என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வியாழன், செப்டம்பர் 13, 2012

18 சோ ராம்சாமியின் இந்த ஜால்ரா போதுமா இன்னும் கொஞ்சம் வேனுமா?




கடந்த வாரம் வெளியான ஆனந்த விகடனில் சோ ராமசாமியின் பேட்டி வெளியாகியிருந்தது. அருமையான கேள்விகளுக்கு அசத்தலான பதில்களை சொல்லியிருந்தார் சோ
அதைப்படித்த பின் இவரையெல்லாம் ஏன் இன்னும் அமைச்சராகவோ, எம்.எல்.ஏ., எம்.பி.யாகவோ ஜெயலலிதா கொண்டுவரவில்லை என்று எனக்குள் கேள்வி பிறந்தது. அப்படி ஒரு ஜால்ரா பதில் அது. சில பதில்களை நீங்களும் பாருங்களேன்...

கேள்வி: சரி அ.தி.மு.க.,ஆட்சியை எப்படி மதிப்பிடுகிறீர்கள்?

சோ: நான் ஏற்கனவே சொன்னதுதான். கடந்த ஆட்சி சீர்குலைத்த நிர்வாகத்தை சீரமைக்கவே அவர்களுக்கு நாளாகும்.

இன்னும் எத்தனை வருடத்திற்கு இதே பல்லவியை பாடிக்கு இருப்பிங்க சார்?...... ஒரு வருடத்தை கடந்து குழந்தை ஓடவும் ஆரம்பிச்சிருச்சு.... பாடவும் ஆரம்பிச்சிருச்சு...இன்னுமா?

கேள்வி: ஒரு வருடம் முடிந்துவிட்டதே? 

சோ: அது பெரிய காலக்கட்டம் இல்லை.

அதானே இதென்ன பெரிய காலகட்டமா? பிஸ்கோத்து.... இன்னும் நாலு வருஷம் கழிக்கட்டும் அப்புறம் பேசிக்கலாம் அப்படித்தானே சார்?

கேள்வி: ஒரு பத்திரிகையாளராக சொல்லுங்கள்.....முதல்வருக்கும், பத்திரிகையாளர்களுக்கும் இடையேபெரிய இடைவெளி இருக்கிறது. அரசின் மீது சிறு விமர்சனம் என்றாலும் வழக்குகள் பாய்கிறது. இந்த அணுகுமுறை சரிதானா? 

சோ: முதல்வரின் வேலையென்ன..எப்போதும் பத்திரிகையாளரை சந்திப்பதா? முதல்வர் ஒன்றும் மக்கள் தொடர்பு அலுவலர் இல்லையே? பத்திரிகையாளரை தினமும் சந்திக்க. அப்புறம் நான் பத்திரிகையாளன் என்றால், நான் எழுதுவதற்கேற்ற பலன்களை நான் எதிர்கொள்ளத்தான் வேண்டும். நானே துக்ளக்குக்காக எவ்வளவோ வழக்குகளை சந்தித்து இருக்கிறேன். 

ஆமா சார்...கரக்டாத்தான் சொல்றீங்க.....முதல்வர் என்ன மக்கள் தொடர்பு அலுவலரா? இல்லியே? ஆனா ஒண்ணு... முதல்வர் மக்கள் தொடர்பு அலுவலர் இல்லை.  மக்கள் பணியாளர்.ஆட்சியாளர்கள் இதை மறந்ததால்தான்  அரசியலை சாக்கடை என்கிறார்கள். மக்களுக்கும் அரசுக்கும் உள்ள பாலமே பத்திரிகைகள்தான் அதை மறந்தைடக்கூடாது. கொடநாட்டில் போய் மாசக்கணக்கில் தங்குவதற்கு பதில் ஒரு மணி நேரம் பத்திரிகையாளருக்கும் ஒதுக்கலாமே....

நான் கேட்க நினைத்ததை விகடன் கேட்டிருச்சு....அதுதான் கீழே இருப்பது.

கேள்வி: எல்லாவற்றுக்கும் வக்காலத்து வாங்குகிறீர்கள். அ.தி.மு.க.,வின் கொள்கை பரப்பு செயலாளர் அல்லது ஜெயலலிதாவின் மக்கள் தொடர்பு அலுவலர் போல.....  



Post Comment

இதையும் படிக்கலாமே:


18 கருத்துகள்:

  1. :-)

    சோவின் பதிலுக்கு நீங்க கொடுத்த நக்கல் கமென்ட் செமயா ரசிச்சேன்...

    பதிலளிநீக்கு
  2. நானும் படித்தேன்! ரொம்பவும் வக்காலத்து வாங்கித்தான் பேசியுள்ளார்!

    இன்று என் தளத்தில்
    ஓல்டு ஜோக்ஸ் 2
    http://thalirssb.blogspot.in/2012/09/2.html

    பதிலளிநீக்கு
  3. கடைசிக் கேள்விக்கு சோ ராமசாமி என்ன பதில் சொன்னார்னு சொல்லாம விட்டுட்டீங்களே... நீங்க சோவுக்கு கொடுத்த கவுண்ட்டர் கமெண்ட்ஸ் செம!

    பதிலளிநீக்கு
  4. சோ அதிகாரபுர்வமில்லா கொள்ளை சாரி கொள்கை பரப்பு செயலாளர் ..

    பதிலளிநீக்கு
  5. // ரொம்ப யோசிக்கிரேப்பா.//

    ரொம்ப இல்ல மச்சான்..ரொம்ப ரொம்ப யோசிக்கிறான்..எதையாவது வச்சு ஒரு பதிவ தேத்திட்றார்... ம்ம்... பதிவர்களில் அரசியல் புலிகிட்ட இருந்து இது போன்ற பதிவுகள் வருவதில் ஆச்சரியம் இல்லை தான்...

    பதிலளிநீக்கு
  6. // மாசக்கணக்கில் தங்குவதற்கு பதில்//

    நீங்க பின்னால அடிச்சிருக்குற கலருக்கு ..//தங்குறதுக்கு பதில் //, அப்பிடிங்கறது தூங்கறதுக்கு பதில் என்பது போல இருந்தது முதலில் பார்க்கும் போது... எல்லாமே ஒன்னு தான்...

    பதிலளிநீக்கு
  7. சோ ஒரு ஜால்ரா ..அவரிடமிருந்து இப்படி ஒரு பேட்டி வராவிட்டால்தான் ஆச்சர்யம்....அதற்கு உங்களின் கமென்ட் அருமை...சோ ஒரு பச்சை ஜால்ரா என்பதை குறிக்கத்தான் உங்கள் கமெண்டுக்கு பச்சை கலரோ...

    பதிலளிநீக்கு
  8. 'நட்டநடுசென்டர்' சொம்பு சோவின் பேட்டி அருமை...

    பதிலளிநீக்கு
  9. என்ன செய்வது அண்ணே எல்லாம் காலக்கொடுமை ..
    இவர் துதி என்றும் நிற்காது அண்ணே

    பதிலளிநீக்கு
  10. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

    பதிலளிநீக்கு

  11. தாத்தாவை தூக்க அவர்தானே முயற்சி எடுத்து வி.காந்தை அ.தி.மு.கவுடன் கூட்டணி உண்டாக்கினார்.
    அவருக்கு தெரியும் இவங்க தாத்தா மாதிரி என்ன எழுதினாலும் சகிக்கமாட்டங்கன்னு,கும்பிடவும் தெரியும் உள்ளே வச்சு கும்மவும் தெரியும்னு.

    அதனால்தான் ஜால்ரா கிங் ஆகிவிட்டார்.

    பதிலளிநீக்கு
  12. அரசியல் "குரு" ன்னா இப்புடித்தான் இருக்கணும்!இப்புடித்தான் பேட்டிக்குப் பதில் குடுக்கணும்!இல்லேன்னா,ஆஸ்தானம் பறி போயிடுமே?????

    பதிலளிநீக்கு
  13. ஆகா தமிழ் மணமா அல்லது சாக்கடை மணாமா திரும்பிய திசை எல்லாம் கோப்பி பேஸ்ட் பதிவுகள். தமிழ்மணம் அண்ணாக்கள் சொல்வார்கள் நாங்கள்தான் தமிழில் பெரிய லாடு லபக்குதாஸ், இன்லி, தமிழ் வெளி, டாப் டென் ஐயாமார்கள் அமைதியா ஆர்ப்பாட்டம் இல்லாமல் இருகிறார்கள். என்பா இஸ்கு உங்களிடம் பதிவிடும் பதிபவர்கள் நடத்தும் குடிமி சண்டை தெரியாதா? இந்த டுபுக்குகள் சொல்வார்கள் கோப்பி பேஸ்ட் பண்ணி எழுதினால் உடனே நீக்கி விடுவோம், தமிழ் மணத்தில் வெளிவரும் ஒரு சில பதிவுகள் தவிர எல்லோரும் காப்பி தான். எல்லா பதிபவர்களும் ஏதோ நிருபர்கள் வைத்து செய்தி போடுவது போல். இது மட்டுமல்லாது பதிவை வெளியிடும்போதே சொல்வார்கள் தனிப்பட்ட தாக்குதல், மத சம்மந்தமாக தாக்குதல்கள் கூடாது என்று ஆனால் அங்கே மதங்களை இழிவுபடுத்தி எழுதப்படும் விசயங்களும், தமிழர்களுக்குள்ளே சண்டையை உண்டாக்கும் விடயங்களுமே அதிகம். இந்த நாற்றம் பிடித்த திரட்டியில் எழுத நீயா நானா என்று போட்டி வேறு.

    பதிலளிநீக்கு
  14. நல்லது நடந்தால் சரிதான்......

    நன்றி,
    மலர்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    பதிலளிநீக்கு
  15. jayalalita[aval]others also[sutiran] this cho ramasamy iyer coment

    பதிலளிநீக்கு
  16. நீங்க தான் இவருக்கு 'இலவச' விளம்ன்பரம் கொடுகிரீர்கள்...கண்டுக்காம உடுங்க அவரே கடையை மூடி விடுவர்.

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.