”பாலூட்டி வளர்த்தகிளி பழம் கொடுத்து பார்த்த கிளி” என்று பாடியவாறு உள்ளே நுழைந்தான் ஓட்டைவாயன்.
”வாய்யா ஓட்டை.....என்ன கொஞ்ச நாளா ஆளைப்பார்க்க முடியலே?”என்று கேட்டான் உளறுவாயன்
“நம்மல்லாம் எங்கே போகப்போறோம்? இங்கேதான்”
“அதுசரி....என்ன பாட்டெல்லாம் பலமா இருக்கு”
“சும்மாதான்...இந்த நேரத்தில கேப்டன் என்ன பாட்டு பாடுவாருன்னு நினைச்சேன். பாடினேன்.”
“அட ஏப்பா அவரே நொந்து போயிருக்காரு இந்த நேரத்துல நீ வேற”
“ஆமா...அந்த எம்.எல்.ஏ.,க்கள் எதுக்குப்பா முதலமைச்சர போயி பார்த்தாங்க?”
“அதான் சொன்னாங்களே மக்களுக்கு நல்லது நடக்கனும்னு போயி பார்த்ததா?”
“மக்களுக்கா? அவங்களுக்காப்பா?.....இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு”
”என்ன செய்றது நம்பித்தானே ஆகனும்.”
”இது பெரிய துரோகம்பா”
“எப்படி சொல்றே?”
“எந்தக்கட்சிக்கும் ஒரு ஐகான் இருக்குப்பா.....அண்ணா.தி.மு.க.,வுக்கு இன்னும் எம்.ஜி.ஆரும், ரெட்டலையும்தான் ஐகான். தி.மு.க.,வுக்கு கலைஞர். அதுபோல தே.மு.தி.க.,வுக்கு விஜயகாந்த் முகம்தான் ஐகான். இந்த எம்.எல்.ஏ.,க்கள்லாம் தனியா நின்று ஜெயிச்சிருந்தா சரி...எல்லோரும் விஜயகாந்த் முகத்தை வச்சுத்தான் ஜெயிச்சாங்க. இவங்க போயி இப்படி துரோகம் செய்யலாமா?”
”உனக்கு இன்னும் அரசியல் புரியல....வழக்கமா இத நம்ம செஞ்சாத்தான் துரோகம். அதையே அரசியல்வாதிங்க செஞ்சா அதுக்கு பேரு ராஜதந்திரம்.”
”எனக்கு இன்னொரு டவுட்....மக்களுக்கு இந்த ஒன்றரை வருஷத்தில எதுவுமே நல்லது நடக்கலேன்னு சொல்றாங்களே....அப்படின்னா எதிர்கட்சி தொகுதிகளை ஆளுங்கட்சி புறக்கணிக்குதுன்னு இவர்களே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததாத்தானே அர்த்தம்?”
”ஆமா...அப்படியும் வச்சுக்கலாம்...”
ஒரு கட்சி ஆட்சிக்கு வந்துட்டா அவங்களுக்கு ஓட்டுப்போட்டவுங்க, அவங்களுக்கு ஓட்டு போடாதவுங்க, 49 ஓ போட்டவுங்க, இவ்வளவு ஏன் ஓட்டே போடாதவுங்க எல்லோருக்கும்தானே அவங்க முதலமைச்சரு...அவங்க கட்சி ஆளுங்களும் அந்த தொகுதியில இருப்பாங்கதானே?அப்படி இருக்கும் போது எதிர்கட்சி தொகுதிகளை புறக்கணிக்கறது மாற்றாந்தாய் மனப்பான்மை ஆச்சே? ஒரு கண்ணில் வெண்ணையும் ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கலாமா?”
“ஆஹா.... நீ சைபர் க்ரைம்ல நம்மை மாட்டாம விடமாட்டே போல தெரியுதே?”
”விடுப்பா...எப்ப நம்மலும் ஃபேமஸாகுறது”
“அதுவும் சரிதான்.கேப்டன் ரியாக்சன் என்னவாம் இப்ப”
“28 எம்.எல்.ஏ.க்களும் போனாலும் எனக்கு கவலையில்லை. நான் தனியாளா நின்னு சமாளிப்பேனு சொல்லிருக்காரு”
“எங்கே சட்டசபைக்கு வெளியேயா?”
”ஏப்பா இப்படி கேட்கறே?”
“பின்னே....தி.மு.க.,ஆட்சிக்காலத்தில் அப்படி தனியாளா போனாரு சரி....இப்ப போகமுடியுமான்னு தெரியல....கூட்டமா போகயிலேயே ஒரே பிரச்சினையாகுது இந்த லட்சணத்தில தனியாளா போனா?”
“போனா?”
“யோவ்....தெரிஞ்சு கேட்கறியா....இல்லே...தெரியாமா கேட்கறியா?, இப்படித்தான் 1991-1996 ஆட்சியில தி.மு.க.சார்பில் தனியாளா சபைக்கு போன பரிதி இளம்வழுதிக்கு வேட்டி கூட மிஞ்சல...அன்னைக்கு பேண்ட் போட ஆரம்பிச்சவருதான் இன்னை வரைக்கும் அதை கழட்டல, துணை சபாநாயகரா இருந்தபோதும், மந்திரியா இருந்தபோதும் கூட பேண்டை கழட்டலியே...”
“ஓ...அப்படியா...இதெல்லாம் கூட நடந்திருக்கா?”
“ஆமாப்பா....அன்னைக்கு பரிதியின் தைரியத்தை பாராட்டி சுற்றி நரிகள் நிற்பது போலவும் நடுவில் பரிதி எங்கிற சிங்கம் நிற்பது போலவும் முரசொலி கார்ட்டூன்லாம் போட்டுச்சு”
“இப்பத்தான் அந்த சிங்கத்தைதே காணோமே...சரி விடு. நான் கிளம்பறேன்”
Tweet |
பாவம் விஜயகாந்த்... தனி மனிதனா எவ்வளவ தான் அவரும் சமாளிப்பார்... இரண்டாம் கட்ட ஆட்களை உருவாக்கியே தீர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் கேப்டன்...
பதிலளிநீக்கு”விடுப்பா...எப்ப நம்மலும் ஃபேலஸாகுறது” அண்ணே இந்த எழுத்து பிழையை சரி செய்யவும் ... நக்கீரன் இல்லை நண்பனாய் சொல்கிறேன் ஹி ஹி
பதிலளிநீக்குtamilmanam 3
பதிலளிநீக்குஓட்டை வாயனும், உளறு வாயனும் உள்ளதை தான் சொல்லி இருக்காங்க அண்ணே .. தொடரட்டும் இந்த பயணம் ..
பதிலளிநீக்குபேஷ் பேஷ் ரொம்ப நல்லா இருக்கு....
பதிலளிநீக்குநான் தனியாளா நின்னு சமாளிப்பேனு சொல்லிருக்காரு” // அவரு எப்படி தனியாளா நின்னு சமாளிப்பாரு?? வேணுமின்னா தள்ளாடிக்கிட்டே நின்னு சமாளிப்பாரு!!!!
பதிலளிநீக்குநல்ல நக்கல் பதிவு! சிறப்பு!
பதிலளிநீக்கு