என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

புதன், செப்டம்பர் 21, 2011

10 ஜெயலலிதா, எம்.ஜி.ஆரின் வாரிசான வரலாறு......


எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகியை விட ஜெயலலிதாவை மக்கள் எம்.ஜி.ஆரின் வாரிசாக ஏற்றுக்கொண்டது ஏன்? என்ற கேள்வியை கொடுத்து அத்ற்கான பதிலை ஒரு பதிவாக வெளியிடுங்களேன் என்று நண்பர் செங்கோவி கேட்டிருந்தார். இந்த கேள்வி செங்கோவி மனதில் மட்டுமல்ல.... எல்லோர் மனதிலும் இருக்கும். அதற்கான விடைதேடும் முயற்சியே இந்த பதிவு.

எம்.ஜி.ஆரின் வாரிசாக ஜெயலலிதாவை ஏற்றுக்கொண்டது பற்றி ஒரு வரியில் சொல்ல முடியாது. நீண்ட விளக்கம் கொடுத்தால் தான் விளங்கும்.

எம்.ஜி.ஆரை திருமணம் செய்துகொண்ட ஜானகி அம்மையார் சினிமாவிலிருந்து விலகி, எந்த ஒரு அரசியல் ஆர்வமும் இல்லாமல், நல்ல குடும்பத்தலைவியாக மட்டுமே விளங்கினார். எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பிறகு சிறிது காலம் முதல்வராக இருந்ததை தவிர....

ஆனால், ஜெயலலிதாவின் வளர்ச்சி அப்படிப்பட்டதல்ல....

1981-ஆம் ஆண்டு மதுரையில் ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு நடத்த தீர்மானித்தார் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். அதை சிறப்பாக நடத்தி முடிக்கும் பொறுப்பை செய்தி விளம்பரத்துறை அமைச்சராக இருந்த ஆர்.எம்.வீரப்பனிடம் ஒப்படைத்தார். அந்த மாநாட்டில் காவிரி தந்த கலைசெல்வி என்னும் நாட்டிய நாடகம் நடைபெறுவதாக இருந்தது. அந்த நாடகத்தில் நடிப்பதற்காக  சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த ஜெயலலிதாவை அழைத்துவந்தார் ஆர்.எம்.வீரப்பன். அந்த வகையில் ஜெயாவின் அரசியல் பிரவேஷத்திற்கு வித்திட்டவர் ஆர்.எம்.வி.,தான்...பின்னாளில் அது தனக்கே பெரும் ஆப்பாக முடியும் என்று தெரியாமலே....

அதன்பிறகு சுமார் ஒன்றரை வருடம் கழித்து அதாவது 1982 ஜூனில் அ.தி.மு.க.,வின் அடிப்படை உறுப்பினராக தன்னை இணைத்து கொண்டார் ஜெயலலிதா. பிறகு ஜூலையில் தான் கொண்டுவந்த சத்துணவு திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க ஒரு கவர்ச்சியான முகம் தேவைப்பட்டது எம்.ஜி.ஆருக்கு. அப்போது அவரின் நினைவிற்கு வந்தவர் ஜெயலலிதா. மேடைக்கு மேடை சத்துணவு திட்டத்தையே பேசி அத்திட்டத்திற்கு புகழ் சேர்த்ததோடு மட்டுமல்லாமல்  அந்த திட்டத்திற்கு நன்கொடையாக ரூபாய் 40,000 வழங்கினார்.

சத்திணவு திட்டத்தின் மீது ஜெ.,க்கு இருந்த அக்கறையை பார்த்த எம்.ஜி.ஆர். அவரை சத்துணவு திட்ட உயர்மட்டக்குழுவிலும் இடம் கொடுத்தார். தொடர்ந்து இவரை கவனித்து வந்த எம்.ஜி.ஆர்., 1983-இல் கழக கொள்கை பரப்பு செயலாளராக நியமித்தார். கொ.ப.செ., யான ஜெயலலிதா இன்னும் தீவிரமாக தமிழகத்தை சுற்றிவந்தார். அப்படி சுற்றிய ஜெயலலிதாவிற்கு செல்லும் இடமெல்லாம் அபார வரவேற்ப்பு கொடுத்து அசத்தினர் தொண்டர்களும், லோக்கல் நிர்வாகிகளும். எம்.ஜி.ஆருக்கு அடுத்தபடியான மரியாதையை தொண்டர்கள் ஜெ.,க்கு வழங்கினர்.

அனல் தெறிக்கும் பேச்சுக்கள் மூலமும், பிரச்சாரங்கள் மூலமும் மக்களை வசீகரிக்க ஆரம்பித்தார் ஜெ. எம்.ஜி.ஆரின் உத்தரவிற்கிணங்க ஜெயலலிதாவிற்க்கு அந்த பேச்சுக்களை எழுதித்தந்தவர் வலம்புரி ஜான். ஜெ.,விடம் இருந்த பேச்சுத்திறமையையும், அபாரமான ஆங்கில, ஹிந்தி புலமையையும் கவனித்த எம்.ஜி.ஆர். இவர்தான் டெல்லி அரசியலுக்கு சரியான ஆள் என்று தீர்மானித்து ராஜ்யசாபா உறுப்பினராக்கினார். மேலும், ராஜ்யசபா அ.தி.மு.க., துணைத் தலைவராகவும் நியமித்தார். அங்கு இவர் பேசிய பேச்சுக்கள் பிரதமர் இந்திராவிடமும் பாராட்டை பெற்றது.

ஏற்கனவே ஜெயலலிதாவின் வளர்ச்சியால் பொறுமிக்கொண்டிருந்தவர்கள் மத்தியில் மேலும் பொறுமலை கிளப்பியது. கட்சியில் எத்தனையோ சீனியர்கள் இருக்கும்போது ஜெ.,க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார் எம்.ஜி.ஆர். என்ற புகைச்சலும் கிளம்பியது. நேரடியாகவே எம்.ஜி.ஆரை குற்றம் சாட்டினார் வருவாய்துறை அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம். அதனால் கோபமுற்ற எம்.ஜி.ஆர்., எஸ்.டி.எஸ்.,வசமிருந்த முக்கியத்துறைகளை பறித்துக்கொண்டு உணவுத்துறையை கொடுத்து டம்மியாக்கினார். அவரின் ஆதரவாளர்களின் பதவிகளும் பறிக்கப்பட்டது.

இதற்கெல்லாம் காரணம் ஜெ.,தான் என்று நினைத்து கடுப்பான எஸ்.டி.எஸ்., கட்சியையும், ஆட்சியையும் குறை சொன்னார். இதனால் மேலும் கோபமான எம்.ஜி.ஆர்., எஸ்.டி.சோமசுந்தரத்தை அமைச்சரவையிலிருந்தும், கட்சியிலிருந்தும் நீக்கினார்( ஜெயலலிதாவிற்கு  முக்கியத்துவம் கொடுக்கிறார் எம்.ஜி.ஆர்., என்று குற்றம் சாட்டியதால் கட்சியிலிருந்தும், அமைச்சரவையிலிருந்தும் நீக்கப்பட்ட  எஸ்.டி.எஸ்., பின்னாளில் அதே ஜெயலலிதாவின் அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராக இடம் பிடித்தது வரலாறு).

இந்த சம்பவத்திற்கு பிறகு ஜெ.,யை பற்றி எம்.ஜி.ஆரிடம் புகார் செய்ய பயந்தார்கள் மற்றவர்கள். ஆனாலும், அவரின் அசுர வளர்ச்சி மற்றவர்களின் கண்ணை உறுத்தவே செய்தது. ஜெ.,யை ஓரங்கட்ட நாள் பார்த்துக்கொண்டு இருந்தனர்.அந்த நாளும் வந்தது. ஆம்...எம்.ஜி.ஆரின் உடல் நலம் குன்றியது. சிறுநீரகக்கோளாறு, பக்கவாதம் என்று அடுத்தடுத்து  நோய் தாக்கியது. இப்படி எம்.ஜி.ஆரின் உடல் நிலை சிக்கலான சமயத்தில் அவரை பார்ப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. ஜானகி, நெடுஞ்செழியன், ஆர்.எம்.வீரப்பன், பண்ரூட்டி, ஹண்டே போன்ற மிகச்சிலரே அவரின் பக்கத்தில் அனுமதிக்கப்பட்டனர். மறந்தும் கூட ஜெயலலிதாவை அனுமதிக்கவில்லை. இது மூத்த அமைச்சர்களின் சதி என்று கண்டனம் தெரிவித்தார் ஜெ.
மேல் சிகிட்சைக்காக அமெரிக்கா அழைத்துசெல்லப்பட்டார் எம்.ஜி.ஆர்.,

அந்த நேரத்தில் பாராளுமன்றத்திற்கு தேர்தல் நடத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார் ராஜீவ்காந்தி. அப்போதே சட்டசபையயும் கலைத்துவிட்டு தேர்தல் நடத்த முடிவு செய்தனர் ஆர்.எம்.வீயும், நெடுஞ்செழியனும். அதற்கான அனுமதியையும் எம்.ஜி.ஆரிடம் பெற்றனர்.
அப்போது  சுத்தமாக ஓரங்கட்டப்பட்டிருந்தார் ஜெ.,



ஓரங்கட்டப்படுகிறோம் என்பது புரிந்துவிட்டது ஜெயலலிதாவுக்கு.  நாம் இப்படியே இருந்தால் அரசியலில் இருந்தே அப்புறப்படுத்தி விடுவார்கள் என்று சுதாரித்துக்கொண்டார் ஜெயலலிதா. உடனடியாகப் புறப்பட்டு விட்டார். இதைத்தான் அதிமுக தொண்டர்களும் எதிர்பார்த்தனர். அவர்களையும் உற்சாகம் தொற்றிக்கொண்டது… . நாடாளுமன்றத்துடன் சேர்த்து தமிழக சட்டசபைக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் இருக்கிறார். அதுவும் படுத்த படுக்கையாக. எனில், பிரசாரத்துக்கு யார் போவது? எம்.ஜி.ஆரின் இடத்தை நிரப்பப்போவது யார்? மக்களைத் திரட்டுவது எப்படி? நாம் புறப்படுவதுதான் சரியாக இருக்கும் என்று நினைத்தார் ஜெயலலிதா.அப்போது அதிமுக தலைவர்கள்  ‘ஜெயலலிதா பிரசாரம் செய்யப்போவதில்லை.’என்று பத்திரிகைகளில் பேட்டி கொடுத்திருந்தனர்.   செய்தியை படித்தார்.
கொடுத்தது யார் என்று ஓரளவு யூகிக்க முடிந்தது ஜெயாவால்...இதை ஆர்.எம்.வீ.,தான் கொடுத்திருக்க வேண்டுமென தீர்மானித்தார். அவர் அப்படி நினைக்கவும் காரணம் இருந்தது. அதாவது....

காத்திருங்கள்.... நாளை வரை......


Post Comment

இதையும் படிக்கலாமே:


10 கருத்துகள்:

  1. அன்பின் ரஹீம் - வரலாறு அழகாக எழுதப்பட்டிருக்கிறது- தொடரட்டும். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  2. சரியான கேள்வி.. நல்ல தெளிவான பதில் (நன்றி செங்கோவி) உங்களுக்கும்..

    பதிலளிநீக்கு
  3. வரலாறை எல்லோருக்கும் திரும்ப நினைவு படுத்துகிறது உங்கள் பதிவு அடுத்த பதிவிற்கு காத்து இருக்கிறோம்..

    பதிலளிநீக்கு
  4. ரஹீம்....

    இது போல வரலாற்றுப் பதிவுகள் தேவைதான்.....

    நானும் எழுத நினைத்தேன்...

    நீங்கள் ஆரம்பித்தே விட்டீர்கள்...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  5. மிகவும் அருமையான பதிவு.. அடுத்த பதிவை எதிர்பார்கிறோம்....

    பதிலளிநீக்கு
  6. தெரியாத தகவல்களை தந்திருக்கிறீர்கள். அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. ஜெயலலிதாவை எம்.ஜி.ஆரின் வாரிசாகக் கொண்டு வர திறைமறைவு திட்டம் தீட்டியவர்கள் காஞ்சி சங்கர மடம், ஆர். வெங்கட்ராமன், சோ.ராமமூர்த்தி அய்யர் முதலிய பிராமண ஆதிக்கசக்திகள்.

    பதிலளிநீக்கு
  8. இதை..இதை..இதைத் தான் எதிர்பார்த்தேன்...இப்படி விலாவரியா பதில் சொல்ல கஸாலியை விட்டா ஆளில்லை!

    நன்றி கஸாலி.

    பதிலளிநீக்கு
  9. தொடர் பதிவு அருமை. தொடரவும்.

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.