என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

செவ்வாய், ஆகஸ்ட் 16, 2011

10 கலைஞரின் தயவால் கொடியேற்றிய ஜெயலலிதா....


சுதந்திரதினமான நேற்று சென்னையிலுள்ள ஜார்ஜ்கோட்டையில் முதலமைச்சர் ஜெயலலிதா தேசிய கொடியேற்றினார். சுதந்திரதினத்தில் தேசிய கொடியை மாநில முதலமைச்சர்கள் ஏற்றும் உரிமையை பெற்றுத்தந்தவர் முன்னாள் முதல்வர் கலைஞர்.
முன்பெல்லாம் தலைநகர் டெல்லியில் சுதந்திர தினத்தில் பிரதமரும், குடியரசு தினத்தில் ஜனாதிபதியும் கொடியேற்றுவார்கள்.ஆனால், மாநில தலைநகரங்களில் சுதந்திர தினத்தன்றும், குடியரசு தினத்தன்றும் அம்மாநில ஆளுநர்களே  கொடியேற்றுவது மரபாக இருந்துவந்தது. இதை மாற்றி சுதந்திர தினத்தன்று டெல்லியில் பிரதமரே கொடியேற்றுவது போல..அந்தந்த மாநில தலைநகர்களில் முதலமைச்சர்களே கொடியேற்றும் உரிமையை வழங்க வேண்டுமென்று அப்போதைய(1974) முதல்வர் கலைஞர் மத்திய அரசை வலியுறுத்தினார்.

தொடர்ந்து வலியுறுத்தியதால் அக்கோரிக்கையை மத்திய அரசு ஏற்று அனைத்து மாநிலங்களிலும் இனி சுதந்திர தினத்தன்று முதல்வரே கொடியேற்றலாம் என்று உத்தரவிடது. இதை தொடர்ந்து 1974-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று கோட்டையில் கலைஞர் தேசியகொடி ஏற்றினார்.

அன்றிலிலிருந்து மாநிலத் தலைநகர்களில் சுதந்திர தினத்தில் முதல்வரும், குடியரசு தினத்தில் கவர்னரும் கொடியேற்றுவது மரபாக இருக்கிறது.


Post Comment

இதையும் படிக்கலாமே:


10 கருத்துகள்:

  1. எங்கேருந்து எங்கே கோர்க்கிறாங்கய்யா.....?

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. அப்படின்னா கலைஞருக்கு ஒரு விழா எடுத்துட வேண்டியதுதான். ஏற்பாடு பண்ணுங்க ரஹீம் சார்

    பதிலளிநீக்கு
  4. தகவலுக்கு நன்றி கஸாலி - ஏற்கனவே தெரிந்த தகவல்தான். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  5. தெரிந்துக் கொண்டேன்...

    பகிர்வுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  6. தலைப்பை பார்த்தவுடன் ஏதோ வில்லங்கமா எழுதி இருப்பீங்கன்னு வந்தேன். ஆனால் இதுவும் தெரியாத தகவல்தான் நன்றி.

    பதிலளிநீக்கு
  7. ஆனாலும் என்ன செய்ய அவரால் அறிவாலயத்தில் தானே கொடியேற்ற முடியும்?

    பதிலளிநீக்கு
  8. சரியான தகவல். பகிர்வுக்கு நன்றி கஸாலி.
    பச்சையாக சொல்ல்வதென்றால் கலைஞர் போட்டப் பிச்சைதான்.

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.