என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வெள்ளி, செப்டம்பர் 30, 2011

14 ஒரு பதிவும், சில பின்னூட்டங்களும், அதற்கான விளக்கமும்.....


கலைஞர் முதல்வராக உதவிய எம்.ஜி.ஆர்., என்று  நேற்று ஒரு பதிவிட்டிருந்தேன். அதற்கு வந்த  பின்னூட்டங்களில் சில நான் ஒருதலைபட்சமாக எழுதுவதாக வந்திருந்தது.
அதற்காக சில விளக்கங்கள் சொல்ல வேண்டியது என் கடமை.

இந்த தொடர் நண்பர் செங்கோவியின் வேண்டுகோளுக்கிணங்கவே எழுதப்படுகிறது. ஆரம்பத்தில் திராவிட இயக்கங்கள் பற்றிய பதிவு ஒன்றை எழுத சொன்னார் அவர். திராவிட இயக்கங்கள் பற்றி எழுதும் அளவிற்க்கு எனக்கு அரசியல் ஞானம் இல்லை என்று கூறி ஒதுங்கிக்கொண்டேன்.

இருந்தாலும் செங்கோவி விடவில்லை. அப்படியானால், இப்படி எழுதுங்களேன் என்று ஜெயலலிதா எம்.ஜி.ஆரின் வாரிசான வரலாறு, எம்.ஜி.ஆர்., தி.மு.க.,வில் சேர்ந்தது முதல் விலகியது வரையுள்ள வரலாறு என்று பிரித்து பிரித்து கேள்விக்கணைகளை வீசியிருந்தார். நான் அறிந்த, ஓரளவு தெரிந்த விஷயங்களை ஒட்டியே அவரின் கேள்விகள் இருந்ததால் சரி, எழுதித்தான் பார்ப்போமே என்று இறங்கிவிட்டேன்.

செங்கோவி கேட்டிருந்த கேள்விகளுக்கு என் நினைவில் இருந்த பதில்களே போதுமானதாக இருந்தாலும், இன்னும் சில விஷயங்களையும், புள்ளி விபரங்களையும் சேர்த்தால், இன்றைய இளையதலைமுறையினருக்கு பயனாக இருக்குமே என்ற எண்ணத்தில் என்னிடம் இருக்கும் சில புத்தகங்கள் உதவியுடனும், இணையத்தில் கொட்டிக்கிடக்கும் தகவல்கள் உதவியுடனும் இதை தொகுக்க ஆரம்பித்தேன்.

தப்பித்தவறிக்கூட யாருடைய சுய சரிதையிலிருந்தும் ஒரு வரியைக்கூட தொடவில்லை.காரணம், சுயசரிதை என்பதே அவர்களை பற்றி அவர்களே சில இடங்களில் பெருமையாகவும், சில இடங்களில் மிகைப்படுத்தியும் எழுதியிருப்பார்கள் என்பதால்......

அப்படி எழுதப்பட்ட சுயசரிதையிலிருந்து ஒரு விஷயத்தை எடுத்தால் அது ஒரு பக்க சார்புடையதாக வந்துவிடும் என்பதையும் நான் அறியாதவனல்ல....அதனால்தான் பொதுவானவர்களால் எழுதப்பட்டிருக்கும் புத்தகங்களிலிருந்து தகவல்களை சேகரித்து தொகுத்தேன்.

அதே நேரம் வரலாறு சம்பந்தப்பட்ட விஷயங்களை தொடுவது என்பது கத்திமேல் நடப்பதை போல என்பதால் மிக கவனமாகவே கையாண்டு வருகிறேன். இந்த தொடர் மூலம் யாரையும் உயர்த்திப்பிடிக்க வேண்டும் என்பதோ, யாரையும் தாழ்த்தி சொல்லவேண்டும் என்பதோ என் நோக்கமல்ல....அதற்காக இது  எழுதப்படவுமில்லை. வரலாற்றில் சொல்லியிருக்கும் விஷயத்தை உள்ளது உள்ளபடி பதியவே விரும்புகிறேன்.

இதில் என் விருப்பு, வெருப்பு என்பது அறவே கிடையாது என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.அதே நேரம், ஒருவருக்கு ஒரு தலைவரை பிடிக்கும், ஒரு தலைவரை பிடிக்காது என்பதால் அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் எல்லாம் என்னால் எழுதமுடியாது. ஆனாலும், நான் எழுதுவதுதான் வரலாறு என்றெல்லாம் பிடிவாதம் பிடிக்கப்போவதில்லை. என்னிடமும் சில தவறுகள் இருக்கலாம். அதை வரலாற்றின் உதவியோடு சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்ள தயாராக இருக்கிறேன்.  புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். புரிதலுக்கு நன்றி.....

நேற்றைய பதிவின் தொடர்ச்சி வரும் திங்கள் கிழமை வெளிவரும்.


Post Comment

இதையும் படிக்கலாமே:


14 கருத்துகள்:

  1. //என்னிடமும் சில தவறுகள் இருக்கலாம். அதை வரலாற்றின் உதவியோடு சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்ள தயாராக இருக்கிறேன். //

    என் பிளாக்ல நான் என்ன வேணும்னாலும் எழுதுவேன் உனக்கு பிடிக்கலன்னா நீ வராதே என்று கூறி கொள்ளும் இன்றைய பதிவுலகில் நீங்கள் சொல்லி இருக்கும் இந்த வார்த்தை உங்களை மேலும் உயர்த்தும்...வாழ்த்துக்கள் சார்..பதிவை எதிர்பார்க்கிறோம்...

    பதிலளிநீக்கு
  2. உள்ளத உள்ள மாதிரியே சொல்லப்போறீங்களா அண்ணா?

    பதிலளிநீக்கு
  3. சதீஷ் அண்ணாச்சி நீங்க ஜெ.பத்தி எழுதுனதைப் படிக்கலியா? அதைப் படிச்சாலே புரிஞ்சிருக்குமே, இது நடுநிலை தன்னு!

    பதிலளிநீக்கு
  4. சதீஷ் அண்ணாச்சி நீங்க ஜெ.பத்தி எழுதுனதைப் படிக்கலியா? அதைப் படிச்சாலே புரிஞ்சிருக்குமே, இது நடுநிலை தன்னு!

    பதிலளிநீக்கு
  5. அன்பின் ரஹீம் - நல்லதொரு பதில் இடுகை - தரவுகளோடு தவறெனச் சுட்டிக் காட்டினால் மாற்றிக் கொள்ளலாம் - தங்களது கொள்கை நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  6. நீங்கள் தொடருங்கள். :-)

    பதிலளிநீக்கு
  7. // அதை வரலாற்றின் உதவியோடு சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்ள தயாராக இருக்கிறேன்//.

    இதை நீங்கள் தவிர்த்திருக்கலாம். இங்கே வரலாறு என்று எதை நீங்கள் கூறுகிறீர்கள் என தெரியவில்லை. கண்ணதாசன், கலைஞர் எழுதியதை நீங்கள் வரலாறாக எடுத்துக்கொள்வதில்லை. மற்றவர்கள் எழுதிய நூலை மட்டும் எப்படி வரலாறாக நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என தெரியவில்லை. ஏன் எனில் விருப்பு வெறுப்பு உள்ளவன் தான் ஒன்றை பற்றி எழுதுவான். விருப்பு வெறுப்பு இல்லையெனில் அவன் அதைப்பற்றி கவலைப்படமாட்டான்.
    என்னுடைய ( சென்ற-இந்த) பின்னூட்டம் ஏதேனும் ஒரு வகையில் உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்காக வருந்துகிறேன்.
    உங்களின் எழுத்துப்பணி தொடர வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. சரி நீங்க நேர்மையானவர் தான்னு ஒத்துக்குறோம்... வேற வழி...

    பதிலளிநீக்கு
  9. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  10. சரியான தகவல்களைத் தரவேண்டும் என்ற உங்கள் நல்லெண்ணத்திற்கு பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.