1960,70-களில் எம்.ஜி.ஆர்.,சிவாஜி, ஜெமினி காலத்தில் அணிந்திருந்த பேண்ட்டின் பேஷனே மீண்டும் 1990-களின் இறுதியில் வந்தது. அவ்வப்போது கடந்த கால பேஷன்கள் மீண்டும் திரும்பி வந்துகொண்டே இருக்கும். அதுதான் காலத்தின் கட்டாயம். அதைப்போல் இப்போது ஒரு காலம் வந்திருக்கிறது. அது மின்சாரம் இல்லாத இருண்டகாலம்.
கிராமப்புறங்களில் ஒரு நாளைக்கு 16 மணி நேரத்திற்கும் மேல் மின் தடை ஏற்படுகிறது. மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பரீட்சைக்கு படிக்கிறார்கள் மாணவர்கள். இன்னும் இந்த அரசாங்கத்தை நம்பாமல்..... ஏதாவது இன்வெர்ட்டர், ஜெனரேட்டர் என்று எதாவது வாங்கி வைத்துக்கொண்டு காலத்தை கழிக்கலாம் என்று பார்த்தால் இன்வெர்ட்டர் சார்ஜ் எங்கேருந்து ஏற்றுவது? கரண்ட் இருந்தால்தானே....
சரி.... ஜெனெரேட்டராவது வாங்கி வைத்துக்கொண்டு சமாளிக்கலாம் என்று பார்த்தாலும், அதை இயக்கும் பெட்ரோல் டீசல் விலையை மாதந்தோறும் தவணை முறையில் ஏறிவிடுகிறது ம.அரசு(ம.அரசு என்பதை மத்திய அரசு என்று படிக்கவும். மண் அரசு என்று அர்த்தம் கொள்ள வேண்டாம்). வேற என்னதான் வழின்னு பார்த்தால் சோலார் சிஸ்டம்தான் நல்லது என்று நினைத்தாலும் அதுவும் இப்போது எட்டாக்கனியாகவே இருக்கிறது. சரி என்ன செய்றது? இந்த கற்காலத்திலேயே கொஞ்சநாள் இருந்துட வேண்டியதுதான் போல..... என்னது கொஞ்ச நாளா? அதுக்கப்புறம் இந்த மின்சார பிரச்சினை தீர்ந்துடுமான்னு கேட்கறீங்களா? தீரவே தீராது. ஆனால், நாம இந்த கற்காலத்திற்கு பழகி விடுவோம். அப்புறம் கரண்டே தேவையில்லை.
============================
வரவர இந்த ஆட்சியில் இருப்பவர்கள் செய்யும் காமெடிக்கு அளவே இல்லாமல் போச்சு.... சமீபத்தில்தான் பணம் என்ன மரத்திலா காய்க்கிறது என்று யாருக்கும் தெரியாத ரகசிய முத்தொன்றை உதிர்த்திருந்தார் மண்(ணு) மோகன் ஜி. இப்ப அதைப்போல சில முத்துக்களை உதிர்த்திருக்கிறார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் அவர்கள். சென்னை மருத்துவமனையில் ப இறந்த குழந்தையின் முகத்தில் எலி கடித்த சம்பவத்தை பற்றி கேட்டபோது அதற்காக நானா எலி பிடிக்க போகமுடியும்ன்னு கேட்டார். நேற்றுக்கூட ஒரு விழாவில் தண்ணீர் வரவில்லை என்று மக்கள் புகார் செய்தபோது எங்கள் வீட்டிலேயே தண்ணீர் வரவில்லை நான் யாரிடம் சொல்வது என்றாராம். இப்படிப்பட்டவர்களை அமைச்சராக பெற்றதற்கு தமிழகம் தவம் செய்திருக்கனும் போல....
1996-ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். பொதுத்தேர்தல் சமயம். அப்போது தேனியில் அண்ணா.தி.மு.க., சார்பில் போட்டியிட்டார் அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள். பிரச்சாரத்திற்கு வந்த அவரிடம் மக்கள் தண்ணீர் பிரச்சினையை பற்றி கேட்டார்கள். உடனே கடுப்பான நாவலர் தண்ணீரை என்ன நான் எனது ஜோப்பிலா வைத்திருக்கிறேன்னு கேட்டுவிட்டார். அதுவே தொகுதி முழுக்க எதிரொலித்து அவர் எங்குமே நுழைய முடியவில்லை. மிகப்பெரும் தோல்வியை சந்தித்தார். நடமாடும் பல்கலை கழகத்துக்கே அந்த நிலை. பொதுவாழ்க்கைக்கு வரும்போது கொஞ்சம் அடக்கியே வாசிங்க. ஏதும் செய்யாவிட்டாலும் பரவாயில்லை. ஏதும் சொல்லாமலாவது இருங்க....இப்பப்பாருங்க.... கரண்டைப்போலவே மின்சாரத்துறை அமைச்சரையும் காணவில்லை. அவரு மாதிரி சூதனமா இருங்க அமைச்சர் பெருமக்களே......ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டு என்பார்கள். அதுவே அரசியல்வாதி ஆத்திரப்பட்டால் ஓட்டுக்கு வேட்டு.
============================
அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் ஒரு ஃபெவிக்கால் பந்தத்தை ஏற்படுத்தியே தீருவேன்னு தலைவர் சக்கர நாற்காலியிலேயே ஒத்தைக்காலில் நிற்கிறார் உட்கார்ந்திருக்கார். நேற்று மதுரை நிர்வாகிகளை அழைத்து முத்து காலத்தில் நடந்த சம்பவங்களையெல்லாம் எடுத்து சொல்லி பாடம் நடத்தியிருக்கிறார். இது முத்து காலமில்லை. சகோதரயுத்தம்னு மறுபடியும் தலைவரிடம் யாராவது ஞாபகப்படுத்துங்கப்பா.....
============================
நீதானே என் பொன் வசந்தம்......கவுதம் வாசுமேனன் இயக்கத்தில் இளையராஜா இசையமைத்திருக்கும் படம். பாடல்களைப்பற்றி ஆஹா ஓஹோன்னு எழுதியிருந்தாங்க சிலர். அப்படி என்ன அதிசயத்தை நிகழ்த்திருக்கார் இளையராஜா என்று கேட்டால்.... ஹூஹூம்....பெருசா ஒண்ணுமில்லை. சாதாரணமாகத்தான் இருக்கிறது.அட...இதுக்கு எதுக்குப்பா இளையராஜா? அம்மிக்கொத்த எதுக்குய்யா சிற்பி?
======================
Tweet |
பொடிமாஸ் நல்ல இருக்கு,,,
பதிலளிநீக்குநீங்களும் அம்மியைத்தான் கொத்தறீங்க சகோ,கஸாலி :-)
பதிலளிநீக்குசலாம் கஸாலி அண்ணே..
பதிலளிநீக்குஅருமையான பகிர்விற்கு நன்றி..!
//இது நாள் வரை நமக்கு கிடைத்து வந்த மின்சாரம், கூடங்குளம் பிரச்சனை வந்தவுடன், இன்று தமிழ் நாட்டில் சுமார் 14 மணிநேரம் மின்வெட்டு எப்படி வந்தது? நாம் பயன்படுத்திய மின்சாரம் எங்குதான் போனது?
அந்நிய நாட்டு முதலாளிகளுக்கு தடையில்லா மின்சாரம் கிடைக்கும் போது, நம் வீட்டு குழந்தைகள் படிக்க மின்சாரம் தர முடியாதா?
அரசியல் வாதிகள் ஓட்டு வாங்குவதற்காக இலவசமாகக்கொடுக்கும், கலர் T.V கிரைண்டர், மின் அடுப்பு, மிக்ஸி எல்லாம் கரண்ட் இல்லாமல் வேலை செய்யுமா?
நான் ஆட்ச்சிக்கு வந்தால் தடையில்லா மின்சாரம் தருவேன் என்று சொன்ன வாக்குறுதி என்னவாயிற்று?
கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் நமக்கு போதுமா?
தமிழ் நாட்டிற்கு தண்ணீர் தராத கர்நாடகவிர்க்கும், கேரளாவிற்கும் நாம் அவசியம் NLC கரண்டைக் கொடுக்கனுமா? உங்களுக்கு ஓட்டுப் போட்ட மக்களுக்கு நீங்கள் செய்யும் பணி இதுதானா?/// நண்பர் ஒருவர் முகநூளில் பகிர்ந்த கருத்து இது..!
நச் நச்னு இருக்குங்க.
பதிலளிநீக்குநல்ல சுவையான பொடிமாஸ் சகோ
பதிலளிநீக்குInteresting. Neethaanae songs are not bad. They are ok
பதிலளிநீக்கு//ஏதாவது இன்வெர்ட்டர், ஜெனரேட்டர் என்று எதாவது வாங்கி வைத்துக்கொண்டு காலத்தை கழிக்கலாம் என்று பார்த்தால் இன்வெர்ட்டர் சார்ஜ் எங்கேருந்து ஏற்றுவது? கரண்ட் இருந்தால்தானே....//
பதிலளிநீக்குபேசாம இந்த மாசம் ரேஷன்கடைல ஏழைகள் ஒழிக்கும் விதமாக ஏதேனும் விஷேஷ உணவு பொருள் அரசாங்கம் கொடுக்கலாம்! ஏழைகள் மட்டுமே தான் இந்த மின்வெட்டால் பாதிப்படைறாங்க... மிச்ச ஆளுங்களாம் இன்வெட்டர், சார்ச் பேன், ஜெனரேட்டர்ன்னு எப்படியாவது சமாளிச்சுடுறாங்க!
//அட...இதுக்கு எதுக்குப்பா இளையராஜா? அம்மிக்கொத்த எதுக்குய்யா சிற்பி?//
பதிலளிநீக்குஅடடே ஆச்சர்யக்குறி :-)
//சென்னை மருத்துவமனையில் பெருச்சாளி கடித்து ஒரு குழந்தை இறந்த சம்பவத்தை பற்றி கேட்டபோது //
பதிலளிநீக்குஇறந்த குழந்தையை தான் எலி முகத்தை சிதைத்துவிட்டதாக தானே நியூஸ் பேப்பரில் வந்துச்சு! இது வேற நியூஸ்ஸா!!!
//இப்படிப்பட்டவர்களை அமைச்சராக பெற்றதற்கு தமிழகம் தவம் செய்திருக்கனும் போல....//
ஹா..ஹா..ஹா..
சத்தியமா மக்கள் புண்ணியம் பண்ணியிருக்கணும்... :-)
ஆம் நீங்க சொல்வதுதான் சரி.அவசரத்தில் மாறி விட்டது.
நீக்கும.அரசு என்பதை தாராளமாக மண்ணாப்போன அரசு என்றே படிக்கலாம்ன்னே...தப்பே இல்லை...N E P பட பாட்டுக்கள் கேட்க கேட்க நல்லாத்தான் இருக்கு அண்ணே....மூணு பாட்டு அருமை...
பதிலளிநீக்கு// 1996-ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். //
பதிலளிநீக்குஎன்ன நினைக்கிறேன்?? நீ பாட்டுக்கு கான்பிடன்ட்டா சொல்லு,, ஏன்னா எங்களுக்கு அது பத்தி எதுவும் தெரியாது... ஹா..ஹா..ஹா.. நீ சொல்றது தான் செய்தி...
இதுக்கு ஓட்டு போட்டன்னா என்னன்னு தெரியலயே?? அட ஆண்டவா.. கொஞ்ச நெஞ்ச லிங்க்கா அனுப்புறீங்க...முடியல...
பதிலளிநீக்குவர வர அமைச்சர்களுக்கு பயமே இல்லாமே போய்டிச்சு. உடன் பிறவா சகோதரி மவுனமா இருப்பதால் ,இந்த அமைச்சர்களுக்கு தலையும் காலும் புரியமாட்டேன்கிறது. அவுங்க சாட்டையை கையில் எடுத்தால் அமைச்சர்களுக்கு பயம் வரும்.
பதிலளிநீக்குமொத மாதிரி 3 மாசத்துக்கு ஒரு முறை அமைச்சரவை மாத்தினால்தான் அறிவு வரும்.
பொடிமாஸ் ரொம்ப நல்ல இருக்கு....பகிர்வுக்கு நன்றி....
பதிலளிநீக்குநன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
பொடிமாஸ் நல்லா இருக்குங்க... நன்றி...
பதிலளிநீக்கு