என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வியாழன், செப்டம்பர் 29, 2011

31 கலைஞர் முதல்வராக உதவிய எம்.ஜி.ஆர்.




தி.மு.க., வின் வெற்றிக்கு எம்.ஜி.ஆரும் ஒரு காரணம் என்று அறிந்திருந்த அண்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரிடம் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டு ஆள் அனுப்பினார்.. எனக்கு ஒன்றும் வேண்டாம் என்று மறுத்த எம்.ஜி.ஆர் ஒரு வினோதமான கோரிக்கையை துண்டு சீட்டில் எழுதி அதை அண்ணாவிற்கு கொடுத்துவிட்டார் என்று முந்தைய பதிவில் சொல்லியிருந்தேன் அல்லவா? (அதை படிக்காதவர்கள் படித்துவிட்டு வாருங்கள்...ஒரு புரிதலுக்காக).....

அதில்...அமைச்சரவையில் தினத்தந்தி அதிபர் சி.பா.ஆதித்தனாரை சேர்க்கவேண்டாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அண்ணாவும் எம்.ஜி.ஆரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு ஆதித்தனாருக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்காமல் சபாநாயகராக்கினார்.



ஆட்சிக்கு வந்த இரண்டே வருடங்களில் தொண்டையில் ஏற்பட்ட புற்று நோயின் காரணமாக பிப்ரவரி  3-ஆம் தேதி 1969 ஆம் ஆண்டு மறைந்தார். அண்ணாவிற்கு பின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்தது.


அண்ணாவிற்கு அடுத்த நிலையில் இருந்த நாவலர் நெடுஞ்செழியன் தற்காலிக முதல்வராக இருந்தார்.அதனால், அவரே முதல்வராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்ற பேச்சு கிளம்பியது. கலைஞரும் அப்படித்தான் நினைத்தார். ஆனால், இரண்டாம் கட்ட தலைவர்களான கே.ஏ.மதியழகன், அன்பில் தர்மலிங்கம், மன்னை நாரயணசாமி, சத்தியவாணி முத்து, ப.உ.சண்முகம், ஆதித்தனார், கோவிந்தசாமி, சாதிக் பாட்சா, நாஞ்சில் மனோகரன், கோவை செழியன் போன்றோரின் ஆதரவு கலைஞருக்கே இருந்தது. தி.மு.க.,தொண்டர்களும் கலைஞரே முதல்வராக வரவேண்டும் என்று விரும்பினர்.

அண்ணாவின் இடத்தை பூர்த்தி செய்யக்கூடிய ஆற்றலும், திறமையும் கலைஞருக்குத்தான் இருக்கிறது என்று பெரியாரும் தன் கருத்தை தெரிவித்தார். ஆனால்,இதற்கெல்லாம் ஒரு படி மேலே போன எம்.ஜி.ஆர்., அடுத்த முதல்வர் யார் என்ற பேச்சு வந்ததும் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அனைவரின் கருத்தையும் கேட்டார். பெரும்பான்மை எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு கலைஞருக்கு இருப்பது எம்.ஜி.ஆருக்கு புரிந்து போனது. முடிவெடுக்காமல் இருந்த ஒரு சில எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவையும் கலைஞர் பக்கம் திருப்பினார் எம்.ஜி.ஆர்., அதற்காக அனைத்து எம்.எல்.ஏ.,க்களையும் தனது ராமாவரம் தோட்டத்திற்கு அழைத்து விருந்து வைத்த எம்.ஜி.ஆர்., கலைஞர்தான் அடுத்த முதல்வர் ஆகவேண்டும் என்ற தன் விருப்பத்தையும் தெரிவித்தர்.


அடுத்ததாக,தன் விருப்பத்தையும், எம்.எல்.ஏ.,க்களின் விருப்பத்தையும் கலைஞரிடம் தெரிவித்தார் எம்.ஜி.ஆர்.

கலைஞரும், என்.வி.நடராஜன், ப.உ.சண்முகம், கோவிந்தசாமி ஆகியோரும் நாவலரிடம் கட்சியினரின் விருப்பத்தை தெரிவித்தனர். ஆனாலும், நான்தான் முதல்வர் என்று பிடிவாதம் பிடித்தார் நாவலர் நெடுஞ்செழியன்.

என்ன வரலாறு ரூட் மாறுகிறதா? சரி மீண்டும் எம்.ஜி.ஆர்.,பக்கம் வந்துவிடுவோம். எப்படியும் செங்கோவி இதைப்பற்றி ஒரு கேள்வி கேட்பார்.அப்போது இதைப் பற்றி விரிவாக அலசிவிடுவோம்.

ஒருவழியாக முதல்வர் பொறுப்பேற்றார் கலைஞர். அதன் பிறகு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் தி.மு.க.சார்பில் 1969 ஏப்ரல் மாதம் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட எம்.ஜி.ஆர். பேசிய பேச்சு குறிப்பிடத்தக்கது.
அண்ணா மறைவிற்கு பின் யார் முதல்வராக வரவேண்டும் என்று பெரும்பாலானோரிடம் பேசியபோது கலைஞர்தான் அடுத்த முதல்வர் என்று எல்லோரும் தெரிவித்தனர். அதன்பின் நானும் நீங்கள்தான் முதல்வர் பொறுப்பை ஏற்க்கவேண்டும் என்று கலைஞரிடம் வற்புறுத்தினேன். இத்தனைக்கு பிறகும் கலைஞர் சம்மதிக்கவில்லை. முரசொலி மாறனை எங்களிடம் பேச அனுப்பிவைத்தார் கலைஞர். கலைஞர் முதல்வர் பதவி வேண்டாம் என்று சொல்கிறார். அவரை தொந்தரவு செய்யாதீர்கள் என்றார் மாறன்.
இது கட்சிக்காக, மக்களுக்காக எடுக்கப்பட்ட முடிவு என்று சொல்லி கலைஞரை முதல்வராக சம்மதிக்க வைத்தோம் என்றார் எம்.ஜி.ஆர்.

முதல்வரானதும் அமைச்சரவையில் சிறிய மாற்றத்தை கொண்டுவந்தார் கலைஞர். தனக்கு முதல்வர் பதவி இல்லையென்றதும் பிணக்கு ஏற்பட்டு அமைச்சர் பதவி வேண்டாம் என்று ஒதுங்கிவிட்டார் நாவலர். அதானால், புதிதாக நான்கு அமைச்சர்களை நியமித்தார் முதலமைச்சரான கலைஞர்.
அதில் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது எம்.ஜி.ஆருக்கு.......

இன்னும் வ(ள)ரும்........


Post Comment

இதையும் படிக்கலாமே:


31 கருத்துகள்:

  1. அடுத்ததாக,தன் விருப்பத்தையும், எம்.எல்.ஏ.,க்களின் விருப்பத்தையும் கலைஞரிடம் தெரிவித்தார் எம்.ஜி.ஆர்.//
    எம்.ஜி.ஆர் காலில் விழுந்து கதறியும்,எதிர்ப்பாளர்களை அடியாட்கள் வைத்து மிரட்டியும்தான் வாங்கினார் கருணாநிதி..ஆதாரம் கண்ணதாசன் எழுதிய நூல்களில் நிறைய இருக்கிறது...உங்களுக்கு எங்கே இருந்து இந்த ஆதாரங்கள் கிடைத்தன..?கருணாநிதி எழுதிய நெஞ்சுக்கு நீதி யில் இருந்தா..?;-))))))))))))))))

    பதிலளிநீக்கு
  2. ஆனாலும், நான்தான் முதல்வர் என்று பிடிவாதம் பிடித்தார் நாவலர் நெடுஞ்செழியன்.//
    அண்ணாவின் விருப்பமும்,தொண்டர்களின் விருப்பமும் நெடுஞ்செழியன் தான்...அண்ணா இறந்த பின் அண்ணா போலவே குரலை கரகரன்னு மாற்றிக்கொண்டு எல்லாம் தொண்டர்களை ஏமாற்றி வந்தவர்தான் கலைஞர்.அண்ணா இருக்கும் வரை தி.மு.க தொண்டர்களுக்கு அண்ணா வையும்,எம்.ஜி.ஆரையும் தான் தெரியும்..கலைஞர் அப்போது ஒரு பேச்சாளர்,இரண்டாம் கட்ட தலைவர்களுல் ஒருவர் அவ்வளவுதான்...நிறைய கட்டுக்கதைகள் விட்டிருக்கிறீர்கள்

    பதிலளிநீக்கு
  3. நடமாடும் பல்கலைகழகம் நாவலருக்கு கருணாநிதி கொடுத்தது குச்சி ஐஸ் என்றால் ஜெயா கொடுத்தது உதிர்ந்த ரோமம் என்ற பதவி.இந்த பகுத்தறிவாளர்களை நினைத்தால் புல்லரிக்கிறது.

    பதிலளிநீக்கு
  4. Blogger ’’சோதிடம்’’ சதீஷ்குமார் சொன்னது.....
    இதில் கட்டுக்கதை விடுவதற்கு ஒன்றுமில்லை. நிறைய புத்தகங்களின் உதவியுடன் தான் இது எழுதப்படுகிறது.
    முன்னரே சொன்னதுபோல் நான் ஒரு தொகுப்பாளன் மட்டுமே.....என் சொந்த விருப்பு வெருப்பு இதில் இல்லை.அதே நேரம் சொந்தக்கருத்தை நான் எழுதவில்லை. உங்களுக்கு கலைஞர் மீது காழ்ப்புணர்ச்சி. அதுதான் ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  5. நெஞ்சுக்கு நீதியிலிருந்து இதை எழுதவில்லை. அப்படி எழுதினால் அது ஒரு பக்கமாக போய்விடும் என்று அறியாதவனல்ல...அதே நேரம், கண்ணதாசனின் புத்தகங்களை பற்றி சொல்வதற்கில்லை. பாடல்கள் எழுத பயன்படுத்தவேண்டிய கற்பனை வளத்தை வரலாற்றிலும் காட்டிய கவிஞர் அவர்.

    இன்னும் இந்த கட்டுரைக்கான ஆதாரமோ, மூலமோ வேண்டுமானால்...கிழக்கு பதிப்பகத்தின் திராவிட இயக்க வரலாறு, தினத்தந்தி வெளியீடான வரலாற்று சுவடுகள் போன்றவற்றை படித்து தெரிந்துகொள்ளவும்.

    பதிலளிநீக்கு
  6. ///கிழக்கு பதிப்பகத்தின் திராவிட இயக்க வரலாறு, ////

    சரியான வழிகாட்டியைத் தேர்ந்தெடுத்து இருக்கிறீர்கள்....

    ஆனால், சதீஸ் அண்ணன் சொல்வதுபோல் இல்லாமல் இல்லை...

    மிரட்டல் விடுத்தது, எம்.ஜி,ஆரிடம் தூது இவையெல்லாம் நடந்ததுதான்!

    #வரலாற்றில் பதியாத பக்கங்கள்....
    அதற்காக, "வனவாசம்" புத்தகத்தையும் லேசில் விடமுடியாது...
    சில அத்தியாயங்கள், உரியவர்களே ஒத்துக்கொண்டுள்ளனர்.

    பதிலளிநீக்கு
  7. வெளங்காதவன் said...

    ///கிழக்கு பதிப்பகத்தின் திராவிட இயக்க வரலாறு, ////

    சரியான வழிகாட்டியைத் தேர்ந்தெடுத்து இருக்கிறீர்கள்....

    ஆனால், சதீஸ் அண்ணன் சொல்வதுபோல் இல்லாமல் இல்லை...

    மிரட்டல் விடுத்தது, எம்.ஜி,ஆரிடம் தூது இவையெல்லாம் நடந்ததுதான்!

    #வரலாற்றில் பதியாத பக்கங்கள்....
    அதற்காக, "வனவாசம்" புத்தகத்தையும் லேசில் விடமுடியாது...
    சில அத்தியாயங்கள், உரியவர்களே ஒத்துக்கொண்டுள்ளனர்.

    பதிலளிநீக்கு
  8. வெளங்காதவன் said...

    ///கிழக்கு பதிப்பகத்தின் திராவிட இயக்க வரலாறு, ////

    சரியான வழிகாட்டியைத் தேர்ந்தெடுத்து இருக்கிறீர்கள்....

    ஆனால், சதீஸ் அண்ணன் சொல்வதுபோல் இல்லாமல் இல்லை...

    மிரட்டல் விடுத்தது, எம்.ஜி,ஆரிடம் தூது இவையெல்லாம் நடந்ததுதான்!

    #வரலாற்றில் பதியாத பக்கங்கள்....
    அதற்காக, "வனவாசம்" புத்தகத்தையும் லேசில் விடமுடியாது...
    சில அத்தியாயங்கள், உரியவர்களே ஒத்துக்கொண்டுள்ளனர்.

    பதிலளிநீக்கு
  9. தொண்டர்கள் செல்வாக்கோ, மக்கள் செல்வாக்கோ ஒரு போதும் நாவலருக்கு இருந்ததில்லை.அவர் திராவிட இயக்கத்தின் தலைசிறந்த பேச்சாளர். அவ்வளவே...அப்படி அவருக்கு செல்வாக்கு இருந்திருக்குமேயானால், தி.மு.க.விலிருந்து அவர் விலகி ஆரம்பித்த மக்கள் தி.மு.க.,என்ற இயக்கத்தை தொடர்ந்து நடத்தியிருப்பார். ஆரம்பித்த மூன்றே வருடத்தில் எடுபடாமல் அண்ணா.தி.மு.க.,வில் தன் கட்சியை இணைத்திருக்க மாட்டார்.
    அண்ணா, எம்.ஜி.ஆர்., மறைவிற்கு பின் தற்காலிக முதல்வராக இருந்த அவரால் தன் பதவியை தக்கவைத்துக்கொள்ள முடியவில்லையே....எம்.ஜி.ஆர்.காலத்தில் ஜெயலலிதாவை தீவிரமாக எதிர்த்த அவர், பின்னாளில் அதே ஜெயாவுடன் இணைந்து பதவியை பெற்றார். உதிர்ந்த ரோமம் என்று ஜெயாவால் புகழப்பெற்ற நாவலர்,தன் சுயமரியாதையை இழந்து ஜெயாவுடன் ஒட்டிக்கொண்டிருந்தார் என்பதுதானே வரலாறு

    பதிலளிநீக்கு
  10. நெடுஞ்செழியன் நிறையப் பேசுவாரே தவிர மக்கள் கூட்டத்தை ஈர்க்கும் பேச்சாளராக என்றும் இருந்ததில்லை. அப்படி இருந்திருந்தால் அவர் கட்சி பிழைத்துப் போயிருக்கும். கலைஞர் தன் அமைச்சரவையில் ஆதித்தனாருக்கு இடம் அளித்தது தானே எம்.ஜி.ஆரின் அதிர்ச்சி..?

    பதிலளிநீக்கு
  11. //எப்படியும் செங்கோவி இதைப்பற்றி ஒரு கேள்வி கேட்பார்.//

    விட்டுடுவமா?

    சண்டை ஆரம்பிச்சிடுச்சு போல..வெரிகுட்.

    பதிலளிநீக்கு
  12. மாப்ஸ் !!!..எது நடந்ததோ !!!
    அது நன்றாக நடந்தது!!!
    பணமும் ,குரோதமும் ,சூழ்ச்சியும் .
    தான் முடிவை முடிவு செய்தது .
    ஆனாலும் யார் ?????
    யோக்கியன் ..?????
    ஆ-யோக்கியன் என்பது !!
    எவனுக்கும் தெரியாது !!!!!!
    நல்ல மனுஷன் யாரும்!!!
    ஜெய்க்க முடியாது !

    பதிலளிநீக்கு
  13. மாப்ஸ் !!!..எது நடந்ததோ !!!
    அது நன்றாக நடந்தது!!!
    பணமும் ,குரோதமும் ,சூழ்ச்சியும் .
    தான் முடிவை முடிவு செய்தது .
    ஆனாலும் யார் ?????
    யோக்கியன் ..?????
    ஆ-யோக்கியன் என்பது !!
    எவனுக்கும் தெரியாது !!!!!!
    நல்ல மனுஷன் யாரும்!!!
    ஜெய்க்க முடியாது !

    பதிலளிநீக்கு
  14. ஆனாலும் போட்டோ வில்
    போஸ் குடுக்க நம்ம -எக்ஸ்.சி ம்.
    மிஞ்ச முடியாது ,

    பதிலளிநீக்கு
  15. ஆனாலும் போட்டோ வில்
    போஸ் குடுக்க நம்ம -எக்ஸ்.சி ம்.
    மிஞ்ச முடியாது ,

    பதிலளிநீக்கு
  16. வரலாறு தொடரட்டும்..வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  17. வரலாறு தொடரட்டும்..வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  18. //ரஹீம் கஸாலி said... 5

    நெஞ்சுக்கு நீதியிலிருந்து இதை எழுதவில்லை. அப்படி எழுதினால் அது ஒரு பக்கமாக போய்விடும் என்று அறியாதவனல்ல...அதே நேரம், கண்ணதாசனின் புத்தகங்களை பற்றி சொல்வதற்கில்லை. பாடல்கள் எழுத பயன்படுத்தவேண்டிய கற்பனை வளத்தை வரலாற்றிலும் காட்டிய கவிஞர் அவர்.

    இன்னும் இந்த கட்டுரைக்கான ஆதாரமோ, மூலமோ வேண்டுமானால்...கிழக்கு பதிப்பகத்தின் திராவிட இயக்க வரலாறு, தினத்தந்தி வெளியீடான வரலாற்று சுவடுகள் போன்றவற்றை படித்து தெரிந்துகொள்ளவும்.//

    நல்ல காமெடி பண்றீங்க. நீங்க மேலே குறிப்பிட்டுள்ள படைப்புகளும் ஒருதலை பட்சமானதுதான்.
    ராமாயணத்த பத்தி எழுதினா ராமனையும் அவர்கள் ஆதரவாளர்களையும் நல்லவங்களா காட்டத்தான் ஆசிரியர் விரும்புவார்...அதுபோலத்தான் "திராவிட இயக்க வரலாறு" எழுதினா அதற்க்கு ஆதரவாளரான கலைஞரை நல்லவரா காட்டுவதும்.
    கண்ணதாசன் எழுதினா அது கற்பனை. யார அமைச்சர் ஆக்க கூடாதுன்னு எம்.ஜி.ஆர். சொன்னாரோ அவர் பத்திரிகை எழுதினா அது ஆதாரமா?
    அது ஏன் ஒரு தலை பட்சமா இருக்ககூடாது?. கொஞ்சம் யோசிங்க.

    எனக்கு எந்த வரலாறும் தெரியாது. இருப்பினும் நல்ல ஆராய்ச்சியாளன் அல்லது உங்கள் மொழியில் சொன்னால் தொகுப்பாளன் அனைத்து கருத்துக்களையும் கருத்தில் கொண்டே எழுதவேண்டும். நீங்கள் கலைங்கருக்கு சாதகமாக ஒருதலை பட்சமான கருத்துக்களை முன் மொழிவதாகவே எனக்கு தெரிகிறது.
    இருவேறு கருத்துக்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து எழுதுங்கள் என்பதே இந்த பின்னூட்டத்தின் நோக்கம்.

    பதிலளிநீக்கு
  19. ,// இரண்டாம் கட்ட தலைவர்களான கே.ஏ.மதியழகன், அன்பில் தர்மலிங்கம், மன்னை நாரயணசாமி, சத்தியவாணி முத்து, ப.உ.சண்முகம், ஆதித்தனார், கோவிந்தசாமி, சாதிக் பாட்சா, நாஞ்சில் மனோகரன், கோவை செழியன் போன்றோரின் ஆதரவு கலைஞருக்கே இருந்தது. //


    இவங்கள்ள பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஆதரவு நடமாடும் பல்கலைக் கழகத்துக்குத்தான்னும், அதையெல்லாம் கலைஞர் பக்கம் மாத்தினது எம்ஜியார் தான்னும் பழைய கட்சிக் காரங்க சொல்றாங்க

    பதிலளிநீக்கு
  20. ஆதித்தனார், எம்ஜியாருக்கு எப்போதுமே ஆதரவாக இருந்து வந்தவர். திடீரென இப்படி ஒரு குண்டப் போடுறீங்களே. ரெண்டு பேரும் உயிரோட இல்லைங்கற தைரியமா?

    பதிலளிநீக்கு
  21. //இருவேறு கருத்துக்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து எழுதுங்கள் என்பதே இந்த பின்னூட்டத்தின் நோக்கம்.//
    விருப்பு வெறுப்பு இல்லாமல் , எந்த பக்கமும் சாராமல், வரலாற்றை பதிக்கும் பழக்கம் தமிழகத்தில் கிடையாது. எந்த ஒரு செய்தித்தாளாவது நடு நிலையுடன் செய்தியை சொல்கிறதா? தினமணி என்று நான் சொன்னால், அது என் விருப்பமாக மட்டுமே இருக்கும். அதே போல தான் மற்றவையும்.

    கடந்த அறுபது வருடங்களின் உண்மைகள் எப்போதுமே வெளிவராது என்று தான் நான் நினைக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  22. ///நெஞ்சுக்கு நீதியிலிருந்து இதை எழுதவில்லை. அப்படி எழுதினால் அது ஒரு பக்கமாக போய்விடும் என்று அறியாதவனல்ல...அதே நேரம், கண்ணதாசனின் புத்தகங்களை பற்றி சொல்வதற்கில்லை. பாடல்கள் எழுத பயன்படுத்தவேண்டிய கற்பனை வளத்தை வரலாற்றிலும் காட்டிய கவிஞர் அவர்.///
    மேற்கண்ட வார்த்தைகளில் உங்கள் ஒரு பக்கசார்பு தெளிவாகிறது.
    அரவரசன்.

    பதிலளிநீக்கு
  23. கருணாநிதி திட்டமிட்டு காய் நகர்த்தி சூழ்ச்சியால் நெடுஞ்செழியனை ஓரம் கட்டி திமுகவை கைபற்றியது வரலாறு. நீங்கள் கருணாவை நல்லவராக காட்ட புதிய வரலாறு எழுதாதீர்கள். நக்கினம் சிவம்

    பதிலளிநீக்கு
  24. பாவம் நெடுஞ்செழியன் அண்ணாவாலேயே கைகாட்டப்பட்டும் சூழ்ச்சி செய்ய தெரியாததால் கருணாவால் ஓரம்கட்டப்பட்டார். ஒருவேளை நெடுஞ்செழியன் தலைமை ஏற்றிருந்தால் திமுக ஒரு ஊழல் இல்லாத ஒரு நல்ல கட்சியாக இருந்திருக்கும். நக்கினம் சிவம்

    பதிலளிநீக்கு
  25. தமிழகம் இவ்வளவு தாழ்ந்த அரசியலை சந்தித்திருக்காது. வாரிசு அரசியல் தோன்றி இருக்காது. என்ன செய்வது தமிழர்களின் தலை எழுத்து திமுக வில் கருணாவின் வரவும், தலைமையும்.நக்கினம் சிவம்

    பதிலளிநீக்கு
  26. அன்பு நண்பரே
    ஒரே ஒரு செய்தி , அண்ணா இறந்த தேதி பிப்ரவரி மூன்று தானே

    மற்றபடி உங்களின் தொகுப்பில் ஒரு அழகான நடையும் சுவையும் இருந்தது , ஒவ்வொருவரும் ஒவ்வொருவரை சார்ந்து சார்பு நிலையிலிருப்பதினால் இது மாதிரியான பின்னூட்டங்களில் ஏதும் ஆச்சர்யப்பட அதிசயிக்க ஒன்றும் இல்லை

    தொடருங்கள் உங்களின் பதிவை

    பதிலளிநீக்கு
  27. தவறான தகவல்களை தருகிறீர்கள்.""நல்ல நேரம்"" சதீசுடன் நான் உடன்படுகிறேன்.
    வனவாசம் படியுங்கள்.கருணாநிதியின் வண்டவாளம் அனைத்தையும் தண்டவாளத்தில் ஏற்றி இருப்பார்.வனவாசத்தை மிஞ்சிய ஒரு அரசியல் வரலாறு தமிழில் எதுவும் இல்லை.உள்ளதை உள்ளபடி தெளிவாக எழுதி இருப்பார்.தி.மு.க.வை காட்டுமிராண்டிக் கூட்டம் என்று அப்பட்டமாக எழுதி இருப்பார்,
    அதில் இருக்கும் ஒவ்வொரு வரியும் உண்மை.தி.மு.க வின் வரலாறு தெரிய வேண்டுமானால்''வனவாசம்"",""நான் பார்த்த அரசியல்"" என்ற கவிஞர் கண்ணதாசன் எழுதிய இரண்டு புத்தகங்களையும் படியுங்கள்.

    பதிலளிநீக்கு
  28. நானும் அண்ணா இறந்தவுடன் முதலமைச்சர் பதவிக்காக நடந்த போராட்டத்தை அந்த காலத்தில் அன்றாடம் செய்தித்தாள்கள் படித்துப் புரிந்துக்கொண்டது என்னவென்றால் தினத்தந்தி ஆதித்தனாரின் பணபலத்தினாலும் எம் ஜி ஆரின் ஆதரவினாலும்தான்
    கருணாநிதி முதலமைச்சர் ஆனார்.அந்தக்காலக் கட்டத்தில் அரசியல் நிகழ்வுகளை நேரிடையாக கவனித்தவர்களும் இது புரியும்.எம் ஜி ஆர் எந்த சமயத்திலும் கலைஞரிடம் முதல்வர் பதவியை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கெஞ்சியதில்லை.இவர்தான் ராமாவரத்திர்க்கு அலைந்தார். நரித்தனமாக
    பணத்தை காண்பித்து எம் எல் ஏக்களை தன பக்கம் இழுத்தார்.கட்சியின் பெரும்பான்மை ஆதரவு தன்பக்கம் என்று எம் ஜி ஆரை நம்ப வைத்தார்.குறுக்கு வழியில் சாதித்துக்கொண்டார்.நாவலரோ நாம்தான் இரண்டாம் இடத்தில் இருக்கும் நம்மை தேடி பதவி தானே வரும் காத்திருந்து
    ஏமாந்தார்.கருணாநிதி சொல்லுகிறார் என்றுமே தான் முதலமைச்சர் பதவியை நாடி போனதில்லை என்று.அத்தனையும் பொய்.அப்படி உண்மையிலேயே அவர் தியாக சீலர் என்றால் கட்சி தேர்தல் வரும்போது நாவலருக்கு செயலாளர்
    பதவியஈ விட்டுக்கொடுத்திருக்கலாமே.நாவலருக்கு செக் வைக்க வேண்டும் என்று இல்லாத தலைவர் பதவியை உருவாக்கி தானே அந்த பதவியுலும் அமர்ந்து இன்றுவரை கோலேச்சுகிறார்.இவருக்கா பதவி ஆசை இல்லை?

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.