என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

புதன், ஆகஸ்ட் 24, 2011

11 பாவம் ஹசாரே.....ஏமாறப்போகிறார்.



அன்னா ஹசாரே, லோக்பால்.......
இது சில மாதங்களாக பரவலாக உச்சரிக்கப்படும் வார்த்தைகள். ஊழலுக்கு எதிராக இதுவரை தனி மனிதனாகவே ஒவ்வொருவரும் போராடிவந்துள்ளனர். ஆனால், ஹசாரேயும் முதலில் அப்படித்தான் போராட வந்தார். ஆனால், இப்போது நாடெங்கும் இவருக்கு அபரிதமான ஆதரவு ஏற்பட்டு லோக்பால் என்பது மிகப்பெரும் அமைப்பாக மாறிவிட்டது.


அதே நேரம் இந்த போராட்டமே ஊழலை ஒழித்து விடுமா என்றால் சந்தேகம்தான். ஊழல் என்பது இப்போது நம் அனைவருக்கும் ரத்தத்தில் ஊறிப்போய்விட்ட ஒன்று.
மக்கள் லஞ்சம் வாங்கவும், கொடுக்கவும் பழகிவிட்டார்கள்.

காரியம் விரைவாக ஆகவேண்டுமென்றால் லஞ்சம் கொடு என்று அதிகாரிகள் கேட்கிறார்களோ இல்லியோ.... சார் இந்த வேலையை சீக்கிரம் முடித்து கொடுங்கள் கேட்பதைவிட அதிகமாக தருகிறேன் என்று மக்கள் சொல்லுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது.

இப்படிப்பட்ட தனி மனிதன் திருந்தினால் தான் எந்த சட்டமும் உயிர்பெறும்.இல்லாவிட்டால் சட்ட மசோதா, சட்ட திருத்தம் எல்லாம் வெறும் பேச்சளவில் ஏட்டில் மட்டும்தான் இருக்கும். திட்டம்போட்டு திருடற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது. அதை சட்டம் போட்டு தடுக்கற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது என்பது மாறி, இப்போது சட்டம்போட்டு தடுக்கற கூட்டமே திட்டம் போட்டு திருடவும் செய்யுது. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல இவர்களே திருந்தினால்தான் உண்டு. நிச்சயம் சட்டமோ, மசோதாவோ இவர்களை திருத்தவே முடியாது .

இந்த லோக்பால் சட்டம் ஒரு வேளை நிறைவேறினால் கூட சட்டத்திற்கு பயந்து மேல்மட்டத்தில் இருப்பவர்கள் ஊழல் செய்ய பயப்படுவார்களே தவிர கீழ் மட்டத்தில் எல்லோரும் செய்து கொண்டுதான் இருப்பார்கள். பாவம் ஹசாரே.... நிச்சயம் இந்த விசயத்தில் அவர் ஏமாறப்போவது உறுதி.

அப்படி அவர் ஏமாறாமல் இருக்க வேண்டுமேன்றால்.... நாம் அனைவரும் லஞ்சம் கொடுக்க மாட்டோம், வாங்க மாட்டோம்...ஊழல்வாதிகளுக்கு உதவமாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் இந்த போராட்டம் வெற்றிபெறும். இல்லாவிட்டால், அந்த முதியவரை உசுப்பேற்றி பலிகடாவாக்கிய பாவம் நம்மை வந்து சேரும்


Post Comment

இதையும் படிக்கலாமே:


11 கருத்துகள்:

  1. ஆனால் இந்த முயற்சியும் எடுக்கப்படாமல் இருந்தால், கையில் சாவியை வைத்திருக்கும் அனைத்து திருடர்களுக்கு கொண்டாட்டமாக அல்லவா போய்விடும்.
    இது குறைந்த பட்ச முயற்சி தான்.

    இந்த அளவுகே மூச்சு திணறுகிறது என்றால் எல்லாம் அரசியல் விளையாட்டு தான்.

    கெட்டவர்களை வீழ்ந்த்த கெட்டவர்கள் தான் வரவேண்டும் போல..

    பதிலளிநீக்கு
  2. அன்னாவுக்கு வேறு சாயம் பூசி ஊழலுக்கு எதிரான "ஒரே" போராட்டத்தை வலுவிழக்க வைக்கக்கூடாது என்பது என் கருத்து.

    பதிலளிநீக்கு
  3. ஆமாம், நானும் இதையே தான் வற்புருத்தியுள்ளேன்.இந்த லிங்கை பாருங்கள். நன்றிhttp://panangoor.blogspot.com/2011/08/blog-post_24.html

    பதிலளிநீக்கு
  4. இவர் எமாறப்போகிறாரா !? இல்லை மீண்டும் மக்கள் ஏமாற்றப்படப் போகிறார்களா !? என்பது போகப் போகத் தெரியும்

    பதிலளிநீக்கு
  5. இங்கு நடப்பது சட்டத்தின் ஆட்சி! கடுமையான உழல் தடுப்பு சட்டம் வேண்டும் எனப் போராட்டம் நடக்கிறது! ஓரளவு கடுமையான சட்டம் வந்தால் குட,அது வெற்றிதான்! அன்னாவை விட அவரின் நோக்கம் பெரிது!

    பதிலளிநீக்கு
  6. வி மர்சனம் யாருக்கும் அப்பாற்பட்டதல்ல! தலைவர்களும், அதிகாரிகளுமே மக்களை வழி நடத்த வேண்டும்! அவர்கள் திருந்தினால் மக்களும் மெல்ல மாறுவார்கள்!அன்னா இன்று வேண்டுமானால் ஏமாற்றப் படலாம்! அவர் தூண்டிய எண்ணம் நிறைவேறுவதற்கு நாமும் உதவிடலாமே!

    பதிலளிநீக்கு
  7. நாம் அனைவரும் லஞ்சம் கொடுக்க மாட்டோம், வாங்க மாட்டோம்...ஊழல்வாதிகளுக்கு உதவமாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  8. அன்னா ஹஸாரேயின் மறு முகத்தை பார்ப்போமேயனால் அது பெரும்பாலோர்களுக்கு அதிச்சியாகவோ ஆச்சர்யமாகவோ இருக்ககூடும்.

    காவியை மறைக்கும் வெள்ளை. அன்னா ஹஸாரே
    http://vanjoor-vanjoor.blogspot.com/2011/08/blog-post_23.html

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.