என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

செவ்வாய், ஆகஸ்ட் 30, 2011

17 கை கொடுத்த ஜெயாவும், கலைஞரின் சிறுபிள்ளைத்தனமும்


கலைஞரின் சிறுபிள்ளைத்தனமான பேச்சு.........

நேற்று கலைஞர் ஒரு அறிக்கை விட்டிருந்தார்.
அதில் ராஜீவ்காந்தி உயிரோடு இருந்திருந்தால் பேரறிவாளன், முருகன்,சாந்தன் ஆகிய மூவரையும் மன்னித்து அவர்களை தூக்கிலிருந்து காப்பாற்றியிருப்பார் என்று சொல்லியிருந்தார். அதை படித்ததும் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ராஜீவை கொன்றதால் தானே இந்த வழக்கு நடைபெறுகிறது. ராஜீவ் கொலை சதியில் மூவருக்கும் பங்கிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுத்தானே தூக்குத்தண்டனையை எதிர் நோக்கியுள்ளார்கள். அப்புறம் எப்படி இப்படி பேசுகிறார் கலைஞர்?. அடப்போங்க தலைவரே....ராஜீவ் உயிரோடு இருந்தால் இந்த வழக்கிற்க்கே வேலையில்லை.தூக்குக்கும் வேலையில்லை....



பாவம் செங்கொடி....

மூன்று உயிர்களை காப்பாற்ற தன் உயிரை இழந்துள்ளார் செங்கொடி.இப்படி தற்கொலை செய்துகொள்வதால் ஒரு மாற்றமும் நிகழப்போவதில்லை,உயிர் போவதை தவிர.... எதற்கெடுத்தாலும் இப்படி உணர்சிவசப்பட்டு தற்கொலை செய்து கொள்வது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. தற்கொலை செய்து கொண்டால் அந்த ஐந்து நிமிடமோ, பத்து நிமிடமோ தான் சம்பந்தப்பட்டவர்களுக்கு வேதனை, வலி எல்லாம். உயிர் பிரிந்துவிட்டால் எல்லாம் முடிந்துவிடும். ஆனால், தற்கொலை செய்து கொண்டவர்களின் பெற்றோருக்கோ, குடும்பத்திற்கோ அது ஆயுள் முழுவதும் வலியும், வேதனையும். 
தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் எல்லாம் பெரும்பாலும் திட்டம் போட்டு வருவதில்லை. அந்த கன நிமிட யோசனைதான். இன்னும் கொஞ்ச நேரம் யோசித்தால் அது எத்தனைபெரிய முட்டாள்தனம் என்பது புரியும். துணிச்சலில் மிகப்பெரிய துணிச்சல் சாவை நேருக்கு நேர் சந்திப்பதுதான். அப்படி சாவை சந்திக்கும் துணிச்சலில் பாதியளவை  போராடவோ, வாழ்வதற்க்கோ பயன்படுத்தினாலே போதும் வெற்றியடைந்து விடலாம்.
செங்கொடியின் தியாகத்தை நான் கொச்சைப்படுத்தவில்லை.அதே நேரம், இந்த உயிர்தியாகத்தை தற்கொலையை தலையில் தூக்கிவைத்து கொண்டாட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். அப்படி கொண்டாடினால், அது தற்கொலை செய்து கொள்ளும் உத்வேகத்தை மற்றவர்களுக்கும் கொடுத்து விடும் அபாயம் இருக்கிறது ஜாக்கிரதை. அந்த மூன்று உயிர்களுக்காக போன முதல் உயிரும், கடைசி உயிரும் செங்கொடியின் உயிராக மட்டும் இருக்கட்டும்.


  நேற்று கைவிட்டு இன்று கை கொடுத்த ஜெயா...

மூவரையும் காப்பாற்றும் அதிகாரம் எனக்கில்லை என்று  நேற்று கைவிரித்து விட்டிருந்தார் ஜெ....ஆனாலும், இன்னும் அவருக்கு அந்த அதிகாரம் இருப்பதாகவே சொல்கிறார்கள் தமிழுணர்வாளர்கள். அரசியல் சட்டவிதி 161, மற்றும் 72 , உட்பிரிவு-3 ஆகியவை ஜனாதிபதி நிராகரித்த கருணை மனுக்களை அமைச்சரவையின் முடிவின்படி மாநில கவர்னர் ஏற்று தூக்குத்தண்டனையை நீக்குமதிகாரம் மாநில அரசுக்கு இருப்பதை உறுதி செய்கிறதாம்.

விதி-72, ஜனாதிபதிக்கு தூக்குத்தண்டனையை நீக்கும் அதிகாரத்தை வழங்கினாலும், அதன் உட்பிரிவு 3, ஜனாதிபதி ஒரு கருனைமனு மீது என்ன முடிவு எடுத்திருந்தாலும், மாநில ஆளுனர் அதை பொருட்படுத்தாமல் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி தனித்த முடிவு எடுக்கலாமென்று உரிமை அளித்துள்ளதாம். 


தற்போதைய செய்தி

  தன் அதிகாரத்தை பயன்படுத்தி சட்டசபையில் தூக்கை நிறுத்த
இன்று தீர்மானம் போட்டுள்ளார் ஜெ., இப்போது தூக்குத்தண்டனைக்கு 8 வாரகாலம்  தடை விதித்துள்ளது நீதிமன்றம்.
 
 இதையும் படிச்சிடுங்களே....

மூன்று பேருக்கும் தூக்கு -இப்ப சந்தோஷமா சோனியாஜி? ....



Post Comment

இதையும் படிக்கலாமே:


17 கருத்துகள்:

  1. செய்திகள் பார்க்கவில்லையா ? தூக்கு தண்டனை எட்டு வாரகாலத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளது ,சட்டசபையில் ஆயுள் தண்டனையாக குறைக்கவேண்டுமென்று ஜெயலலித்தா தீர்மானம் நிறைவேற்றிக்கிறார்

    பதிலளிநீக்கு
  2. //நேற்று கலைஞர் ஒரு அறிக்கை விட்டிருந்தார்.
    அதில் ராஜீவ்காந்தி உயிரோடு இருந்திருந்தால் பேரறிவாளன், முருகன்,சாந்தன் ஆகிய மூவரையும் மன்னித்து அவர்களை தூக்கிலிருந்து காப்பாற்றியிருப்பார் என்று சொல்லியிருந்தார். அதை படித்ததும் எனக்கு ஒன்றுமே புரியவில்லை//

    ஏறக்குறைய இதே தான் நானும் எழுதி வைத்துள்ளேன்..

    பதிலளிநீக்கு
  3. பொதுமக்களின் உணர்வுக்கு மதிப்பளித்தமைக்கு முதல்வர் ஜெவுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  4. எதிலுமே ஆதாயம் தேடுவதுதானே நமது அரசியல்வாதிகளின் பிழைப்பு.

    பதிலளிநீக்கு
  5. ஆமாங்கோ வர வர கலைஞர் ரொம்ப உளறுகிறார்!

    பதிலளிநீக்கு
  6. அம்மா மனது மாறி தூக்கு தண்டனையை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது பாராட்டப்படவேண்டிய விஷயம்.

    பதிலளிநீக்கு
  7. இன்று கை கொடுத்த ஜெயா...

    பதிலளிநீக்கு
  8. பொதுமக்களின் உணர்வுக்கு மதிப்பளித்தமைக்கு முதல்வர் ஜெவுக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  9. இதுக்கும் நம்ம நடுநிலையாளர்களும், புரட்சியாளர்களும் ஏதாவது பதில் வச்சிருப்பாங்களே?..

    பதிலளிநீக்கு
  10. அம்மாவுக்கு சபாக்ஷ். இன்று இரண்டு முக்கிய முன்னேற்றம்.சட்டசபை தீர்மானம்.நீதிமன்ற இடைக்காலத்தடை. நிரந்தர வெற்றி கிடைக்கும் வரை போராட வேண்டியது நமது கடமை.

    பதிலளிநீக்கு
  11. ஏதோ ஒரு பொது காரணத்திற்க்காக தற்கொலை செய்துகொள்ளும் மனிதர்களும், அவர்களை போற்றி கொண்டாடி வீர வசனம் எழுதி தங்களின் 'வீர" மரபை காட்டும் போக்கும் சமீபத்தில் அதிகமாக காணப்படுவது கேவலமான ஒன்று. நாகரீகமான ஒரு சமூகத்தில் இது போன்ற நிகழ்வுகளும் அவைகளை போற்றி கொண்டாடுதலும் இல்லை. எதற்கெடுத்தாலும் தற்கொலை. ஒரு சினிமா காரனுக்கு உடல் நலக்குறைவு என்றால் தற்கொலை. ஒரு அரசியல் பிழைக்கும் நாதரிகளுக்கு சட்டத்தால் தண்டனை என்றால் அதற்கும் தற்கொலை. தம் இனத்திற்காக சாவதாக நினைத்துக்கொண்டு உயிர்விடும் மனிதர்கள். இந்த மனநிலை மாறிட வேண்டும். ஒன்று கவனிக்கலாம் வேறு எங்குமே இது போன்ற நிகழ்வுகள் இல்லை. இங்கு மட்டுமே இது. இது இழிவானது இல்லையா?
    தங்களின் ஆக்கம் நன்று.

    பதிலளிநீக்கு
  12. May be expecting some financial assistance from the LTTE supporters from all over the world.

    பதிலளிநீக்கு
  13. எல்லாவற்றிலும் ஆதாயம் தேடுபவர்கள் தானே இந்த அரசியல்வாதிகள்

    பதிலளிநீக்கு
  14. கலைஞரைப் பற்றிய உங்கள் கருத்து சூப்பர்.. எல்லாரையும் பேச்சில் வளைப்பார் அவர்... அவரையே நீங்கள் வளைத்து விட்டீர்கள்..

    பதிலளிநீக்கு
  15. கலைஞருக்கு முதுமை மழுக்கம்!
    கடைசிச் செய்தி நல்ல செய்தி!

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.