என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

புதன், பிப்ரவரி 16, 2011

33 காக்டெயில் பக்கங்கள்

நகைச்சுவை

ஒருவர் இறந்துவிட்டார். அவரை அடக்கம் செய்ய அவரது உடல் சவக்குழிக்குள் இறக்கப்பட்டது. அவர்களின் வழக்கப்படி ஒவ்வொருவரும் சவக்குழிக்குள் பணம் போடவேண்டும். போட்ட பணத்துடன் அப்படியே புதைத்துவிடுவார்கள். ஆளாளுக்கு நூறு ஐநூறு ஆயிரம் என்று குழிக்குள் போட்டபடி இருக்கிறார்கள். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ஒருவன் குழிக்குள் இறங்கி அவ்வளவு பணத்தையும் அள்ளினான். மற்றவர்கள் அவனது செய்கையை விநோதமாக பார்த்தபடி இருந்தார்கள். அதில் ஒருவன் அவனை பார்த்து
"எதுக்குப்பா எல்லா பணத்தையும் எடுத்த, கீழே போடுப்பா" என்றான். இவன் எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் பணத்தை எண்ணி சட்டை பைக்குள் வைத்தபடி
"எல்லோரும் நல்லா கேட்டுக்கங்க....நம்ம வழக்கப்படி பொணத்த புதைக்கையில பணம் போட்டு பொதைக்கணும்."
"அது எல்லோருக்கும் தெரியும்.நீ ஏன் அந்த பணத்த எடுத்து பாக்கெட்டுல போட்டுக்கிட்டே?"
"இருங்க சொல்றேன்.....அந்த பணத்த எண்ணிப்பார்த்தேன். மொத்தம் இருபத்து நாலாயிரம் ரூபா இருந்துச்சு....நான் என் பங்குக்கு ஒரு ஆயிரம் ரூபா போடலாம்ன்னு நினைச்சேன். ஆனா பணம் எடுத்ததுக்கு வரல....அதனால...."
"அதனால?"
"இந்த இருபத்து நாலாயிர ரூபாயை நான் எடுத்ததுக்கு அதுக்கு பதிலா இருபத்து அஞ்சாயிரம் ரூபாய்க்கு செக் எழுதி குழிக்குள் போட்டுடுறேன்" என்ற படி செக் எழுதி பிணத்தின் மேல் போட்டான்.

=====================================
ஒரு கவிதை

குடியை கெடுப்பது 
மட்டும் குடியல்ல...
குடியை வாழவைப்பதும் 
குடிதான்- ஆம்....
பல குடியை கெடுத்து 
சில குடியை வாழவைக்கிறதே......


=======================================

ஒரு விளக்கம்


'ஆவின் பால்' இன்று பலரால் உச்சரிக்கப்படும் வார்த்தை. அதில் "ஆவின்" என்பது ஆங்கில வார்த்தை என்றே பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அனால் ஆவின் என்பது சுத்தமான தமிழ் வார்த்தை என்று உங்களுக்கு தெரியுமா?
தமிழ் மொழியில் ஒரேழுத்து வார்த்தைகள் என்று ஒரு வகை உண்டு. என்றால் பசு.
ஆ-வின் பால் என்றால் பசுவின் பால் என்று அர்த்தம்.

===========================================

ஒரு குறும்படம்

சக பதிவர்களான எடக்கு மடக்கு வலைப்பதிவை சேர்ந்த ஆர்.கோபி, லாரன்ஸ் இருவரும் வெளிநாட்டில் நடக்கும் மோசடியை மையக்கருவாக வைத்து சித்தம் என்ற குறும்படத்தை எடுத்திருக்கிறார்கள். அந்த குறும்படத்தின்  சுட்டி கீழே...



பார்த்துவிட்டு உங்களின் கருத்துக்களை அவர்களின் வலைத்தளத்தில் சொல்லுங்களேன்.

டிஸ்கி: இதில் கவிதையும், விளக்கமும் மீள்பதிவு

வலைச்சரத்தில் என் இன்றைய அறிமுகங்கள்......

அப்படியே அங்கேயும் போயி பார்த்துட்டு வாங்க பாஸ்....





Post Comment

இதையும் படிக்கலாமே:


33 கருத்துகள்:

  1. ஆவின் விளக்கமும், செக் ஜோக்கும் கலக்கல்.அறிமுகம் அருமை.. புதுசா இருக்கு.. போய் பார்க்கறேன். இந்த மாதிரி புதுசா அறிமுகப்படுத்தறதுதான் சூப்பர். வாழ்த்துக்கள்+ நன்றிகள்

    பதிலளிநீக்கு
  2. போடு சீபியின் கழுத்தில ஒரு வெட்டு...

    பதிலளிநீக்கு
  3. இன்னைக்கு மிலாடி நபி.. ஆன்லைன் ல கூட்டம் கம்மியாத்தான் இருக்கு... போஸ்ட் போடலாமா? வேணாமா?ன்னு யோசனை பண்ணிட்டு இருந்தேன். நீங்க போட்டுட்டீங்க.. வெரிகுட்

    பதிலளிநீக்கு
  4. நல்ல நகைச்சுவையுங்க.. அதோட தமிழ் விளக்கம் இன்னும் அருமை...

    பதிலளிநீக்கு
  5. ம.தி.சுதா said...

    போடு சீபியின் கழுத்தில ஒரு வெட்டு...

    ஏன் இந்த கொலை வெறி.. நான் யார் வம்புக்கும் போறதே இல்லையே சுதா..

    பதிலளிநீக்கு
  6. சீபி நம்ம ஊரிலும் இன்னிக்கு விடுமுறை தான்... நமக்கு ஒண்லைன் தான்..

    பதிலளிநீக்கு
  7. ஃஃஃஃஃஏன் இந்த கொலை வெறி.. நான் யார் வம்புக்கும் போறதே இல்லையே சுதா..ஃஃஃஃ

    அது தான் நம்மளுக்கு பிரச்சனை சும்மாவாவத சிண்டணும் இல்லின்னா உறக்கமே வருகுதில்லை...

    பதிலளிநீக்கு
  8. ம.தி.சுதா said...

    ஃஃஃஃஃஏன் இந்த கொலை வெறி.. நான் யார் வம்புக்கும் போறதே இல்லையே சுதா..ஃஃஃஃ

    அது தான் நம்மளுக்கு பிரச்சனை சும்மாவாவத சிண்டணும் இல்லின்னா உறக்கமே வருகுதில்லை...

    இருடி.. உங்களை திட்டி ஒரு பதிவு போடறேன்

    பதிலளிநீக்கு
  9. அ என்றால் பசு.

    ...ஆ என்றால் பசு...

    ....சித்தம் என்ற குறும்படம் சென்ற வாரம் பார்த்தேன்... மிகவும் அருமையாக வந்து உள்ளது. அதை குறித்து உங்கள் பதிவில் பகிர்ந்து கொண்டுள்ளதை பாராட்டுகிறேன். சக பதிவரை, உற்சாகப்படுத்தும் செயல் இது.

    பதிலளிநீக்கு
  10. அண்ணே அ என்றால் அல்ல ஆ என்றால் தான் பசுன்னு நெனைக்கிறேன் ...........எல்லாம் தூளு கலக்குங்க

    பதிலளிநீக்கு
  11. கவிதைக்கு எதிர்ப்பு..ஆவினுக்கு முழு ஆதரவு!

    பதிலளிநீக்கு
  12. எங்கள் சித்தம் குறும்படத்தை பற்றி உங்கள் வலையில் எழுதலாமா என்று நீங்கள் பின்னூட்டத்தில் கேட்டபோது மகிழ்ச்சியாக இருந்தது... உடனே சரி என்றேன்...

    இப்போது நீங்கள் சொன்னது போல், இந்த பதிவில் அது பற்றி எழுதி இருக்கிறீர்கள்...

    இது போன்ற சக வலைப்பதிவர்கள் / தோழமைகளின் முயற்சியை ஊக்குவிக்கும் உங்களை போன்றவர்களின் ஆதரவே எங்களின் பெரிய பலம்...

    இது பற்றி நம் சக வலை தோழி சித்ராவும் குறிப்பிட்டு சொன்னதற்கு எங்களின் மனமார்ந்த நன்றி...

    நண்பர்கள் அனைவரும் இந்த குறும்படத்தை கண்டு, தங்களின் கருத்தை பகிரலாம்... அவரவர்களின் நண்பர்களுக்கும் ஃபார்வர்ட் செய்ய சொல்லி, பார்த்து விட்டு கருத்து சொல்ல சொல்லலாம்...

    ரஹீம் கஸாலி பாய்... சித்தம் குறும்படத்தை பற்றி குறிப்பிட்டமைக்கு உங்களுக்கு மீண்டுமொரு முறை நன்றி கூறி கொள்கிறேன்...

    பதிலளிநீக்கு
  13. ஜோக் கதை நல்லா இருந்தது . புதியவர்களின் அறிமுகம் ஒரு நல்ல முயற்சி ரஹீம். இதுவரை தங்களை " பிரபல பதிவர்கள்" என்று எண்ணிக்கொண்டு பந்தாபண்ணிய "முன்னவர்களின் முகத்தில் கரி பூசப்பட்டது நல்ல தொடக்கம். என்றும் புதியவர்களை ஆதரிப்போம்.

    பதிலளிநீக்கு
  14. அந்த செக் ஆசாமி நீங்கதானே

    பதிலளிநீக்கு
  15. ஆவின் விளக்கம் அருமை

    பதிலளிநீக்கு
  16. செக் ஜோக்கும் கலக்கல். புதுசா இருக்கு.. இந்த மாதிரி புதுசா அறிமுகப்படுத்தறதுதான் சூப்பர். வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  17. நல்ல நகைச்சுவை,ஆவின் பால் விளக்கம் புதுசு.

    பதிலளிநீக்கு
  18. நல்ல நகைச்சுவை பசுவின் பால் சூப்பர் விளக்கம்.

    பதிலளிநீக்கு
  19. நண்பா கலக்கல் காக்டெயில் வலைசரத்திலும் கலக்குகிறீர்கள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  20. இங்க எல்லாமே கலக்கல்! அங்க? இதோ வர்றேன்!!

    பதிலளிநீக்கு
  21. வழக்கம் போல் இன்றைய தொகுப்பும் அருமை...

    பதிலளிநீக்கு
  22. ஜோக் மற்றும் சூப்பர் காக்டெயில் கலவை

    பதிலளிநீக்கு
  23. அந்த செக் ஜோக் சூப்பர் சார்..

    பதிலளிநீக்கு
  24. என்னதான் வலைச்சரத்தில் பிஸியாக இருந்தால் கூட இப்படி பண்ணகூடாது தலைவா..
    நம்ம கவிதைவீதிப் பக்கம் வந்துப்போங்க..

    பதிலளிநீக்கு
  25. காக்டெயில் சூப்பர், வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தியதற்கு மிகவும் நன்றி நண்பா

    பதிலளிநீக்கு
  26. வானவில் பக்கங்கள்ன்னு இருந்துச்சு... மாத்திட்டீங்களா... இருந்தாலும் ரெண்டு தலைப்புமே மொக்கையா இருக்கு... புதுசா ஏதாவது யோசிங்க...

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.