என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

ஞாயிறு, அக்டோபர் 07, 2012

24 மறக்கமுடியாத மணி - ஒரு நினைவஞ்சலி


சமீபத்தில் நடந்த பதிவர் திருவிழாவிற்கு சில வாரம் முன்பு, பதிவர் திருவிழாவின் போது என்னன்ன செய்யலாம். வரும் பதிவர்களுக்கு என்னன்ன உணவுகளை பறிமாறலாம் என்று டிஸ்கவரி புக் பேலசில் கூடி ஆலோசித்து கொண்டிருந்தோம்.
அப்போது பட்டிக்காட்டான் ஜெய் அவர்கள், சில உணவங்களிலிருந்து பெறப்பட்ட மெனுவை பார்வைக்கு வைத்தார். அதில் பரிமாறப்படும் ஐட்டங்கள் குறைவாகவும் அதேநேரம் விலை சற்று அதிகமாகவும் இருந்தது. அதனால் யாருக்கும் திருப்தியில்லை. வேறு சில கேட்டரிங் சர்வீஸ்களையும் கேட்டுப்பார்க்கலாம் என்று முடிவு செய்தோம்.அப்போது ஜெய் அவர்கள் எனக்கு அறிமுகமான ஒரு பதிவர் இருக்கிறார்.அவர் ஆயிரத்தில் ஒருவன் மணி. அவர் சமையலில் வல்லவர்.சமீபத்தில் நடந்த என் நண்பரின் இல்ல விசேஷத்தின்போது அவர்தான் சமையல் என்றார். அவரிடமும் ஒரு மெனு கொட்டேசன் வாங்கலாம் என்று அவரையும் வரச்சொன்னோம்.
மணி அவர்கள் வந்தார். அவரும் ஒரு மெனுப்பட்டியலை நீட்டினார். அதில் முந்தைய கேட்டரிங் காரர்கள் கொடுத்த மெனுவில் இருந்ததைவிட அதிகம் ஐட்டம் இருந்தது. விலையும் அதே விலை. இருந்தாலும் பதிவராக என் பங்கிற்கு என் சம்பளத்தை குறைத்து கொள்கிறேன் என்று பெருந்தன்மையுடன் சொல்லி விலையையும் சற்று குறைத்துக்கொண்டார்.
ஆனாலும், என் மனதில் ஒரு சந்தேகம், விலையையும் குறைத்து சொல்கிறார். பரிமாறப்படும் வகைகளும் அதிகமாக இருக்கிறது. ஒரு வேளை தரம் குறைந்துவிட்டால்... அதை அவரிடமே நேரடியாக கேட்டுவிட்டேன். அப்படி தரம் குறைந்துவிட்டால் நீங்கள் பணமே தர வேண்டாம் என்றார்.

அவர் சொன்னதுபோலவே பதிவர் திருவிழாவில் அறுசுவை விருந்து படைத்து அனைவரின் பாராட்டையும் பெற்றார் மணி அவர்கள். அடுத்த பதிவர் சந்திப்பின் போதும் நீங்கள் தான் சமையல் என்று சொல்லிவிட்டு வந்தேன்.

நேற்று் டெங்கு காய்ச்சல் வந்து திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிட்சை பெற்றுவரும் என் மனைவியை பார்ப்பதற்காக திருச்சி சென்றிருந்தபோது நண்பர் மெட்ராஸ்பவன் சிவக்குமாரிடமிருந்து போன். கஸாலி உங்களுக்கு விஷயம் தெரியுமா நம்ம ஆயிரத்தில் ஒருவன் மணி இறந்துவிட்டார் என்று அதிர்ச்சி தகவலை சொன்னார். உண்மையில் பேரதிர்ச்சியாகவே இருந்தது. பதிவர் திருவிழாவில் சிரித்த முகத்துடன் ஒரு குழந்தையைப்போல் வலம் வந்த ஒரு நல்ல மனிதரை இழந்துவிட்டோம் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. மனது கணக்கவே செய்கிறது. சில நாட்களில் சில நிமிடங்கள் மட்டுமே பழகிய நமக்கே இப்படி இருக்கிறதென்றால், குடும்பத்தலைவனை இழந்து தவிக்கும் அவரின் குடும்பத்திற்கு?,
ஆறுதலை வார்த்தைகளில் அடைத்துவிட முடியாது. அவர்களுக்கான மன வலிமையை இறைவன்தான் தரவேண்டும். அவரை இழந்துவாடும் அவரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

---


Post Comment

இதையும் படிக்கலாமே:


24 கருத்துகள்:

  1. மனதை பிழியச்செய்த செய்தி இது, கஸாலி.
    அவரை இழந்து வாழும் அவர் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

    பதிலளிநீக்கு
  2. மிகவும் வருத்தப்படும் தகவல். அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  3. அன்னாரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

    பதிலளிநீக்கு
  4. ஆழ்ந்த அனுதாபங்கள்.

    ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள் !

    பதிலளிநீக்கு
  5. ஆழ்ந்த அனுதாபங்கள்,, பதிவுலகம் நட்பு எவ்வளவு ஆழமானது என்பதை இந்த நிமிடங்களில் உணரமுடிகிறது

    பதிலளிநீக்கு
  6. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...

    பதிலளிநீக்கு
  7. பார்க்கச் சிறிய வயதினராக இருக்கிறாரே. இறைவன் உள்ளம் இப்படியா. அன்னார் ஆத்மா சாந்தி அடையவேண்டும். குடும்பமும் மெதுமெடுவே ஆறுதல் அடையவேண்டும்.

    பதிலளிநீக்கு
  8. அவர்களுக்கான மன வலிமையை இறைவன்தான் தரவேண்டும். அவரை இழந்துவாடும் அவரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

    பதிலளிநீக்கு
  9. மணியின் பிரிவால் துயருறும் அன்னாரின் குடும்பத்தாருக்கு என்னுடைய ஆறுதல் கூறலும்,அன்னாரின் ஆன்ம சாந்திக்காக என் பிரார்த்தனைகளும்,உங்கள் தளமூடாக.

    பதிலளிநீக்கு
  10. அவருடைய பணிவான அன்பான
    நடவடிக்கைகளும், அவர் படைத்த
    உணவின் ருசியும் நினைவுக்கு வர
    கண் கலங்குகிறது
    அவர் ஆன்மா சாந்தியடைய வேண்டிக் கொள்கிறேன்

    பதிலளிநீக்கு
  11. ஆன்மா சாந்தியடைய கடவுளை பிராத்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  12. அவர் குடும்பத்தினரை நினைத்து மிகவும் வருந்துகிறேன்.

    -வருண்

    பதிலளிநீக்கு
  13. ஆழ்ந்த அனுதாபங்கள்.

    ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள் !

    பதிலளிநீக்கு
  14. எனக்கும் தான் கஸாலி... மிக நல்ல மனிதர்..
    அவரின் இழப்பை தாங்கிக் கொள்ளும் சக்தியை அந்த குடும்பத்திற்க்கு இறைவன் வழங்குவானாக....

    பதிலளிநீக்கு
  15. மிகவும் மனவருத்தமளித்த செய்தி ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  16. குறுகிய காலமே பழகியிருந்தாலும் எல்லாரின் மனங்களிலும் நிறைந்து விட்டவர் அன்பு நண்பர் மணி. இன்றவர் இல்லை எனும் போது மனம் கலங்குகிறது. அவரின குடும்பத்தினருக்கும, நண்பர்களுக்கும என் ஆழ்ந்த அனுதாபங்களை உங்கள் மூலம் பதிவு செய்கிறேன் தம்பீ.

    பதிலளிநீக்கு
  17. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்....பதிவுலகிலே அவருக்கு இவ்வளவு பழக்கவழக்கங்கள் இருக்கும் நிலையில் அவரின் பழகும் தன்மை இனிமையானதாக இருக்கும் என புலப்படுகிறது....

    பதிலளிநீக்கு
  18. அன்னாரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.