கூடங்குளம் அணு உலையை எதிர்த்து மக்கள் இடிந்தக்கரையில் மணலில் புதைந்து ஒரு நூதன போராட்டத்தை நடத்திவருகிறார்கள். அதில் நேற்று வைகோவும் கலந்துகொண்டு தன்னை மணலில் புதைத்துக்கொண்டார். இந்தப்போராட்டத்தை பதிவுசெய்த தினமலர் பத்திரிகை வைத்த தலைப்பு என்ன தெரியுமா? மண்ணில் புதைந்தார் வைகோ......
அடப்பாவீங்களா? இதற்கு வேறு தலைப்பே கிடைக்கவில்லையா?
தனக்கு பிடிக்காதவர்களை பற்றி செய்தி வெளியிடும்போது தினமலர் இப்படிப்பட்ட விஷமத்தனங்களை செய்துவருவது வாடிக்கைதான். அதற்காக மண்ணில் புதைந்தார் என்றா தன் வெறுப்பை காட்டுவது. எனக்கு வைகோமீது எத்தனையோ கருத்துவேறுபாடுகள் இருந்தாலும், இன்று மக்களுக்காக போராடும் ஒரு சில தலைவர்களில் வைகோவும் ஒருவர் என்பதை மறுக்க முடியாது.. உங்களுக்கு வைகோவை பிடிக்காவிட்டால் அவரது செய்தியை வெளியிடாமல் இருங்கள். அதைவிடுத்து இப்படியெல்லாம் தலைப்பிட்டு பத்திரிகை தர்மத்தை கெடுக்காதீர்கள்.
---------------------------
பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காய் மாறியது என்பார்கள். அப்படித்தான் ஆகிவிட்டது அண்ணா வளைவு விஷயமும். மாநகராட்சி மூலம் தீர்மானம் நிரைவேற்றி இடிக்கப்பார்த்தார்கள் அண்ணா வளைவை. அது என்ன இப்போது கட்டிய வளைவா தொட்டவுடன் பொலபொலவென்று கொட்ட. என்னன்னவோ போராடிப்பார்த்தும் இடிக்க முடியவில்லை. சீச்சீ இந்தப்பழம் புளிக்கும் என்பதுபோல விட்டுவிட்டார்கள். இப்போது மறு சீரமைக்கும் பணி நடைபெறுகிறது.
முந்தைய ஆட்சியில் திட்டமிடப்பட்டது என்றோ, அதில் உள்ள சூழ்ச்சி குறித்தோ தெரியாமல், முதல்வர் திறந்து வைக்கப்போகிறார் என, தெரிவித்ததால், ஏமாந்து, அண்ணா பவள விழா வளைவை இடிக்க அனுமதிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றி விட்டோம். அதற்காக நான் வெட்கப் படுகிறேன்; வேதனைப் படுகிறேன் என்று இப்போது மேயர் சைதையார் வாய்திறந்திருக்கிறார். அடேங்கப்பா..... முந்தைய ஆட்சித்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவதில் தான் எவ்வளவு அக்கறை இந்த அண்ணா.தி.மு.க.,வினர்களுக்கு என்று கேட்க தோன்றுகிறது.
-------------------------
ஃபேஸ்புக்கில் ரசித்த படம்....
Tweet |
தினமலர் என்றென்றும் மாறாத விசத்தன்மை உடைய நச்சுப்பாம்பு ....அதை இதுபோன்ற செய்திகளை கண்டித்துதான் நசுக்க வேண்டும்....
பதிலளிநீக்குஎனக்கு பிடித்த ஒரு அரசியல் தலைவர் வைக்கோதான்.....நல்ல மனிதர் அரசியலில் இருக்கும் அனைவரும் திருடர்கள் தான் ஆனால் திருடர்களில் நல்ல திருடர் வைக்கோ தான் ....
பதிலளிநீக்குsalam
பதிலளிநீக்கு//அதற்காக நான் வெட்கப் படுகிறேன்; வேதனைப் படுகிறேன் என்று இப்போது மேயர் சைதையார் வாய்திறந்திருக்கிறார். //அரசியல்ல இதல்லாம் சாதரணமப்ப ...
கட்டுரை அருமை சகோ..
என் தளத்தில் இப்பொழுது:
நரேந்திர மோடி-அதிகாரபூர்வ பெயர் மாற்றம்
கட்டுரையை பற்றி :
பதிவுலகில் இருபவர்களுக்கே இவ்விசயம் தெரியவில்லை என்றால் மற்ற மக்களை பற்றி யோசியுங்கள்,நம் ஊடகங்கள் அப்படி உள்ளது....
நீங்கள் அறிந்த இவ்வசயத்தை பிறருக்கும் சொல்லுங்கள் முடிந்தால் இந்த கட்டுரையின் லிங்கையும் உங்கள் தளத்தில் கொடுங்கள்,பிறருக்கும் இவ்விசயம் தெரிய உதவுங்கள்.
http://tvpmuslim.blogspot.in
கஸாலி...
பதிலளிநீக்குதேவை ஏற்பட்டால் அண்ணா வளைவை இடிப்பதில் எந்த தவறும் இல்லை என்பதே என் கருத்து.... அண்ணாவின் புகழ் சொல்ல ஆயிரம் விஷயங்கள் நம் தமிழகத்தில் உண்டு... இந்த வளைவு தான் சொல்லும் என்று இல்லை...
கண்டிக்கப் பட வேண்டிய விஷயம்...
பதிலளிநீக்குபடிச்சுட்டேன் அண்ணா...
பதிலளிநீக்குஆனா கருத்து சொல்ற அளவுக்கு எனக்கு ஞானம் பத்தாது lol :-)))))))
ஆமிக்கு இன்னா தன்னடக்கம் பாருங்களேன் தம்பி
பதிலளிநீக்குஇல்லையா பின்ன... நாங்களாம் ரொம்ப நல்லபிள்ளையாக்கும்... :-) அதுவும் ராஜிக்கு தங்கச்சின்னா சொல்லவா வேணும் :-)
நீக்குதினம் ஒரு திட்டம் என்று வெறும் அறிவிப்பு வெளியிடும் காட்சிதான் நடைபெறுகிறது.
பதிலளிநீக்குஆட்சி எங்கே நடக்கிறது.
தமிழனின் தலைவிதி. நான்கு மணி நேரம் மின் வெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓட்டளித்தார்கள். இப்போ மொத்தமே நான்கு மணி நேரம்தான் மின்சாரம் கிடைக்கிறது, தாத்தா ஆட்சியில் என்னவெல்லாம் எழுதியது தினமலர் இப்போது இந்த ஆட்சிக்கு வாயை திறக்கக் காணோம்.
தினமலம் விற்பனையில் வீழ்ச்சியைச் சந்திக்கிறதோ,என்னமோ?ஹி!ஹி!ஹி!!!
பதிலளிநீக்கு