என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வியாழன், ஆகஸ்ட் 11, 2011

12 நான் ராஜினாமா செய்கிறேன்-கலைஞர் உருக்கமான அறிக்கை...


1986-ஆம் ஆண்டு அமரர் எம்.ஜி.ஆர்,தலைமையிலான அப்போதைய அண்ணா தி.மு.க-அரசு  மேல்சபை என்ற மேலவையை கலைத்தது. எதற்காக பாரம்பரியமிக்க மேலவையை கலைத்தார் எம்.ஜி.ஆர்?. அதன் பின்னே ஒரு ஒரு வலுவான அரசியல் காரணம் இருந்தது.

1986-ஆம் ஆண்டு தமிழ் நாடு மேலவை உறுப்பினராக இருந்த மூன்று பேரின் பதவிக்காலம் முடிவடைந்ததால், அந்த இடத்திற்கு அ.தி.மு.க சார்பில் நடிகை வென்னிற ஆடை நிர்மலா, முன்னாள் அமைச்சரும், தற்போதைய கல்வித்தந்தையுமான ஜி.விஸ்வனாதன், எம்.ஜி.ஆரின் வக்கீல் ராகவாச்சாரி ஆகியோரை நிறுத்தி வெற்றிபெற வைத்து எம்.எல்.சி.,ஆக்கினார் எம்.ஜி.ஆர். இவர்களில் வென்னிற ஆடை நிர்மலா ஏற்கனவே இன்சால்வென்சி என்ற திவால் நோட்டீஸ் கொடுத்தவர் என்பதால் அவரை எம்.எல்.சி.,-ஆக விடக்கூடாது என்று சட்டரீதியாக வழக்கு தொடரப்பட்டது. 


வெ.ஆ. நிர்மலா எம்.எல்.சி.,-யாக தொடர வேண்டுமானால், திவால் நோட்டீஸை ரத்து செய்யவேண்டும், அப்படி ரத்து செய்வதாக இருந்தால்...ரூபாய் 10 லட்சம் கட்டவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
வெ.ஆ. நிர்மலா எம்.எல்.சி-யாக தொடர விரும்பிய எம்.ஜி.ஆர்- தானே முன்வந்து வெ.ஆ. நிர்மலாவிற்காக ரூபாய் 10 லட்சத்தை கட்டினார். ஆனாலும், ஏற்கனவே திவாலாகிப்போயிருந்த நிர்மலாவால் எப்படி ஒரே நாளில் ரூபாய் 10 லட்சத்தை கட்டமுடிந்தது என்று மேலவையில் எதிர்கட்சிகளால் ஏற்பட்ட பெரும் அமளியை தொடர்ந்து தனது எம்.எல்.சி-பதவியை ராஜினாமா செய்தார் நிர்மலா.

இதை தனக்கு ஏற்பட்ட அவமானமாக கருதிய எம்.ஜி.ஆர்- மேல்சபை என்று ஒன்று இருந்தால்தானே என்று முடிவு செய்து மேலவையை கலைக்க உத்தரவிட்டார். அந்த நேரத்தில் மேல்சபை எதிர்கட்சி தலைவராக இருந்தவர் கலைஞர். (மேலவையில் கலைஞர் எப்படி வந்தார் என்று நினைப்பவர்களுக்கு ஒரு ஃபிளாஷ்பேக்....1980-ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அண்ணா நகர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர்...1983-இல் இலங்கையில் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகளான குட்டிமணி உட்பட 37 பேர்கள் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து இலங்கையில் இனக்கலவரம் வெடித்தது. அதன் தொடர்சியாக சிங்களர்கள் மீது போர் தொடுத்தார் பிரபாகரன்.இந்தப்போரை காரணம் காட்டி இலங்கை ராணுவத்தினர் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்தனர். இதனால் கோபமுற்ற கலைஞரும், பேராசிரியர் அன்பழகனும் மத்தியஅரசு அப்பாவி இலங்கை தமிழர்களை காப்பாற்ற முயற்சிக்கவில்லை என்று குற்றம்சாட்டி தம் எம்.எல்.ஏ-பதவியை ராஜினாமா செய்தனர்.அதன் பிறகு சிலமாதங்களில் எம்.எல்.சியாக மேலவையில் நுழைந்தார் கலைஞர். தான் எம்.எல்.சி-யாக இருந்த காரணத்தினால் 1984-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத்தேர்தலில் போட்டியிடவில்லை கலைஞர்....1956-ஆம் ஆண்டில் முதன்முதலில் தேர்தலை சந்தித்தது தி.மு.க, அந்த தேர்தலிலிருந்து 2011-ஆம் ஆண்டு வரை  நடந்த அத்தனை தேர்தலிலும் போட்டியிட்ட கலைஞர் 1984-இல் மட்டும் போட்டியிடவில்லை என்பது கூடுதல் தகவல்.ஓக்கே....பிளாஷ்பேக் முடிந்தது).

மேலவையை கலைக்கும் முடிவை எம்.ஜி.ஆர் அறிவித்ததும்  நான் மேலவையின் எதிர்கட்சித்தலைவராக இருப்பதால்தான் இதை கலைத்துவிட எம்.ஜி.ஆர்-முடிவெடுத்திருப்பதாக அறிகிறேன். நான் இல்லாவிட்டால் இந்த மேலவை நீடிக்கும் என்றால் நான் எனது எம்.எல்.சி-பதவியை ராஜினாமா செய்துவிடுகிறேன் என்று உருக்கமாக அறிவித்தார் கலைஞர். அப்போது மேலவை தலைவராக இருந்த ம.பொ.சிவஞானம் அவர்களும் பாரம்பரிய மிக்க மேலவையை எம்.ஜி.ஆர் கலைக்கக்கூடாது என்று வேண்டுகோள் விடுத்தார்.




ஆனால், அதையெல்லாம் புறந்தள்ளிய எம்.ஜி.ஆர், மேலவையை கலைக்கும் தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்றி, அதற்கு அப்போதைய பிரதமர் ராஜிவ்காந்தி, ஜனாதிபதி ஜெயில்சிங் ஆகியோரிடம் ஒப்புதலும் பெற்றார். அப்பொதைய மேலவையின் மொத்த இடங்கள்=63. அதில் 31 இடங்கள் காலியாக இருந்தது.

கலைக்கப்பட்ட மேலவையிலிருந்து எம்.எல்.சியாக தேர்வு செய்யப்பட்ட ஹண்டே, முகம்மது யூசுப் ஆகியோர் அப்போதைய எம்.ஜி.ஆர், அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்தனர். மேலும், அண்ணா தி.மு.க-சார்பில் மதுசூதனன், ஜேப்பியார், கவிஞர் முத்துராமலிங்கம் உட்பட 14 பேர்களும், தி.மு.க சார்பில் கலைஞர், சாதிக்பாட்சா, PTR.பழனிவேல்ராஜன் உட்பட 7 பேர்களும், பதவியிழந்தனர்.

எம்.எல்.சி-பதவியிழந்தவர்கள் அமைச்சராக நீடிக்க முடியாது என்பதால்...ஹண்டே, முகம்மது யூசுப் ஆகியோரை அமைச்சரவையிலிருந்து நீக்கினார் எம்.ஜி.ஆர்.

இவ்வளவுதான் மேலவை கலைக்கப்பட்ட வரலாறு.....எனக்கு தெரிந்த, கேள்விப்பட்ட, படித்த விஷயங்களை தொகுத்து தந்துள்ளேன்...இதில் ஏதேனும் தவறிருந்தால் அல்லது திருத்தம் இருந்தால் பின்னூட்டத்தில் குறிப்பிடுங்களேன்.

இது என்றோ வரவேண்டிய பதிவு.....இடையில் என் கணினிக்கு பிரச்சினை ஏற்பட்டுவிட்டதால் இப்போதுதான் பதிவேற்றுகிறேன். 


இதுகூட நீங்க படிக்கத்தான் 

அய்யோ பாவம் அம்மா....



Post Comment

இதையும் படிக்கலாமே:


12 கருத்துகள்:

  1. தமிழ் மனத்தில் இணைத்து ..முதல் ஓட்டும் போட்டாச்சு குரு

    பதிலளிநீக்கு
  2. அரசியல் தகவல் களஞ்சியம் என்னும் பட்டம் தருகிறோம்

    பதிலளிநீக்கு
  3. மேலவைப்பற்றி இனி பேசி என்னவாக போகிறது..

    பதிலளிநீக்கு
  4. எம்ஜியாரும் இஷ்டம் போல நடந்திருக்காரு போல....

    பதிலளிநீக்கு
  5. அண்ணனுக்கு அரசியல் ணா அல்வா சாப்பிடரமாதிரி...

    பதிலளிநீக்கு
  6. அப்போ வெண்ணிற ஆடை நிர்மலா தான் மேலவையைக் கலைத்தார்னு சொல்லுங்க..இது தெரியாம நாங்க எம்.ஜி.ஆரைச் சொல்லிக்கிட்டு இருந்தோம்!

    பதிலளிநீக்கு
  7. கஸாலி, நீங்க ஏன் திமுக வரலாறுன்னு ஒரு தொடர் எழுதக்கூடாது? மேட்டர் கலெக்ட் பண்ணிக்கிட்டு எழுதப்பாருங்களேன்..

    பதிலளிநீக்கு
  8. உண்மையிலே வரலாறு மிக முக்கியம் சார்.

    பதிலளிநீக்கு
  9. வைரவேல் திருடன் என்று கருணாநிதியால் அழைக்கப்பட்ட ஆர்.எம். வீரப்பனும் அப்போது மேலவை உறுப்பினர்தான். 1986-ல் திருநெல்வேலி இடைத்தேர்தலில் நின்று வென்றபின் அமைச்சராகத் தொடர்ந்தார்.

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.