நிலவை காட்டி அம்மா சோறூட்டினாள் அன்று
நிலவு வெளிச்சத்தில் சோறூட்டினாள் இன்று
-மின்வெட்டு
===========
சீரியலின் விளம்பர இடைவேளைகளில் மட்டும் கிடைத்துக்கொண்டிருந்த சாப்பாடு இப்போதெல்லாம் விரும்பிய நேரமெல்லாம் கிடைக்கிறது- மின்வெட்டு வாழ்க...
============
மின்சார கனவு என்று படம் எடுத்த ராஜீவ் மேனன் இப்போது அந்த படத்தை எடுத்திருந்தால் என்ன தலைப்பு வைத்திருப்பார்?
மின்சாரமே கனவு என்று தலைப்பு வைத்திருப்பார்.
============
உன்னை பிரிந்து
ஒரு நிமிடம் கூட
என்னால் தூங்க முடியவில்லை.
எங்கிருந்தாலும்
வந்துவிடு என் செல்ல
மின்சாரமே...
===========
மின்சாரம் இல்லாத போதுதான் அம்மி, ஆட்டுக்கல் பயன்படுத்திய நம் பாட்டிமார்களின் கஷ்டம் நமக்கு புரிகிறது.
===========
மின்வெட்டுக்குக் காரணம் கடந்த திமுக ஆட்சிதான் - நத்தம் விஸ்வநாதன்#
என்னது காந்திய கொன்னுட்டாய்ங்களா?
===========
தமிழ்நாட்டில் பெருவாரியான மக்களை சீரியல் பார்ப்பதிலிருந்து மின்வெட்டு மூலம் மீட்ட பெருமை ஜெயலலிதாவையே சாரும்.
============
மருத்துவர்கள் அதிகம் சந்தித்த கேள்வி - எப்படியாவது காப்பாதிடுங்க டாக்டர்,
பிச்சைக்காரர்கள் அதிகம் சந்தித்த கேள்வி - சில்லறை இல்லேப்பா,
சர்வர்கள் அதிகம் சந்தித்த கேள்வி - சூடா என்ன இருக்கு?
அதேபோல் மின்சாரம் வாரியம் அதிகம் சந்தித்த கேள்வி
- எப்ப கரண்டு வரும்?
============
மருத்துவர்கள் அதிகம் சந்தித்த கேள்வி - எப்படியாவது காப்பாதிடுங்க டாக்டர்,
பிச்சைக்காரர்கள் அதிகம் சந்தித்த கேள்வி - சில்லறை இல்லேப்பா,
சர்வர்கள் அதிகம் சந்தித்த கேள்வி - சூடா என்ன இருக்கு?
அதேபோல் மின்சாரம் வாரியம் அதிகம் சந்தித்த கேள்வி
- எப்ப கரண்டு வரும்?
============
தி.மு.க.வினர்களை ஒழிக்க ஜெ காட்டும் ஆர்வத்தில் ஒரு பங்கை மின் வெட்டையும் டெங்குவையும் ஒழிக்க காட்டினால் தமிழ்நாடு எங்கேயோ போய்விடும்.
=============
எம்.ஜி.ஆருக்கு நான் அளித்த வாக்குறுதியை
இதுவரை நிறைவேற்றி வந்திருக்கிறேன் :ஜெயலலிதா#
அந்த வாக்குறுதியில் பவர் கட்டும் ஒன்றா
=============
இன்னும் சில நாட்களில், கால ஓட்டத்தில் காணமல் போனவைகளில் புதுவரவு என்று மின்சாரத்தையும் சேர்த்து ஜாக்கி சேகர் எழுத நேரிடலாம்.
=============
விரைவில் ராகுல் அமைச்சராக்க படலாம்- இதென்ன சின்னப்புள்ளத்தனமா இருக்கு....பிரதமரையே அமைச்சராக்கனும்ன்னு சொல்லிட்டு,,,,,
==============
மத்திய மந்திரிசபை விரைவில் மாற்றம்-
இதையே இன்னும் எத்தனை நாளுக்குத்தான் சொல்லிக்கு இருப்பீங்க.. அதிரடியா மந்திரிசபையை மாற்றுவது எப்படின்னு ஜெ.,-கிட்ட ட்ரைனிங் எடுங்கப்பா
Tweet |
// சீரியலின் விளம்பர இடைவேளைகளில் மட்டும் கிடைத்துக்கொண்டிருந்த சாப்பாடு இப்போதெல்லாம் விரும்பிய நேரமெல்லாம் கிடைக்கிறது- மின்வெட்டு வாழ்க. //
பதிலளிநீக்குஇதை ரசித்தேன்..
// மின்சார கனவு என்று படம் எடுத்த ராஜீவ் மேனன் இப்போது அந்த படத்தை எடுத்திருந்தால் என்ன தலைப்பு வைத்திருப்பார்?
பதிலளிநீக்குமின்சாரமே கனவு என்று தலைப்பு வைத்திருப்பார். //
இதை பெரிதும் ரசித்தேன்...
ரசித்தேன்...
பதிலளிநீக்குஇங்கு பகல் நேரத்தில் இரண்டு மணி நேரம் தான் மின்சாரம்...
மாலை ஆறு முதல் காலை ஆறு வரை அவ்வப்போது மின்சாரம் இருந்தால் இருக்கும்...!
7 vathu ottu ...all are liked in facbook itself ...
பதிலளிநீக்கு:-)
பதிலளிநீக்குயூ நோ அமிரிக்காவில் நோ பவர்கட்...
மீ, மை கிராண்ட் மதர் லிவ்விங்...
நோ பிராப்ளம் அண்ட் டிவி சீரியல் நோ பிராப்ளம்....
யூ இண்டியன்ஸ் ஒன்லி பேசிங் பிராப்ளம்...
#க்கும்...
துணுக்குகளா இருந்தாலும் செம அட்டகாசம் அண்ணே
பதிலளிநீக்குஅனைத்து வரிகளும் சிறப்பு. ஒரு விதத்தில் நன்றியும் கூட நிலவை ரசக்கவாவது வெளியில் வருகிறோமே.
பதிலளிநீக்குஅனைத்தும் மிக அருமை....பகிர்வுக்கு மிக்க நன்றி.....
பதிலளிநீக்குநன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
Super!
பதிலளிநீக்குநல்லா இருக்கு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஇந்த வருடம் மின்சாரத்தே வச்சே பதிவை ஓட்டிடவேண்டியதுதான்..
பதிலளிநீக்குஎன்ன நான் சொல்றது..
சிரிப்பதைத் தவிர வேறேன்ன செய்ய?
பதிலளிநீக்குகஸாலி அம்மா ஆட்சியில மின்கட்டனமே இல்லைன்னு சந்தோஷப்படுவதை விட்டுட்டு ஏன்யா புலம்புகிறீர்..! ;-)
பதிலளிநீக்குநீ மின்சாரத்தை வைத்தே கவிஞன் ஆகிடுவே
பதிலளிநீக்குபலத்த கைகுலுக்கல்! அனைத்தும் அதிரடி!!
பதிலளிநீக்குஃபேஸ் புக்லருந்து...
பதிலளிநீக்குMohamed Nizamudeen Abdul Hakim காமெடி சட்டமன்றம் 07.12.1972 பற்றிய பின்னணி தகவல்கள் பதிவு போடமுடியுமா? (Ref:: ஜூ.வி. 17.10.2012 கேள்வி பதில்)
Yesterday at 11:05am via mobile · Unlike · 1