என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

புதன், ஆகஸ்ட் 10, 2011

11 அய்யோ பாவம் அம்மா....



பணம் ஒன்றே குறிக்கோளாய்
ஓடித்திரிந்த என்னை
உயிலெழுதக்கூட
அவகாசமின்றி
ஒரே நாளில்
முடக்கிப்போட்டது முதுமை.

இன்னும் சில நாட்களில்
நான் இறந்து விடுவேனாம்...
இப்போதுதான் என் ஆயுள்ரேகை
குறித்துவிட்டு போகிறார்
எங்கள் குடும்ப டாக்டர்.

சுற்றமும்  நட்பும் சூழ
அழுகுரல்களுக்கு மத்தியில்
என் சொத்துக்களுக்கான
பாகப்பிரிவினை
நடைபெற்றுக்கொண்டிருக்கிறது
என் வாரிசுகளுக்கிடையில்....

ஊரின் ஒதுக்குப்புறத்திலிருக்கும்
அந்த மாந்தோப்பு
மூத்தவனுக்காம்.
தென்னந்தோப்பும்,
ஓட்டுவீடும்
இரண்டாம் பையனுக்காம்.

நாங்கள் இப்போது இருக்கும்
இந்த வீடும், நிலமும்
கடைசி பையனுக்காம்.
வங்கி லாக்கரில் இருக்கும்
நகை முழுவதும் 
என் ஒரே பெண்ணுக்காம்.

நகரின் மத்தியிலிருக்கும்
ஜவுளிக்கடையை
மகன்கள் மூவரும்
முறைவைத்து
பார்த்துக்கொள்வார்களாம்....

இத்தனையையும்
பிரித்துக்கொண்ட என் வாரிசுகளில்
ஒருவர்கூட
தன்னை வேண்டுமென்று
சொல்லவில்லையே என்று
மூலையில் இருந்து
கண்ணீர் சிந்தும்
அவர்களின் அம்மாவாகிய
என் மனைவியின் விசும்பல்
யாருக்குமே கேட்கவேயில்லை....


Post Comment

இதையும் படிக்கலாமே:


11 கருத்துகள்:

  1. டைட்டில பாத்துட்டு அரசியல்னு நெனச்சுட்டேன், அருமையான அம்மா கவிதை....!

    பதிலளிநீக்கு
  2. கவிதை உணர்ச்சிகரமாகவும், இன்றைய நிலையை நன்று உரைத்து சொல்லக் கூடியதாகவும் இருக்கிறது

    பதிலளிநீக்கு
  3. நெகிழ்ச்சியான விஷயம் மாப்ள..போகணும்னு முடிவு பண்ணிட்ட சிங்குளா இல்ல டபுளா போயிடனும்!

    பதிலளிநீக்கு
  4. அய்யோ பாவம் அம்மா....

    வித்தியாசமான சிந்தனை...
    உணர்வுபூர்வமாக உள்ளது...

    பதிலளிநீக்கு
  5. இன்று பெரும்பாலான அம்மாக்களின்
    நிலை இதுதானோ?

    பதிலளிநீக்கு
  6. என்ன குருவே ...இப்படி ஒரு அசத்தல் ...அருமை ..நீங்க தான் என் பதிவுலக அளவு கோள் ..நன்றி வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. யாருக்குமே கேட்கவேயில்லை....?????????????????

    பதிலளிநீக்கு
  8. உணர்சிகளின் வெளிப்பாடு அழகிய கவிதை வடிவில் ... வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. சூப்பர். ரொம்ப யோசிச்சி எழுதியிருப்பிங்க போல...

    பதிலளிநீக்கு
  10. கவிதை அருமையா வந்திருக்கு கஸாலி..வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.