என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

திங்கள், அக்டோபர் 22, 2012

11 பீட்சா- திகிலும் திகில் சார்ந்த படமும்.....




நிச்சயம் தமிழ் சினிமா இப்படி ஒரு படத்தை சந்தித்திருக்காது. எந்த கொம்பனாலும் அடுத்து வரும் காட்சிகளை யூகிக்கவே முடியாது. வழக்கமான திரைக்கதையை இந்தப்படத்தில் காணவே முடியாது என்றெல்லாம் ஒரு படத்தை புரமோட் செய்கிறேன் பேர்வழி என்று  அந்த படத்தின் இயக்குநரும் ஹீரோவும் ஒவ்வொரு பேட்டியின் போது ஏதாவது ஒரு சாட்டிலைட் சேனலில் சவால் விட்டு கூறுவார்கள். அவர்களின் கூற்றை நம்பி தியேட்டருக்கு போனால் வழக்கமாக அரைத்த மாவாக இருக்கும் அல்லது வெளிநாட்டிலிருந்து சுட்ட மாவாக இருக்கும். ஆனால், நான் அப்படியல்ல என் கதையும் தான்  என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்லலாம் பீட்சா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். திரைக்கதையில் ஒரு வித்தியாசம் காட்டி சீட்டிலேயே நம்மை கட்டிப்போட்ட இயக்குநருக்கு ஒரு சபாஷ். கார்த்திக் சுப்புராஜ் நாளைய இயக்குநராம். அருமையாக கதை சொல்லும் வித்தையின் மூலம் இன்றைய இயக்குநர் பட்டியலில் ஒரு அழுத்தமான இடத்தை பிடித்து விட்டீர் கார்த்திக்.



விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் இருவரின் காதல் கவிதையாய் ஆரம்பிக்கும் படம் தடதடவென்று வேகமெடுத்து நம்மை கலவரமாக்கிவிட்டுத்தான் ஓய்கிறது.
சில காட்சிகளில் தியேட்டருக்குள் ஓடும் ஏஸியையும் மீறி நமக்கு வியர்த்து விடுகிறது.


இது மின்வெட்டு காலம் என்பதால் மின்சாரத்திற்கு வேலையே வைக்காமல் ஒரு டார்ச் லைட் ஒளியிலேயே முக்கால்வாசி கதையை சொன்ன இயக்குநரின் சாமர்த்தியத்திற்கு ஒரு பொக்கே.
மிக அருமையான ஒளிப்பதிவு, மிரட்டும் பின்ணணி இசை, கச்சிதமான எடிட்டிங், விஜய் சேதுபதியின் கலவரமான நடிப்பு அனைத்தும் சம விகிதத்தில் இருப்பதால் பீட்சா ருசிக்கவே செய்கிறது.
ரம்யா நம்பீசன், நரேனின் நடிப்பும் அருமை. 

ஒரு வரி கதைதான்.ஆனால், அந்த கதையை சொல்லிவிட்டால் ஒட்டு மொத்த படத்தின் சஸ்பென்சும் தகர்ந்துவிடும் என்பதால் அடக்கி வாசித்திருக்கேன்.அல்லது யான் பெற்ற திகில் அனுபவத்தை பெருக நீங்களும் என்று சொல்லாமல் விட்டுவிட்டேன் என்றும் சொல்லலாம். 
விஜய் சேதுபதி நடிப்பில் சில இடங்களில் நாடகத்தன்மை தெரிந்தாலும் மனுஷன் பிய்ச்சி உதறியிருக்கிறார். அந்த ஒத்தை டார்ச்சை மட்டும் வைத்துக்கொண்டு தானும் அலறி நம்மையும் அலற வைத்துள்ளார். இனி சுந்தர பாண்டியன் படத்தில் உள்ள கேரக்டர் மாதிரியெல்லாம் நடிக்காதீங்க பாஸ். உங்களுக்கு பிரகாசமான எதிர்காலம் உண்டு.

சில இடங்களில் லாஜிக் மீறல் இருந்தாலும் ஒரு திகிலுடனேயே நாம் பயணிப்பதால் அதையெல்லாம் கண்டுகொள்ள அவகாசமில்லை. அந்த க்ளைமேக்ஸ் ட்விஸ்ட் அட்டகாசம். ஆப்பரேட்டர் மட்டும் அந்த க்ளைமேக்ஸ் காட்சி ரீலை மறந்துவிட்டு முதலில் போட்டுவிட்டால் அப்புறம் இந்த படத்திற்கே வேலை இருக்காது. அப்படி ஒரு அசத்தல் அந்த ட்விஸ்டில் இருக்கிறது. 

பீட்சா டெலிவெரி செய்யும் ஆட்கள் இரவு எட்டு மணிக்கு மேல் டோர் டெலிவரி செய்யவே பயப்படுவார்கள் என்று நினைக்கிறேன். மொத்தத்தில் பீட்சாவை அப்படியே சாப்பிடலாம் கொஞ்சம் திகிலுடன்..........

பாப்கார்ன்: படம் பார்க்கும் பார்வையாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் கதையை யூகித்தார்கள். ஆனால், அவர்கள் அத்தனை பேருக்கும் செம பல்பு. அதேநேரம், அவர்கள் யூகித்து சொன்ன கதையை வைத்து பீட்சாவை பத்து பாகம் வரை தயாரிக்கலாம் 


Post Comment

இதையும் படிக்கலாமே:


11 கருத்துகள்:

  1. என்னையா இது எங்களை மாதிரி வெளியூர் ஆட்களுக்கு ஆசைய கிளப்பி விடுறீங்க...அவ்வளவு த்ரில்ல்லா?

    பதிலளிநீக்கு
  2. நான் கொஞ்சம் பயந்தசுபாவம்.படத்துக்கு போக பயமா இருக்குப்பா உன் விமர்சனம்

    பதிலளிநீக்கு
  3. நான் கொஞ்சம் பயந்தசுபாவம்.படத்துக்கு போக பயமா இருக்குப்பா உன் விமர்சனம்

    பதிலளிநீக்கு
  4. நானும் பார்க்க வேண்டும்.....

    பதிலளிநீக்கு
  5. பார்த்தாச்சு அண்ணே ,,. செமையான அனுபவம் படம் ..
    நேரம் போறதே தெரியல .. அந்த அளவுக்கு படம் நம்மை உறைய வைக்கிறது

    பதிலளிநீக்கு
  6. அட.. எல்லாருமே நல்லா இருக்கு. திகிலைக் கிளப்புதுன்னுல்ல சொல்றீங்க. மிக நிச்சயமா கூடிய சீக்கிரமே பார்க்க ட்ரை பண்றேன் தம்பி.

    பதிலளிநீக்கு
  7. Short Film Director என்பதை prove செய்துவிட்டார் இயக்குநர்... படம் அவ்வளவு short....

    பதிலளிநீக்கு
  8. சார் என்ன சார் இது நீங்களா இப்பிடி ஒரு படிவு போடுறீங்க
    அரசியல விட்டுரதா முடிவு பண்ணிட்டீங்களா..:)

    நல்ல பதிவு படம் பார்க்க வேண்டும்

    பதிலளிநீக்கு
  9. // இது மின்வெட்டு காலம் என்பதால் மின்சாரத்திற்கு வேலையே வைக்காமல் ஒரு டார்ச் லைட் ஒளியிலேயே முக்கால்வாசி கதையை சொன்ன இயக்குநரின் சாமர்த்தியத்திற்கு ஒரு பொக்கே. //

    யோவ் சினிமா பதிவிலும் அரசியலை நுழைத்த நீர் ஒரு அரசியல் சாணக்கியரய்யா...

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.