என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வியாழன், செப்டம்பர் 01, 2011

25 ஒரு பிரபல பதிவரின் மறைக்கப்பட்ட உண்மைகள்.


வர் ஒரு பிரபலமான பதிவர்.மிகவும் துணிச்சலாக  தன் சொந்த கருத்துக்களையே பதிவிட்டு ஹிட்டடிப்பவர்.
பாலசந்தரின் மன்மதலீலையைப்போல இவரின் மன்மதலீலையும் பிரபலமானது. ஆம்....பதிவர் செங்கோவிதான் அவர். 

அவரிடம் சில கேள்விகளை கேட்க நினைத்தேன். ஆனால் அவரை பிடிக்க முடியாததால் கலைஞர் பாணியில் கேள்வியும் நானே...பதிலும் நானே என்ற ரீதியில் நானே யோசித்தது இது. இனி.....அவரின் கற்பனை பேட்டியை படியுங்கள்.....இது நண்பர் செங்கோவியின் மனதை புண் படுத்தாது என்று நம்புகிறேன். அதையும் மீறி அவரை புண் படுத்தினால் அதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்கப்போவதில்லை....அதற்கு பதிலாக ஒரு ஆயின்மெண்ட் அனுப்புகிறேன் அந்த புண்ணுக்கு பூச....




கேள்வி: உங்களுக்கு பதிவெழுதும் ஆர்வம் எப்படி வந்தது?
செங்கோவி: பெருசா திட்டம் போட்டெல்லாம் நான் பதிவுலகத்துக்கு வரல.... நான் காலேஜ் டைமில் டைரி எழுதுவது வழக்கம். அப்படி எழுதிய டைரிய வீட்டு பரண்ல போட்டு வச்சிருந்தேன். ஒரு நாள் பொழுதுபோகாம இருந்தப்ப அந்த டைரிய எடுத்து பார்த்தேன். வரலாற்று சிறப்புமிக்க மன்மதலீலைகளெல்லாம் அதில் இருந்துச்சு.படிக்க படிக்க சுவாரஸ்யமா இருந்துச்சு. இதை ஏன் நாம ஏதாவது பத்திரிகைக்கு அனுப்பக்கூடாதுன்னு முடிவு பன்னி சில பத்திரிகைக்கு அனுப்புனேன். ஆனா, எல்லாமே போன வேகத்தில திரும்பி வந்திருச்சு. சரி சினிமாவா எடுக்கலாம்ன்னு முடிவு பன்னி சில தயாரிப்பாளார்களிட்ட பேசினேன். துரதிருஷ்டவசமா அவங்களும் நிராகரிச்சுட்டாங்க. இந்த மன்மத லீலைகளை எப்படியாவது தமிழ்கூறும் நல்லுலகத்துக்கு அறிமுகப்படுத்தனும் ஆனா, எப்படி அறிமுகப்படுத்துவது என்று யோசனை பன்னும்போது எனக்கு வலைப்பதிவு ஞாபகம் வந்துச்சு.அதான் போன வருஷம் ஆரம்பிச்சுட்டேன். இப்ப மன்மதலீலையை அதில் வெளியிட்டேன்.யாரும் இதை நிராகரிக்க முடியாதுல்ல...படிக்கறது அவங்க தலைவிதி. ஆனா பாருங்க அது இப்ப செம ஹிட்டு...அருமையான கதைன்னு சொல்லுறாங்க....

கேள்வி:அருமை...சரி இந்த செங்கோவின்னு பேரு வித்தியாசமா செம கேட்சிங்கா  இருக்கே.... யாரு வச்சது? உங்க அப்பாவா? தாத்தாவா?
அட...எனக்கு அது நிஜப்பேரு இல்லைங்க... என்  நிஜப்பேரு வேற...இது நானா யோசிச்சது...

கேள்வி:அப்படியா? எப்படி இப்படி ஒரு அருமையான பேரை பிடிச்சீங்க...
செங்கோவி: அப்படி கேளுங்க....ஒரு வித்தியாசமான பேரா இருக்கனும்ன்னு யோசிச்சேன்.அதுக்காக மண்டைய போட்டு பிச்சுக்கு இருந்தேன். அப்ப என் நண்பன் ஒரு யோசனை சொன்னான், உனக்குத்தான் கவர்ச்சி நடிகைகளை பிடிக்குமே அதிலிருந்து ஒரு பேரை வச்சுக்கவேன்னான். எனக்கு எல்லா நடிகைகளையுமே பிடிக்கும். ஒரு ஆளு பேரை எதுக்கு வைக்கனும்?. எல்லோருடைய  பேரிலிருந்தும் முதல் எழுத்தை எடுத்து புதுசா ஒரு பேரை வைப்போம்ன்னு முடிவெடுத்தேன். எனக்கு ஷகீலா, சில்க், சிம்ரன பிடிக்கும். அந்த பேருல முதல் எழுத்தான S, அப்புறம் நக்மா, நயன்தாரா பேரிலிருந்து N, கவுசல்யாங்கற பேரிலிருந்து G, ஓவியா,ஊர்மிலாங்கற பேர்லேருந்து O, வித்யா பாலன், விமலா ராமன்ங்கற பேர்லேருந்து V, ஐஸ்வர்யாராயிலிருந்து I -ன்னு எடுத்து எழுதிப்பார்த்தேன். SNGOVI-ன்னு வந்துச்சு. பேரு ஒரு ஃபினிஷிங் இல்லாம இருந்ததால S-க்கு பக்கத்து ஒரு எழுத்த போட முயற்சி பன்னி யோசிச்சேன். எல்லாப்பேருமே இந்திய பேராவே இருக்கே...இண்டர்னேஷனல் பேரு ஒன்னை சேர்ப்போம்ன்னு யோசிச்சு எலிசபெத் டைலர் பேரிலிருந்த முதல் எழுத்தை எடுத்து E -க்கு பக்கத்துல போட்டேன். இப்ப அருமையான SENGOVI-ங்கற பேரு ரெடி.

கேள்வி:அருமை சார்...அப்படின்னா உங்க ஒரிஜினல் பேரு என்னன்னு தெரிஞ்சுக்கலாமா?
செங்கோவி: என்னோட பேரை யாருக்கும் சொல்லமாட்டேன்னு அய்யனார் கோவிலில் சூடம் ஏத்தி சத்தியம் பன்னிட்டேன். அதனால் சொல்லமுடியாது. அப்படி மீறி சொன்னா சாமி குத்தமாகிடும்.

கேள்வி:எனக்கு மட்டுமாவது சொல்லலாமே?
செங்கோவி: இப்ப என்னோட ஒரிஜினல் பேர தெரிஞ்சுக்கு என்ன பன்னப்போறீங்க...சிவாஜியை அவரோட ஒரிஜினல் பேரான கணேசன்னா சொல்றீங்க...இல்லை ரஜினியை சிவாஜி ராவ்ன்னு சொல்றீங்களா? இளையராஜவை ராசய்யான்னும், பாரதிராஜாவை சின்னசாமின்னுமா சொல்றீங்க...அவங்க பேரையெல்லாம் புனைப்பேர்ல கூப்பிடறப்போ என் ஒரிஜினல் பேரை தெரிஞ்சுக்கு என்ன பன்னப்போறீங்க...




கேள்வி: இல்லை அது வந்து.....சும்மா தெரிஞ்சுக்கலாம்ன்னு...பரவாயில்லை. உங்க போட்டாவாவது தந்தீங்கன்னா...
செங்கோவி: போட்டோவெல்லாம் தரமுடியாது. வேனும்ன்னா சங்கவி போட்டோவை போட்டுக்கங்க...சரி நீங்க கிளம்பலாம். ....இருங்க... தயிரில் டீ போடுவதில் நான் திறமையான ஆளு...அப்படி ஒரு தயிர் டீ போட்டுத்தேரேன். ஒரு வாய் குடிச்சுட்டுப்போங்க.

அண்ணே...ஏண்ணே இப்படி ஒரு கொலை வெறி... நாங்க கிளம்புறோம்...




Post Comment

இதையும் படிக்கலாமே:


25 கருத்துகள்:

  1. நிச்சயம் அண்ணன் கோவிச்சுக்குவாரு ஹி ஹி

    பதிலளிநீக்கு
  2. >>காப்பி,பேஸ்ட் மூலம் ஹிட்டடிக்கும் பதிவர்கள் மத்தியில்

    ஹா ஹா இந்த லைன் ரொம்ப முக்கியமா?

    பதிலளிநீக்கு
  3. நல்லாத்தான் இருக்கு பெயர்காரணம்.

    பதிலளிநீக்கு
  4. சி.பி.செந்தில்குமார் >>காப்பி,பேஸ்ட் மூலம் ஹிட்டடிக்கும் பதிவர்கள் மத்தியில் ஹா ஹா இந்த லைன் ரொம்ப முக்கியமா?////
    யாரையும் புண்படுத்தும் நோக்கில் இது எழுதப்பட்டதல்ல....இருந்தாலும் நீக்கிவிடுகிறேன். சாரி///

    பதிலளிநீக்கு
  5. ஹா..ஹா..

    யோவ், கலக்கிப்புட்டீரு!

    பதிலளிநீக்கு
  6. //கேள்வி: உங்களுக்கு பதிவெழுதும் ஆர்வம் எப்படி வந்தது?//

    இதுக்கு நீங்க சொன்ன பதில் தான் என் பதிலும்..ஒரே ஒரு வித்தியாசம், நான் எந்த தயாரிப்பாளர்கிட்டயும் கதை சொல்லலை, ஏன்னா எனக்கு மல்லு படத் தயாரிப்பாளர் யாரையும் தெரியாது.

    பதிலளிநீக்கு
  7. //கேள்வி:அப்படியா? எப்படி இப்படி ஒரு அருமையான பேரை பிடிச்சீங்க...//

    அடடா..என்ன ஒரு பதில்..நானே இப்படி யோசிச்சதில்லையே..

    பதிலளிநீக்கு
  8. //கேள்வி:அருமை சார்...அப்படின்னா உங்க ஒரிஜினல் பேரு என்னன்னு தெரிஞ்சுக்கலாமா?//

    இது நியாயமா?......அதை மறைக்கணும்னு நினைக்கலை..நானா யோசிச்சு வச்ச செங்கோவி-ங்கிற பேரால கூப்பிடப்படணும்னு ஒரு ஆசை..அது தப்பா?

    பதிலளிநீக்கு
  9. //கேள்வி: இல்லை அது வந்து.....சும்மா தெரிஞ்சுக்கலாம்ன்னு...பரவாயில்லை. உங்க போட்டாவாவது தந்தீங்கன்னா...//

    அதைப் போட்டா ஹிட்ஸ் பாதியாக் குறைஞ்சிடும்..பரவாயில்லையா?

    பதிலளிநீக்கு
  10. பெயரில்லா1 செப்., 2011, 2:13:00 PM

    செங்கோவி தன் பெயருக்கான காரணத்தை தவறாக கூறி உள்ளார். அந்த காலத்தில் ஒரு வயது இருக்கும்போது ரேஷன் கடையில் சர்க்கரைக்கு பதில் கல்கண்டு போட்டு ஏமாற்றிய கடைக்காரரை எடைக்கல்லால் அடித்து கபாலத்தை ஓப்பன் செய்தார். அவர் கேப்டன் ரசிகர் என்பதால் அவ்வப்போது சமூக அவலங்களை கண்டால் கண்கள் சிவந்து பொங்கும். அதில் இருந்து அவரை 'செங்கோவி' என்று ஊர் மக்கள் செல்லமாக அழைத்தனர்.

    பதிலளிநீக்கு
  11. பெயரில்லா1 செப்., 2011, 2:15:00 PM

    கஸாலி, செங்கோவி... "அந்த கொழந்தையே நீங்கதான் சார்" ரேஞ்சுக்கு உங்கள் ப்ரோபைல் போட்டோ இருக்குதே..!!

    பதிலளிநீக்கு
  12. எல்லாம் சரிதான், ஆனா செங்கோவியண்ணனோட ஃபேவரைட் கமலா காமேசை சொல்லாம விட்டுட்டீங்களே, அண்ணன் கோச்சுக்குவாரே?

    பதிலளிநீக்கு
  13. செங்கோவி பெயர்காரணம் தெரிஞ்சுண்டோம் நல்லது.

    பதிலளிநீக்கு
  14. நல்லாத்தான் செங்கோவியை புரிந்துள்ளீர்கள் !

    பதிலளிநீக்கு
  15. மொக்கைன்னா இது மொக்கையா!அண்ணன் படிச்சு ரசிச்சு கமெண்டும் போட்டிட்டாரு!அப்போ ஆமொதிச்சிட்டாருன்னு அர்த்தம்!

    பதிலளிநீக்கு
  16. பெயர்காரணம் அருமை இது தான் உண்மையா இருக்கும்னு நினைக்குறேன்
    நட்புடன்
    ஜெயமாறன் நிலாரசிகன்

    பதிலளிநீக்கு
  17. எப்படியோ சங்கவி போட்டோவை போட்டு அசத்திட்டீங்க சார்.

    பதிலளிநீக்கு
  18. செங்கோவி பற்றிய கற்பனை நல்லா எழுதியிருக்கீங்க,ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  19. பெயரில்லா2 செப்., 2011, 12:56:00 AM

    ஒரு நமீதா படம் மட்டும் மிஸ்ஸிங்...அவரா யோசிச்சார் லிங்க் போட்டிருங்க...

    பதிலளிநீக்கு
  20. இதே மாதிரி மாணவர்க்ளையும்
    நானே கேள்வி நானே பதில்

    அறிவித்தால் எப்படி இருக்கும்!

    பதிலளிநீக்கு
  21. சங்கவியா அது? பாத்து ரொம்ப நாளாச்சுல்ல! அதான் தெரியல!
    செங்கோவி - சங்கவி பெயரில ஒரு ஒற்றுமை இருக்கு இல்லையா?

    பதிலளிநீக்கு
  22. ம்..ம்... நல்லாத்தான் இருக்கு....

    பதிலளிநீக்கு
  23. ஹி ஹி ,,நாங்க தன்மானம் மரியாதையை எல்லாம் அடகு வைச்சு ஆப் அடிச்ட்டு அசால்டா இருக்கோம் எங்களுக்கு ,அதிர்ச்சியா ,,,,தம்பி போகும் பொது சைடிஸ் சொல்லிட்டு போ ,ஆங்

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.