ஆனந்த விகடனிலிருந்து இனையத்தில் வரும் என் விகடன் சென்னை பதிப்பில் கடந்த வாரம் நடைபெற்ற வலைப்பதிவர் திருவிழாவை பற்றிய கட்டுரை வெளிவந்திருக்கிறது.
வலைப்பக்கங்களில் அறிமுகமாகி 10 ஆண்டுகளுக்கு மேல் இணையம் வழியே எழுதி வந்தாலும், தங்களுக்கான நேரடித் தொடர்புகள் எதுவும் இன்றி பின்னூட்டத்தின் ஊடே மற்ற வலைப்பதிவர்களின் பதிவுகளுக்குத் தங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் முன்வைத்தனர் வலைப்பதிவாளர்கள்.
ஆனால், இப்போது வலையாளர்களின் கவலையைப் போக்கி இவர்களுக்கான முதல் 'தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா’ சென்னையில் கடந்த ஆகஸ்ட் 26- ம் தேதி சென்னை வலைப்பதிவர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்டது. ''சில மூத்த பதிவர்களின் வழிகாட்டுதலின்படியும் பதிவர்களிடையே ஒரு உறவு பிணைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் இளைய வலைப்பதிவர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடும் இது நடத்தப்பட்டது'' என்கிறார் விழா ஏற்பாட்டாளரில் ஒருவரான மதுமதி. இதில் பெண் வலைப்பதிவர்கள் பலர் கலந்துகொண்டனர். பெண் வலைப்பதிவர்களுள் ஒருவரான சசிகலாவின் 'தென்றலின் கனவு’என்ற கவிதை நூலும் வெளியிடப்பட்டது.
இந்த வலைப்பதிவு சங்கமத்தில் நாவலாசிரியரும் திரைப்படவசனகர்த்தாவுமான பட்டுக்கோட்டை பிரபாகர் பங்குகொண்டு பேசியபோது, '' வெறும் காகிதத்தில் எழுத்துப் பிரதிகளாக உருவாகி இன்று வலைப்பக்கம் வரை இலக்கிய வளர்ச்சி நீண்டுள்ளது. வலைப்பதிவர்கள் மக்களுக்கானதாகப் பயன்படுத்த வேண்டும். தன் சொந்த விஷயங்களை விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு மக்களுக்குத் தேவையான எழுத்தைப் படைக்கவேண்டும். தங்கள் வலைப்பக்கங்களுக்குத் தாங்களே ஆசிரியர் என்ற பொறுப்பு உணர்வோடும் வலைப்பதிவர்கள் செயல்பட வேண்டும்'' என்றார்.
ஒரு நாள் முழுதும் நடைபெற்ற விழாவில் வலைப்பதிவர்கள் சுய அறிமுகம், அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பாராட்டு நிகழ்வுகள், கவியரங்கம் என இன்னும் பற்பல நிகழ்ச்சிகளும் அரங்கேறின. 'வலைப்பதிவர்களின் முதல் சங்கமம்' ஆரோக்கியமான வலைப்பதிவுகளுக்கு வழி வகுக்கும். இன்னும் புதுப் புது வலையாளர்களை உருவாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை!
நன்றி: என் விகடன்
Tweet |
அருமை. பதிவர்களை பெருமைப்படுத்திய விகடனுக்கும் நன்றி.
பதிலளிநீக்குமிகவும் மகிழ்வான செய்தி பகிர்வாக்கிய தங்களுக்கும் விகடனுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
பதிலளிநீக்குமகிழ்ச்சியான செய்தி...
பதிலளிநீக்குதகவலுக்கு நன்றி
ரொம்ப முக்கியமான விஷயத்தை பகிர்ந்ததற்க்கு நன்றி கஸாலி...
பதிலளிநீக்குஆனந்தவிகடனுக்கு நன்றிகள் பல
பதிலளிநீக்குபதிவர்களின் சாதனைக்கு உரமிட்ட விகடன்....
பதிலளிநீக்குசில புகைப்படங்களை யாரும் புதிதாக காண்கிறேன்
மகிழ்ச்சியான செய்தி...
பதிலளிநீக்குதகவலுக்கு நன்றி
அறிந்துகொண்டேன்.
பதிலளிநீக்குதகவலுக்கு நன்றி.
வாழ்த்துக்கள்.
மகிழ்ச்சியான செய்தி, பகிர்விற்கு நன்றி.
பதிலளிநீக்குமிகவும் சந்தோசமான செய்தி...
பதிலளிநீக்குஆனந்தவிகடனுக்கு நன்றி...
வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஅருமை.. இதுபோன்ற நிகழ்ச்சிகளால் வலைப் பதிவுகளின் வீச்சு இன்னும் அதிகமாகின்றது!!
பதிலளிநீக்குதங்கள் பதிவால்
பதிலளிநீக்குஉடன் தகவலைத் தெரிந்து கொண்டோம்
மிக்க நன்றி
tha.ma 11
பதிலளிநீக்குசந்தோசம்
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி..!
பதிலளிநீக்குபதிவர்களுக்கு மிகப்பெரிய உந்துதல்... ஒரு சிலரின் காதுகளில் வரும் புகையின் அளவு இன்னும் அதிகரிக்கும்..
பதிலளிநீக்குமிகவும் சந்தோஷம்
பதிலளிநீக்குபகிர்வுக்கு மிக்க நன்றி
ஆ,வி,ல வந்ததை நான் கவனிக்கலை தம்பி. தேடிப் பிடிச்சு பகிர்ந்ததுக்கு மிக்க நன்றி.
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குநீங்கள் சொல்லி தான் தெரிந்தது நன்றி கஸாலி
பதிலளிநீக்குsanthosam kasali
பதிலளிநீக்குமகிழ்ச்சியான தகவல்! நன்றி!
பதிலளிநீக்குஇன்று என் தளத்தில்
அன்னையின் ஆசி! பாப்பாமலர்!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_8.html
சோலார் ரிக்ஷா! கடலில் அடங்கும் ஆம்ஸ்ட்ராங்க! கூகுள் டூடுள்! கதம்பமாலை!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_1615.html
மிகவும் சந்தோஷமான செய்திக்கு நன்றி
பதிலளிநீக்கு