என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வியாழன், அக்டோபர் 04, 2012

12 ஜெ.,யின் உள்ளே வெளியே ஆட்டமும் சோ-வை மிஞ்சிய தா.பாண்டியனும்






தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக 12-ஆவது முறையாக மந்திரிகளை மாற்றி மீண்டும் ஒரு உள்ளே வெளியே ஆட்டத்தை நடத்தியிருக்கார் ஜெயா.
முன்பெல்லாம் அதாவது ஜெயலலிதாவிற்கு முன்பிருந்தவர்களின் ஆட்சியிலெல்லாம் அமைச்சரவையை அப்படியே மனப்பாடமாக சொல்லிவிடலாம். ஆனால், இப்போதோ
யார்யார் மந்திரி? என்னன்ன துறை என்று அமைச்சர்களுக்கே தெரியாது.

ஆட்சிக்கு வந்த புதிதில் அவர் இருந்தார். பின்பு ஒரு மாதம் கழித்து அவரிடமிருந்து பறித்து இன்னொருவருக்கு கொடுத்தார். அதுக்கு அடுத்த மாசம் அந்த இன்னொருவரிடமிருந்து பறித்து வேறொருவருக்கு கொடுத்தார். அடுத்த 15 நாளில் அவரிடமிருந்தும் பறித்து முதலில் இருந்தவரிடம் கொடுத்தார் இப்படியே சொல்லிக்கொண்டே தலையை பிய்த்துக்கொண்டு போகலாம். எனக்குத்தெரிந்து பன்னீர், நத்தம் விஸ்வநாதன், செந்தில் பாலாஜி உள்ளிட்ட சிலரை தவிர்த்து மற்ற எல்லோரும் மாற்றப்பட்டவர்கள் அல்லது பதவி பறிக்கப்பட்டவர்களே...

இப்படியே போனால் நான் ஏற்கனவே சொன்னதுபோல் அண்ணா.தி.மு.க.,வின் அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும் அமைச்சர் யோகம் இருக்குதுங்க.....

===================



தன் பிறந்த நாளுக்கு ஜெயலலிதா வந்து வாழ்த்து சொன்னதிலிருந்து தா.பாண்டியனின் விசுவாசத்திற்கு அளவேயில்லாமல் போய்விட்டது.
இன்று வெளியாகியுள்ள ஆனந்த விகடனில்  அவரின் பேட்டியொன்று வந்துள்ளது. அதில் ஒன்றரை வருட ஜெயலலிதா ஆட்சியில் சுட்டிக்காட்டும் அளவுக்கு குறைகளே இல்லை என்கிறீர்களா? என்ற கேள்விக்கு தா.பாண்டியனின் பதில், எனக்கு ஒன்றும் தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள் என்று பொன்னெழுத்துக்களில் பொறிக்க வேண்டிய ஒரு பதிலை சொல்லி சோ ராமசாமியையே மிஞ்சியுள்ளார்.

ஒரு வேளை இரவு மின் தடையின்போது இந்தப்பேட்டி எடுத்தார்களோ என்ன எலவோ....அதான் இருட்டில் ஒன்றுமே தெரியவில்லை என்று சொல்லியிருக்கார்.

அதேநேரம், இப்போது தா.பாண்டியன் போட்டிருப்பது அண்ணா.தி.மு.க.,கண்ணாடி. அதில் இப்படித்தான் தெரியும்....சே..சே.. எதுவுமே தெரியாது.

====================

இன்றைய ஸ்பெஷல் ஜோக்...

சோனியா காந்திக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுப்பதற்காக பரிந்துரைத்திருக்கிறார்களாம்.



Post Comment

இதையும் படிக்கலாமே:


12 கருத்துகள்:

  1. அன்பின் கஸாலி - உண்மை உண்மை - அத்தனையும் உண்மை - நல்வாழ்த்துகள் கஸாலி - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  2. ஹா ஹா ஹா...இருட்டில்தான் இந்த பேட்டி கொடுத்து இருப்பார் தா.பா ....

    பதிலளிநீக்கு
  3. ஒரு வாழ்த்துக்கள் சொன்னதுக்காக வ ..இந்த ஜால்ரா அடிகிராறு ..என்ன கொடுமை இது

    பதிலளிநீக்கு
  4. அட தமிழா! தமிழா!! தமிழா!!!

    தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிடக் கூடாது:
    கர்நாடக தமிழ்ச் சங்கம்



    பெங்களூர்: தமிழ்நாட்டுக்கு காவிரி நதிநீரை திறந்துவிடக் கூடாது என்று கர்நாடக தமிழ்ச் சங்கக் கூட்டமைப்பினர் ஆர்பாட்டம் நடத்தியுள்ளனர்.

    தமிழ்நாட்டுக்கு காவிரியில் 9 ஆயிரம் கன அடி நீரைத் திறந்துவிட வேண்டும் என்று பிரதமர் தலைமையிலான காவிரி நதிநீர் ஆணையம் உத்தரவிட்டது.

    இதனை கர்நாடகம் ஏற்க மறுத்தது.

    பின்னர் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது.

    உச்சநீதிமன்றமும் தமிழகத்துக்கு காவிரி நதிநீரை திறந்துவிட உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்துவிடப்பட்டது.

    இதற்கு பல்வேறு கன்னட அமைப்புகளும், விவசாயிகளும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் கர்நாடகத்தில் உள்ள தமிழ்ச் சங்கக் கூட்டமைப்பும் தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்துவிட எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

    கர்நாடக தமிழ்ச் சங்க கூட்டமைப்பு சார்பில் நேற்று மைசூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய கர்நாடக தமிழ்ச் சங்கக் கூட்டமைப்பின் தலைவர் புகழேந்தி,

    கர்நாடகாவில், கன்னட தமிழ் மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம்.

    கர்நாடகத்தில் வாழும் கன்னடர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டபோதெல்லாம், தமிழ்ச் சங்கங்கள் ஒன்றாக இணைந்து கன்னட சகோதரர்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம்.

    ஆனால் தற்போது கர்நாடகத்தில் வசிப்பவர்களுக்கே குடிக்க தண்ணீர் இல்லை.

    விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    ஆடு, மாடுகளுக்கு கூட தண்ணீர் இல்லை.

    தீவனம் இல்லை.

    இந்தநிலையில் தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்து விட்டது சரியல்ல.

    தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்து விடுவதற்கு தடை செய்ய வேண்டும் என்றார் அவர்.

    முன்னதாக மைசூர் அரண்மனை ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் இருந்து ஆட்சியர் அலுவலகம் வரை கர்நாடக தமிழ்ச் சங்க கூட்டமைப்பு சார்பில் மவுன ஊர்வலம் நடத்தப்பட்டது. பின்னர் ஆட்சியரை சந்தித்து மனு அளிக்கப்பட்டது.

    http://tamil.oneindia.in/news/2012/10/04/india-karnataka-tamil-sangam-protests-against-tamilnadu-162572.html

    பதிலளிநீக்கு
  5. பின்னூட்டத்தில் இவ்வளவு பதிவா,,,?
    அடேயப்பா,,,

    பதிலளிநீக்கு
  6. //ஒரு வேளை இரவு மின் தடையின்போது இந்தப்பேட்டி எடுத்தார்களோ என்ன எலவோ....அதான் இருட்டில் ஒன்றுமே தெரியவில்லை என்று சொல்லியிருக்கார்.///

    வெரிகுட்...

    #யோவ்... நல்லா எழுத ஆரம்பிச்சிட்ட போலியே?!! செங்கோவி'ட்ட டுயூசன் போறியா?

    :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செங்கோவிட்ட டியூஷன் போனா இன்னும் நல்லா எழுத ஆரம்பிச்சிருப்பேனே?

      நீக்கு
  7. இருந்தா அண்ணா திமுக கட்சி MLA வா இருக்கணும் அண்ணே ..
    சோக்கு செம அருமை .. அந்த பெண்மணிக்கு அந்த விருது கொடுத்தே ஆகணும் , அப்புறம் நம்ம மண் மோகன் சிங்குக்கும் பரிந்துரைக்கணும் ..

    த. பா. வர வர பாதை தெரியாம எங்கெங்கியோ போறார் அண்ணே

    பதிலளிநீக்கு
  8. உடன் பிறவா சகோதரி சார்ஜ் எடுத்துட்டாங்க இது முதல் அதிரடி அக்ஷன், இனிமே அமைச்சரவைலே உள்ளே வெளியே விளையாடத்தான் நேரம் இருக்கும். கவர்னர் ரோசையாவுக்கு இனி வேலைதான். ஆமா தா.பாண்டியன் உடன் பிறவா சகோதரி இனத்துகாரர் என்று படித்ததாக நியாபகம் அது சரிதானா.

    பதிலளிநீக்கு
  9. எனக்கு ஒன்றும் தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்..

    வெளிநாட்டுல இருக்காரோ..

    பதிலளிநீக்கு
  10. இன்றைய ஸ்பெஷல் ஜோக்...

    சோனியா காந்திக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுப்பதற்காக பரிந்துரைத்திருக்கிறார்களாம்.////ஆமாமா!கண்டிப்பா கொடுத்துடணும்.ஏன்னா,நாப்பதாயிரம்(இறுதி இன அழிப்பில் மட்டும்)மானுட உயிர்களை இலங்கை அரசுடன் சேர்ந்து அமைதிப்படுத்தி இருக்காங்களே?

    பதிலளிநீக்கு
  11. டெம்ப்ளேட் நல்லாருக்கு!

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.