என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

திங்கள், அக்டோபர் 01, 2012

9 தள்ளாட்டமான தாண்டவம்.....




தன் மனைவி மற்றும் நண்பன் சாவிற்கும், தனக்கு கண்பார்வை பறி போனதற்கும் காரணமானவர்களை அழிக்க தன் நண்பனின் மனைவியோடு சேர்ந்து விக்ரம் ஆடும் ஆட்டமே தாண்டவம்.

பார்த்துப்பார்த்து சலித்துப்போன ஒரு கதையில் நடிக்க எப்படி தேசிய விருது பெற்ற விக்ரம் ஒத்துக்கொள்கிறார் என்றுதான் விளங்கவில்லை.. எமி ஜாக்சன்,சந்தானம், நாசர், ஜெகபதிபாபு, தம்பி ராமையா என்று எல்லோரும் நடித்திருக்கிறார்கள்.

இதில் சந்தானம் கொஞ்சம் அதிகமாக பேசுகிறாரோ என்று தோன்றுகிறது. ரூம் போட்டு என்ன சரக்கடிக்கலாம் என்று வசனம் பேசி இந்தப்படத்திலும் சரக்கை கை விடவில்லை.

ஓரிடத்தில் எமிஜாக்சனை வம்பிழுக்கும் ரவுடிகளை துவம்சம் செய்வார் விக்ரம். அப்போது விக்ரம் தவற விட்ட செல்போனை எமி அவரிடம் கொடுக்காமல் தானே வைத்துக்கொள்கிறார். முக்கியமான ரகசியம் அடங்கிய செல் போனை தொலைத்துவிட்டு தேடவேயில்லை விக்ரம்.



சரி அதாவது பரவாயில்லை. விக்ரம்தான் கொலைகாரன் என்று எமிக்கு தெரிந்ததும் அவசர அவசரமாக அந்த செல்போனை எடுத்து ஆராய்ச்சி செய்கிறார். அதில் விக்ரம் அடுத்து செய்யப்போகும் கொலைப்பற்றிய ஒரு எஸ்.எம்.எஸ் இருக்கிறது. அடுத்தடுத்து யாரை கொல்லலாம் என்று விக்ரமிடம் லட்சுமிராய் சொன்னப்பிறகு எதுக்கு அந்த எஸ்.எம்.எஸ். அதுவும் கண் பார்வை இழந்தவருக்கு?.

அடுத்த லாஜிக் ஓட்டை என்றால்.....தன் கணவன் என்ன வேலை செய்கிறான் என்பதுகூட தெரியாமல் ஒரு டாக்டருக்கு படித்த மனைவி இருப்பது நம்ப முடியவில்லை. கல்யாண பரிசு தங்கவேலு காலத்திலா இருக்கிறார்கள் இப்போதைய மனைவிகள்?. 

விக்ரம் ஒரு சப் இன்ஸ்பெக்டர் என்ற நினைப்பில் இருக்கும்போது அனுஷ்காவிற்கு வராத காதல், அவர் ஒரு இந்தியாவின் டாப்- 5  ஐ.பி.எஸ் ஆபீசர் என்று தெரிந்ததும் பீறிட்டு வருகிறதாம் அட போங்கப்பா...

விகரமின் நடிப்பில் நல்ல முதிர்ச்சி தெரிகிறது...கூடவே முகத்திலும். 

பாடல்கள் சுமார் ரகம்தான். பின்னணி இசையும் பெரிதாய் மிரட்டவில்லை.ஆனால் ஒளிப்பதிவு  அருமையாக இருக்கிறது. 
விக்ரம் இப்படியே இன்னும் நாலு படம் நடித்தால் போதும், அவரை ராமராஜன், அவரின் சொந்த மச்சான் பிரசாந்த் போல  காணாமல் போனவர்களின் லிஸ்டில் சேர்த்து விடலாம். சுருக்கமாக சொல்வதென்றால் விக்ரமிற்கு இது இன்னொரு ராஜபாட்டை ஆகவேண்டிய படம். அது விக்ரமின் பாடி லாங்க்வேஜாலும், எக்கோ லொகேசன் என்ற புதுமையாலும் ஜஸ்ட் மிஸ்சாகி விட்டது. 

தாண்டவம்-தள்ளாட்டம்.


Post Comment

இதையும் படிக்கலாமே:


9 கருத்துகள்:

  1. #கல்யாண பரிசு தங்கவேலு காலத்திலா இருக்கிறார்கள் இப்போதைய மனைவிகள்?. #

    ஆஹா...புதுவகையான நக்கலாக இருக்கே...

    பதிலளிநீக்கு
  2. #விகரமின் நடிப்பில் நல்ல முதிர்ச்சி தெரிகிறது...கூடவே முகத்திலும். #


    இனி அவர் க்ளோஸ் அப் காட்சிகளை தவிர்ப்பது நல்லது..அவருக்கும் ஆடியன்சுக்கும்

    பதிலளிநீக்கு
  3. Reading a film review from you for the first time. Good Kazali !

    பதிலளிநீக்கு
  4. உழைப்புக்கு பலன் இல்லாமல் போகிறது ....விக்ரமை பொறுத்த வரை பாவம்

    பதிலளிநீக்கு
  5. நல்லாருக்கீங்களா சார்? சினிமா பத்தி பேசுறதே வேஸ்ட் சார்.

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா1 அக்., 2012, 4:02:00 PM

    இன்னொரு ராஜபாட்டை நல்ல கம்பேரிசன் அண்ணே..

    பதிலளிநீக்கு
  7. என்ன இந்த பக்கம் சினிமா வெல்லாம் களை கட்டுது ..,
    ஆனா நறுக்குன்னு சொல்லி இருக்கீங்க அண்ணே

    பதிலளிநீக்கு
  8. அன்பின் ரஹீம் கஸாலி - தாண்டவம் பட விமரிசனம் அருமை - நிறை குறை அனைத்தையும் அழகாக - தெளிவாக எழுதியமை நன்று. நல்வாழ்த்துகல் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.