என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வியாழன், அக்டோபர் 25, 2012

9 ஜேப்பியார்- ஒரு கான்ஸ்டபிள் கல்வித்தந்தையான வரலாறு



எனக்கு பெரிய கொள்கை,லட்சியம் என்றெல்லாம்  எதுவும் கிடையாது. நான் எம்.ஜி.ஆர் ரசிகன். எம்.ஜி.ஆர் என் தலைவன். என் தலைவன் மேல் விசுவாசம். என் தலைவனுக்காக உயிரையே கொடுப்பேன். இன்னைக்கு நான் இந்த வசதி,அந்தஸ்தோட இருக்கேன்னா என் தலைவன் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் தான் காரணம்.சாதாரண போலீஸ் கான்ஸ்டபிள் ஜேப்பியார இப்படி உயர்த்தியது பொன்மனச்செம்மல் தான்-
இப்படி வாக்குமூலம் கொடுத்தது வேறு யாருமல்ல....
ஜேசு அடிமை பண்டையராஜ் என்னும் ஜேப்பியார்தான்.

ஆரம்பகாலத்தில் இவருடைய வாழ்க்கை சொல்லிக்கொள்ளும்படியாக பெரிய அளவில் எல்லாம் இல்லை.
தமிழக காவல்துறையில் ஒரு கான்ஸ்டபிளாகத்தான் பணிபுரிந்தார் ஜேப்பியார்.சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே டியூட்டி போடப்பட்ட தினம் ஒன்றிலிருந்துதான் அவருக்கான சுக்ரதிசை ஆரம்பம். அப்போது, எம்.ஜி.ஆர்.விபத்து ஒன்றில் சிக்கினார். அவரை மிக விரைவாக மருத்துவமனைக்கு கொண்டுபோய் சேர்த்தார் கான்ஸ்டபிளாக அங்கு டூட்டி பார்த்த ஜேப்பியார். அதன்பின் தீவிர எம்.ஜி.ஆர்.,பக்தரானார்.

தி.மு.க.,விலிருந்து எம்.ஜி.ஆர்.,நீக்கப்பட்ட பின் எம்.ஜி.ஆரை சந்தித்து அண்ணா.தி.மு.க.,வில் முறைப்படி  இணைந்தார்.  அதன் பின் ஜேப்பியார் கலந்துகொண்ட அத்தனை  கூட்டத்திலும்  கலைஞருக்கு அர்ச்சனைதான்.


திண்டுக்கல் இடைத்தேர்தலின் போது அண்ணா.தி.மு.க.,வேட்பாளர் மாயத்தேவரின் வெற்றிக்கு பாடுபாட்டவரை பின்னாளில் அப்போதைய தி.மு.க.,அரசு கைது செய்தது. 

அந்தக் கைதுக்கு பின் எம்.ஜி.ஆரால் கவனிக்கப்பட்டார் ஜேப்பியார். செங்கல்பட்டு கிழக்கு மாவட்டச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.  அதன் பின் அவருக்கு ஏறுமுகம்தான்.

அண்ணா.தி.மு.க.,சார்பில் எம்.எல்.சி.,யாகவும் நியமிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், மேல்சபையில் கட்சிக் கொறடாவாகவும், பின்னர் சென்னைக் குடி நீர், கழிவு நீரகற்று வாரியத்துக்குத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.  .

எம்.ஜி.ஆர். பதவியில் இருந்ததுவரை கட்சியிலும்ஆட்சியிலும் செல்வாக்காக வலம்வந்தார். எம்.ஜி.ஆர்.,ஆட்சிக்காலத்தில் எம்.ஜி.ஆரின் தாய் பேரில் ஒரு கல்லூரி ஆரம்பிக்க எம்.ஜி.ஆரிடம் அனுமதி வாங்கினார். அப்படி ஆரம்பிக்கப்பட்டதுதான் சத்தியபாமா கல்லூரிகள். 

 எம்.ஜி.ஆர். மறைவிற்கு பிறகு, பிளவுபட்ட அண்ணா.தி.மு.க.,வில் ஜானகி அணியில் சில காலம் இருந்துவிட்டு கட்சி ஒன்றுபட்டு ஜெயலலிதாவிடம் போனதும்  அரசியலை விட்டே ஒதுங்கினார். தன் கவனத்தை கல்வித் துறை மீது இன்னும் முழுவீச்சில் திருப்பினார். பொறியியல் கல்லூரிகளை துவக்கினார். இன்று பல கல்லூரிகள் இவரது கட்டுப்பாட்டில் உள்ளன. சத்யபாமா பல்கலைக் கழகம்பனிமலர் பொறியியல் கல்லூரிபனிமலர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜிபனிமலர் பாலிடெக்னிக்ஜேப்பியார் பொறியியல் கல்லூரி,புனித ஜோசப் பொறியியல் கல்லூரிஎஸ்.ஆர். ஆர்.பொறியியல் கல்லூரிமாமல்லன் பொறியியல் கல்லூரிசெயின்ட் மேரீஸ் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட்… பட்டியல் நீளமானது.  



தன் தலைவன் எம்.ஜி.ஆரை போல தன் பெயரை ஜேப்பியார் என்று சுருக்கிக்கொண்டவரால் தன் தலைவனைப்போல ஏழை பங்காளனாக வாழத்தான் தெரியவில்லை. 



Post Comment

இதையும் படிக்கலாமே:


9 கருத்துகள்:

  1. புதுபேட்டை படம் இவரின் வாழ்க்கைய தலிவியது என்று சொன்னங்க ... ஆனா இப்ப பார்த்த அந்த மாதிரி இல்லையே ... என்னோமோ போங்க .. நன்றி நல்ல பதிவு

    பதிலளிநீக்கு
  2. இத்தனை காலம் இவரை பற்றி தெரியாது அண்ணே ..
    இப்போ அறிந்து கொண்டேன் நன்றிங்க

    பதிலளிநீக்கு
  3. காசு வாங்க்கும் கல்வித் தந்தை பற்றிய அறிமுகம் சூப்பர்! கல்வி என்ற பெயரில் இவரை போன்றவர்கள் கொள்ளை அடிப்பது அநியாயம்!

    பதிலளிநீக்கு
  4. மீனவ நண்பன் சென்னை மெரினாவில் மீனவர்களை சுட்டு கொன்றது மறந்து விட்டது.

    ஆமாம் மக்களுக்கு மறதி அதிகம், அதனால்தான் அதே அலைவரிசையில் திடீர் பணக்காரர்கள் தோன்றுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  5. இன்று கல்விதந்தையாக (?) வலம் வருபவரின் அன்றைய வரலாறு ............படிக்க..படிக்க..சுவராஸ்ஸியம்

    பதிலளிநீக்கு
  6. நல்ல இருக்கு ஒங்க பதிவு.
    நம்ம பதிவையும் கேட்டு பாருங்க
    http://soundcloud.com/puthiyavan/singer-krish-threatened-by

    பதிலளிநீக்கு
  7. intha maathiri pangaalangalai uruvaakkiya yemjiyaarai yezhaip pangaalan yenpathaiththaan namba mudiyavillai.............

    பதிலளிநீக்கு
  8. ஜேப்பியார் என்ற ஆலமரத்தின்
    கதை

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.