கும் எல்லாருக்கும் .....

    பதிலளிநீக்கு
  32. I don't really support vijay to become CM of TN. But every one is talking about cunning, corrupt, selfish, family run....(you can add any word here) current politicians and seems to want change. I really think people including you blogger are terrified about change, always criticize these people but go back and elect the same one. If some new one comes you blogger always ready criticize them. I do not really know what good vijay can do but at the same time you can not say the prophecies that what bad he will do. If Seeman talks about change you people are ready cirtize. Ok leave all these guys what did you do when IIT graduates stand in election last time, you people writing in the blogs those IIT grads are inexperience in politics if they wish they should start from their ward member level. Always criticize everyone that is only thing you all can do. So I think you people are searching for your Savior from the same "Coovam" anyways good luck for your search. (I am not just telling about you Rahim, I am talking about the general mentality of the blogger, I was thinking they are different from the crazy cine actors fans or die-hard insane political party members.)

    பதிலளிநீக்கு
  33. பெயரில்லா27 பிப்., 2011, 10:56:00 AM

    இவனால் அன்று சில ஏழைகள் சுண்டல் விற்றும் டீ விற்றும் பிழைத்தனர்..அது மகிழ்ச்சி..பலர் கறுப்பு பணம் வெளியே வர இவனும் அரசியலுக்கு வர வேண்டும்

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.