என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வியாழன், ஆகஸ்ட் 04, 2011

11 யோஹனுக்கில்லை யோகம்...அய்யோ பாவம் இளைய டாக்குட்டரு........

வழக்கமாக தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களின் தமிழ் ரீமேக்கில் மட்டுமே நடித்துவந்த(அப்படின்னா அழகியதமிழ் மகன்.....அது ஃபைனல் டெஸ்டினேஷன் படத்திலிருந்து கொஞ்சம் தானே சுட்டிருந்தார்கள். அதனால், அதை விட்டுடுவோம்) நம்ம இளைய டாக்டர் விஜய் இப்போது இயக்குனர் கவுதம் வாசுதேவ்மேனன் மூலம் ‘லார்கோ வின்ச்’ என்ற ஆங்கில பட ரீமேக்கில் இல்லை...இல்லை...தழுவலில் அதுவுமில்லை....சுட்ட கதையில் நடிக்க இருக்கிறாராம்.படத்தின் பெயர் கூட யோஹனாம். சே...சே....அப்படி சுட்டகதையா இருக்காதுப்பா என்று சொல்பவர்கள் கவுதம் வாசுதேவ் மேனனின் முந்தைய படங்களை கொஞ்சம் நினைவில் நிறுத்துங்கள். 

சரி...லார்கோ வின்ச் என்ற படத்தின் கதையாக இல்லாவிட்டால் வேறு ஒரு ஹாலிவுட் படத்தின் கதையாககூட இருக்கலாம் இயக்குனர் கவுதம்மேனனின் சுடும் திறமையின் மேல் கொஞ்சம் நம்பிக்கை வையுங்கப்பா....சரி நம்ம விஷயத்திற்கு வருவோம்....இந்தப்படத்திற்கு நிச்சயம் வரிவிலக்கு யோகம் கிடைக்கப்போவதில்லை....இவரு பெரிய லாடு ....கணிக்கிறாருன்னு சொல்றவங்களுக்கு....
கவுதம் மேனனின் முந்தைய படங்களில் படித்தவர்களுக்கு  மட்டுமே புரியும்படியான ஆங்கில வசனங்கள் சற்று தூக்கலாகவே இருக்கும். அதே முறையில் இந்த படத்துக்கும் ஆங்கில வசனங்கள் அதிகமாக இருந்தால் தமிழக அரசு அறிவித்துள்ள
திரைப்படத்தின் தேவையை கருதி பிறமொழிகளை பயன்படுத்தும் காட்சிகளைத் தவிர பெருமளவில் திரைப்படத்தின் வசனங்கள் தமிழ் மொழியில் இருத்தல் வேண்டும் என்ற விதியின் கீழ் இந்த படத்திற்கு வரிவிலக்கு கிடைக்காது...கவிஞர் தாமரையின் பாடல்வரிகளில் மட்டுமே தமிழ் விளையாடும்.

அடுத்து  திரைப்படத்தின் கதையின் கருவானது தமிழ் மொழி மற்றும் பண்பாட்டின் வளர்ச்சிக்கு உகந்ததாக இருத்தல் வேண்டும் என்ற தமிழக அரசின் விதிப்படி தமிழ் கலாச்சாரத்தை இந்தப்படம் தூக்கி நிறுத்தப்போவதில்லை என்பதே கவுதம்மேனனின் முந்தைய படங்களை பார்த்தவன் என்றடிப்படையில் என் கருத்து.

கொசுறு-1)  நார்கோ வின்ச் என்பது அனைவரும் சொல்வது போல ஆங்கில மொழிப்படமில்ல.... நம்ம ஆட்கள் துப்பறிஞ்சு பிரஞ்ச் மொழிப்படம் என்பதை கண்டுபிடித்துள்ளார்கள்.
கொசுறு-2) இப்பொதெல்லாம் கதை விவாதம் என்ற பெயரில் பெரும்பாலான  இயக்குனர்கள் தயாரிப்பாளர்களின் சிலவில் ஸ்டார் ஹோட்டலில் ரூம் போடுவதில்லையாம்....
பர்மா பஜாரில் ஆங்கிலம் அல்லது ரஷ்யா,ஃபிரஞ்ச், தாய்லாந்து மொழியில் வெளிவந்த படங்களின் டி.வி.டி-களை அள்ளி செல்கிறார்களாம்.அப்படியே சுட்டு விடுகிறார்களாம்.



 நம்ம இளைய டாக்டர் படம் அப்புறம் வரட்டும். நார்கோ வின்ச்சின் ட்ரைலரை இப்போது பார்த்து விடுங்கள்.






Post Comment

இதையும் படிக்கலாமே:


11 கருத்துகள்:

  1. டாகுட்டர்ர்ர்.... பிரெஞ்ச் போய் சுட ஆரம்பிச்சுட்டாரா?

    பதிலளிநீக்கு
  2. ரஹ்மான் பாட்டுக்குக்காக பார்ப்போம் ஹி ஹி

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா4 ஆக., 2011, 1:14:00 PM

    விஜய் தேறுவார்.இயக்குனர் என்றமுறையில் கவுதமுக்குதான் கெட்டபெயர்

    பதிலளிநீக்கு
  4. .கவிஞர் தாமரையின் பாடல்வரிகளில் மட்டுமே தமிழ் விளையாடும். //பாட்டுக்குக்காக பார்ப்போம்

    பதிலளிநீக்கு
  5. இங்கே தெலுங்கு போரடிச்சி விட்டது போல...

    பதிலளிநீக்கு
  6. ஆமாம். இவரு எத்தனை படங்கள் நடிச்சாலும், இவரு பஞ்ச் வசனங்கள் பேசாம 'நடிக்கமாட்டாரு'.

    பதிலளிநீக்கு
  7. தமிழக-அரசு மீது இவ்வளவு நம்பிக்கையா??

    பாவம் சார் நீங்கள்

    பதிலளிநீக்கு
  8. mmmmmm - பாவம் டாக்குட்டரு - ஒண்ணூம் சொல்றதுக்கில்ல

    பதிலளிநீக்கு
  9. டாகுடர் டவுசரைக் கழட்டிய கஸாலி வால்க!

    பதிலளிநீக்கு
  10. I had seen largo winch 1&2 best movie ever. It's about an adventure of adopted son of the world richest man who tries to find the mysteries behind his father death. I think in tamil they might show like son of anil ambani tries to finds the vilan who kills his father and fell in love with vilans daughter ha ha ha this what they do in every movie. I hate tamil moveis LOL!

    Regards
    a British Tamil

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.