என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

செவ்வாய், செப்டம்பர் 20, 2011

9 உள்ளாட்சித்தேர்தலுக்கு எதுக்குப்பா கூட்டணி?....



கலைஞரின் தனித்து போட்டி என்ற முடிவிற்கு முன்னரே தமிழக காங்கிரசும் அதையே சொல்லி வந்தது. ஆனால், அப்போது அந்த அறிவிப்பு காமெடியாகவே பார்க்கப்பட்டது. இப்போது கலைஞரின் தனித்து போட்டி என்ற அறிவிப்பிற்க்கு பின் காங்கிரசின் நிலமை பரிதாபமாக பார்க்கப்படுகிறது. இப்போது கலைஞரை தொடர்ந்து ஜெயலலிதாவும் கிட்டத்தட்ட தனித்து போட்டி என்ற முடிவை நோக்கி நகர்ந்துவிட்டதாக தெரிகிறது.

தமிழகத்திலிருக்கும் நகராட்சிகளில் ஏறக்குறைய முக்கால்வாசி இடங்களுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த பட்டியல் கடைசி நேர மாறுதலுக்க உட்பட்டதுதான் என்றாலும், எந்த கூட்டணி கட்சிகளையும் கலந்தாலோசிக்காமல் இப்படி தன்னிச்சையாக அறிவித்திருப்பது கூட்டணியினரிடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. கடந்த முறையும் இப்படித்தான் செய்தார். பின்னர் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். தேர்தலில் வென்றார். இப்போதும் அப்படியே செய்தால் கடந்த முறையை போல இந்த முறையும் ஏறக்குறைய எல்லா இடங்களையும் அள்ளிவிடலாம் என்று செண்டிமெண்டாக கூட இந்த அறிவிப்பு இருக்கலாம் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.

வழக்கமாக ஜெ முருங்கை மரம் ஏறிவிட்டார். ஆனால், முயற்சியில் சற்றும் தளராத விக்ரமாதித்தன் போல், எத்தனை அசிங்கம் வந்தாலும் துடைத்துப்போட்டுவிட்டு பெறுவதை பெற்றேத்தீருவோம் என்று கம்யூனிஸ்ட்கள் போயஸ் கார்டனுக்கு காவடி எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். கடந்த முறையை போல விஜயகாந்த் அலுவலகத்திலெல்லாம் கூடவில்லை. அப்படி கூடுவது இந்த முறை பலன் தராது என்று உணர்ந்தே இருக்கிறார்கள் தோழர்கள். ஆனால், இத்தனை அசிங்கங்களுக்கு பின்பும் கம்யூனிஸ்ட்கள் இப்படி செய்வது அவர்களின் சுயமரியாதைக்கு இழுக்குதான்.



இந்த தேர்தலுக்கு போய் ஏன் இவ்வளவு தூரம் அசிங்கப்பட்டுக்கொண்டு? உள்ளாட்சி தேர்தல் என்பது மேயர் போன்ற ஒரு சில பதவிகளைத்தான் கட்சி வாக்குகள் தீர்மானிக்கும். பெரும்பாலான பதவிகளை அந்தந்த வேட்பாளர்களின் களப்பணிதான் தீர்மானிக்கும்.

சட்டமன்ற, நாடாளுமன்றத்தேர்தலைப்போல யாரோ ஒருவருக்கு வாக்களிக்கும் தேர்தலல்ல இது. மாறாக, இந்த தேர்தலில் போட்டியிடப்போவது நம் பக்கத்து வீட்டு நபரோ, பக்கத்து தெரு நபரோ அல்லது நம் உறவினரோ தான். அப்படி அவர் போட்டியிடும்போது அவரின் சாதக பாதகங்களை அலசித்தான்  நாம் வாக்களிக்கப்போகிறோம். அந்த வேட்பாளரின் தனிப்பட்ட செல்வாக்குதான் இங்கு வெற்றிபெறும்.

மொத்தத்தில் உள்ளாட்சி தேர்தல் என்பதே லோக்கல் செல்வாக்கு பெற்றவர்களீன் களமே தவிர கட்சி செல்வாக்கு பெற்றவர்களின் களமல்ல....அதற்கு கூட்டணியும் தேவையில்லை.


Post Comment

இதையும் படிக்கலாமே:


9 கருத்துகள்:

  1. //பெரும்பாலான பதவிகளை அந்தந்த வேட்பாளர்களின் களப்பணிதான் தீர்மானிக்கும். //

    நச்சுன்னு சொன்னீங்க கஸாலி.

    பதிலளிநீக்கு
  2. கரெக்ட்தாங்க. எந்த கட்சியை சேர்ந்தவர் என்பதை கவுன்சிலர் தேர்தலில் யாரும் பார்ப்பதில்லை. நன்கு உழைப்பவரா என்று மட்டுமே பார்க்கின்றனர்.

    பதிலளிநீக்கு
  3. உண்மை தான்!உறவினராக இருந்தாலும் கூட களப் பணியே முன்னிலை வகிக்கும்!

    பதிலளிநீக்கு
  4. ஹி ஹி ஹி......

    #நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற....

    பதிலளிநீக்கு
  5. நீங்கள் கூறுவது ஒத்து கொள்ளக்கூடிய கருத்தே.

    பதிலளிநீக்கு
  6. நறுக்குன்னு சொன்னிங்க ............

    பதிலளிநீக்கு
  7. என்ன சொல்ல நண்பா,
    என்னமோ போங்கோ !
    கலக்கல் பதிவு
    வாழ்த்துக்கள்
    யானைக்குட்டி

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.