பதவி என்று வந்துவிட்டால் கலைஞரின் உறுதியும் கொள்கைப்பிடிப்பும் உலகம் அறிந்த ஒன்றுதான். மத்திய அமைச்சரவையில் பங்கெடுப்போம், மாட்டோம் என்று அடிக்கடி தன் முடிவை மாற்றிக்கொண்டே இருப்பார். மம்தா விலகலை தொடர்ந்து காலியாக உள்ள பதவிகளை நிரப்ப விரைவில் அமைச்சரவை விரிவாக்கப்பட உள்ளது. அப்படி விரிவாக்கம் செய்யப்படவிருக்கும் நிலையில் தி.மு.க.,விற்கு மந்திரிப்பதவிகளை கோருவீர்களா என்று கலைஞரிடம் கேட்கப்பட்டபோது, புதிய மந்திரிப்பதவிகளை பெறமாட்டோம் என்பதே கலைஞரின் பதிலாக இருக்கிறது. இது கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது என்பது தி.மு.க,வின் கடைக்கோடி தொண்டருக்கும் தெரியும்.
கலைஞரின் இப்போதைய மனநிலையில் குடும்ப உறுப்பினர்களை திருப்தி படுத்த முடியாமை போன்ற ஏதோ உள்குத்து இருப்பது போல் தெரிகிறது. அல்லது, காங்கிரஸ் கூட்டணியை பொறுத்தவரையில் மம்தாவிற்கு அடுத்த பெரிய கட்சியாக இருப்பது தி.மு.க.,தான். இப்போது மம்தா விலகலை தொடர்ந்து தி.மு.க. அந்த இடத்தை பிடிப்பதற்காக (அதாவது அவர்கள் வைத்திருந்த பசையுள்ள பதவிகளுக்காக) பேரம் பேசிகிறதா என்று தெரியவில்லை.எப்படியோ கலைஞரின் முடிவில் விரைவில் மாற்றம் இருக்கும் என்று நம்புவோம்.
======================
அமெரிக்காவில் எடிசன் நினைவு நாளன்று ஒரு நிமிடம் மின்சாரத்தை நிறுத்தி அவரை நினைவு கூர்வார்களாம். ஆனால், நாமோ அமெரிக்காவையே மிஞ்சி தினமும் எடிசனுக்கு அஞ்சலி செலுத்துகிறோம், ஒரு நாளைக்கு 18 மணி மணி நேரம் மின்சாரத்தை நிறுத்தி. ஜெயா ராக்ஸ்....
=====================
இது ட்வீட்தான் நம்புங்க...
பேச்சிலர் ரூம் சுத்தமாக இல்லை என்று குறைப்பட்டுக் கொள்பவன், அருகில் குடும்பத்தோடு தங்கியிருப்பவனே.
Tweet |
ஹா... ஹா... ஜெயா ராக்ஸ் சூப்பர். கடைசி ட்வீட்டும் கூட. மிக ரசித்தேன்.
பதிலளிநீக்குமாமா இந்த பெருசு வயசாயிடுச்சு சும்மா வாய வச்சுக்கிட்டு சும்மாவே இருக்காதா அதற்கு எதாவது மருந்து கண்டுபிடி்சசா மாமா உங்களுக்கு கோடிபுன்னியம் மாமா
பதிலளிநீக்குசிகா,
http://kenakkirukkan.blogspot.com/
ட்வீட்டும் என்னவோ சொன்னதற்கும் சம்பந்தமில்லை என்பதை நம்புகிறேன்... ஹிஹி...
பதிலளிநீக்கு:-)
பதிலளிநீக்குரைட்டு ... மனசு மாறட்டும் இந்த வயசுல யாவருக்கு இந்த ஆசை எல்லாம் ரொம்ப ஓவர் அண்ணே ...
பதிலளிநீக்குட்வீட் ரொம்ப ஸ்வீட்.....
பதிலளிநீக்குஅமெரிக்காவில் எடிசன் நினைவு நாளன்று ஒரு நிமிடம் மின்சாரத்தை நிறுத்தி அவரை நினைவு கூர்வார்களாம். ஆனால், நாமோ அமெரிக்காவையே மிஞ்சி தினமும் எடிசனுக்கு அஞ்சலி செலுத்துகிறோம், ஒரு நாளைக்கு 18 மணி மணி நேரம் மின்சாரத்தை நிறுத்தி=
பதிலளிநீக்குஅருமையான பதிவு. நன்றி.
// பேச்சிலர் ரூம் சுத்தமாக இல்லை என்று குறைப்பட்டுக் கொள்பவன், அருகில் குடும்பத்தோடு தங்கியிருப்பவனே. //
பதிலளிநீக்குஎங்கயோ படிச்ச மாதிரி இருக்கே?? சுட்டியோ????
டே...வெண்ணை, இதைத்தான் அன்னைக்கு ஃபேஸ்புக்ல ஷேர் பண்ணிருந்தேன். அங்கே படிச்சிருப்ப.
நீக்குடுவிட் சூப்பர்
பதிலளிநீக்குநாகரீகம்.
பதிலளிநீக்குநீங்கதானே நாகரீகமா சொல்லிட்டு போங்கன்னு சொல்லியிருக்கீங்க.. அதான்..! முதல் கமெண்ட் அப்படி எழுதினேன்..!!
பதிலளிநீக்குநான் தெரியாமத்தான் கேட்கிறேன்... !!
எப்படிங்க ஒரு வயசானவரைப் போட்டு இந்த புரட்டு புரட்டி எடுக்கறீங்க....!!!
பாவம்.. கலைஞர் அய்யா அவர்கள்.. அரசியலைப் பார்ப்பாரா.. குடும்பத்தைப் பார்ப்பாரா.. பொது ஜனங்களைப் பார்ப்பாரா.. இல்லை வயசாயிட்டே போகுதேன்னு கவலைப்படுவாரா...?
இல்லை இந்த மாதிரியெல்லாம் எழுதற ஆட்களுக்கு பதில்சொல்லுவாரா?
ஒரு வயசான ஆளை எப்படியெல்லாம் புரட்டி புரட்டி எடுக்கறீங்க...
எல்லாத்தையும் தாங்கிட்டு.. அரசியல் வண்டியை லாவகமா ஓட்டுராறே...!
அவரோட அரசியல் வாழ்க்கை அனுபவ வயசு கூட உங்களுக்கு இருக்காதுன்னு நினைக்கிறேன்...
உங்களை மாதிரி எழுதறவங்களுக்கு பதில் சொல்லுவாரா?
ம்ஹூம்.. நானா இருந்தால் எப்பவோ ஓய்வு வாங்கிட்டு.. காத்து வாங்க காசி ராமேஸ்வரம் போயிருப்பேன்.. இப்பேர்பட்டவரைப் போய் கலாய்க்கிறீங்களே.. மாமு.. !!!
பி.கு: கலைஞருக்கு ஒத்து ஊதறதால தி.மு.க கட்சிக்கு சப்போர்ட் பண்றதா நினைக்கப்படாது...
பொதுவா ஒரு வயசான மனிதனுக்கு ஏற்படும் நடைமுறைச் சிக்கலைச் சொன்னேன்...!!!
அமெரிக்காவை மிஞ்சி தினமும் அஞ்சலி செலுத்துகிறோம் ..ஹ ஹ ஹ ஹ ஹ ஹ
பதிலளிநீக்குஅரசியல் பழம் தின்னு கொட்டைப் போட்ட ஒரே ஒரு பழம்பெரும் அரசியல்வாதி எனக்குத் தெரிந்து கலைஞர்தான்..
பதிலளிநீக்குஅவர் ஒரு ராஜ தந்திரி..!!
எந்த நேரத்தில் என்ன முடிவெடுக்க வேண்டும் என்பதை அவரிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்...!!
ஜெயா ராக்ஸ்..சுவையாகச் சொன்னீர்கள்..
பதிலளிநீக்குஇப்படி அஞ்சலி செலுத்துவோம்னு தெரிஞ்சிருந்தா.... ஒருவேளை எடிசன் கரண்ட கண்டு பிடிக்காமலே இருந்திருப்பாரோ.. என்னவோ?
பதிலளிநீக்குஅருமையான பகிர்வு நண்பா
பதிலளிநீக்குகலைஞரின் மன ஓட்டத்தை அப்படியே ஒப்பித்திருக்கிறிர்கள்
வாழ்த்துக்கள், நன்றி
ஜெயா ராக்ஸ் க்கு கும்முன்னு ஒரு ஓட்டு பாஸ்..
பதிலளிநீக்குஇதை சொல்லலும்னு தோணுச்சு .....
பதிலளிநீக்குஅப்பாவி முஸ்லீகளை பாத்தா டெரர்ரா தெரியுதே ?
சென்னையில் சொகுசு விமானமான
`ட்ரீம் லைனர்' விமானத்தை செல்போனில் படம் பிடித்த 2 வாலிபர்கள் பிடிபட்டனர்
தீவிரவாதிகளா என்று போலீசார் விசாரணை
ஆலந்தூர், அக்.4-
சென்னையில் இருந்து டெல்லி செல்லும் சொகுசு விமானமான `ட்ரீம் லைனர்' விமானத்தை செல்போனில் புகைப்படம் எடுத்த கேரளா வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
`ட்ரீம் லைனர்' விமானம்
சென்னை மீனம்பாக்கம் காமராஜர் உள்நாட்டு முனையத்தில் இருந்து நேற்று காலை 10.45 மணிக்கு டெல்லிக்கு ஏர்-இந்தியா `ட்ரீம் லைனர்' விமானம் செல்ல இருந்தது. இதில் பயணம் செய்ய 206 பயணிகள் தயாராக இருந்தனர்.
விமானம் புறப்பட இருந்த நேரத்தில் ரூ.36 ஆயிரம் மதிப்புள்ள சொகுசு இருக்கையில் பயணம் செய்ய இருந்த
கேரளா மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த அமீத்தாவா (வயது 35), மன்சூர் (24) ஆகியோர்,
"நாங்கள் இந்த விமானத்தில் பயணம் செய்ய விரும்பவில்லை'' எனக்கூறி வெளியே செல்ல முயன்றனர். விமானம் புறப்பட இருந்த கடைசி நேரத்தில் பயணம் செய்ய விரும்பவில்லை என்று கூறியதால் பாதுகாப்பு அதிகாரிகள் அவர்கள் மீது சந்தேகம் கொண்டு விசாரித்தனர்.
செல்போனில் புகைப்படம்
அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்கள்.
மேலும் அவர்களிடம் இருந்த விலை உயர்ந்த செல்போன்களை, பாதுகாப்பு அதிகாரிகள் வாங்கி பார்த்தனர்.
அதில் `டரீம் லைனர்' விமானத்தின் அனைத்து பகுதிகளும், விமானி அறைகளும் புகைப்படம் எடுக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் விமான நிலைய போலீசார், உளவுத் துறையினர் மற்றும் கிïபிராஞ்ச் போலீசார் வந்து 2 கேரளா வாலிபர்களிடமும் விசாரித்தனர்.
அவர்கள் விமானத்தில் வெடிகுண்டு வைத்திருந்தார்களா? என பயந்து, விமானத்தில் இருந்த 204 பயணிகளையும் கீழே இறக்கி விமானத்தில் சோதனை நடத்தினார்கள்.
அதில் வெடிகுண்டு ஏதுவும் இல்லை என தெரியவந்தது.
தீவிர விசாரணை
இதையடுத்து மீண்டும் பயணிகளை ஏற்றிக்கொண்டு சுமார் 13/4 மணி நேரம் தாமதமாக பகல் 12.30 மணிக்கு `ட்ரீம் லைனர்' விமானம் புறப்பட்டு சென்றது.
கேரளா வாலிபர்களிடம் நடத்திய விசாரணையில், மன்சூர், சுற்றுலா நிர்வாக துறையில் இறுதி ஆண்டு படித்து வருவதாகவும், அமீத்தாவா கொச்சியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருவதும் தெரியவந்தது.
இவர்கள் ஏன் `ட்ரீம் லைனர்' விமானத்தை புகைப்படம் எடுத்தனர்?.
இவர்கள் தீவிரவாதிகளா அல்லது தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா? என 2 பேரையும் ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
SOURCE: http://www.dailythanthi.com/article.asp?NewsID=762532&disdate=10/4/2012
நூற்றுக்கணக்கான இணையதளங்களில் `ட்ரீம் லைனர்' விமானத்தை பற்றிய அனைத்து விபரங்களும்.
விரிவாக `ட்ரீம் லைனர்' விமானத்தின் அனைத்து உட்பகுதிகளின் புகைப்படங்களும் காணொளிகளும் ஏர் இந்தியா `ட்ரீம் லைனர்' உட்பட இருக்கின்றன.
அதிலொன்று இதோ சொடுக்கி பார்க்கவும்.
இதோ சொடுக்கி >>>> Air India 787-8 Dreamliner Cabin Walk-through <<<< பார்க்கவும்.
சொடுக்கி >>>>> Photos and Videos: Air India's Boeing 787-8 Dreamliner cabin interiors revealed பார்க்கவும்.
இந்த விடியோவில் உள்ளதை விடவா அமீத்தாவா (வயது 35),
மன்சூர் (24) ஆகியோர் தங்கள் செல்போனில் படம் பிடித்திருப்பார்கள் ?
ஆயிரக்கணக்கான மறுக்கமுடியாத சாட்சியங்கள் இமயமலை குவிந்து இருந்தும் கொலைகார அத்வானி, பால் தக்கரே, மோடி போன்றவர்களை கைது செய்து சிறையில் அடைக்காமல் இஸட் பாதுகாப்புடன் வளர்க்கும் இந்திய அரசாங்கம்
இந்தியாவில் முஸ்லீம் அப்பாவிகளை எந்த நொண்டிச்சாக்கிலும் கைது செய்யலாம் என்னும் வன் கொடுமையை இதிலிருந்து விளங்கி கொள்ளுங்கள்.
மின் தடையால் வந்தது குழப்பம்:
பதிலளிநீக்குகணவர் என்று கருதி வேறு நபருடன் பைக்கில் ஏறி சென்ற பெண்
Published: வியாழக்கிழமை, அக்டோபர் 4, 2012, 16:40 [IST]
விருதுநகர்: தமிழகத்தில் அவ்வப்போது ஏற்படும் மின் தடையினால், தொழில்சாலைகள், சிறு மற்றும் குறுத்தொழில்கள் பாதிக்கப்படுகிறது.
மேலும் குடும்பங்களில் பல வேலைகளை செய்ய முடியாமல் குடும்ப பெண்கள் திணறி வருகின்றனர்.
இந்த நிலையில் மின் தடை ஏற்பட்டதால், விருதுநகரில் இரு குடும்பங்களில் குழப்பம் ஏற்படும் நிலை ஏற்பட்டு அளவிற்கு ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.
விருதுநகர் கலெக்டர் அலுவலகம் அருகே ஒரு பெட்ரோல் பங்க் உள்ளது.
இங்கு நேற்று இரவு 7 மணி அளவில் இருட்டி இருந்தது.
அப்போது மின்சார விளக்குகள் எரிந்து கொண்டிருக்க, 2 மோட்டர் சைக்கிள்கள் பெட்ரோல் அடிக்க வந்தது. 2 மோட்டர் சைக்கிள்களில் கணவனும், மனைவியாக வந்திருந்தனர்.
மேலும் இரு ஆண்களும் ஒரே மாதிரியாக ஹெல்மேட் மற்றும் வாகனத்தில் வந்திருந்தனர்.
தமிழகத்தில் மின்சாரம் எப்போது வரும், எப்போது போகும் என்பது யாருக்கும் தெரியாது என்பதை நிரூபிக்கும் வகையில், திடீரென மின் தடை ஏற்பட்டது.
அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் அடிக்கப்பட்ட நிலையில், ஒருவர் கிளம்ப தயாரானார்.
அதை கண்ட மனைவியும், அவருடன் மோட்டர் சைக்கிளில் ஏறி கொள்ள வண்டி கிளம்பியது.
சாத்தூர் சாலையில் சிறிது தூரம் போன நிலையில், பின்னால் அமர்ந்திருந்த பெண், மோட்டார் சைக்கிள் ஓட்டுபவரிடம், என்னங்க! நாம தாதம்பட்டி போகணும், நீங்க சாத்தூர் ரோட்ல போறீங்கலே என்றார்.
இதில் அதிர்ச்சி அடைந்த மோட்டர் சைக்கிள் ஓட்டிய நபர், வண்டியை நிறுத்திவிட்டு திரும்பி பார்த்த போது, இருவருக்கும் அதிர்ச்சி.
ஏனெனில் வண்டியை ஓட்டியவர், பின்னால் இருந்த பெண்ணின் கணவர் அல்ல.
இருவரும் பரஸ்பரம் மன்னிப்பு கேட்டு கொண்டு, மீண்டும் மின்தடை ஏற்பட்ட பெட்ரோல் பங்க்கிற்கு விரைந்தனர்.
அங்கு கணவனை காணாமல் ஒரு மனைவியும், மனைவியை காணாமல் ஒரு கணவனும் தவித்து கொண்டிருந்தனர்.
ஜோடி மாறிய இருவரும் நடந்த சம்பவத்தை எடுத்து கூறி, சரியான ஜோடிகளாக பெட்ரோல் பங்க்கில் இருந்து கிளம்பி சென்றனர்.
இந்த சம்பவத்தை பார்த்த அங்கிருந்தவர்கள், தமிழகத்தில் ஏற்படும் மின் தடையால் குடும்பத்தில் கூட குழப்பம் ஏற்படும் நிலை ஏற்பட்டுவிட்டதே என்று புலம்பினர்.
source: thatstamil
யாருங்க சொன்ன பேச்சுலர் ரூம் நல்ல இருக்காதுன்னு...வந்து எங்க மேன்சன் பாக்க சொல்லுங்க
பதிலளிநீக்கு